(மே 18 2009 இல் முற்றுப் பெற்ற இன ஒழுப்பு யுத்தத்தின் ஓராண்டு நிறையையொட்டி, ரொறொன்ரோ நகரில் மே 18 இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய உரை இது.)
இறந்துவிட்ட தமது தலைவனுக்கே அஞ்சலி செய்ய வக்கற்றவர்கள், மீண்டும் ஒரு தடவை மக்கள் மீது சவாரிவிட முனைவதைக் கண்டு கொதித்துப் போயிருப்பவர்கள் இன்னும் பலர். இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் இருந்து மீள்வதற்கான முயற்சிகள் எதுவுமே, கடந்த காலம் பற்றிய மீளாய்வுடனேயே தொடங்கப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகிறது.
இப்படியாக நாம் தோற்றுப் போனதற்கு காரணமானவர்கள் யார்? என்ற கேள்விக்கு, விடுதலைப் புலிகளே காரணமானவர்கள் என்ற பதில் கேட்கிறது. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. கடந்த காலத்தில் மாற்று அமைப்புக்கள் அணைத்தையும் அழித்தொழித்து, தமது ஏகபிரதிநிதித்துவத்தை சக போராளிகளது சாம்பல் மேட்டில் நிறுவியவர்கள், வெளியில் இருந்து எழுத்த கேள்விகளுக்கெல்லாம் தலைவருக்கு தெரியும் என்று இறுமாப்புடன் பதில் அளித்தவர்கள் இந்த தோல்விக்கும் பொறுப்பெடுத்துதான் ஆக வேண்டியுள்ளது. அதனைவிட, இன்று புலிகளது ஆதரவாளர்கள் சித்தரிகக் விரும்புவது போல இந்த தோல்வியொன்றும் சர்வதேச சதியினால் விளைந்ததல்ல.
நாம் எப்போது சர்வதேச சமூகத்தை ஒரு பொருட்டாக மதித்தோம், அந்த சர்வதேச சமூகம் எமது போராட்டத்தைப் பற்றி அக்கறைப்படுவதற்கு? ஒரு விடுதலைப் போராட்டத்தில் செய்யக் கூடாத அத்தனைத் தவறுகளையும் ஒட்டு மொத்தமாக செய்து விட்டு, வெறுமனே சர்வதேச சமூகத்தில் மாத்திரம் தோல்விக்கான பொறுப்பை சாட்டிவிட முடியாது.
எமது போராட்டத்தில் இணைந்து கொள்ளக் கூடிய, அதற்கு ஆதரவாக இருந்திருக்கக் கூடிய அத்தனை சக்திகளிடம் இருந்தும் தம்மை தனிமைப் படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள், அதன் மூலமாகவே தமது தோல்வியை தாமே வரவழைத்துக் கொண்டார்கள் என்பதுதான் சரியானதாக இருக்கும். 2001 செப்டம்பர் 11 இற்கு பின்பு சர்வதேச சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள், மகிந்த அரசின் வருகை, அவர்கள் வகுத்த புரொஜெக்ட் பீக்கன், அதற்கு ஆதரவாக சர்வதேச சமூகத்தை அணிதிரட்டியமை போன்றவற்றை புரிந்து கொண்டு, அவற்றிற்கு முகம் கொடுக்கும் விதத்தில் தமது தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்ளும் திறன் அற்றவர்களாக இருந்தார்கள். இந்த யுத்தத்தின் அனைத்து முன்னெடுப்புக்களும் சிறீலங்கா அரசின் கைகளிலேயே இருக்க, இவர்கள் அவற்றை எதிர்கொள்வதில் செயல் முனைப்பு அற்றவர்களாக இருந்தார்கள்.
அதனைவிட இந்த கடைசி யுத்தத்தில் மாவிலாறு தொடங்கி நந்திக்கடல் வரையிலான போர்க்களங்களில் எத்தனை தீவிரமான சமர்கள் நடைபெற்றன? பல நூற்றுக்கணக்கான மைல்கள் நீளமான போர்முனையில் ஊடுறுவும் தாக்குதல்கள் எத்தனை நடத்தப்பட்டன? இவை யாவும் யுத்தத்தில் இராணுவ சமபல நிலை சிறீலங்கா அரசின் பக்கமே இருந்ததை காட்டின. இதனை புலிகள் அமைப்பானது எப்படி அனுமதித்தது?
கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக யுத்த களத்தில் நின்ற ஒரு வீரன், இராணுவ நிபுணன் எப்படி நந்திக்கடல் போன்றதொரு வெட்டவெளியில் தனது படையை இறுதிக் கட்டத்தில் குவித்திருக்க முடியும். தனது சகதோழர்களையே நம்பாத ஒருவர் யாரை நம்பி, யாருக்காக இப்படி காத்திருந்தார்? அதனைவிட அவலமானது, இவர்கள் தம்மை காத்துக் கொள்ளும் நோக்கில் பலியிட்ட சாதாரண குடிமக்களது எண்ணிக்கை! இத்தனை மக்களை பலியிட்டு எதனை காத்துக் கொள்ள முனைந்தார்கள்? போராட்டம் தோல்வியை நோக்கி போய்க் கொண்டிருப்பது தெரிந்தும், அதனை தவிர்ப்பதற்கு, இழப்புகளை குறைப்பதற்கு, போராட்டத்தின் தொடர்ச்சியை உத்தரவாதப்படுத்துவதற்கு முயலாமல் இப்படியாக நந்திக் கடலில் சங்கமிக்கச் செய்தமையானது, தமது செயல்திறன் அற்ற தலைமையை காப்பதற்கு ஒரு தேசத்தின் நலன்களை பலியிட்டதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்று தலைவனது இறப்பை மக்களுக்கு சொல்லாமல், அவரது தவறுகளுக்கும் அப்பால், அவருக்கு உரிய மறியாதையையும் செய்யாமல் இவர்கள் எதனை, யாரை காக்க முனைகிறார்கள்? இப்படியாக எழும் கேள்விகளும், விமர்சனங்களும் தொடரவே செய்கின்றன. இவை சரியானதும்தான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இவை அனைத்துமே பிரச்சனையின் ஒரு பக்கம் மட்டும்தான் என்பதுதான்.
இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதுதான் இப்படிப்பட்ட ஒரு அமைப்பு உருவானதில், அதனை தாங்கிப் பிடித்ததில் தமிழ் சமூகத்தின் பாத்திரம் என்ன? என்பதாகும். அதனைவிட முக்கியமாக, இதனை கடந்து வருவதில் தமிழ் சமூகத்தின் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இழைத்த தவறுகள் என்ன என்பதாகும். நான் நினைக்கிறேன் சுயவிமர்சனம்தான் மிகச் சிறந்த விமர்சனம் என்று. அதனால் நாம் முற்போக்கு, ஜனநாயக சக்திகளது பாத்திரம் பற்றிய சுயவிமர்சனத்தில் இருந்துதான் எமது எதிர்கால திட்டமிடல்களை ஆரம்பித்தாக வேண்டியுள்ளது. அதுதான் இந்த உரையின் நோக்கமாகவும் இருக்கிறது.
தேசம் என்பது ஒரு வரலாற்றுபூர்வமான உருவாக்கமாகும். நாம் என்னதான் ஷஷகல் தோன்றி மண் தோன்றா காலம்|| பற்றி பழம் பெருமைகள் பல பேசிக் கொண்டாலும், தேசங்கள் என்பவை முதலாளித்துவ காலகட்டத்திற்கு உரியவையாகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஈழத் தமிழரைப் பொறுத்த வரையில் கொலனித்துவ காலத்தில் தொடங்கி, சுதந்திரம் பெற்றது வரையிலான காலம் இப்படிப் பட்ட கால கட்டமாக அமைகிறது. இந்த கட்டத்தை பரிசீலிப்பதன் மூலமாகவே ஈழத் தமிழர் தேசமாக உருப் பெற்றது பற்றிய விடயங்களையும், இலங்கையில் தேசிய பிரச்சனையின் முக்கியமாக அம்சங்களையும் சரிவர புரிந்து கொள்ள முடியும்.
இந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே நாம், எமது தேசத்தின் விடுதலைப் போரட்டம் பற்றிய பிரச்சனையையும் சரிவர அணுக முடியும். வரலாறு பற்றிய எமது ஆய்வுகளில் அடிக்கடி இடையூறு விதித்து வரும் இரண்டு போக்குகளை இனம் கண்டு அவற்றை முதலிலேயே தவிர்த்து விடுவது அவசியமானதாகிறது.
முதலாவது, பொருளாதாரவாதம்: அதாவது, ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவம் பற்றிய அக்கறைகள் மாத்திரம் இந்த சிக்கலான விடயத்தை விளக்கிவிட போதுமாவை என்ற விதத்தில் முன்வைக்கப்படும் வாதங்கள்.
இவை முக்கியமாக இடதுசாரி சக்திகளால் முன்வைக்கப்பட்டன, இப்போதும் முன் வைக்கப்படுகின்றன. இரண்டாவது, இன அடிப்படையிலான அரசியல் (ஊழஅஅரயெட Pழடவைiஉள): இது தமிழ் தேசியவாத தலைமைகளினால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டது, இப்போதும் முன்வைக்கப்பட்டு வருவது. இப்படிப்பட்ட ஒற்றைப் பரிமாண வியாக்கீனங்களானவை, தாம் எதனை விளக்க முனைகின்றனவோ, அதனை விளக்குவதற்கு அறவே தகுதியற்றவை யாகின்றன. ஏனெனில் யதார்த்தமானது இந்த ஒற்றைப் பரிமாண அரசியல் கட்டமைக்க விழையும் விம்பங்களைவிட மிகவும் வளமானதாகும்.
அதனால் நாம் முன்னெடுக்கும் கோட்பாடுகள் இந்த சமூக யதார்த்தங்கள் போலவே பன்முக பரிமாணங்களையும் உள்ளடக்கக் கூடியதாக, வளமானதாக, உண்மையிலேயே மிகவும் முன்னேறிய கோட்பாடாக இருப்பது அவசியமானதாகிறது. அந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற வரலாற்று வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கு பொருளாதாரம் என்பதற்கும் மேலாக, சாதியம், பிரதேசவாதம், மதம், இனத்துவம், பால்நிலை போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாக எமது விசாரணைகள் அமைவது அவசியமானதாகிறது. சரியான கோட்பாட்டு சாதனங்கள் இன்றி நாம் சரியான கோட்பாட்டு செயற்பாடுகளை செய்துவிட முடியாது என்பதை நினைவிற் கொள்வது அவசியமானதாகிறது.
ஐரோப்பியர்கள் இலங்கையை ஆக்கிரமித்த போது இலங்கையில் கண்டி, கோட்டை, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று இராச்சியங்கள் இருந்தன என்பதும், போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் கரையோர பிரதேசங்களை மாத்திரமே கைப்பற்றினர் என்பதும், கண்டி இராச்சியம் 1815 இல் பிரித்தானியரினாலேயே கைப்பற்றப் பட்டது என்பது நாம் அறிந்ததே. அத்தோடு 1833 வரையில் பிரித்தானியர் கூட இந்த மூன்று பிராந்தியங்களையும் தனித்தனியாகத்தான் நிர்வகித்தார்கள் என்பதும், 1833 இல் தான் இந்த மூன்று பிராந்தியங்களையும் ஒரே நிர்வாக அமைப்பினுள் கொண்டு வரப்பட்டது என்பது அறிந்ததே. இங்கு நாம் முன்பு யாழ்ப்பாண இராச்சியத்தின் கீழ் இருந்த, யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் கொலனித்துவ காலத்தில் எப்படி இருந்தன என்று பார்ப்போம்.
போர்த்துக்கேசர் மற்றும் ஒல்லாந்தர் காலங்களில் பொதுவாகவே நாட்டின் பொருளாதார கட்டமைப்புகளில் அதிகம் மாற்றங்கள் இருக்கவில்லை. இந்த இரண்டு கொலனித்துவ ஆட்சியாளர்களுமே வர்த்தக முதலாளித்துவ பொருளாதாரத்தை கொண்டிருந்தமையினால் இவர்களது கவனம் முழுவதும் தமது வர்த்தக ஏகபோகம் – குறிப்பாக வாசனைத் திரவியங்கள் – பற்றியதாகவே இருந்தன. மற்றபடி உள்ளூர் வர்த்தக முயற்சிகளில் வரிவிதிப்பு மற்றும் கட்டாய உழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பானதாகவே உள்ளூர் மக்கள் தொடர்பான அக்கறைகள் அமைந்திருந்தன.
