சமத்துவம் என்பது சமமாக நடாத்தப்படுவது அல்ல.
சம வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது.
-ஏங்கெல்ஸ்
சாதியம் பற்றி அம்பேத்கர் குறிப்பிடுகையில் படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமற்ற சாதியானது தனக்கு மேலிருப்பவர் மீது வெறுப்பையும், தனக்கு கீழ் இருப்பவர் மீது இழிவையும் சுமத்துகிறது. சாதி அமைப்பின் இந்த தன்மைதான் மிக மோசமான பின் விளைவுகளைக் கொண்டதாக உள்ளது என்கிறார். மேலும் கல்வியின் எதிர்மறையான விளைவுபற்றியும் கல்வியானது சாதிய சூழலை ஒழித்துவிடுமா? என்பதை பற்றி குறிப்பிடுகையில், மேல் சாதியில் இருக்கும் படித்த நபர்கள் கல்வி கற்றபிறகு சாதி அமைப்பை தக்கவைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். ஏனெனில் சாதி அமைப்பை தக்க வைத்துக்கொள்ள கல்வி, அவர்கட்கு கூடுதல் நலனை அளிக்கிறது. இதன்மூலம் அவர்கள் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது கல்வியானது சாதியை ஒழிக்க உதவிக்கரமாக இல்லை என்றும,; மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனை, சமூகப்பிரச்சனை மட்டுமல்ல, அரசியல் பிரச்சனையும் கூட, அது அரசியல், அதிகாரம் தொடர்புடையதே என்கிறார்.
ஒடுக்கப்பட்டமக்கள் பரவலாக கல்வி கற்றிருந்தாலும் அதிகாரத்திற்கு வர இயலாத வகையில் ஆதிக்கசாதிகளும், அதனுடன் இணைந்த அரச அதிகார வர்க்கங்களும் பல்வேறு முட்டுக்கட்டைகளையும், சமூக நெருக்கடிகளையும், ஷஷஜனநாயக முறையில்|| நீதிமன்றநுகத்தடிகளையும் சுமக்க வைக்கிறது.
இரட்டை சுமைகளை எதிர்கொள்ளல்:
காட்சி (1)
இலங்கை அதிபர் சேவை வகுப்பு 1ஐ சேர்ந்த திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்கள் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் நிரப்பப்படாமல் இருந்த அதிபர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியோ அவசர அவசரமாக இலங்கை அதிபர் தரம் இல்லாத திருமதி எல்.என் யோசப் அவர்களை பழைய மாணவர் சங்கமும் அபிவிருத்திச் சங்கமும் வலயத்துடன் சேர்ந்து நியமித்துக்கொண்டது.
காட்சி (2)
2010ம் ஆண்டு திருமதி எல்.என் யோசப் ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் திருமதி நவமணி சந்திரசேகரம் காலியாக உள்ள இடத்திற்கு தகுதியான தன்னை நியமிக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு நினைவுபடுத்துகிறார். இம்முறையும் வழக்கம் போலவே உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் நிர்வாகம் அதிபர் சேவை வகுப்பு (2-2) சேர்ந்த திருமதி கௌரி சேதுராஜாவை அதிபராக நியமித்துக் கொண்டது. இதற்கு பின்புலமாக ஆளும் அரசியல் பின்புலமுள்ள ஆதிக்க சாதி கருத்தியலை கொண்ட பழைய மாணவர் சங்கமும், பாடசாலை அபிவிருத்தி சங்கமும் பின்புலமாக இருந்து வந்துள்ளன.
காட்சி(3)
காட்சி(4)
திருமதி நவமணி சந்திரசேகரம் இமையாணன் பாடசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு பொறுப்பேர்க்க வந்தபோது, ஷஷதங்களுக்கு இடம்மாற்றம் சம்பந்தமாக எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை|| என்று கூறி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நிர்வாகம் திருமதி நவமணி சந்திரசேகரத்தை பதவி ஏற்க அனுமதிக்கவில்லை.
இச்சூழ்நிலைமையை நன்கு திட்டமிட்டிருந்த பழைய மாணவர் சங்கமும், பாடசாலை அபிவிருத்தி சங்கமும் சேர்ந்து யாழ் மேல் நீதிமன்றத்திற்கு எதிராக இடைக்கால தடை ஆணையை பெற்றனர்.
காட்சி(5)
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மனித உரிமை குழுவில்இருந்து அரசு நிர்வாகம் வரைக்கும் முறையிட்ட திருமதி நவமணி சந்திரசேகரத்தின் குரலும், மனுக்களும் காலவெளியில் கண்டு கொள்ளப்படாமலும் கவனிக்கப்படாமலும் வழக்கம் போலவே விடப்பட்டன.
மேலும் திருமதி நவமணி சந்திரசேகரம் சட்டரீதியாககொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தடையாணையை ரத்து செய்யக்கோரியும், அதிபர் பதவிக்கு நியமிக்க கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். நீண்ட நெடும் பயணத்தின் முடிவில் நீதிமன்றம் இவ்வாண்டு மே 5-இல் யாழ் நீதிமன்ற தடை ஆணையை ரத்து செய்தும் திருமதி நவமணி சந்திரசேகரம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இன்றைய தேதிவரையிலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஷபீய் தொடைத்த கல்லாக|வே பார்க்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சு இதுவரைக்கும் திருமதி நவமணி சந்திரசேகத்திற்கு உத்தரவு எதுவும் வழங்கப்படாமலே உள்ளது. குறைந்தபட்ச கல்வி அதிகாரத்திற்கு வருவதற்கே சகித்துக் கொள்ளாத ஆதிக்க சாதிகளினதும், அதன் கூட்டாளிகளான ஆளும் வர்க்க அரசியல் சக்திகளுக்கு எதிராகவும் அதிகார அரசியலுக்கான நீண்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்த போராட வேண்டியுள்ள அவசியம் அனைவரதும் கடமையாகும். நிர்வாக சிக்கலாக ஷமட்டும்| சித்தரித்து இதில் சாதிய தீண்டாமையை மறுத்து ஒதுக்குவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை சிறுமைபடுத்துவதும் ஆதிக்க சாதிகளுக்கும் அதன் தாங்கு சக்திகளுக்கு துணை போவதாகவே அமையும்.
புத்தம் மறைந்த பூமியில் புத்தனின் வரிகளை நினைவுபடுத்துவோம்.
உண்மையை உண்மையாகவும் உண்மையில்லாதவற்றை
உண்மையில்லாததாகவும் தெரிந்துகொள்!!