மலையகம் மிக நன்றாக உள்ளது எமது இருப்புக்கு ஒரு குறையும் இல்லை – ஊடகங்களும் மலையக மக்களும் ஒரு நோக்கு
தமிழ் தேசியவாதம் தலை தூக்கியிருந்த காலக் கட்டத்தில் தமிழ் ஊடகங்களில் எத்தனை எத்தனை ஊடகங்கள் நடு நிலைமையாய் இருந்தன என்பது மாத்திரம் இன்றி சிங்கள இன வாதத்தினை தூண்டும் ஊடகங்களுக்கு சரி சமமாக தமிழ் ஊடகங்களும் தமிழ் தேசியவாதத்திற்கு ஊதுகுழலாய் இருந்தமை மறைக்க முடியாத உண்மையாகும். இன்று யுத்தத்தின் கொடூரங்களைப்பற்றி புலம்பிக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகங்கள் நடந்து முடிந்த மனித படுகொலைகளுக்கும் பொருள் பன்பாட்டு கலாச்சார அழிவுகளுக்கும் தாங்களும் பங்கு தாரர்கள் என்பதனை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
ஊடகங்களும் ஊடக நிறுவனங்களும் அவரவர்களுக்கான தனிப்பட்ட நோக்கினையும் கொள்கையினையும் கொண்டிருந்தப் போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஊடகவியலாளர்கள் தங்கள் சமூகத்தை நேசிக்கின்றனர் என்பதற்கான பல சான்றாதாரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றது ஊடகங்களினூடாக தங்களின் சமூக இருப்பிற்காய் உயிர் நீத்த ஊடகவியலாளர்கள்
ஏராளம்.ஆனாலும் நாங்கள் செய்யும் எழுதும் படைக்கும் அல்லது தொகுத்து வழங்கும் ஒரு விடயம் இரண்டு மனிதர்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்துமாக இருந்தாள் இரண்டு சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துமாக இருந்தால் ஒரு மக்கள் கூட்டத்தின் ஐக்கியத்தினை சிதைக்குமாக இருந்தால் அந்தபடைப்பு ஒரு நச்சுப் படைப்பு என்றே அடையாளப்படும்.
தமிழ் தேசியத்திற்கு துணைப்போனவர்கள் தாங்கள் என்ன செய்கின்றார்கள் என்று அறியாமலே யுத்தத்திற்கு துணைப் போனவர்களாவார்கள் இவர்களளின் படைப்புகள் துப்பாக்கியின் தோட்டாக்களுக்கு இணையானவையாகும் இந்தப் படைப்புகள் காலத்தின் தேவையறிந்து சற்று தீர்க்கத்தரிசனத்துடன் சர்வதேச ஆயுத வியாபாரிகளினதும் ஆயுத தரகர்களினதும் தேவைக்காய் எழுதாமல் இருந்திருந்தால் இன்று நாம் கண்ட இந்த கோர அனுபவங்களை தவிர்த்து இருக்கலாம்.
மலையகம்
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஊடக நிருவனங்கள் தங்களின் அரசியலை எவ்வாறு அரங்கேற்றினர் என்பதற்கான பதில் இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் ஊடக முகங்கள் எமக்கு காட்டி நிற்கின்றன.இதில் தமிழ் மொழி சார்ந்தவர்கள் மலையகத்தினை ஊன்று கோளாய் ஊன்றியே நிமிர்ந்தவர்களாகும்.மலையகத்தின் ரொட்டியும் சம்பலும்; தேர்தல் பிரச்சாரத்தின் அடையாளமாய் ஆனதுடன் எங்களின் கிளிந்த ஆடைகள் அவர்கள் அணியும் கோட்டும் சூட்டும் ஆகியது.மாவின் விலை ஏற்றம் அவர்களின் வார்த்தைக்கு வண்ணம் ஊட்டியதே ஒழிய அவர்கள் சார்ந்திருக்கும் தலைமைகளுக்கு சிறிய தூண்டலைக்கூட கொடுக்க வில்லை.இதில் இன்னும் ஒரு வேடிக்கை யாதெனில் இந்த ஊடக வியாபாரிகளின் பின்னால் சில ஆசிரிய பெரு மக்களும் சுற்றி திரிந்தனர் ஏன் என்று வினவிய போது எவ்வாராவது குறிப்பிட்ட ஊடகத்தின் பிராந்திய செய்தியாளராகி விட வேண்டும் என்று கூறினர் வெட்கப் பட வேண்டிய நிலை ஏற்பட்டது மலையகத்தில் கற்றவர்கள் அனைவருக்கும்.