யாழ்ப்பாணம் இந்த காலகட்டத்தில் தீவிரமான பொருளாதார நடவடிக்கை மிகுந்த ஒரு பிரதேசமாக இருந்தது. சங்கிலியன் காலத்திலேயே அப்பிரதேச விவசாயிகள் நெல்லுக்குப் பதிலாக வர்த்தக பயிரான புகையிலையை செய்கை பண்ணத் தொடங்கியிருந்தார்கள். இதற்குப் பதிலாக நெல்லை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தார்கள். இந்தியாவில் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த மன்னர் புகையிலை இறக்குமதி செய்வதற்கான ஏகபோகத்தைக் கொண்டிருந்தார். இது பெருமளவு வருமானத்தை யாழ்ப்பாண விவசாயிகளுக்கு கொண்டு வந்தது. கொலனித்துவ காலகட்டத்திலும் இது தொடர்ந்தது. வன்னிய மன்னர்கள் தமது திரையை கொலனித்துவ அதிகாரத்திற்கு யானைகளாக செலுத்தினார்கள். யானை ஏற்றுமதி மிகவும் முக்கியமான வருமானத்தை கொண்டு வரும் வர்த்தகமாக இருந்தது. ஆயினும் இது கொலனித்துவ சக்திகளது ஏகபோகமாக இருந்தது. இதனைவிட பனை மரத்தாலான முகடுகள் மற்றும் பனைப்பொருட்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நூல் நூற்று நெசவு செய்யப்பட்டது.
இந்த தொழிலில் ஈடுபடுபவர்களை டச்சுக்காரர்கள் குடிவரப் பண்ணியிருந்தார்கள். அத்தோடு சாயம் தயாரிப்பவர்களும் இந்தியாவில் இருந்து குடி பெயர்ந்து வந்து இந்த தொழிலில் ஈடுபட்டார்கள். சாய வேரை அகழ்ந்தெடுப்பது, சாயம் தயாரிப்பது, துணிகளுக்கு சாயம் போட்டு அவற்றை ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பது என்று இது ஒரு பெரிய தொழிலாகவே நடைபெற்றது. முத்துக் குளிப்பது மாதோட்டம் முதல் குதிரைமலை வரையில் முக்கியமான தொழிலாக இருந்தது. இதில் குறிப்பிட்ட பருவகாலத்தில் சுமார் 700 படகுகள் வரையில் ஈடுபட்டன. காலத்திற்கு காலம் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தேவைகளுக்கும், இந்தியாவில் இருந்து நடைபெற்ற குடிவரவுகளுக்கும் ஏற்ப அடிமைகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டார்கள். பொதுவாக தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களே வறுமை மற்றும் பஞ்சம் காரணமாக பிழைப்பதற்கு வேறு மார்க்கம் இல்லாதவர்களாக தம்மை அடிமையாக விற்றுக் கொண்டார்கள்.
இவற்றைவிட பலவிதமான வரிகள் விதிக்கப்பட்டன. வயதுவந்த ஆண்களுக்கு தலைவரி விதிக்கப்பட்டது. சாதாரண மக்களுக்கு இது வருடத்திற்கு இரண்டு பணமாகவும், வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு இது ஆறு பணமாகவும் இருந்தது. அடுத்ததாக தொழில் வரி அறவிடப்பட்டது. இது குறிப்பிட்ட கைவினைஞர்களுக்கு மாத்திரம் உரியதாக இருந்தது. இதனைவிட நெற்காணிகள், தோட்டங்கள், மரங்கள் போன்றவற்றிற்கும் வரிகள் விதிக்கப்பட்டன. இவற்றோடு கூடவே கட்டாய ஊழியமானது ஒவ்வொரு ஆண்களுக்கும் கட்டாயமாக இருந்தது. இந்த உழைப்பானது கொலனித்துவ அரசின் தேவைகளுக்கும், பொது வேலைகளுக்கும் என்று பயன்படுத்தப்பட்டது. இதனை செய்ய விரும்பாதவர்கள் தண்டப்பணத்தை கட்டி இந்த பணியில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இவ்வாறு பெறப்பட்ட தண்டப் பணமானது 75 000 தங்க நாணயமாக இருந்தது. இப்படியாக கொலனித்துவ ஆட்சியாளர்கள் யாழ்ப்பாணத்தில் பெற்ற வருமானமானது மிகவும் அதிகளவில் அமைந்திருந்தது. 1660 களில் இப்படிப் பெறப்பட்ட வருமானமானது 200.000 தொடக்கம் 290.000 தங்க நாணயங்களாக இருந்தது. அதே வேளை செலவானது 93.000 தொடக்கம் 200.000 தங்க நாணயங்களாக இருந்தது. இப்படியாக கணிசமாக உபரியை யாழ்ப்பாணம் உற்பத்தி செய்தது. அதேவேளை கொழும்பிலும், காலியிலும் இருந்த நிர்வாகங்கள் நட்டத்தில் இயங்கின. இந்த இழப்பானது யாழ்ப்பாணத்தில் இருந்து பெறப்பட்ட உபரியின் மூலமாக ஈடுகட்டப்பட்டது.
அந்த காலகட்டத்தில் பிரதான போக்குவரத்து சாதனமாக படகுகளே விளங்கின. இலங்கையில் மாத்திரமன்றி ஐரோப்பாவில் கூட நிலைமைகள் இப்படிப்பட்டதாகவே இருந்தன. நவீன போக்குவரத்து சாதனங்கள் ஏதும் இல்லாத அந்த காலகட்டத்தில் குதிரைகளும், வண்டிகளும் தரைவழி போக்குவரத்து சாதனங்களாக இருந்தன. இவை காட்டுப் பாதைகளில் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டன. இதனால் கைத்தொழில் புரட்சியின் ஆரம்ப கட்டத்தில் செயற்கையான வாய்க்கால்களை அமைத்து படகுகளிலேயே தொழிற்சாலைகளுக்கு தேவையாக மூலப் பொருட்களையும், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களையும் கொண்டு சென்றனர்.
இதுவே அப்போது இலங்கையிலும் இருந்த நிலைமையாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு படகுகளிலேயே பிரயாணம் செய்யப்பட்டது. இந்த பிரதேசங்களின் தூரத்துடன் ஒப்பிடும் போது தென்னிந்தியாவானது மிகவும் அருகில் அமைந்திருந்தது. அத்தோடு மொழி, மதம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று காரணங்கள் போன்றவற்றால் மிகவும் நெருக்கமானதாக இருந்தது. இதனால் பல்வேறு வர்த்தக, சமூக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளும் தென்னிந்தியாவுடன் மிக நெருக்கமாக இருந்தன.
மன்னர் காலத்தில் அவரது செயற்பாடுகள் படிநிலைவரிசையாக அமைந்த ஒரு அதிகார வர்க்கத்தின் மூலமாக நடைபெற்று வந்தன. இவர்கள் முக்கியமான ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த செல்வமும் அதிகாரமும் உடைய குடும்பங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தனர். முதலியார், முகாந்திரம், உடையார், மணியகாரர், விதானை போன்றவர்கள் இந்த அதிகாரிகள் ஆவர். இந்த அதிகார வர்க்கமே கொலனித்துவ காலத்திலும் தொடர்ந்தும் பணியாற்றி வந்தது. இவர்கள் கொலனித்துவ அரசிற்கும், சாதாரண மக்களுக்கும் தொடர்பாளர்களாக இருந்தனர். மக்களிடம் வரிகளை அறவிடுவது, பொதுப்பணிகளை ஒழுங்கமைத்து அதற்கான உழைப்பு சக்திகளை வழங்குவது, இந்த பணிகளை மேற்பார்வை செய்வது, சட்டம் – ஒழுங்கு போன்ற அனைத்துமே இந்த அதிகார வர்க்கத்திடமே இருந்து வந்தது. 1760 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பின் படி அப்போது இருந்த முதலியார்கள் 516 பேரில் வெள்ளாளர் 317 பேரும், மடப்பள்ளியர் 127 பேரும், செட்டிமார் 37 பேரும், பரதேசியர் 14 பேரும், மலையாளத்தார் 10 பேரும், கரையார் 6 பேரும், சிவியார் 3 பேரும், தனக்காரர் 2 பேரும் இருந்தனர்.
இந்த அதிகார வர்க்கத்தினரே வரிவிதிப்பு மற்றும் கட்டாய உழைப்பு போன்றவற்றை வசூலிப்பவர்களாக விளங்கியதனால், இதில் பெருமளவு மோசடிகள் நடப்பதாக டச்சுக்காரர் சந்தேகித்தனர். இதனை தவிர்க்கும் முகமாக நிலங்களை அளந்து, அவற்றை பதிவு செய்து, அவற்றிற்று தோம்புகள் எனப்படும் உறுதிகளை வழங்க டச்சுக்காரர் முன்வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்த அதிகாரவர்க்கமானது, விவசாயிகளை கொலனித்துவ அதிகாரத்திற்கு எதிராக தூண்டி விட்டனர். மிகையான வரிவிதிப்பு பற்றிய அச்சம் காரணமாக விவசாயிகள் இந்த பணிகளுக்கு அறவே ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர். இதனால் தமது வடமாராட்சி மற்றும் தென்மாராட்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்து விவசாயிகள் தமது குடியிருப்புக்களை காலி செய்து கொண்டு வன்னியை நோக்கி நகர்ந்ததார்கள். இந்த கிளர்ச்சியாளர்களுக்கு பனங்காமத்து வன்னிய மன்னர்கள் உதவி செய்தனர். இந்த கிளர்ச்சியானது யாழ் குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக டச்சுக்காரர் வன்னியிலிருந்து குடா நாட்டிற்கான போக்குவரத்தை தடை செய்தனர். இதன் போதுதான் ஆனையிறவு இராணுவ முகாம் முதன் முதலாக அமைக்கப்பட்டது. சுமார் ஆறு மாத காலத்தின் பின்னர் இந்த கிளர்ச்சி படிப்படியாக தணிந்தது. மக்கள் மீண்டும் தமது சொந்த இருப்பிடங்கள் நோக்கி திரும்பத் தொடங்கினர். இப்படியாக கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டபோது 12.000 மக்களது உழைப்பானது பதியப்படாமல் இந்த அதிகாரவர்க்கம் தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காலப் போக்கில் இந்த வரிவிதிப்பு முறைகள் மாற்றியமைக்கப்பட்டன. வரி சேகரிக்கும் பணியானது மொத்தமாக குத்தகைக்கு விடப்பட்டது. இதனை குத்தகை முறையில் வாங்குபவர் அந்த வரிகளை சேகரித்து ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டனர். அவ்வாறே சட்டம் – ஒழுங்கை பேணும் நடவடிக்கைகளும் படிப்படியாக கொலனித்துவ ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட விசேட உத்தியோகத்தர்களது கடமையாக மாற்றப்பட்டன.
கொலனித்துவ ஆட்சியாளர்கள் வெள்ளையராக இருந்தனர். அத்தோடு தமது மொழி, மதம், கலாச்சாரம், உணவுப் பழக்க வழக்கங்கள் அனைத்திலும் உள்ளூர் மக்களிடம் இருந்து வேறுபட்டவர்களாக இருந்தனர். இதனால் உள்ளூர் மக்கள் இவர்களிடம் இருந்து அந்நியப்பட்டவர்களாகவே இருந்தனர். இந்த நிலைமையை மாற்றும் நோக்கில் உள்ளூர் மக்களை மதம் மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டன. இவர்கள் தமது கிறீஸ்தவ மிசனரிகளது உதவியுடன் மதம் மாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இதற்கு உதவியாக பாடசாலைகளை அமைத்து இலவசமாக கல்வியை வழங்கினார்கள். இதில் கல்வி கற்று சித்தி பெறுபவர்களுக்கு தமது நிர்வாகத்தில் கீழ் மட்ட நிர்வாக பணிகள் மற்றும் ஆசிரியர் தொழில், மொழிபெயர்ப்பாளர் பணிகள் போன்றவற்றை வழங்கினார்கள். இதனால் உள்ளூர் மக்களில் ஒரு பகுதியினர் தாமாக மதம் மாறி இந்த பயன்களைப் பெற முனைந்தார்கள். இன்னொரு பகுதியினர் கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர். உள்ளூர் மதத்தவர்கள் தமது கடவுள்களை வழிபடுவது குற்றமாக கருதப்பட்டது. போர்த்துக்கேசர் காலத்தில் பெருமளவில் கோயில்கள் மற்றும் உள்ளூர் மக்களது வணக்கத்தளங்கள் உடைத்து நொருக்கப்பட்டன.
