அவரது இளமைக்காலம் என்பது ஜேர்மனிய , ஐரோப்பிய வரலாற்றில் கொந்தளிப்பான காலமாக விளங்கியது.சமூக , அரசியல் , பொருளாதார , தத்துவத் துறைகளில் முதலாளித்துவம் தனது அதிகாரத்தை பழைய சமூகத்தின் மீது சாத்தியமாக்கிக் கொண்டிருந்தது.பழைய சமூக அமைப்பின் கட்டுமானம் புதிய உற்பத்தி முறையால் அழற்சி காணத் தொடங்கியது.முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விலை பொருளான தொழிலாளி வர்க்கத்தில் ஓர் அவல நிலலையை சமுதாயத்தில் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.
தான் வாழ்ந்த சமூக அமைப்பிற்கு பணிய மறுத்த எங்கெல்ஸ் , இதற்க்கு எதிராக திட நோக்குடனும் ,மன உறுதியுடனும் போராடக் கூடிய மன நிலையில் இருந்தார்.1840 இல் தந்தையாரால் அவரது வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்யவதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பபட்டார்.எங்கெல்ஸ் தனது நேரத்தை தான் சார்ந்த வர்க்கத்தினரின் ஆடம்பரக் கேளிக்கைகளில் செலவிடாமல் ,தனது ஓய்வு நேரத்தில் தத்துவம், அரசியல் ,பொருளாதார , சமூக விவாதங்களில் ஈடுபடாமல் லண்டன் . மான்செஸ்டர் , லீட்ஸ் பகுதிகளில் உள்ள தொழிலாளர் குடியிருப்புக்களை பார்ப்பதில் தீவிரம் காட்டினார்.அதன் மூலம் பாட்டாளி மக்களின் வாழ்வையும் அவர்கள் அவல நிலையையும் நன்கு தெரிந்து கொண்டார்.
இந்த அனுபவங்கள் அவரது வாழ்வை செதுக்கியது.தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலுக்கு எதிரானதும் ,அநீதிக்கும் எதிரானமான போராட்டத்த்தில் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் நிற்க வைத்தது.இந்த அனுபவங்கள் 1845 இல் மார்க்சை சந்தித்த சில காலத்தில் அவரது ” இங்கிலாந்து தொழிலாள வர்க்கத்தின் நிலை ” [ The Working Class in England } என்ற நூலாக வெளிவந்தது.இந்த நூல் 1845 செப்டெம்பர் மாதம் ஜெர்மன் மொழியில் வெளியானது.அப்போது அவருக்கு 24 வயது.மார்க்கசிய இலக்கியத்தில் மிக முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது.அதன் விறுவிறுப்பான நடையும் , உருக்கமான சமுதாய பாடுபொருளாகவும் விளங்குவதால் இன்றும் பெருமதிமிக்கதாகிறது எனலாம்.
இந்த சந்திப்பு தந்த நட்பு , அல்லது கருதொருமித்த சேர்ந்து வேலை செய்ய இணைத்த நட்பு , நட்பு என்பதற்கு முத்திரையாய் அமைந்தது எனலாம். மார்க்ஸ் எங்கே முடிக்கிறார் , எங்கெல்ஸ் எங்கே ஆரம்பிக்கிறார் என்பதையும் , எங்கெல்ஸ் எங்கே முடிக்கிறார், மார்க்ஸ் எங்கே ஆரம்பிக்கிறார் என்பதைக் கண்டு பிடிக்க முடியாது என்பர்.இந்த அபூர்வ மனிதர்களையும் அவர்களது நட்பை பற்றியும் லெனின் பின்வருமாறு எழுதினார்
“Ancient lore tells touching examples of friendship. The European proletariat can say that the science is created by two scholars and fighters, whose relationship surpasses all old times most touching legends about human friendship.” Engels always positioned itself in second place in relation to Marx, and as a whole, quite rightly. “
மார்க்ஸ் , ஏங்கெல்ஸ் இருவரது குறுகிய கால சந்திப்பின் பின் ” ஜெர்மன் கருத்தியல் ” என்ற நூலினைப் பற்றிய தங்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.முதன் முதலில் முழுமையான பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.அது போலவே 1847 இன் இறுதியில் சோசலிச இயக்கத்தின் செயல் திட்ட அறிக்கையான உலகப் புகழ் பெற்ற ” கம்யூனிஸ்ட் அறிக்கை ” வெளியிடப்பட்டது.