மலையக மக்களுக்காய் எழுத வந்தேன் மலையக மக்களின் விடுதலை பற்றி பேச வந்தேன் என்று வீர முழக்கம் இட்ட இன்னும் சிலர் ஒரே ஒரு சாகித்திய விழா பரிசைப் பெற்ற உடன் மலையகம் மிக நன்றாக உள்ளது எமது இருப்புக்கு ஒரு குறையும் இல்லை என்று மந்திர உச்சாடனம் பன்னத்துவங்கி விட்டார்கள் ஏனென்றால் விருது வழங்கிய விழாவில் நாயகனின் பேச்சே அது.
மலையக மக்கள் இன்னும் முகவரி இல்லாதவர்களாகவும் 80 வீதமானவர்கள் லயங்களிலே வாழ்பவர்களாகவும் இந்த நூற்றாண்டின் மனித வளர்ச்சியினை எட்டாதவர்களாகவும் வாழ்வதனைக் காணக்கூடியதாய் உள்ளது.
மலையக மக்கள் பற்றி கதைக்காதவர்கள் யாரும் இல்லை ஏமாற்றப்படுகின்றார்கள் ஏய்க்கப் படுகின்றார்கள் தேர்தல் காலத்தின் போது விற்கப்படுகின்றார்கள. இவை அனைத்துமே பலராலும் பல காலமாக கதையாடி வரும் விடயமாகும் எதிர் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சிகளின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேடைகளில் மலையக மக்களின் கண்ணீர் துடைக்க தங்களால் மாத்திரமே முடியும் என்று முழக்கம் இட்டு விட்டு தாங்கள் ஆட்சியை பிடிப்பதற்காக யாரோடு கூட்டு சேர வேண்டும் என்பதனை தீர்மானிப்பதன் மூலம் மீண்டும் மலையக மக்கள் மரக்கப்பட்ட மனிதர்களாகி விடுவார்கள்.இதற்கு சமாந்தரமாக ஊடகங்களும் ஊடகவயளாலர்களும் ஏமாற்றுபர்கள் அரச யந்திரத்துக்குள் பங்கு தாரர்களானதன் காரணத்தினால் மலையக மக்களை மறந்து விட்டு மலைரயக மக்களை நசுக்கும் பாதங்களின் பயணங்களைப் புகழத் துவங்கி விடுவார்கள் இந்த இடத்தில் சற்று நிதானித்து சிந்திக்கும் இடத்து இந்த ஊடக உலகம் குறைந்த பட்சம் ஒடுக்கும் இந்த கால்களை எதிர்க்கும் சிறு சிறு சக்திகளின் குரல்களைக் கூட இருட்டடிப்பு செய்வது அனுபவத்தால் பட்ட பாடங்களாகும். தேர்தல் காலங்களாக இருக்கட்டும் தொழிலாளர் தினங்களாக இருக்கட்டும் மலையக மக்களை நசுக்குபவர்களுக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் மலையக மக்களை ஆண்டாண்டு கால அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்ய முயற்சிப்பவர்கள் ஊடகங்களால் ஈரட்டடிப்பிற்குள்ளாக்கப் பட்டு விடுவார்கள்.
அன்மைக் காலமாக மலையகப் பிரதேசத்தில் தொலைக்காட்சி கலாச்சாரம் மிகவும் சீரழிந்த கலாச்சாரமாக மாரி வருகின்றது.எமது நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒன்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை மாத்திரம் வழங்குவதாக பெருமைப்பட முடியாவிட்டாளும் குறைந்த பட்சம் நாட்டின்
ஊடகங்கள் தொடர்பாக நோக்கும் போது உலக ஊடக வரலாற்றில் அதிகமானவை வியாபார நோக்கத்தினை மைய்யப் படுத்தியவையாகும். ஊடகங்களுக்க மனிதர்களை சரியானப் பாதையில் வழிநடத்த வேண்டிய தலையாய பொருப்பு காணப்படுகின்றது. ஊடகத்துரையில் கடமையாற்றும் பலருக்கு தங்களின் முகாமைத்துவத்திற்கு விசுவாசமாக வாழ வேண்டியது தொழில் பாதுகாப்பு காரணத்தால் கட்டாயமாகும் மலையக ஊடகவியலாளர்கள் வீடற்ற நாடற்ற தொழிலாளர்களின் இருப்பு தொடர்பாகவும் மாற்றம் தொடர்பாகவும் விடுதலைத் தொடர்பாகவும் பேச கடமைப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப் பட வேண்டிய விடயமாகும்.
முகாமைத்துவத்திற்கும் அரசியல் வாதிகளுக்கும் மாத்திரம் அல்ல மக்களுக்கும் விசுவாசமாக வாழவேண்டியது அணைவரினதும் தார்மீக பொறுப்பாகும்.