தமது நிர்வாக வசதிக்காக அந்தந்த பிரதேசங்களில் மரபாக இருந்து வந்த சட்டங்களைத் தொகுத்து தேசவழமைச் சட்டங்களாக வரையறை செய்தார்கள். இவ்வாறு தொகுக்கப்பட்ட சட்டங்கள் முதலியார்களினால் சரிபார்க்கப்பட்டன. இப்படியாக சட்டங்களை தொகுக்கும் போது அடிமைகளது உரிமைகள் பற்றிய விடயமும் அதில் இடம் பெற்றது. இது முதலியார்களது கடுமையான ஆட்சேபனைக்கு உள்ளான போதிலும் நீக்கப்படவில்லை.
இப்படியாக போர்த்துக்கேசர் மற்றும் ஒல்லாந்தர் காலத்து கொலனித்துவ ஆட்சியானது அதிகம் மாற்றங்கள் இன்றி அப்படியே தொடர்ந்தது. ஆனால் ஆங்கிலேயரது ஆட்சியானது பெரிய அளவில் சமூக, பொருளாதார, நிர்வாக மாற்றங்களை கொலனித்துவ நாடுகளில் ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அவர்கள் முன்னைய ஆட்சியாளர்கள் போல வெறுமனே வர்த்தக முதலாளித்துவ கட்டத்தில் இருக்காமல் ஏற்கனவே கைத்தொழில் புரட்சியை கடந்தவர்களாக இருந்தனர். இதனால் இவர்கள் தமது ஆட்சிக்கு உற்பட்ட நாடுகளில் உள்ள பொருளாதாரங்களை தமது நாட்டின் பொருளாதாரங்களுடன் பிணைக்கும் வகையில் பாரியளவிலான மாற்றங்களை மேற்கொள்ளலானார்கள். இதனால் அந்தந்த குடியேற்ற நாடுகள் பெரிய அளவிலான மாற்றங்களை முகம் கொடுக்க நேர்ந்தது.
1796 இல் இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றிய பிரித்தானியர், 1815 இல் கண்டியை கைப்பற்றினர். பின்னர் 1833 இல் முழு நாட்டையும் ஒரே நிர்வாகத்தினுள் கொண்டு வந்தனர். இவர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் அடிப்படையிலான மாற்றங்களை மேற்கொண்டனர். தமது உற்பத்தி சாதனங்களது சந்தையாகவும், தமக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் களமாகவும் இலங்கையை மாற்றியமைத்தனர். பெருந்தோட்டத்துறையை ஆரம்பித்தனர். காரீயச் சுரங்கங்களை ஏற்படுத்தினர். இவற்றுக்கு அவசியமான வங்கி, வர்த்தக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். போக்குவரத்து பாதைகளை அமைத்தனர்.; தமக்கு அவசியமான மூலப்பொருட்களை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் கொழுப்பிற்கு கொண்டு வந்து சேர்க்கும் விதத்தில் பெருந்தெருக்கலும், புகையிரதப் பாதைகளும் நிறுவப்பட்டன. தமது ஏற்றுமதி – இறக்குமதி தேவைகளுக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் துறைமுகங்களை அபிவிருத்தி செய்தனர். இப்படியாக கொலனித்துவ ஆட்சியாளர்களது முக்கியமான அனைத்து செயற்பாடுகளும் கொழும்பை மையப்படுத்தி நடந்தமையால், கொழும்பே தலைநகராக ஆகியது. கொழும்பை மையமாகக் கொண்டு ஒரு பலமான வர்த்தக, நிர்வாக வலைப்பின்னல் ஒன்று உருவாக்கப்பட வழி வகுத்தது. இந்த தலைநகரம் ஏற்படுத்திய வர்த்தக, தொழில் மற்றும் நிர்வாக இயந்திரத்தின் வேலை வாய்ப்புகளை நோக்கி மக்கள் குடிபெயரத் தொடங்கினர். இப்படியாக கொழும்பை நோக்கி ஒரு படித்த செல்வந்த தமிழ் மேட்டுக்குடி ஒன்று நகரத் தொடங்கியது. இவர்கள் சிவில் சேவை, நிபுணத்துவம், வர்த்தகம், பெருந்தோட்டத்துறை போன்றவற்றில் செயலாற்றினார்கள். ஆங்கிலம் கல்வி கற்றவர்களாகவும், தமது நடை உடை பாவனைகளில் ஆங்கிலேயர்களை ஒத்தவர்களாகவும் இவர்கள் விளங்கினார்கள்.
இதற்கு பின்னால் இலங்கையில் நடைபெற்ற அரசியல் போக்குகளை புரிந்து கொள்வதற்கு பின்வரும் விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சிங்கள கரவா சாதியினரின் எழுச்சி, பௌத்த மறுமலர்ச்சி, கண்டியரது மனக்குறைகள் போன்றவையே அவையாகும்.
சிங்கள கரவா சாதியினரின் எழுச்சி
தென்னிலங்கையில் கரையோர சிங்களவரது சாதிய ஒழுங்கமைப்பில் கொவிகம என்று சொல்லப்படும் வேளாள சாதியினரே சாதிய படிநிலையில் உயர்நிலையிலும், செல்வமும் அதி;காரமும் உடையவர்களாக திகழ்ந்தனர். இவர்களிடமே நிலமும், ஏனைய சேவை சாதியினரை கட்டுப்படுத்தும் அதிகாரமும் இருந்தது. கரவா எனப்படும் கரையார சாதியினர் இந்த சாதிய அடுக்குவரிசைக்கு வெளியில் இருந்தனர். இவர்கள் இந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த மன்னர்களது படைவீரர்களாகவும், தளபதிகளாகவும் இலங்கைக்கு வந்து சேர்ந்ததாக கருதப்பட்டனர். எனினும் இவர்கள் மீன்பிடி, படகு ஓட்டுதல் போன்றதும் இன்னோரன்னதுமான தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களிடம் சமூகத்தின் முக்கிய வளமாகிய நிலமோ, அது கொண்டுவரும், கௌரவம், அந்தஸ்த்து போன்ற எதுவுமே இருக்கவில்லை. இதனால் பொருளாதாரரீதியாகவோ, சமூக அளவிலோ முன்னேற முடியாதவர்களாகவே இருந்து வந்தனர். கொலனித்துவ காலகட்டமானது இவர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது. சிங்கள கொவிகம சாதியினர் விவசாய தொழிலையே புனிதமானதாக கருதி வந்தனர். இதனால் கொலனித்துவ காலகட்டம் கொண்டு வந்த புதிய தொழில் வாய்ப்புகளை பயன்படுத்துவதில் அதிகம் நாட்டம் அற்றவர்களாக இருந்தனர். ஆனால் கரவா சாதியினர் இதுவரை காலமும் தமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகள் கிடைத்த போது அதனை இறுகப் பற்றிக் கொண்டனர். கொலனித்துவ அரசிற்கு கீழ்ப்பட்டு, அவர்களது பொருளாதார நடவடிக்கைகளுக்கு துணையாக செயற்படும் பல்வேறு துறைகளிலும் நுழைந்தனர். பண்டங்களது போக்குவரத்து, பெருந்தெருக்கள் போன்ற பொதுப்பணிகளில் ஒப்பந்தக்காரர், வரி குத்தகையாளர்கள், உழைப்பு சக்தியினது விநியோக ஒப்பந்தம் என்று தொடங்கி படிப்படியாக செல்வத்தை குவித்து பின்பு தென்னந்தோட்டம், சாராய குத்தகை, கட்டட ஒப்பந்தக்காரர் என்று வளர்ந்து இறுதியில் வர்த்த துறையிலும் பெருந்தோட்டத்துறையிலும், காரீயச் சுரங்கங்களிலும் முதலீடு செய்யும் பெரிய பணக்காரர்களாக வளர்ந்து வந்தார்கள். பெருநகரங்களில் காணிகளை வாங்கி சொத்துக்களை பெருக்கிக் கொண்டார்கள். இவர்களது பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி கற்று நிபுணத்து துறையிலும் வேகமாக முன்னேறினார்கள்.
பொருளாதாரரீதியாக பலம் பெற்ற இவர்கள் சமூக ரீதியாக தமது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள அவாவினர். இதற்கு இவர்களது சாதிய படிநிலை தடையாக இருந்தது. குறிப்பாக பணக்காரர்களாக இருந்த போதிலும் கரவா சாதியினர் பல்லக்கில் செல்வதற்கான உரிமையை பெற்றிருக்கவில்லை. இவர்களது சாதியைச் சேர்ந்தவர்கள் பௌத்த குருமாராக வருவதை, முன்னர் கண்டிய மன்னர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஷசியாம் நிக்காய| என்று வழங்கப்படும் பௌத்த சங்கமானது, கொவிகம தவிர்ந்த ஏனைய சாதியினரை பௌத்த குருமாராக வருவதை அனுமதிக்கவில்லை. இதனை முறியடிக்கும் விதத்தில் பர்மா நாட்டிற்கு தமது சாதியினரை அனுப்பி மதகுருமாராக பயிற்றுவித்து, இவர்களை ஒத்த ஏனைய இடைநிலை சாதியினருடன் சேர்ந்து ஷஅமரபுர நிக்காய| என்ற புதிய பௌத்த சங்கத்தை நிறுவிக் கொண்டார்கள். இவர்களது அடுத்த குறியாக அரசியல் அதிகாரம் அமைந்தது.
பௌத்த மறுமலர்ச்சி
ஐரோப்பியரது மதமாற்று நடவடிக்கைகள் காரணமாக நாட்டு மக்கள், தமது மதம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை படிப்படியாக இழந்த வருவதாக உள்ளூர் மதங்களைச் சேர்ந்த அறிஞர்கள் நீண்ட காலமாகவே கவலைப் பட்டதுண்டு. ஆனால் பிரித்தானியர் காலத்தில் அவர்களது மிசனரியினர் அச்சகங்களை அமைத்து உள்ளூர் மதங்களுக்கு எதிரான பிரசுரங்களையும் வெளியிட்டதுடன், சுதேசிகளை தமது போதகர்களாக ஆக்கி தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டதானது பெருத்த நெருக்கடிகளை சுதேசிகளது மதங்களுக்கு ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த பௌத்த, சைவ, இஸ்லாமிய தலைவர்கள் தமது எதிர்த்தாக்குதல்களைத் தொடுக்கத் தொடங்கினார்கள். இது பௌத்த மதத்தில் கேர்ணல் ஒல்கொட், மற்றும் அநகாரிக தர்மபாலா போன்றவர்களை முன்னே கொண்டு வந்தது. சைவத்திற்கு ஆறுமுக நாவலர் தலைமை தாங்கினார். ஒரபி பாஷா முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கினார். இவர்களுக்கு அந்தந்த சமூகத்தில் இருந்த செல்வந்தர்கள் நிதியுதவி செய்து ஆதரித்தார்கள். இந்த மறுமலர்ச்சி இயக்கங்களும் அந்த செல்வந்தர்களுக்கு ஆதரவாக உரிய நேரங்களில் குரல் கொடுக்க தவறவில்லை. இவர்கள் கிறீஸ்தவர்களது மதமாற்று நடவடிக்கைகளுக்கு மாற்றாக தமது சொந்த பாடசாலைகளை நிறுவி சுதேச மதச் சூழலில் வைத்து ஆங்கிலத்துடன், சுதேச மொழியையும் கற்பித்து இந்த மதமாற்று நடவடிக்கைக்கு எதிராக போராடினார்கள். இங்கு நாம் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை கவனிப்போம்.
பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ஆதரவளித்த சிங்கள முதலாளித்துவ வர்க்கமானது சாராம்சத்தில் தரகுத்தன்மை வாய்ந்ததாகவே இருந்தது. பிரித்தானியரை அண்டி, அவர்களது ஒத்துழைப்புடன் அவர்களுக்கு கீழ்ப்படிவான ஒரு பொருளாதார பாத்திரத்தையே இது வகித்து வந்தது. இதனால் இவர்களது பொருளாதார நலன்கள் சாராம்சத்தில் கொலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிரானதாக இருக்கவில்லை. ஆனால் அதேவேளை, தமது சொந்த பொருளாதார நடவடிக்கைகளின் போது வேறு சக்திகளுடன் தீவிரமாக போராடிக் கொண்டிருந்தார்கள். இந்திய, முஸ்லிம் வர்த்தகர்கள் சிங்கள வர்த்தகர்களை தலையெடுக்க விடாமல் சந்தையை ஆக்கிரமித்திருந்ததார்கள். அரச வேலைவாய்ப்பு மற்றும் நிபுணத்துறைகளில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இதனால் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை ஆதரித்த சிங்கள முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்கங்கள் ஏனைய இன ஒத்த வர்க்கங்களை தமது எதிரிகளாக கருதத் தலைப்பட முனைந்த போது, இவர்களால் ஆதரிக்கப்பட்ட பௌத்த மறுமலர்ச்சி இயக்கமும் தனது இலக்கை கிறீஸ்தவ எதிர்ப்பு என்பதில் இருந்து திசை திருப்பி தமிழ், முஸ்லிம், இந்திய எதிர்ப்பாக மாறத் தொங்கியது. பின்னாட்களில் சிங்கள இனவாதத்தின் முக்கிய முளைகள் இவ்வாறுதான் அரும்பின.