மார்க்சைப் போலவே ஏங்கெல்சும் 1848 – 49 இல் நடந்த புரட்சியில் மிகத் தீவிரமான செயல்பாட்டாளராக விளங்கினார்.அவர் அரசியவாதியாக , கொள்கை பரப்புரையாளராக மட்டுமல்ல படையின் போர் வாளாகவும் விளங்கினார்.அவர் ராணுவத்தில் பெற்ற பயிற்சி இதற்க்கு உதவியது.மார்க்சைப் போலவே விஞ்ஞான சோசலிசம் என்பது மேசையிலிருந்து தத்துவம் எழுதுவதல்ல.தத்துவமும் , நடைமுறையும் பின்னிப்பிணைந்த செல்தடம் கொண்ட வல்லமை மிக்க மனிதர்களாக விளங்கினர்.
புரட்சியின் பின் மார்க்ஸ் ஐரோப்பாவை விட்டு புலம் பெயர நேர்ந்தது.லண்டனுக்கு புலம்பெயந்த மார்க்ஸ் தனது வறுமையான வாழ்விலும் ,தனது தத்துவ நூலான மூலதனம் எழுதுவதில் கவனம் செலுத்தினார்.
புரட்சி தந்த கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து ஏங்கெல்சும் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து தனது குடும்ப தொழில் நிறுவனத்தில் வேலையை தொடர்ந்தார்.தத்துவத்திலோ ,அரசியலிலோ ஈடுபட அவருக்கு நேரம் இருக்கவில்லை.தனக்கு விருப்பமில்லாத அந்த வேலையை அவர் செய்தார்.அதன் மூலம் அவர் மார்கசை பொருளாதார சுமைகளிலிருந்து காப்பாற்றினார்.மார்க்ஸ் தனது எழுத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதிலேயே மிக்க ஆர்வம் காட்டிய ஏங்கெல்ஸ் தனது தனிப்பட்ட தேவைகளை தாழ்த்திக்கொண்டார்.மூலதனம் நூலின் முழுமையான ஆசிரியர் மார்க்ஸ் ஆக இருந்தாலும் ஏங்கெல்சின் பங்களிப்பும் கணிசமானதாகவே இருந்தது.மார்க்ஸ் எழுதிய நூல்களை வெளியிட்டவர் ஏங்கெல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.மார்க்ஸ் தான் எழுதிய நூல்களை தனது நண்பனான ஏங்கல்சுடன் கலந்து ஆலோசித்தே வெளியிடுவார்.
தனது குடும்ப தொழிலிலிருந்து விலகிய ஏங்கெல்ஸ் 1869 இல் மீண்டும் அரசியலுக்குத் திரும்பினார்.மார்க்க்சுடன் இணைந்து முதல் சர்வதேசிய [ 1864- 76 ] இயக்கத்தில் முக்கிய சக்தியாக விளங்கினார்.தொழிலாளி வர்க்கத்தினரிடையே மார்க்சியம் பரந்தளவில் சென்றடைத்தர்க்கு அவர் பெரும் பங்காற்றினார்.குறிப்பாக பாரிஸ் கம்யூன் எழுச்சிக்குப் பின் [ 1871] உலகெங்குமுள்ள பாட்டாளி வர்க்கத்தினிரடையே மார்க்க்சியம் கீர்த்தி பெற்றது.தொடந்த காலங்களில் தத்துவத் துறையிலும் கோட்பாட்டு ரீதியில் புகழ் பெற்ற கட்டுரைகளை எழுதினார்,டூரிக்கிற்கு மறுப்பு,குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் போன்ற நூல்கள் மார்க்சிய ஆய்வில் புது ஒளியை பாய்ச்சின.அவரதுஎழுதது கூர்மையானதாக இருக்கும் அதே வேளையில் எள்ளலும் மிகுந்திருக்கும் என்பர்.
மார்க்சின் மரணத்தின் பின் தனது படைப்புக்களின் குறைந்த கவனம் செலுத்திய அதே வேளையில் ,நண்பன் மார்கஸின் பிரதான நூலான மூலதனத்தை நிறைவு செய்து வெளியிட்டார்.மார்க்சுக்குப் பின் பாட்டாளிவர்க்கத்தின் தன்னிகரில்லாத தலைவனாக விளங்கிய ஏங்கெல்ஸ் , செல்லுமிடங்களில் எல்லாம் புகழ் பெற்ற அவர் , மார்க்சின் புகழை பரப்புவதில் முனைப்புக் காட்டினார்.” மார்க்ஸ் மற்ற எல்லா அறிவாளிகளை விடவும் சிறந்தவர் “என்று பெருமயாக சொல்வார் .தன முனைப்பில்லாத , உலக பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற தலைவனாகவும் , மார்சிய தத்துவத்தின் வளர்ச்சிக்காகாக இடைவிடாது பாடுபட்ட ஏங்கெல்ஸ் 05.08.1895 .இல் காலமானார்.
உலகப் ப்பாட்டாளி வர்க்கத்தின் தன்னிகர்ரற்ற தத்துவமாக மார்க்சியம் அந்தக் காலத்தில் வளர்ச்சி பெற்றது.அதன் போர் வாளாக எங்கெல்ஸ் திகழ்ந்தார்.