
காப்பாற்றுவதற்கான அடிப்படையில் தங்களின் இந்த பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதுக்கான ஒரு நடைமுறைதான் உலகமயமாக்கல் என்பது.
உலகவர்த்தகஅமைப்பு, சர்வதேச நிதிநிறுவனம், உலகவங்கி ஆகியவற்றின் விருப்பப்படி ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் மோசமான பாதிப்புக்கு நலிந்த நாடுகளில் வாழும் மக்கள் உட்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
தேசத்தின் மீதான ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் தாக்குதல்கள் இழிவை மட்டும் உண்டாக்கவில்லை. கூடவே அடிமைத்தனத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும், மனிதத் தன்மையற்ற கொடூரத்தையும் கொண்டதாக உள்ளது. இத்தேசத்துக்குள்ளே உள்ள துரோகிகள், மற்றும் கூட்டாளிகளின் உதவிகள் இல்லாவிட்டால் இத்தகையதாக்குதல்கள் சாத்தியம் இல்லை. இந்த அரசியல்வாதிகளும், பெரும் முதலாளிகளும், உயர் அதிகாரிகளும்தான் அனைத்து சமூகப் பொருளாதார வாழ்க்கையிலும் சர்வதேச சட்டவிரோதக் கும்பல்களின் அடியாட்களாகச் செயல்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் பெரும் தரகுகளையும், இலாபங்களையும் பெற்று வருகின்றனர்.
பொதுவாக உலகமயமாக்கல் என்ற பெயரில் அந்தந்த நாடுகளின் பொருளாதார உயிராதாரத்தின் மீது சர்வதேச நிதி மூலதனத்தின் மரணப்பிடியை அதிகரித்து உள்ளது. எவ்வாறு அது அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதை தீர்மானிக்கின்றது. எவ்வாறு அது மக்களுடைய சமூகப் பண்பாட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தின் மீதும் ஊடுருவி வருகின்றது.
எவ்வாறு, எந்த அளவுக்கு பொருளாதாரத்தின் மீதும், மக்கள் மீதும் நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஏன் இந்த ஒரு பெரும் தாக்குதல்களுமின்றி இத்தகையஅழிவுகளைஏற்படுத்துவது சாத்தியமாகின்றதுஎன்பதை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் தான் சிறுபான்மை இனங்களின் அடிப்படை பிரச்சனைகள் இந்த உலகமயமாக்கலின் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் நசுக்கப் படுவதையும், ஆதிக்க அரசாங்கங்கள் பாதுகாக்கப்படுவதையும் புரிந்து கொள்ளலாம்.
ஆகவே உலகப் பொருளாதாரம் உலகமயமாக்கல் ஆவதற்கான காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியம் என்பதே ஒரு உலகம் தழுவிய நிகழ்வுதான் என்றாலும் ஏகாதிபத்தியங்கள் எப்பொழுதும் உலகு தழுவிய அளவில் பொருளாதாரத்தை செயற்படுத்தி வந்தாலும் இப்போது அது நலிந்த நாடுகளில் முழுமையாக ஆக்கிரமிக்கின்றது. அதாவது உலகப் பொருளாதாரத்தின் நெருக்கடியை எதிர் கொள்ள அவர்கள் தமது பொருளாதாரத்தை மறு சீரமைப்பு செய்வதாகும்.
இது இரண்டு அம்சங்களை கொண்டுள்ளது.
1) அவர்களுடைய சொந்த நாடுகளில் ஒன்றிணைத்தல், மற்றும் கைப்பற்றுதல் என்ற வழியில் பெரும் பல்கூட்டுத்திறன் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் முதலாளித்துவத்தை மறுசீரமைப்பு செய்தல். மற்றும் உழைப்பாளார்கள், பாட்டாளிவர்க்கங்களின் மீது கடுமையான தாக்குதல்கள் மூலம் இலாபத்தை அதிகரித்தல்.