கண்டிய சிங்களவரது மனக்குறைகள்
கண்டிய சிங்களவரும் கரையோர சிங்களவரும் ஒரே மொழியை பேசி, பௌத்த மதத்தை பின்பற்றினாலும் கண்டியர்கள் தம்மை கரையோர கொவிகம சாதியினரை விட சமூக உயர்ந்தவர்களாகவே கருதி வந்தனர். கரையோர பிரதேசங்கள் நீண்ட காலம் கொலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததனால் இங்கிருந்த மக்கள் ஆங்கிலக் கல்வி, பொருளாதார வாய்ப்புகள், நிபுணத்துவ துறைகள், அரச உத்தியோகம் போன்றவற்றில் பல வாய்ப்புக்களை பெற்றிருந்தனர். ஆனால் மிகவும் பிந்தியே கொலனித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட கண்டியர்கள் இந்த துறைகளில் ஏனையவர்களை விட மிகவும் பின்தங்கி நின்றார்கள். 1833 அல் அரசியல் பிரதிநிதித்துவ முறைகள் அறிமுகமானபோது, சிங்களவருக்கான பிரதிநிதித்துவமானது கரையோர சிங்களவருக்கே வழங்கப்பட்டமையால் கண்டியர்கள் மிகவும் அதிருப்தியுற்றார்கள். அத்தோடு மலையக பிரதேசத்தில் பெருந்தோட்த்துறை உருவாக்கப்பட்டு இந்தியாவில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள் கொண்டு வந்து குடியமர்த்திய போது, இந்த புதிதாக வருபவர்கள் பற்றி அச்சம் கொண்டார்கள். தமது பிரதேசம், தொழில் வாய்ப்புகள், அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவை இவர்களால் பறி போவதாக பயந்தார்கள்.
பெருந்தோட்டங்களை பிரித்தானியர் உருவாக்கிய போது அதற்கு மிகவும் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். ஷஷமூலதனம் என்பது ஒரு பொருளல்ல, அதுவோர் சமூக உறவு|| என்று மார்க்ஸ் கூறியதை நாம் நினைவில் கொள்வோம். தோட்டங்களும், தொழிற்சாலையும், இயந்திரங்களும் தம்மளவில் மூலதனமாக மாட்டாது. அத்துடன் கூடவே தமது உழைப்புச் சக்தியை விற்பதன் மூலமே பிழைத்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ள பாட்டாளி வர்க்கம் இருக்கும் போது மட்டுமே இந்த தோட்டமும், தொழிற்சாலையும், இயந்திரங்களும் உபரி உழைப்பை அபரிப்பது சாத்தியப்படும். இப்படியாக உபரி உழைப்பை உருவாக்குவதன் மூலமாகவே இந்த நிலமும், தொழிற்சாலையும், இயந்திரங்களும் மூலதனமாக செயற்பட முடியும். பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் அதற்கு தேவையான பெருமளவு தொழிலாளர்களை பெறுவதில் சிரமங்கள் இருந்தன.
கண்டியில் இருந்த விவசாயிகள் ஏற்கனவே ஒரு அரை பண்ணையடிமை உறவில் இருந்தார்கள். இதனால் இவர்களைப் பொறுத்தவரையில் தமது உழைப்புச் சக்தியை விற்றுத்தான ஆகவேண்டும் என்ற நிலைமை இருக்கவில்லை. அத்துடன் அமெரிக்காவில் கறுப்பு அடிமைகள் கொண்டு வந்த நிலைமையை ஒப்பிட்டால், இந்த சிங்கள் விவசாயிகளை பெருந்தோட்டத்தில் அரை அடிமை நிலையில் வைத்திருப்பது ஒருபோதும் சாத்தியப்பட்டிராது. ஆதலால் வெளியில் இருந்து பாட்டாளிகளை இறக்குமதி செய்தாக வேண்டியிருந்தது. அப்படியாக ஒரு பெரும் எண்ணிக்கையான மக்களை, அதுவும் இன்னொரு மொழி, மதம், இனத்தை சேர்ந்த மக்களை ஒரு ஆக்கிரமி;க்கப்பட்ட மக்கள் மத்தியில் வந்து குடியமர்த்துவதனால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் பற்றி பிரித்தானியர் அறவே அலட்டிக் கொள்ளவில்லை. அத்தோடு கரையோர சிங்களவரும் பெருந்தோட்டத்துறையில் முதலீடு செய்ததனால் இவர்களுக்கும் இந்திய தொழிலாளரது தேவை இருந்தது. இது கண்டிய – கரையோர சிங்களவரிடையே முரண்பாடுகளை தோற்றுவித்தது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக தோட்டத் தொழிலாளரது வாக்குரிமையை கட்டுப்படுத்தும் பிரச்சனைகள் எழுந்தபோது இந்திய அரசானது தனது தொழிலாளர்களை அனுப்ப மறுத்தது. இதனை சமரசம் செய்வதற்காக டி. எஸ். சேனநாயக்க தலைமையில் தோட்டத்துறை முதலாளிகளது குழுவொன்று 1923 இல் இந்திய சென்று இலங்கையில் குடியேறும் இந்திய தொழிலாளருக்கு, நாட்டிலுள்ள ஏனைய தொழிலாளர்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்பே மீண்டும் இந்திய தொழிலாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது.
இப்படியாக கரவா சாதியினரது எழுச்சி, பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தாக்கம், கண்டியரது மனக்குறைகள் போன்றவை கொண்டு ஒரு சிக்கலான சூழ்நிலையிலேயே இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்படத் தொடங்கின.
கொலனித்துவ காலகட்டத்தில் ஒரு ஆங்கிலக்கல்வி கற்ற ஒரு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ வர்க்கமானது உருவாகி வந்தது. இது கரு அளவிலான தேசியத்தை தன்னுள் கொண்டிருந்தது. இது நாட்டின் நிர்வகிப்பதில் சுதேசிகளது பங்கு குறித்து கிளர்ச்சி செய்யத் தொடங்கியது. இதன் விளைவாக 1833 இல் கோல்புறூக் குழுவினரின் பரிந்துரையில் முதலாவது சட்டசபை உருவானது. அதில் 15 பேர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டனர். உத்தியோகப் பற்றுள்ளவர் 9 பேர்: உத்தியோக பற்றற்றவர் 6 பேர். இந்த உத்தியோகப் பற்றற்றவர்களுள் சிங்களவர் ஒருவர்: தமிழர் ஒருவர். தமிழ் அங்கத்தவராக மகா முதலியார் ஆறுமுகத்தாபிள்ளை குமாரசாமி அவர்கள் நியமனம் பெற்றார். இவர் பொன்னம்பலம் இராமநாதனின் பாட்டனார் ஆவார். சிங்களவருக்கான நியமனம் கரையோர கொவிகம சாதியைச் சேர்ந்தவருக்கு கிடைத்தது. இது அந்த காலத்தில் பலம் பெற்று விளங்கிய ஏனைய சமூகங்கள் மத்தியில் பெருத்த அதிருப்தியை தோற்றுவித்தது. குறிப்பாக கண்டிய சிங்களவரும், முஸ்லிம்களும் தமக்கான பிரதிநிதித்துவத்தைக் கோரினார்கள். 1889 இலேயே இந்த இரண்டு பிரதிநிதித்துவங்களும் வழங்கப்பட்டன.
தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரையில் ஆறுமுகத்தாபிள்ளை குமாரசாமியைத் தொடர்ந்து அவரது மருமகன் சேனாதிராயர் எதிர்மன்னசிங்கம் அவர்கள் இந்த பிரநிதித்துவத்தை வகித்தார். அவருக்குப் பின்னர் ஆறுமுகத்தாபிள்ளை குமாரசாமியின் மகனான முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டார். 1879 இல் முத்துக்குமாரசாமி அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து அடுத்த நியமனம் பற்றிய பிரச்சனை வந்தது. அப்போது கொழும்பில் மிகவும் பிரபலமான சட்டத்தரணியாக இருந்தவரும், தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களில் நன்கு அறியப்பட்டவருமான கொழும்புச் செட்டி பின்னனியைக் கொண்ட தமிழ் கிறிஸ்தவரான, கிறிஸ்தோபர் பிறிட்டோ என்பவரது பெயர் முன்மொழியப்பட்டது. இவர் மறைந்த முத்துக்குமாரசாமி அவர்களின் மருமகனாவார். இவருக்கு போட்டியாக முத்துக்குமாரசாமியின் இன்னொரு மருமகனான பொன்னம்பலம் இராமநாதன் அவர்களும் களத்தில் குதித்தார். பிறிட்டோவிற்கு இருந்த ஆளுமை, அனுபவம், செல்வாக்கு என்பவை காரணமாக இவரே ஆளுரனரால் நியமிக்கப்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆறுமுகநாவலர் அவர்களது தலையீடு நிலைமைகளை தலைகீழாக மாற்றிவிட்;டது. பிறிட்டோவின் கிறீஸ்தவ மதம் பற்றிய சர்ச்சை காரணமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பல கூட்டங்களிலும் இராமநாதனை ஆதரித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன. இதனால் இறுதியில் பொன்னம்பலம் இராமநாதனே இந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார்.
தமிழருக்கும், முஸ்லிம்களுக்கமாக சேர்த்து ஒரே பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை முஸ்லிம்கள் எதிர்த்தார்கள். தாம் தமிழரில் இருந்து வேறுபட்ட தனியான ஒரு இனம் என்றும், அதனால் தமக்கென தனியான ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் தலைவர்கள் கிளர்ச்சி செய்தனர். ராசிக் பரீத், அப்துல் அசீஸ் போன்றவர்கள் இதற்கு தலைமை தாங்கினார்கள். இவர்களை எதிர்த்து வாதிட்ட இராமநாதன், முஸ்லிம்கள் மதத்தால் வேறுபட்டாலும் கூட, தமிழ் மொழியை பேசுவதால் இனத்தால் தமிழர்கள் என்று வாதிட்டார். இப்படியாக முஸ்லிம்களது பிரதிநிதித்துவமும் தமிழர்களாலேயே சுமார் 45 வருடங்கள் அனுபவிக்கப்பட்டது.
சட்டசபை அங்கத்துவம் பற்றி அடுத்த நெருக்கடியானது 1910 ம் ஆண்டில் ஏற்பட்டது. சட்டசபைக்கு அங்கத்தவர்களை நியமனம் செய்யும் முறைக்கு மாறாக தேர்தல் மூலமாக அங்கத்தவர்களை தேர்ந்தெடுப்பதே சரியானதாக இருக்கும் என்று கிளர்ச்சி நடைபெற்று வந்தது. இதனைக் கருத்திற் கொண்ட ஆங்கிலேயர் 1910 ம் ஆண்டில் பதினேழு பேர் கொண்ட சட்டசபையில் ஒரு பிரதிநிதியை மாத்திரம் கல்வி கற்றவர்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் வகையில் இணங்கினர். ஏற்கனவே உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களாக சுதேசிகளான கண்டிய சிங்களவர், கரையோர சிங்களவர், இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் பிரதிநிதித்துவம் பெற்றுவிட்டதால், அப்போது முன்னேறி வந்து தொழில்துறை, தோட்டத்துறை, நிபுணத்துறை போன்ற அனைத்திலும் குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுக் கொண்ட கரவா சாதியினர் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இதனை எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்க சிங்கள கொவிகம சாதியினர் தயாராக இருக்கவில்லை. அப்போது கல்வி கற்ற தமிழ் வாக்காளர்களது எண்ணிக்கையானது மொத்த கல்வி கற்ற வாக்காளர்களது எண்ணிக்கையில் சுமார் நாற்பது சதவீதமாக இருந்ததனால், தமிழர்களுடன் கூட்டுச் சேர்வதன் மூலமாக சிங்கள கொவிகம சாதியினர், கரவா சாதியினருக்கு அரசியல் பிரதிநிதித்துவ கோரிக்கையை தடுத்து நிறுத்தினர். இராமநாதனை கல்வி கற்ற அங்கத்தவருக்கான வேட்பாளராக இறக்கி அவரை ஆதரிப்பதன் மூலமாக, சிங்கள கரவா சமூகத்தின் வேட்பாளரான மார்க்கஸ் பெர்னான்டோ தோற்கடிக்கப்பட்டார். இதன் மூலமாக இந்த சிங்கள கொவி – தமிழ் வேளாளர் கூட்டானது முறியடிக்கப்படாமல் தமக்கு விமோசனம் கிடைக்காது என்று கரவா சமூகம் உணரத்தலைப்பட்டது. இது பிற்காலத்தில் ஏற்பட்ட இன முறுகல்களில் முக்கிய பாத்திரத்தை வகித்தது.
