Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எச்சரிக்கை – இனப்படுகொலை சூத்திரதாரிகளின் ஒன்றிணைவு : அஜித்

இலங்கை இந்திய அரசுகளின் உளவாளியெனச் சந்தேகிகப்படும் ஜெகத்கஸ்பர் என்ற முன்னாள் புலி ஆதரவுப் பாதிரியார் முன்னின்று நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான “நாம்” அமைப்பு .

“இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு (Rehabitation) பொருண்மிய மேம்பாடு (Economic Development) அரசியற் தீர்வு (Political Settlement) நீதியிலமைந்த இணக்கப்பாடு (Justice based Reconciliation) நான்கையும் ‘ நாம்’ அமைப்பு வலியுறுத்துகிறது.உடனடித் தேவை புனர்வாழ்வு என வரையறுக்கிறோம். அதே வேளை இந்திய மக்கள்- குறிப்பாக நல்லுள்ளம் கொண்ட தமிழக மக்கள் புனர்வாழ்வு முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவன ஒழுங்கு (Stuctural Mechanism) இல்லாதிருப்பது பெரும் குறையாயுள்ளது. இக்குறையை நிவர்த்தி செய்ய ‘தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு (தமிழில் இருப்பதற்கும் ஆங்கிலத்தில் இருப்பதற்குமான வார்த்தை வித்தியாசத்தையும் கவனியுங்கள்)’ ( Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) என்ற உயர்நிலை அமைப்பினை பரிந்துரைக்கிறோம்.”

போன்ற சுலோகங்களை முன்வைத்து இலங்கைத் தமிழர்களுக்கு உதவி புரிவதற்காக இந்தியா செல்லும் மகிந்த ராஜபக்சவுடன் பேசவிருப்பதாகத் ஊடக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இறுதிக்கட்டப் போரில் புலி உறுப்பினர்களின் சரணடைவு விவகாரங்களில் ஜெகத்கஸ்பருக்குப் பங்கிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து சரணடைவு விவகாரங்களில் தொடர்பாளராகச் செயலாற்றிய சந்திரநேருவைத் தொடர்புகொண்டு கேட்டபொழுது ஜெகத்கஸ்பருக்கு நேரடியான தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தினார். முன்னர் புலிகளைப் பயன்படுத்தி பணம் சேர்த்துக்கொண்ட பல பிரமுகர்கள இப்போது இலங்கை இந்திய அரசுகளால் திட்டமிடப்பட்டிருக்கும் தன்னார்வ நிறுவன வியாபரத்தை ஆரம்பிக்கின்றனர்.

தன்னார்வ நிறுனங்களின் அடிப்படையான நோக்கங்கள்:

1. மக்களின் எதிர்ப்பை மழுங்கடித்தல்.

2. எதிர்ப்புக் குரலெழுப்பும் முன்னணிச் சக்திகளை உள்வாங்கிக் கொள்லல்.

3. மக்கள் எதிர்ப்பற்ற, முதலீட்டிற்கு ஏற்ற பிரதேசங்களை உருவாக்குதல். உலகம் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பப்படும் நாடுகளிலெல்லாம் தன்னார்வ நிறுவனங்கள் புகுந்துகொள்வதும் அவற்றைத் திசைதிருப்புவதும் போலந்து வீழ்ச்சிக்குப் பின்னர் அமரிக்க அணியினால் பயன்படுத்தப்பட்ட தந்திரோபயமாகும்.

இலங்கையில் புலிகளின் அழிவிற்குப் பின்னர் இலங்கை அரசு தமது புலம்பெயர் தமிழர்களின் ஆதரவாளர்களின் உதவியோடு பல தன்னார்வ நிறுவனங்களை உருவாக்கியது. முகாம்களில் மக்கள் உணவின்றி வாடும் வேளையில் நாம் உரிமை குறித்துப் பேசத்தேவையில்லை என்ற சுலோகத்துடன் உருவான தன்னார்வ நிறுவனங்கள் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கச் செய்வதில் கணிசமான பங்குவகித்துள்ளன.

இத் தன்னார்வ அமைப்புக்களை உருவாக்குவதில் சென்னையிலிருந்து பிரித்தானியாவிற்கு மாற்றப்பட்ட இலங்கைத் துணைத் தூதர் ஹம்சாவின் பங்கு குறிப்பிடத் தக்கதாக அமைந்திருந்தது. இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இந்திய வியாபாரிகளின் முதலீடுகளும் சுரண்டல்களும் போரின் சற்றுமுன்னதாகவே ஆரம்பித்துவிட்டன. போரின் பின்னர் அதன் விரிவாக்கம் எந்தத் தடங்கலும் அன்னியப் போட்டிகளுமின்றி நடைபெறுகின்றது.