2) வெளிநாடுகளின் வளங்கள் மீதும், மலிவான உழைப்பு மூலாதாரங்கள் மீதும் பெரும் கட்டுபாட்டை உருவாக்கும் வகையில் வலிந்து வெளி நாட்டுச் சந்தைகளை விரிவுபடுத்தல்.
இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டதும், ஒன்றோடொன்று சார்ந்ததும் ஆகும்.
இதில் முதலாவது மறு அமைப்புபற்றியது ,ஏகாதிபத்தியங்களின் சொந்த நாடுகளில் ஒன்றிணைத்தல் மற்றும் கைப்பற்றுதல் என்ற பேரலையின் மூலம் மிகப்பெரும் பல கூட்டுத்திரன் நிறுவனங்களை உருவாகின்றன .இதன் விளைவாக ,சிறு மற்றும் பலவீனமான தொழில் நிறுவனங்கள் மறைந்து வருகின்றன .
இந்த ஒன்றிணைந்தால் ,மற்றும் கைப்பற்றுதல் மூலம் நெருக்கடியின் உடனடியான பதிப்புகளில் இருந்ந்து இவர்களால் தப்பிக்கமுடிகின்றது .
1 ) சிறியசந்தைகள் மற்றும், மற்றும் மிகை உற்பத்தி ஆகியவற்றை எதிர் கொண்ட நிலையில், கைப்பற்றப்பட்ட நிறுவனங்களின் சந்தைகளை கைப்பற்றியதன் மூலம் தமது சந்தைகளை
விரிவுபடுத்திக்கொள்ள முடிகின்றது .
2 )புதிய அல்லது விரிவான உற்பத்திக்கு வழியின்றி தேங்கியிருந்தமூலதனஇருப்பு ,உழைப்பு ,காலம்,பொருள்ட்கள்,வீணாக்காமல் சீர்திருத்தம் செய்யப்படுள்ளது .
இதன் மூலம் லாப வீதங்களில் வந்த வீழ்ச்சி தடுக்கப்படுகின்றது .
இப்படி இவர்களது மூலதனத்தையும் ,உற்பத்தியையும் மருபருசீலனைசெயும் அதேநேரத்தில் உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றது. உழைப்புசக்தியில் கடுமையான வெட்டு ஏற்படுத்துதல்,சட்டம் எவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் கூலியை உயர்த்தாமல் அதே நிலையில் வைத்திருத்தல்,பகுதிநேர, மற்றும் ஒப்பந்தமுறை உழைப்பை அதிகமாக பயன்படுத்தல், உழைப்புநேரத்தை நீடிட்டதல்,குறைவான கூலிஉள்ள பகுதிக்கு உற்பத்தியைமாற்றுதல்,அரசாங்கத்தின் சமூக,மற்றும் சமூகநல செலவுகளை பெரும்மளவில் குறைத்தல் ஆகிய வழிகளில் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.
இதன் மூலம் வீழ்ந்துவரும் இலாபங்கள் தடுக்கப்படுகின்றதோடு மேலும் லாபம் அதிகரிக்கப்படுகின்றது.
இப்பொழுது கடுமையான முறைகளில் தங்களுடைய சந்தைகளை விரிவு படுத்தினாலும் பின் தங்கிய நாடுகளின் மீதும் வளர்ச்சி குறைந்த நாடுகளிலும் ஆதிக்கம் மற்றும் மேலாதிக்கம் என்ற ஆக்கிரமிப்புக் கொள்கைகளைக் கடைப்பிடித்து லாபம் பலமடங்கு அதிகரிக்கப்படுகின்றது. ” உலகமயமாக்கல்” என்ற போர்வையின்கீழ் தேசம் கடந்த கூட்டுடமை நிறுவனங்கள் பின் தங்கிய நாடுகளிலுள்ள தனியார் தொழில்கள், நிதி, வாங்கி, காப்பீடு, சிறுதொழில்கள் மற்றும் அந்நாடுகளிலுள்ள இயற்கை வளங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. வியாபாரம் அதிகளவு சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டு பெருமளவு செல்வங்கள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நிதிச்சந்தைகளில் செய்யப்படும் சூழ்ச்சிகள் மூலம் சர்வதேச தரகு வணிகர்கள் பெரும் இலாபமடைந்து
வருகின்றனர். அதே நேரத்தில் உள்நாட்டு நாணயங்களும், பங்குச் சந்தைகளும் அழிவுக்குள்ளாகி வருகின்றன.