அடுத்த பிரச்சனை 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்துடன் வருகிறது. இந்த காலகட்டத்தில் முதலாம் உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரமானது பெருந்தோட்டத்துறையில் குவிக்கப்பட்டிருந்ததால் நுகர்விற்கான பெருமளவிலான உணவுப் பொருட்கள் இறக்குமதியிலேயே தங்கியிருந்தது. யுத்தகால கடற் போக்குவரத்து பிரச்சனைகளும், கொலனித்துவ ஆட்சியாளர்களது போர்குறித்த கவனங்களும் உணவு தட்டுப்பாட்டை இலங்கையில் ஏற்படுத்தியது. ஏற்கனவே முஸ்லிம், இந்திய, தமிழ் வர்த்தகர்களுக்கு எதிராக இனவாத விஷத்தைப் பரப்பிக் கொண்டிருந்த அநகாரிக தர்மபாலா போன்றோர் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். முஸ்லிம் வியாபாரிகள் பொருட்களைப் பதுக்கி கொள்ளை இலாபம் அடிப்பதே உணவுத் தட்டுப்பாட்டிற்கும், விலையேற்றத்திற்குமான காரணம் என்ற வகையில் தமது பிரச்சாரங்களை சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொண்டனர். இதனால் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிரான தீவிரமாக கசப்புணர்வு தோன்றியிருந்தது. இப்படிப் பட்ட நிலையில்தான் கண்டிய பெரகரா சம்பவங்கள் கலவரத்திற்கான உடனடிக் காரணமாக அமைந்தன.
கண்டியில் தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரகராவின் போது அவர்கள் ஒரு பள்ளிவாசலுக்கு முன்னாள் அந்த ஊர்வலத்தை கொண்டு செல்ல அனுமதி கேட்டனர். அது முஸ்லிம்களது வணக்கத்தளம் ஆதலால் அந்த பாதையில் செல்வதானால் மேளதாளங்களை நிறுத்திவி;ட்டே செல்ல வேண்டும் என்று கண்டியின் அரசாங்க அதிபராக இருந்த வெள்ளையர் நிபந்தனை விதித்தார். இதனை ஏற்க பெரகர ஏற்பாட்டாளர்கள் மறுத்;தபோது, அந்த பாதையில் ஊர்வலம் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம், பொலிசார் என்று பல்வேறு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதே காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது. ஆயினும் இந்த தடைகளை மீறி குறிப்பிட்ட பாதையில் ஊர்வலத்தை கொண்டு செல்ல முயன்று, அதில் பொலிசார் தலையிட்டு தடுத்து நிறுத்துகையில் ஏற்பட்ட அமளிதுமளிகளிலேயே முதலாவது தாக்குதல்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கண்டி நகரிலும், படிப்படியாக ஏனைய நகரங்களிலும் இந்த கலவரம் பரவியது. உலக யுத்த காலத்தில், நாட்டில் இன்னொரு கலகம் நிகழ்வதை விரும்பாத கொலனித்துவ ஆட்சியாளர்கள் இராணுவச் சட்டத்தை பிறப்பித்து கலவரத்தை கடுமையாக நசுக்கினர். கலவரத்தில் ஈடுபட்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கலவரத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அநகாரிக தர்மபாலா நாடு கடத்தப்பட்டார்.
இப்படியாக தண்டிக்கப்பட்ட சிங்கள தலைவர்களுக்கு ஆதரவாக இராமநாதன் குரல் கொடுத்தார். சட்ட சபையில் கொலனித்துவ அரசின் செயற்பாடுகளை கண்டித்து பேசியதுடன், லண்டனுக்கே சென்று கொலனித்துவ அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் போன்றவர்களை சந்தித்து தனது பக்க வாதங்களை முன்வைத்து பலரது தண்டனைகளை குறைத்து, அவர்களது விடுதலைக்கு வழிவகுத்தார். இதனை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இராமநாதனுக்கு சிங்கள தலைவர்கள் மகத்தான வரவேற்பைக் கொடுத்தனர். அத்துடன் அவரை இரதத்தில் வைத்து தாமே வடம் பிடித்து கொழும்பு நகரில் இழுத்து வந்து மரியாதை செய்தார்கள். இதன் பின்னர் இந்த சம்பவங்கள் பற்றி இராமநாதன் ஒரு நூலை எழுதினார். அதில் ஷஷமுஸ்லிம் காடையர்||, ஷஷஅப்பாவி சிங்களவர்கள்|| என்ற பாணியில் பிரச்சனை அணுகப்பட்டிருந்தது. இந்தனைக்கும் இராமநாதன் ஒரு சாதாரண அரசியல்வாதி அல்லர். சுமார் பத்து வருடங்கள் இலங்கையின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், தற்காலிக அட்டோர்னி ஜெனரலாகவும் பணியாற்றி, சட்ட விவகாரங்களில் பழுத்த அனுபவம் கொண்ட சட்ட அறிஞர்.
இங்குள்ள பிரச்சனை இதுதான்! இலங்கையில் முஸ்லிம்கள் என்ற ஒரு இனம், சிங்களவர்கள் என்ற இனத்தினால் நசுக்கப்படுகிறார்கள் என்ற பிரச்சனை இவருக்கு தெரியவில்லையா? இந்த இனக்கலவரத்தில் இருந்து போதிய எச்சரிக்கையும், விழிப்புணர்வு பெறாமல் இவரை தடுத்தது என்ன? அதனைவிட கடந்த காலத்தில தமிழர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தன்னால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட மக்கள் ஒரு பெரிய இடரில் இருக்கும் போது அவர்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் சார்பாக பிரதிநிதித்துவம் செய்யும்படி இவரை வழிநடத்திய சிந்தனைமுறை என்ன? இதற்கு பலவிதமாக பலரும் வியாக்கீனம் செய்யலாம். சந்தர்ப்பவாதம் என்பர் சிலர்: அயோக்கித்தனம் என்பர் இன்னும் சிலர். ஆனால் குறைந்த பட்சம் ஒன்று மட்டும் புரிகிறது. அதாவது இவர் தன்னை ஒரு வேறு இனத்தவர் என்று கருதவே இல்லை. தன்னை இலங்கையராக மட்டுமே இனம் கண்டார் என்று தெரிகிறது. அந்தளவிற்கு சிங்கள கொவி – தமிழ் வேளாளர் கூட்டானது தமிழ் தலைவர்களது கண்களை மறைத்திருந்தது. இப்படியாக தங்களை இலங்கையர்களாக மாத்திரம் கருதி, இணக்க அரசியலை கண்மூடித்தனமாக முன்னெடுத்த பொன்னம்பலம் சகோதரர்களுக்கு இந்த மயக்கங்கள் களையும் விதத்திலான சம்பவங்கள் விரைவில் நடந்தேறின.
1919 இல் இலங்கை தேசிய கொங்கிரஸ் (ஊநலடழn யேவழையெட ஊழபெசநளள) அமைப்பானது உருவாக்கப்பட்டபோது கொழும்பில் இருந்த தமிழர் அமைப்பான யாழ்ப்பாண சங்கமும் அதனுடன் இணைந்து கொண்டது. அந்த காலத்தில் இனரீதியான பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக பிரதேசரீதியான பிரதிநிதித்துவத்திற்கான கோரி;க்கை எழுந்து வந்தது. இப்படியான சந்தர்ப்பத்தில் கொழும்பில் உள்ள தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கான அபாயத்தை கொண்டிருந்தனர். இந்த அச்சத்தை நீக்கும் வகையில், பிரதேசரீதியான பிரதிநிதித்துவம் உருவாகும் பட்சத்தில் தமிழருக்கென ஒரு தனியான தேர்தல் தொகுதி ஒன்று கொழும்பு மேற்கில் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி சிங்கள தலைவர்களால் தமிழ் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே கொழும்புத் தமிழர் ஏனைய கரையோர, கண்டிய சிங்களவருடனும், முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் இணைந்து இலங்கை தேசிய கொங்கிரசை நிறுவினர். இதன் முதல் தலைவராக பொன்னம்பலம் அருணாசலம் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1923 இல் இந்த வாக்குறுதியில் இருந்து சிங்கள தலைமைகள் பின்வாங்கவே அருணாசலம் அவர்கள் இந்த பதவியை இராஜிநாமா செய்து மிகுந்த விரக்தியுடன் வெளியேறினார்.
இருபதுகளின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இளைஞர் கொங்கிரஸ் என்ற அமைப்பு உருவானது. அது அக்காலத்தில் மிகவும் முற்போக்கான கொள்கைகளை முன்வைத்தது. சாதிய ஒழிப்பு, சீதன எதிர்ப்பு, சுதேச மொழியில் கல்வி, தேசிய உடைகளை உடுத்துவது, மக்களது பங்குபற்றுதலுடன் கூடிய அரசியல் முன்னெடுப்புக்கள், கொலனித்துவத்தில் இருந்து பூரண சுதந்திரம் போன்ற நிலைப்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்தது. தமது மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்களையும் பங்குபற்ற ஊக்குவித்ததனால் இவர்களது மாநாட்டு பந்தல்கள் சாதி வெறியர்களால் எரிக்கப்பட்டன. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சமபந்திபோசன முறைமை உருவாக்கப்பட்ட போது அதனை இராமநாதன், ஷஷஇது இந்து தர்மத்திற்கு எதிரானது|| என்று எதிர்த்த போது, இளைஞர் கொங்கிரஸ் இந்த சமபந்தி போசனத்திற்கு ஆதரவாக செயற்பட்டனர். 1927 இல் அரசியல் சீர்திருத்தம் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள டொனமூர் தலைமையிலான ஆணைக்குழு இலங்கை வந்தபோது அனைவருக்குமான வாக்குரிமை பற்றிய கோரிக்கை எழுந்தது. இதனை இராமநாதன் எதிர்த்தார். ஷஷபெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வழங்குவது இந்து தர்மத்திற்கு எதிரானது|| எனவும், ஷஷஇது கும்பலாட்சிக்கு வழிவகுக்கும்|| எனவும் வாதிட்டார். டொனமூரின் முன்மொழிவுகளை யாழ் இளைஞர் கொங்கிரசினரும் எதிர்த்தனர். ஆனால் இராமநாதன் முன்வைத்த காரணங்களுக்கு நேரெதிரான காரணங்களுக்காக. அதாவது, இந்த முன்மொழிவுகள் இலங்கைக்கு பூரண சுதந்திரமுள்ள சுயராச்சியத்தை கொண்டுவரத் தவறிவிட்டதாக கூறி இந்த முன்மொழிவுகளை முற்றாக நிராகரித்த இவர்கள், இந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் 1931 இல் இலங்கை முழுவதற்கும் நடத்தப்பட்ட தேர்தலை யாழ் இளைஞர் கொங்கிரசினர் வடமாகாணத்தில் முற்றாக பகிஸ்கரித்தனர். இப்படியாக தமிழ் அரசியலில் பழமைவாதிகளும், முற்போக்கு ஜனநாயகவாதிகளும் என இரண்டு போக்குகள் இந்த கால கட்டத்தில் தோற்றம் பெற்றது.
இந்த தேர்தல் பகிஸ்கரிப்பானது தமிழ் பழமைவாதிகளுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இளைஞர் கொங்கிரசை முறியடிப்பதன் மூலமாகவே தமது ஆதிக்கத்தை தக்கவைக்கலாம் என்று கருதிய இந்த சக்திகள் ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் திரண்டு இளைஞர் கொங்கிரசிற்கு எதிராக தீவிரமாக செயற்பட்டார்கள். இதில் இவர்கள் கரங்களில் குவிந்திருந்த பணம், அதிகாரம், சாதிவெறி போன்ற அனைத்தும் தாராளமாகவே பயன்படுத்தப் பட்டன. இப்படியாக தமிழர் சமூகத்தில் தோன்றிய முதல் முற்போக்கு அமைப்பானது பழமைவாத ஆதிக்க சக்திகளினால்; அடித்து நொருக்கப்பட்டது. 1934 இல் மீண்டும் வட மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டபோது ஜீ. ஜீ. பொன்னம்பலம் பருத்தித்துறை தொகுதியின் பிரதிநிதியாக சட்டசபைக்கு தெரிவானார். அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு இவரே தமிழ் மக்களது அரசியல் தலைமையை வைத்திருந்தார்.
