இவர்களில் அரசாங்க ஊழியர்களக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான தொழிற்சங்கங்கள் பல காணப்படுகின்றன ஒவ்வொரு வருடமும் வரவு செலவு திட்டங்களின் போது இவர்களின் சம்பள உயர்வு பிரதானசெய்தியாக காணப்படுகின்றது இது தவிர இலங்கையின் தாதிமார் சேவையும் சுகாதார சேவையும் தங்களின் தொழிற்சங்க போராட்டங்களின் மூலம் பல உரிமைகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. துறைமுகத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் பிரபல அசைவுகளை ஏற்படுத்தக் கூடிய தொழிற்சங்கமாக இன்றும் காணப்படுகின்றது.இவற்றோடு ஒப்பிடும் போது மலையகத் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு சற்று வித்தியாசமானதாகும்.காலனித்துவகாலம் தொட்டு இன்று வரை ஸ்தாபனப் படுத்தப் பட்டிருக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஸ்தாபனப் பலத்தினை இழந்து தொய்வடைந்து குரல் இழந்துக்காணப்படுவதனை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. இதற்கானப் பின் புலம் கட்டாயமாக அவதானிக்கப் பட வேண்டிய விடயமாகும். மலையகத்தினைப் பொருத்தவரை இங்குள்ள பலஆயிரம் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்ட சிலத் தலைவர்களின் ஆதிக்கத்திற்கு கீழாக அல்லது ஒரே ஒரு தலைவனின் முழு ஆதிக்கத்தின் கீழ் காணப்படும் தொழிற்சங்கங்களாக காணக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய நுகர்வுக் கலாச்சாரமும் தொழிலாளர் பாதுகாப்பும் சற்று விமர்சனநோக்கோடு ஆய்விற்குட்படுத்தும் போது இந்திய சினிமாக்களின் கதாநாயகனின் பலம் எவ்வாறு மிகைப்படுத்தி சித்தரிக்கப் படுகின்றதோ அதற்கு சலைக்காமல் தொழிற்சங்கத் தலைமைகளின் கதாநாயகத்தனத்தினை மிகைப்படுத்தி காட்டும் மிகவும் துரதிஸ்ட நிலைமையினைக் காணக் கூடியதாக உள்ளது.
இவ்வாறான தொழிற்சங்க கட்டமைப்பானது தொழிற்சங்க தோற்றத்தின் நோக்கங்களுக்கு முரணானது என்பதனை தொழிலாளர்கள் சிந்திக்க தவறியது தொழிற்சங்கங்கள் இன்று தேவையற்றது என்று காட்டுவதற்கு முயற்சிப்போரின் கருத்துக்களை பலப்படுத்துவதாக காணப்படுகின்றது.பெருந்தோட்டங்கள் யாவும்நீண்ட கால குத்தகைக்காக 23 கம்பனிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனஅவற்றில் கூடியபங்கினை இந்திய கம்பனிகள் வாங்கியிருப்பதுடன் இலங்கை பல வருடகாலமாக தக்கவைத்து வந்த நற்பெயரை தேயிலை வர்த்தகத்தில் இல்லாது செய்த பெருமை இந்த இந்திய கம்பனிகளின் சாதனையாகும்;. இன்று இலங்கையின் தரமானதும் சுவையானதுமான தேயிலை இந்திய உற்பத்தியாகவே சந்தைப் படுத்தப் படுகின்றது.
முலையகத் தொழிற்சங்கங்கள் இவை தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளன என்பதனைத் தெளிவுப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் .ஏனெனில் இந்த நிலைமை இலங்கையின் தேயிலை உற்பத்தியினை மரணபாதாளத்திற்கு இட்டுச் செல்வதனை அவதானிக்க கூடியதாய் உள்ளது.மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இனரீதியான ஒடுக்குமுறையுடன் கடுமையான உழைப்புச்சுரண்டலையும் உரிமையற்ற உடைமைகளைக் கொண்ட நவீன அடிமைகளாககாணப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது தொழிற்சங்கங்களின் கடமை தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதுடன் தொழிலாளரின் இருப்பினை பாதுகாப்பதுவும் ஆகும் இன்னும் வீடற்றவர்களாகவும் நாடற்றவர்களாகவும் விலாசமற்றவர்களாகவும் வாழ நேர்ந்திருப்பது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே. இந்நிலைப்பாடு தொழிற்சங்கங்களின் பொதுவான கடமை நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.ஆனாலும்
தொழிற்சங்கங்களுடாகவே மலையகப் பிரதேசம் அபிவிருத்தி அடைகின்றது என்னும் கருத்து இன்னும் தொடர்ந்தவண்ணமே உள்ளது வேளான்மைத்துறையில் 2476000பேர் உழைப்பில் ஈடுப்பட்டுள்ளனர் இதில் 460000 பேர் தேயிலை றப்பர் பெருந்தோட்டத் துறைத் தொழிலாளர்கள் போக மிகுதி இருக்கும் 2016000 பேரான தமிழ் சிங்கள இஸ்லாமிய விவசாயிகள் வாழும் பிரதேசங்கள் எதுவும் அபிவிருத்தி அடையவல்லையா? என்னும் கேள்வி கேட்கப் பட வேண்டிய கேள்வியாகும். தேயிலை றப்பர் பெருந்தோட்டத் துறை 460000 பேருக்கு பல ஆயிரம் தொழிற்சங்கங்கள் இருந்தும் இந்த தொழிற்சங்க தலைமைகள் முழு நேர அரசியல் வாதிகளாக இருந்தும் ஆட்சியமைக்கும் எல்லா அரசாங்கங்களுடனும் பங்குதாரர்களாக இருந்தும் கிட்டாத அபிவருத்தி ஏனைய பிரதேசங்களுக்கு மிகையாக கிட்டியிருப்பதனை நோக்கும் போது உரிமைகளும் இன்றி அபிவிருத்தியும் மந்த கதியில் பெற்ற மலையக மக்கள் நாவலப்பிட்டிக்கும் அட்டனுக்குமான வித்தியாசத்தினை கண்முன் நிறுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.சலுகைகளிலே மிக உயர்ந்த சலுகை வீட்டு வசதியாகும் இந்த சலுகையினை பூரணமாகப் பெற்று கொடுத்தால் ஏனைய சலுகைகள் இயல்பாக வந்து சேரும் இதைவிட அடிப்படை உரிமைகள் மனிதனுக்கக் கிட்டுமானால் அவனுக்கு சலுகைகள் தேவைப்படாது.
இலங்கைநாட்டின் ஏனைய பிரதேசங்களின் சாதாரண சனசமூக நிலையங்களும் கிராம அபிவிருத்தி சபைகளும் மரண உதவி அமைப்புகளும் சர்வ சாதாரணமாக பெற்றுக் கொடுக்கும் சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்காக நமது தொழிற்சங்கங்களின் வளங்கள் விரயப்படத்தப் படுவது விமர்சனத்துக்குட்படுத்த வேண்டிய விடயமாகும். எனவே மக்களின் சக்தியால் வளர்க்கப் படும் வளர்க்கப் பட்ட தொழிற்சங்கங்கள் மக்களின் வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டதாய் இயங்க வேண்டியது இன்றைய மலையக மக்களின் கட்டாய தேவையாகும்.