இந்தியப் பெருமுதளிகள் தமது சுரண்டலைப் பழங்குடிமக்களின் மக்களின் பிணங்களின் மேல் விரிவாக்க மத்திய இந்தியாவைச் “சுத்திகரித்துக்” கொண்டிருக்கின்றனர். இலங்கையில் ஐம்பாதயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஏற்கனவே கொன்றொழித்தாயிற்று. சிங்கள மக்கள் பேரினவாதக் கோட்ப்பட்டில் சிக்குண்டு போயுள்ளனர். இனப்படுகொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய இலங்கை இந்திய அரசுகள் சாட்சியின்றி, சத்தமின்றி இன்றும் வடகிழக்கு மக்கள் மீது உளவியல் யுத்தமொன்றை நிகழ்த்தி வருகின்றன. வடகிழக்கில் இன்னும் சில வருடங்களுக்கு எதிர்ப்புப் போராட்டங்களை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் மிரட்டிவைக்கப்பட்டுள்ளனர். ஆக, மனிதத்தை மதிக்கின்ற ஒவ்வொருவரும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் எழுச்சிபெறக் கூடிய எதிர்ப்புப் போராட்டங்களையே தற்காலிக நம்பிக்கையாக நோக்குகின்றனர்.

இவ்வைகயில் இலங்கை இந்திய அரசுகள் இரண்டு பிரதான அழிவு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு நிகழ்த்திவருகின்றன.

போருக்குப் பின்னைய இந்த நடவடிக்கைகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியவை.

 1. புலம் பெயர் நாடுகளிலிருந்து முன்னெழக் கூடிய எதிர்ப்பியக்கங்களைச் சீரழித்தல்.

 2. தமிழ் நாட்டில் எழும் எதிர்ப்புப் போராட்டங்களை முறியடித்தல் இந்த நடவடிக்கைகள் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன.

பிரதானமாக  வேறுபட்ட வழிகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1. இலங்கை அரசுக்கு எதிரான சக்திகளை தாக்கம் விளைவிக்கும் எதிர்ப்புப் போராட்டங்களாக மாற்றமடையாது மட்டுப்படுத்தல்.

2. எதிப்பு சக்திகளிடையே திட்டமிட்டு பகைமையை உருவாக்குதல்.

3. தன்னார்வ நிறுவனங்களூடாக எதிர்ப்பு சக்திகளின் தலைமை சக்திகளை உள்வாங்குதல்.

4. தன்னார்வ நிறுவனங்களை நோக்கி எதிர்ப்புணர்வுடைய மக்களை அணிதிரட்டி எதிர்ப்புணர்வை மழுங்கடித்தல்.

5. புலம் பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் தன்னார்வ நிறுவனங்களூடான ஒருங்கிணைந்த செயற்பாட்டினூடாக முழுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நிர்மூலமாக்கல். வியாபார நிறுவங்களின் ஆக்கிரமிப்போடு இந்த நிகழ்ச்சி நிரலின் வேலைத்திட்டங்களையும் இன்ப்படுகொலையை முன்நின்று நடத்திய இலங்கை இந்திய அரசுகள் துரிதமாக ஆரம்பித்துவிட்டன.

இந்திய வர்த்தக நிறுவங்கள் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டால் இன்னும் சிலவருடங்களில் தமிழ்த் தேசிய இனம் இலங்கைத் தீவில் வாழ்ந்ததற்கான அடையாளங்களை மட்டுமே தேடமுடியும் என்பது வேறுவிடயம்.

முன்னைநாள் ரெலோ அமைப்பை இந்திய உளவுத் துறையின் சார்பாகக் கையாண்டவரான பகவான் சிங், திருமாவளவன் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், ஜெகத் கஸ்பர் போன்றோரின் கூட்டு தனது அறிக்கையை வெளியிட்ட சில நாட்களிலேயே இதே நோக்கத்கிற்காக டீ.ஆர்.பாலு ராஜபக்சவைச் சந்திக்கச் செல்கிறார்.

தமிழ் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் கருணாநிதியைச் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசுவார்த்தை நடத்துகிறார். அதன் சாராம்சம் மறுபடி “நாம்” அமைப்பின் அதே நிகழ்ச்சி நிரல். ஆக, இந்திய இலங்கை அரசுகளின் உரிமைக் கோரிக்கையை சிதைப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் தயாராகிவிட்டது.

அதன் முன்னணிச் செயற்பாட்டாளர்களான கருணாநிதி, ஜெகத் கஸ்பர், பகவான் சிங், ரவிகுமார், திருமாவளவன், டீ.ஆர்.பாலு, கனிமொழி, சு.ப.வீரபாண்டியன், ஹம்சா, ராம்தாஸ், ராஜேஸ் பாலா, நடேசன், கொன்ஸ்டன்டைன் போன்ற பல நபர்களும் தயாராகிவிட்டனர்.

இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு நெஞ்சில் அறைந்து நாம்தான் அதை நடத்தினோம் என்று சொல்கின்ற ஒரு கூட்டத்தோடு கைகோர்த்துக்கொள்ளும் இவர்கள் எல்லாம் தமிழ்ப் பேசும் மக்களுகளின் உரிமைப் போராட்டத்திற்கு மட்டும் ஆதரவாளர்கள் அல்ல. தெற்காசியா இனிமேல் எதிர்கொள்ளப்போகும் மனிதப் படுகொலைகளுக்கு ஆதரவானவர்கள்.

Exit mobile version