டொனமூர் அரசியல் அமைப்பானது கொமிட்டி முறையில் அமைந்த மந்திரி சபையை பிரேரி;த்தது. ஒவ்வொரு மந்திரியும் ஏழுபேர் கொண்ட குழுக்களினுள்ளேயே செயற்பட வேண்டியிருந்தது. இதனால் சமூகத்தில் உள்ள எல்லா பிரிவினரும் நாட்டை நிர்வகிக்கும் பணியில் பங்கு கொள்ள முடியும் என்பது டொனமூர் குழுவின் வாதமாகும். ஆனால் இந்த முறை தேவையற்றது எனவும், நிர்வாக வேலைகளை விரைவாக முடிப்பதற்கு தடையானது என்பது சிங்கள தலைமையின் வாதமாக இருந்தது. தமிழ் தலைமைகள் இந்த குழு வேலை முறையானது எண்ணிக்கையில் சிறிய இனங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக கருதி அதற்காக வாதிட்டு வந்தனர். 1936 இல் தேர்தல் முடிந்ததும் சிங்கள தலைவர்கள் டி. எஸ். சேனநாயக்க தலைமையில் இரகசியமான சதியில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட எண்ணிக்கையான சட்டசபை உறுப்பினர்களை இரகசியமாக கூட்டி, அவர்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமைச்சர்ளை தேர்ந்தெடுக்கும் குழுக்களில் இடம்பெறுமாறு செய்து, முற்றிலும் சிங்களவர்களைக் கொண்ட ஒரு தனிச் சிங்கள அமைச்சரவையை தேர்வு செய்தார். இத்தனையும் ஜனநாயகத்தின் பெயரால்தான் நடந்து முடிந்தது. இந்தனைக்கும் காரணமான, இந்த எண்ணிக்கையை தந்திரமாக நகர்த்தும் திட்டத்தை டி. எஸ். சேனநாயக்காவிற்கு சொல்லிக் கொடுத்தவர், பிற்காலத்தில் ஷஅடங்காத் தமிழன்| என்று தமிழரசுக் கட்சி போற்றிய சுந்தரலிங்கம் அவர்களேயாவார். இவர் பின்னர் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆலய பிரவேசத்திலும் தனது சாதித் திமிரை நிரூபித்துக் கொண்டார். தான் இவ்வாறு நடந்த கொண்டதற்கான விளக்கத்தை; கொடுத்த சுந்தரலிங்கம், தமிழர்கள் கருதுவது போல இந்த கொமிட்டி முறை ஒன்றும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை நிரூபிக்கவே தான் அப்படி செய்து காட்டியதாக கூறினார். ஒரு தனிமனிதனது திறமையும், தன்முனைப்பும் எப்படி ஒரு இனத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலியுள்ளது என்பதை இங்கு நாம் காண்கிறோம். துரதிஷ்டவசமானது என்ன வென்றால் இது ஒன்றும் கடைசி முறையாக தமிழர் வரலாற்றில் அமைந்து விடாமைதான்! இப்படிப்பட்ட இரகசிய சதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய பிரதிநிதிகளும் பங்கு பற்றினர். அவர்களுக்கும் ஒரு மந்திரி பதவி கொடுப்பதாக ஆசை காட்டியே டி. எஸ். சேனநாயக்க இதனை செய்து முடித்தார். இறுதியில் இவர்களும் ஏமாற்றப்பட்டார்கள்.
இங்கு நாம் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அதாவது சிங்கள அரசியல் தலைமையானது அதன் ஆரம்பம் முதலே மிகவும் பிரக்ஞையுடன் செயற்பட்டு தாம் நினைத்ததை சாதித்துள்ளார்கள். ஒவ்வொரு தலைவரதும் அரசியல் நுழைவே மிகுந்த கணிப்புடனேயே (ளாசநறநன உயடஉரடயவழைn) மேற்கொள்ளப்பட்டது. கிறீஸ்தவர்களாகவும், சிங்களத்தை சரளமாக பேசத் தெரியாதவர்களுமாக அரசியலுக்குள் நுழைந்தவர்கள், பௌத்தர்களாக மதம் மாறியதுடன், கண்டியில் இருந்த பிரபுத்துவ குடும்பங்களில் பெண் எடுப்பதன் மூலமாக தம்மை இலங்கையில் உள்ள சாதிய, மத அமைப்புகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக (ஊழ-ழிவயவழைn) மாற்றியமைத்தார்கள். டி. எஸ். சேனநாயக்க, டி. ஆர், விஜேவர்த்தன (இவர் லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவத்தின் உரிமையாளரும், ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் மாமனும், ரணிலின் தாத்தாவும் ஆவார்.), எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க போன்ற பலரும் இதனை மிகவும் கவனமாக செய்து தமது அரசியலை தந்திரமாகவும், திட்டமிட்டும் முன்னெடுத்தும் சென்றனர். தேவைப்பட்ட போது ஒவ்வொரு இனத்தவருக்கும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தனர். தமது காரியம் நிறைவேறியதும் அவற்றை காற்றில் பறக்க விட்டனர். இந்தியருக்கு மலையக தோட்டத் தொழிலாளரது உரிமைகள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளும்: கண்டிய சிங்களவருக்கு இலங்கை தேசிய கொங்கிரஸ் அமைக்கப்பட்ட போது கண்டிய தொகுதிகளில் கரையோர சிங்களவர்கள் எவரும் போட்டியிட மாட்டார்கள் என்று கொடுத்த வாக்குறுதியும்: தமிழருக்கு கொழும்பு மேற்கு தொகுதி தொடர்பாக கொடுத்த வாக்குறுதியும்: ஐரோப்பிய பிரதிநிதிகளுக்கு அமைச்சரவை தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளும் இப்படிப்பட்டனவாகவே இருந்தன. இப்படியாக சிங்கள தலைவர்கள் மிகவும் பிரக்ஞையுடனும், கபடத்தனத்துடனும் செயற்படும் போது வௌ;வெறு கால கட்டங்களிலும் தமிழ் தலைமைகள் தமது குறுகிய சொந்த, சாதிய, குழு சார்ந்த நலன்களின் அடிப்படையிலேயே பிரச்சனைகளை அணுகத் தொடங்கி எப்போதும் அவர்களால் பயன்படுத்தப் படுபவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள் என்பதை இங்கு குறித்துக் கொள்வோம்.
அடுத்ததாக வந்த சோல்பரி அரசியல் சீர்திருத்தத்தில் தமிழர்கள் தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் செய்யும் விதத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று சாதாரணமாக அறியப்பட்ட சமபல பிரதிநிதித்துவ முறைக்காக (டியடயnஉநன சநிசநளநவெயவழைn) போராடினார்கள். தமிழர்களது கோரிக்கைகளை நிராகரித்தது. தமிழர்களோ, சோல்பரி சீர்திருத்தம் கொண்டுவந்த, சிறுபான்மையினரின் உரிமைகள் மீறப்படாதிருப்பதை உத்தரவாதப்படுத்துவதாக கூறப்பட்ட, சரத்து 29 ஏ உடன் திருப்தியுற வேண்டியவர்களானார்கள். சுதந்திரத்திற்கு முன்பு 1947 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் கொங்கிரஸ் கட்சி ஐக்கிய தேசிய கட்சியை எதிர்த்து தமிழ் பிரதேசங்களில் போட்டியிட்டது. அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. ஆனால் வெற்றி பெற்றவுடன் ஷசெயலூக்கமான ஒத்துழைப்பு| என்பதன் பெயரில் ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவையில் இடம் பெற்றார். இதற்கு இவர் கூறிய காரணம் ஷஷகொழும்பில் உள்ள தமிழர்கள் இதனையே விரும்புகிறார்கள்|| என்பதாகும். சுதந்திரம் பெற்ற குறுகிய காலத்தினுள்ளேயே மலையக மக்களது பிரசா உரிமை மற்றும்; வாக்குரிமைகள் பறிக்கப்பட்டன. இந்த சட்டத்திற்கு ஆதரவாக ஜீ. ஜீ வாக்களித்தார். செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன் ஆகியோர் எதிர்த்து வாக்களித்து தமிழ் கொங்கிரசில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை அமைந்தனர். அடுத்து வந்த இரண்டரை தசாப்தங்கள் இந்த இரண்டு அமைப்புகளின் இழுபறியாகவே தமிழர் அரசியல் இருந்து வந்தது.
தமிழரசுக் கட்சியானது அதன் முதலாது மாநாட்டை திருகோணமலையில் நடத்தியமையானது மிகவும் குறியீட்டுப் பெறுமதி மிக்கதாகும். இதுவரை காலமும் கொழும்புத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர் என்ற பிரிவினைகளைக் கொண்டிருந்த ஈழத்தமிழர்கள் இந்த குறுகிய பிரதேச வேறுபாடுகளைக் களைந்து ஒரு தேசமாக உருவெடுப்பதன் வெளிப்பாடாக இந்த மாநாடு அமைந்தது. அந்த மாநாட்டு தீர்மானங்களிலேயே தமிழர்கள் ஒரு தனியான தேசம் எனவும், சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்றும் பிரகடனப்படுத்தப் பட்டது. அத்தோடு அடுத்து வந்த காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியானது முன்னெடுத்த மக்கள் திரள் போராட்டங்கள் ஈழத்தமிழரை ஒரு தேசமாக உருவாக்குவதில் முக்கியமான பங்கு வகித்தது. அவர்கள் நடத்திய பாதயாத்திரை திருகோணமலையை இலக்காக கொண்டிருந்ததும் தற்செயலானவை அல்ல. தமிழ் மக்களை ஒரு தேசமாக ஒன்றிணைக்கும் பிரச்ஞைபூர்வமான ஒரு முன்னெடுப்பாகும். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் அது ஒரு முதலாளித்துவ ஜனநாயக கட்சி போன்றே செயற்பட்டது. சமயத்தில் தீவிரமான மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூடிக் குலாவவும் தவறவில்லை. அதுவும் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கும் போது கூடிக் குலாவுவதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கும் போது போராடுவதும் என்று ஒரு ஒழுங்குமுறையை கொண்டிருந்தார்கள்.
இந்த முரண்பாடானது அது பிரதிநிதித்துவப் படுத்த முனைந்து இரண்டு சமூகப் பிரிவினரின் முரண்பட்ட நலன்களில் இருந்து பிறந்ததாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று கருதுகிறேன். ஒரு பகுதியில் இவர்கள் பாராளுமன்ற கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் தமிழர் தாயகத்தையே தமது வாக்கின் அடித்தளமாக நம்பியிருந்தார்கள்.
மறுபுறம், இவர்கள் கொழும்பு தமிழ் மேட்டுக்குடியுடன் மிகவும் நெருக்கமான சமூக, பொருளாதார உறவுகளை கொண்டிருந்தார்கள். தமிழரசுக் கட்சிக்கு தேவையான பொருளாதார, தார்மீக ஆதரவையும், அரசியல் ஆலோசனைகளையும் இந்த மேட்டுக்குடியே வழங்கி வந்தது. அத்தோடு இலங்கை போன்றதொரு மூன்றாம் உலக நாட்டில் அரசின் தன்மையானது, உடமை வர்க்கங்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை அரசின் துணையின்றி சுயாதீனமாக முன்னெடுக்க முடியாதவாறு அரசின் கோட்டா மற்றம் அனுமதிப் பத்திரங்கள் போன்ற நடைமுறைகளால் கட்டுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அத்தோடு மத்திய தர வர்க்கம் நம்பியிருந்த அரச மற்றும் சேவைத்துறை வேலை வாய்ப்புகள் என்பவை கூட வெளிப்படையான போட்டி முறைகளில் மூலமாக அன்றி அமைச்சர்களின் தயவில் வழங்கப்படுவனவாக இருக்கின்றன. இதனை நாடும் இந்த மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்களது நலன்கள் அரசுடன் ஒத்துழைப்பதை வேண்டி நிற்கிறது. இந்த முரண்பாடுகள் இவர்களது அரசியல் முன்னெடுப்புக்களிலும் வெளிப்படலாயின. இதனால் வாக்குகளைக் பெறுவதற்காக ஒருவித உணர்ச்சி மயமான தேசியவாத அரசியலை முன்னெடுத்தார்கள். மறுபுறம் தமது புரவலர்களை திருப்தி படுத்துவதற்காக இணக்க அரசியலை முன்னெடுத்தார்கள். அதுவும் ஐக்கிய தேசிய கட்சியின் திறந்த பொருளாதாரமும், கொழும்புத் தமிழரது ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகமும் இவ்வாறு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தது. இதனால் மிகவும் தீவிரமாக பேசி வாக்குகளை வென்ற தமிழ் தலைமை, தேர்தல் வெற்றியின் பின்பு அமைதி காக்கும் படி இளைஞர்களை வேண்டுவதாயிற்று.