இவைதான் உலகமயமாக்கலின் இரண்டு பெரும் அம்சங்களாகும்.
பின் தங்கிய நாடுகளிலுள்ள அரசாங்கங்களாலும், ஆளும் வர்க்கத்தினாலும் இரண்டாவது அம்சம் எளிதாக்கப்படுகின்றது.
அவர்கள் தங்களது நாட்டின் நலன்களை உணர்வு பூர்வமாக காட்டிக்கொடுப்பவர்களாகச் செயல்ப்படுகிறார்கள். இவர்களின் நோக்கங்களைநிறைவேற்றும் நோக்கத்துடன் கொள்கைகளிலும், சட்டங்களிலும், கட்டுப்பாடுகளிலும், விதிகளிலும் விரிவான சீர்திருத்தங்களைக் கொண்டுவருகிறார்கள். இதை இப்போதைய இலங்கையில் பார்க்கலாம். இங்கே மேலும் சுலபமாக உள்ளது. ஒட்டு மொத்த இலங்கையின் ஆதிக்கங்கள் ஒரு குடும்பத்திலுள்ளது.
உலகமயமாக்கல் காலகட்டத்தில் மக்கள் சுரண்டப்படுவது அதிகரித்து வருவதும் அதனால் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியும் அரசு பாசிசமயமாக்களுக்கு இட்டுச்செல்கின்றது.
தேசம் கடந்த கூட்டினைந்த குழுமங்களும் அவற்றின் தரகு முகவர்களும் தங்களது இலாபங்களை அதிகபட்சமானதாக ஆக்கிக் கொள்வதற்காக உணர்வு பூர்வமான கொள்கையை உலகமயமாக்கல் உருவாக்கிக் கொடுக்கின்றது.
மக்களுடைய உணர்ச்சிகர எழுச்சிகளை சீர்திருத்தங்கள், சலுகைகள் ஆகியவற்றின் மூலம் தணிக்கும் பாவனை கூட இப்பொழுது இல்லாமல் போகிறது. உண்மையில் இருக்கின்ற சிறிதளவும் பறிக்கப்பட்டுக் கொண்டுபோகின்றது. மேலும் கூடுதலாக பொருளாதாரத்தில் அதீத நெருக்கடியும் அதன் விளைவாக வாழ்க்கையில் ஏற்படும் சமூகப் பதட்டங்களும் மக்களின் பல்வேறு பிரிவினைகளுக்கும் அவர்களுக்குள்ளேயும் பல்வேறு ஆளும் வர்க்க குழுக்களுக்கு இடையேயும் அனைத்து முரண்பாடுகளையும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலைகள் முழுவதும் சேர்ந்து ஒரு அமைதியற்ற நிலையை மிகவும் உயர்த்தி உள்ளது. எனவே ”ஒழுங்கு”, ”அமைதி” என்பது அரசின் இருப்புக்கரத்தில் மட்டுமே நிலை நிறுத்தமுடியும்.
உலகமயமாக்கலின் முகவர்கள் (புரவலர்கள்) தமது கொள்கையின்
விளைவுதான் இவை என அறிந்தும் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும்போதே மேலும் மேலும் பாசிசமயமாகும் அரசுக்கான தயாரிப்புக்களை தொடங்கி விட்டன.
இதை முதன்மையான அம்சம் அதிகரிக்கப்பட்ட ஒழுங்குமுறையும், நிலவுகிற வரையறைக்குட்பட்ட குடியுரிமைகளும்கூட அதிகரித்தளவில் மீறப்படுவதுமாக இருக்கிறது. அதன் இன்னொரு அம்சம் திட்டமிட்ட குடியேற்றம். திட்டமிட்ட முறையில் மதவெறியைத் தூண்டி விடுவது, சிறுபான்மையினரைத் தாக்குவது, கவனத்தை திசை திருப்ப சமுதாயத்தினிடையே சகோதரத்துவ கொலைகளைத் தூண்டிவிடுவதுமாக இருந்துவருகின்றது.