1965 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டானது தமிழரசுக் கட்சிக்கு மிகுந்த நெருக்கடியை தோற்றுவித்தது. அறுபதுகளின் முற்பாதியில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி பதவியில் இருக்கும் போது, சத்தியாக்;கிரக இயக்கம், தமிழ் அஞ்சல் தலைகளின் வெளியீடு என்று போராட்டத்தை மிகவும் தீவிரமாக முன்னெடுத்து சிறீலங்கா அரசை தமிழர் தாயகத்தில் செயற்பட முடியாதபடி முடக்கியவர்கள், அடுத்த ஐந்தாண்டு காலம் ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்து கொண்ட சமரசம் கட்சியினுள் மிகுந்த நெருக்கடிகளை தோற்றுவித்தது. 1968 இல் மன்னாரில் நடைபெற்ற மாநாட்டை அடுத்து ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினரான வி. நவரத்தினம் அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி தமிழர் சுயாட்சிக் கழகத்தை நிறுவவும், தமிழீழ கோரிக்கையை முன்வைக்கவும் வழி வகுத்தது. 1970 இல் நடந்த தேர்தலில் தமிழர்களது முக்கிய தலைவர்களான அமிர்தலிங்கம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சிவசிதம்பரம் ஆகியோர் தோல்வியடைந்தார்கள். புதிதாக ஆட்சிக்கு வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமானது கொண்டுவந்த புதிய அரசியலமைப்புச் சட்டம், தரப்படுத்தல் கொள்கைகள் போன்றவை தமிழ் இளைஞர்கள் மத்தியில் தீவிரமான எதிர்ப்புணர்வை தோற்றுவித்தது. தமிழாராய்ச்சி படுகொலைகள் இதன் உச்ச கட்டமாக அமைந்தது. இந்த காலத்தில் தோன்றிய மாணவர் பேரவை, ஈழ விடுதலை இயக்கம், புதிய தமிழ் புலிகள் அமைப்புக்கள் போன்றவை ஏற்கனவே தமிழீழத்தை தமது இலட்சியமாக வகுத்துக் கொண்ட நிலையில் தமிழ் அரசியல்வாதிகளும் கூட்டணியாக மாறுவதையும், தமிழீழ கோரிக்கையை முன்வைப்பதையும் தவிர்க்க முடியவில்லை.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்மொழிந்தபோது தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை வெறுமனே ஒரு தேர்தல் பிரச்சார நோக்கத்துடன் தான் முன்வைத்ததாக கருதவேண்டியுள்ளது. ஏனெனில் அதனை வென்றெடுப்பதற்கான எந்தவிதமான வேலைத்திட்டங்களும் அவர்களிடம் அறவே இருக்கவில்லை. மாநாட்டு பந்தலிலேயே தேர்தலின் பின்பு உரிய காலத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டதை ஆட்சேபித்து, இரண்டு பெண்கள் அதற்கான திட்டவட்டமான கால அவகாசம் குறிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திய போது அதனை தலைமை முற்றாக தட்டிக் கழித்து விட்டது. அவ்வாறே 1977 இன் தேர்தலை தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பாக கூறி தேர்தலை வென்றவர்கள் அதற்கு மேல் இந்த மக்கள் ஆணை பற்றி எந்தவிதமான வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு வழியற்றவர்களாக வெறும் வார்த்தை ஜாலாங்களிலேயே காலத்தை ஓட்டினார்கள். போதாக்குறைக்கு வெற்றிவிழாக்கள், மலர்க்கிரீடம், அமைச்சர்களுக்கு வரவேற்பு என்று பழையபடி சாதாரண அரசியல்வாதிகளது நடவடிக்கைகளுக்கு திரும்பினார்கள். இதனால் இளைஞர்களது பலத்த கோபத்திற்கு உள்ளானார்கள். 1983 கலவரம் மற்றும் இந்திய தலையீடு ஆகியவற்றிற்கு முன்னரே தமிழர் விடுதலைக் கூட்டணியானது ஏனைய இளைஞர் அமைப்புக்களால் ஓரம் கட்டப்படும் நிலைமை உருவாகியிருந்தது. 1982 ம் ஆண்டு மேதின கூட்டத்தை தமிழர் விடுதலை கூட்டணியானது றிஞ்வே மண்டபத்தில் மண்டபத்தில் நடத்திய போது, ஈபிஆர்எல்எப் அமைப்பானது யாழ் முற்றவெளியில்; பிரமாண்டமான கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் பேசிய டேவிட் சண் இதனை சுட்டிக்காட்டி பேசினார். ஆனால் இந்த எழுச்சியை இளைஞர் அமைப்புக்கள் முறையான வேலைத் திட்டம் இன்றி தக்க வைத்திருக்க முடிந்திருக்குமா? என்பது வேறு பிரச்சனை.
இடதுசாரி அமைப்புக்கள் ஆரம்பத்தில் தேசிய பிரச்சனை தொடர்பாக மிகவும் காத்திரமான நிலைப்பாடுகளை மேற்கொண்டிருந்தன. 1940 களில் இலங்கைக் கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது இலங்கைத் தமிழர்களை தனியான தேசமாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதாகவும் வலியுறுத்தியது.
1956 இல் தனிச்சிங்கள் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிராக கொல்வின் முழங்கினார். ஆனால் இது நீடிக்கவில்லை. படிப்படியாக இனவாத அரசியலை முன்னெடுக்கத் தலைப்பட்டனர். சீன – சோவியத் பிளவின் போது சீன நிலைப்பாட்டை ஆதரித்த சண்முகதாசனுக்கு எதிராக இனவாத தாக்குதல்கள் கொம்யூனிஸ்ட்டுக் கட்சி தலைவர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டது. சீன சார்பு கொம்யூனிஸ்ட்டு கட்சியினுள் கூட, இலங்கையின் பெரும்பான்மை மக்கள் சிங்களவர்களாக இருப்பதனால் கொம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைமையும் சிங்களவராகவே இருக்க வேண்டும் என்ற கருத்து விஜேவீர போன்றவர்களால் முன்வைக்கப்பட்டது. எப்படியாயினும் எழுபதுகளில் சிங்கள, தமிழ் மக்கள் ஆகிய இரண்டு தரப்பினரையும் உண்மையில் உள்ளடக்கி இருக்கக் கூடிய கொம்யூனிஸ்ட்டு கட்சிகள் என்று எதுவுமே இருக்கவில்லை. இப்படியான காலகட்டத்தில் வடக்கில் பலமாக விளங்கிய சண்முகதாசன் தலைமையில் இயங்கிய கொம்யூனிஸ்ட்டு கட்சி தேசிய பிரச்சனையை எவ்வாறு முகம் கொடுத்தது என்பது முக்கியமானது.
இதில் கொம்யூனிஸ்ட்டு கட்சிக்கு பல கோட்பாட்டு ரீதியான பிரச்சனைகள் இருந்தன. முதலாவதாக, தேசியவாதம் பற்றிய செவ்வியல் மார்க்சியத்தின் புரிதல்கள் வரையறுக்கப்பட்டனவாக இருந்தன. பிற்காலத்தில் வந்த மார்க்சியர்கள் பலர் இதனை கடந்து செல்லும் விதத்தில் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், மரபார்ந்த இந்த கட்சிகள் எதுவுமே இந்த திசையில் பயணிக்க முயலவில்லை. இரண்டாவதாக, இவர்களிடம் காணப்பட்ட மார்ச்சியம் பற்றிய குறுகிய பொருளாதாரவாத புரிதல் இவர்களை தேசியவாதத்தை புரிந்து கொள்ள முடியாமல் தடுத்துவிட்டது. சிங்கள பேரினவாதத்தை இவர்கள் பொருளாதார நெருக்கடிகளை திசை திருப்புவதற்கான சிங்கள தரகு முதலாளிகளின் முயற்சியாக பார்த்தார்களேயன்றி அதற்கு மேல் எந்தவிதமான புரிதல்களையும் இவர்கள் கொண்டிருக்கவில்லை. மூன்றாவதாக தேசம் பற்றிய ஸ்டாலினது வரையறையை விமர்சனம் இன்றி ஏற்றுக் கொண்ட இவர்கள் இதனை அளவுகோலாக கொண்டு ஈழத்தமிழரை ஒரு தேசம் இல்லை என்று நிராகரிப்பதில் காட்டிய அக்கறையை இந்த பிரச்சனையை சரிவர புரிந்து கொள்வதில் அக்கறை எடுக்கவில்லை. நான்காவதாக, ஒடுக்கப்பட்ட தேசம் மற்றும் ஒடுக்கும் தேசம் ஆகியவற்றின் தேசியவாதங்களுக்கு இடையில் எந்தவிதமான வேறுபாடுகளையும் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படியான கோட்பாட்டுரீதியான பற்றாக்குறைகள் இவர்கள் தமது கண்முன்னேயே நடக்கும் ஒரு போராட்டம் தொடர்பாக தவறான நிலைப்பாடுகளை மேற்கொள்ள வழி வகுத்தது. தமிழ் மக்களது போராட்டத்திற்கு சரியான தலைமை கொடுப்பது என்பதிலும் பார்க்க, ஏனைய சிங்கள இடதுசாரிகள் தம்மை இனவாதிகள் என்று பழிக்கும் நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்று அதிகம் பயப்பட்டதாக தோன்றியது. தமிழ் மக்களது தேசிய ஒடுக்குமுறை பற்றி அதிகம் அக்கறை காட்டாத இவர்களை விட்டு போராட்டமானது கைநழுவிப் போனது.
இளைஞர் அமைப்புகள் எதுவுமே முறையான ஒரு இடதுசாரி கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவோ அல்லது முறையான அமைப்புத்துறை பயிற்சியை கொண்டிருக்கவோ இல்லை. சில அப்பட்டமான வலதுசாரி அமைப்புக்களாக இருந்தன. இன்னும் சில மார்க்சிய சொல்லாடல்களைக் கடந்து ஆழமான புரிதல் எதனையும் கொண்டிருக்கவில்லை. இதனால் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த தமிழீழ கோரிக்கையை எந்தவிதமான விமர்சனமும் இன்றி அப்படியே முன்னெடுத்துக் கொண்டு செல்லத் தலைப்பட்டன. ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்ற வகையில் போராட்டத்துடன் தொடர்புடைய கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த எந்த பிரச்சனைகளையும் இனம் காணவோ, அவற்றை முறையாக தீர்வு காணவோ முடியவில்லை. இதனால் போராட்டமானது முற்றிலும் தன்னியல்பாகவே முன்னெடுக்கப்பட்டது. இதனால் எமது சமுதாயத்தில் மேலாண்மை செலுத்திய சித்தாந்தங்களான யாழ்மையவாதம், ஆணாதிக்கம், சாதியம், முஸ்லிம் வெறுப்பு போன்ற அனைத்துமே போராட்டத்தில் அப்படியே வெளிப்பட்டன. அத்தோடு சமுதாயத்தில் காணப்படும் அறிவு தொடர்பான மேட்டுக்குடி மனோபாவம் எல்லோரிடத்திலும் விதிவிலக்கின்றி காணப்பட்டது. மக்கள் தொடர்பான அதிகாரத்துவ கண்ணோட்டமே ஓங்கி நின்றது. ஜனநாயகம் என்பது தாம் கருத்துச் சொல்வதற்கான உரிமை பற்றியதாக மட்டும் குறுகிப் போயிருந்தது. தனக்கு சரியெனப் படுவதை அடுத்தவர்கள் முன் வைத்து வென்றெடுக்க முடியாத நிலைமையில் எந்தவிதமான சுத்துமாத்து செய்தாவது அதனை நிறைவேற்றும் குறுகிய மனோபாவம் காணப்பட்டது. இலக்கு வழிமுறையை நியாயப்படுத்துவதாக கருதப்பட்டது. தாம் போராட்டத்திற்காக அனைத்தையும் அர்ப்பணித்து போராடுவது ஒன்றே தாம் மக்கள் சார்பாக எந்த முடிவையும் எடுக்கும் உரிமை உடையவர்கள் என்ற மனோபாவத்தை கொண்டிருந்தோம். இது அமைப்பினுள்ளும் தொடர்ந்தது. இதனால் எல்லா அமைப்புக்களும் விதிவிலக்கின்றி மக்கள் தொடர்பான அதிகாரத்துவ நடைமுறையை கொண்டிருந்தன. அங்கத்தவர்கள் தொடர்பாகவும் இது தொடர்ந்தது. சமூகத்தில் நிலவிய அக ஒடுக்குமுறைகளை முகம் கொடுக்கும் வழிமுறைகளை அறியாது தடுமாறினார்கள்.