இந்த உலகமயமாக்கல் என்பது வளர்ந்துவரும் ஒழுங்குமுறைக் கொள்கைக்கும், அரச இயந்திரத்தின் பாசிச பயங்கரவாதத்தையும் வளர்த்தெடுப்பதற்கு உதவுகின்றது என்பதை பார்க்கவேண்டும்.
நாட்டுமக்கள் முதலாவதாகவும், உடனடியாகவும் கோருவது போருலதாரரீதியிலும் அரசியல்ரீதியிலும் முழு இறையாமையாகும்.இயற்கைவளத்திலும்,மனிதவளத்திலும் செழுமை மிக்க நாடு அழிவின் விளிம்பிற்கு சென்றுகொண்டுஇருக்கின்றது. நமது மண்ணும்,இயற்கைசுழலும்
அழிக்கப்பட்டுவிட்டன,எமது குடியிருப்புக்களும் ,வனங்களும் உரித்தேடுக்கப்படுகின்றன.
உலகமயமாக்கல் வெறுமனே நாட்டில் புதியகாலனியசுரண்டலை தொடருவதொடு மட்டும்மல்லாமல்
அச் சுரண்டல் கொள்கையை புதிய உயரத்திற்கு கொண்டுசெல்கின்றார்கள். இதனால் ஏற்கனவே உள்ள அழிவு இப்போது பலமடங்காக வளர்கின்றது. முன்பு அவர்கள் பேர்ரரசுகள் மூலம் நேரடியாக கொள்ளைஅடித்தனர், இப்போது அவர்கள் தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் உதவியுடன் கொள்ளை
அடிக்கின்றார்கள். இவ்வர்க்கமே நாட்டிற்குள் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக செயல்படுகின்றார்கள்.
இவ் வர்க்கம் பரந்துபட்ட அரைநிலபிரபுத்துவ சமூகஅடிப்படையை, மக்களை கட்டுப்படுத்தி, தமது மேலாதிக்கத்தை நிலைநிருதப்பயன்படுத்திக்கொள்கின்றது.
மேலும் இந்த உலகமயமாக்கலின் நடைமுறைகளில் ஒன்று தான் NGO களின் வேலைத்திட்டங்களும் ஆகும்.
ஆகவே ஏகதிபத்தியங்களாலும், அதன் உலகமயமாக்கல் நடவடிக்கைகளாலும் ,அனைத்துவர்க்கங்கலுமே தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன, தாக்கப்படுகின்றன என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
அதாவது உலகமயமாக்கல் என்பது உலகின் பின் தாக்கிய நாடுகளின் மூலதனத்தை வளர்ந்த நாடுகளின் மூலதனத்தோடு இணைத்து செயற்படும் ஒரு தாக்குதல் நடவடிக்கையாகும்.
உலக மயமாகல் உருவாக்கிய அரசியல் மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தித் திறனற்ற மேல் மத்திய தர வர்க்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த வர்க்கமானது அரச அதிகாரத்தின் ஆதர சக்தியாக இயங்குகின்றது. இந்த வர்க்கம் உலக மயமாக்கல் நலன்களுடன் தம்மை இணைத்துக் கொள்ள முற்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் தயவு தாட்சண்யமற்ற தாக்குதலுக்குத் துணை போகின்றது. உலக மயமாக்கல் உருவாக்கிய அதிகார வர்க்கம் இலங்கையில் தமது நலன்களை உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில் அதன் அடிப்படைப் பலமாக அமைந்திருந்தது புதிதாக உருவான மேல் மத்தியதர வர்க்கம் தான். இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலுமிருந்து முளைத்த இவர்கள் நந்திக்கடலைத் தமது வியாபார நலன்களுக்காக செங்க்டலாக மாற்றியவர்கள்.