எமது சமுதாயம் ஒரு வளர்ந்த முதலாளித்துவ சமுதாயம் அல்ல என்பதால் ஜனநாயகம் என்பது கூட அமைப்பினுள் பிரக்ஞை பூர்வமாகவே கொண்டுவரப்பட வேண்டிய தொன்றாக இருந்தது. தன்னியல்பானது இதனை தடுத்துவிட்டது.
பிரக்ஞைபூர்வமான அரசியலானது முன்வைக்கப்படாத நிலையில் பல்வேறு அமைப்புக்களையும் ஒன்றிணைப்பதற்கான அரசியல் இல்லாமற் போனது. இதனால் தனிநபர்களும், அவர்களுக்கிடையான தனிப்பட்ட பிரச்சனைகளுமே முதன்மை பெற்றன. இதனால் அமைப்புக்கள் தமக்கிடையில் முறையான ஐக்கிய முன்னணியை அமைப்பதும் சாத்தியமற்றுப் போனது. ஒவ்வொரு அமைப்பும் மற்றைய அமைப்பை தமக்கு போட்டியாக கருதியே செயற்பட்டனர். இதில் விடுதலைப் புலிகள் தயவு தாட்சண்யம் இன்றி அனைத்து அமைப்புகளையும் நசுக்கி தமது ஏகபோக தலைமையை நிலைநாட்டிக் கொண்டார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பானது இந்த விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதி அறவே அற்றதாக இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி போராட்ட சக்திகளை ஐக்கியப்படுத்தி எதிரியை தனிமைப் படுத்துவதற்குப் பதிலாக, தன்னை தனிமைப்படுத்தி எதிரிகளை ஐக்கியப்படுத்தும் வேலையை செய்து முடித்தது. அமைப்பினுள் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்வு காண்பதற்கு கடைசி வரையில் வழிமுறைகளை அறியாதவர்களாகவே இருந்தனர். இறுதியில் உண்மையான போராட்ட சக்திகளை புறம் தள்ளி, வியாபாரிகளும், வஞ்சகப் புகழ்ச்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்தார்கள். அமைப்பானது ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் தனது ஆன்மாவை ஏற்கனவே கொன்று போட்டிருந்தது. அமைப்பின் தலைமை உற்பட அனைத்து மட்டங்களுமே போர்க்குணாம்சத்தை படிப்படியாக இழந்து போயினர். இதற்கு மேல் அவர்களது அழிவு தானாகவே வந்தது. உள்ளூர கோரையாய் போயிருந்து ஒரு செத்துப் போன அமைப்பை தள்ளி விழுத்தவே ஒரு சக்தி தேவைப்பட்டத. அது கடைசி யுத்தமாக அமைந்திருந்தது.
புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வைக்கப்படும் சில கருத்துக்கள் கவனத்திற்குரியனவாக இருக்கின்றன. ஏதோ புலிகள் தமது தலைமையை அழித்ததனால் தான் இந்த போராட்டம் வெற்றி பெறாமற் போனதாகவும், சிறீ சபாரட்ணம், பத்மநாபா அல்லது உமா மகேஸ்வரன் உயிரோடு இருந்திருந்தால் அவர்கள் விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருப்பார்கள் என்பது போன்ற வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட எல்லா அமைப்புக்களும் புலிகளை ஒத்த வேலை முறைகளைத்தான் கொண்டிருந்தார்கள் என்பதை இவர்கள் இனம் காணத் தவறுகிறார்கள். ரெலோ யாழ் வைத்தியசாலையில் வைத்து தாஸ் குழுவினர் மீது நடத்திய தாக்குதலும், பின்பு அவர்களது உடல்களை எடுத்துச் செல்ல வந்த மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடுகளும்: கழகத்தினுள் நடந்த வதைமுகாமும், முற்போக்கு, ஜனநாயக சக்திகளை திட்டமிட்ட முறையில் அழித்து ஒழித்தமையும்: இந்திய படைகள் காலத்தில் மாகாண சபையை ஏற்றுக் கொண்டு ஈபிஆர்எல்எப் அமைப்பு நடத்திய அடாவடித்தனங்களும், பிள்ளை பிடிப்பதை முதன் முதலாக எமது போராட்டத்தில் ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள் தான்: இந்த உண்மைகளது அடுத்த இருபது வருட வளர்ச்சியை கற்பனை செய்து பார்த்தால், அதுவொன்றும் முள்ளிவாய்க்கால் அவலங்களைவிட வேறு பட்ட விதமாக அமைந்திராது என்பது தெளிவானது. இவர்கள் மட்டுமல்ல மாற்று அமைப்புக்களை கட்ட முனைந்த நாமே கூட கடந்த காலத்தில் பாரிய தவறுகளை இழைத்தே இருக்கிறோம். என்எல்எப்டி அமைப்பானது ஒரு அரசியல் திட்டத்தை முன்வைத்தது.
தீப்பொறி அமைப்பானது தனது முதலாவது கொங்கிரசை கூட்டி, தமிழீழ மக்கள் கட்சியாக பிரகடனம் செய்து, திட்டம், மூலோபாயம் – தந்திரோபாயம் வகுத்தது. இத்தனை முன்னேற்றங்களையும் மீறி நாம் தனிநபர்களது பாத்திரம் குறித்தும், மக்களது பாத்திரம் குறித்தும் சரியான புரிதல்களை அமைப்பு அளவில் நிலை நாட்டிக் கொள்ள முடியவில்லை. எமது அமைப்பினுள் பிரச்சனை குறிப்பிட்ட தனிநபர்கள் வடிவில் வந்தது என்றால் அதனை அங்கிகரித்து ஏற்றுக் கொள்ளும் பெரும்பான்மை தானே தலைமையிடத்தில் அமர்ந்திருந்தது. மக்களே உண்மையான புரட்சியாளர்கள் என்பதும் அவர்கள் சற்று காலம் கடந்தாவது உண்மைகளை சரிவர புரிந்து கொள்வார்கள் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை கிடையாது. எப்படிப் பட்ட குறுக்கு வழிகளிலாவது நாம் சரியென கருதுபவற்றை செய்து முடிக்கலாம் என்று தலைப்பட்டோம். இதனை தடுத்து நிறுத்தும் அளவிற்கு பக்குவம் தலைமை அங்கங்களிடமும், பரவலான அங்கத்தவர்கள் மத்தியிலும் இல்லையானால் இப்படிப்பட்ட அமைப்புகள் சிதைவது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, வரலாற்றுத் தேவையும் கூட.
ஆகவே புலிகளின் தோல்வியில் இருந்து எந்தவிதமான படிப்பிணைகளையும் பெற்றுக் கொள்ளாது, தமது ஷஷபொற்கால கனவுகளுடன்|| புறப்படுபவர்களை என்னவென்பது? இந்த தோல்வியானது புலிகளுக்கு மாத்திரம் உரியது என்ற வகையில் புரிந்து கொள்வதும், தமது பழைய வழிகளில் தொடர்வது சரியானது என்ற தரப்பில் வாதிடுவதும், இந்த கசப்பான வரலாற்றில் இருந்து எதனையும் கற்றுக் கொள்ள இவர்கள் மறுப்பதையே காட்டுகிறது. இந்த பழைய பஞ்சாங்கங்களை நாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, எங்கிருந்து தொடங்கப் போகிறோம் என்பதில் கவனத்தை செலுத்துவது நல்லது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வாக்கெடுப்பு நடத்துவது பற்றியும், நாடுகடந்த தமிழீழ அரசு பற்றியும் நாம் சில விடயங்களை பேசித்தான் ஆகவேண்டியுள்ளது. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி இப்போது முப்பத்தி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது அதனை தூக்கி நிறுத்துவதற்கான காரணம் என்ன? இந்த இடைக்காலத்தில் புலிகள் எந்த உருப்படியாக அரசியல் முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை என்கிறார்களா? அதுதான் உண்மையானால் நாம் இப்போது செய்தாக வேண்டிய பணிகள் இன்னமும் பன்மடங்கு அதிகம் இருக்கின்றன என்றுதானே அர்த்தப்படும. போராட்ட அமைப்புக்கள் எதுவுமே உள்நாட்டில் மிகவும் சுதந்திரமான செயற்பட முடியாத நிலையில், போராட்டத்துடன் தொடர்புடைய பல்வேறு சக்திகளையும் இணைக்கும் விதத்திலான ஒரு அமைப்பு வடிவத்தை கொண்டிருப்பது அவசியமானதே. இந்த பாத்திரத்தை நாடுகடந்த தமிழீழ அரசானது வகிப்பது சாத்தியமானதே. அந்த வகையில் இது முன்னரே செய்து முடித்திருக்க வேண்டிய ஒரு பணி என்பதில் எமக்கு கொள்கையளவில் மாறுபாடு கிடையாது. ஆனால் இன்று அவசர அவசரமாக இந்த அமைப்பை கூட்ட முனையும் வழிமுறைகளில் தான் எமக்கு பிரச்சனைகள் இருக்கின்றன. அதாவது விடுதலைப் புலிகளின் புலம் பெயர்ந்த தலைமையானது, கடந்தகால போராட்டம் தொடர்பாகவும், அதன் தலைமைக்கு நடந்தது தொடர்பாகவும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியதன் அவசியத்தை மறுத்து, மக்களது முதுகிற்கு பின்னால் இப்படிப்பட்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதை நாம் அனுமதிக்க முடியாது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விடயம் என்னவென்றால், வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு ஆகிய இரண்டுமே ஒரு தேசத்தின் விடுதலையை நோக்கிய உண்மையான அக்கறையில் முன்வைக்கப்பட்ட இரண்டு மாற்று முன்மொழிவுகள் பற்றிய அரசியல்ரீதியான விவாதம் என்றில்லாமல், புலிகளின் உள் குத்துவெட்டுகளின் வெளிப்பாடாக அமைகிறது என்பதுதான் உண்மையான நிலவரமாக இருக்கிறது. ஒருவிதத்தல் புலிகளது புலம் பெயர்ந்த தலைமைக்குள் நடக்கும் குலமரபுச்சமூக சண்டையாகவே (வுசiடியட றுயச) இந்த வேறுபாடுகள் அமைந்துவிட்டது. இந்த போட்டிக்கும், ஒடுக்குமுறையிலிருந்து மீள வழிவகைகளை தேடும் மக்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் கருதவில்லை.
இன்று போராட்டத்தை மீள்மதிப்பீடு செய்யும் எவருமே புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்ட உண்மையான தேசபக்த சக்திகளை ஒரு போதும் நிராகரித்துவிட முடியாது. இந்த தேசபக்த சக்திகள் புலிகளது தவறான அரசியல் பற்றிய போதிய விழிப்புணர்வுடனேயே இருந்தார்கள். ஆயினும் களத்தில் நின்று போராடிய ஒரே சக்தி என்ற வகையில் அவர்களை நிபந்தனையின்றி ஆதரிக்குமாறு நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தார்கள். இப்படியாக புலியின் முதுகில் சவாரி செய்தபடி தேசிய பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்று இவர்கள் கண்ட கனவு சிதைந்து விட்டதை இந்த சக்திகள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இன்று புலிகளது புலம்பெயர் தலைமையானது உண்மையில் ஒரு வியாபாரக் கூட்டத்திடம் சிக்கியுள்ளது. இவர்கள் கடந்த காலம் போன்றே மக்களுக்கு உண்மைகளை மறைத்து, இன்னுமொரு தலைமுறையை வீதிகளில் அலையவிட்டு சீரழிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்குமேல் புலம்பெயர் வியாபாரிக் கூட்டத்திற்கு இப்படியாக நிபந்தனையற்ற ஆதரவை கொடுக்க முனைவதானது தேசத்தின் எதிர்காலத்தை வேண்டுமென்றே நாசமாக்கும் காரியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த வியாபாரிகளது அயோக்கியத்தனங்களை முறியடிக்க முடியாக தேசபக்த சக்திகள் இதற்கு மேலும் அந்த அமைப்புக்குள் இருந்து கொண்டு முணுமுணுப்பதில் அர்த்தம் இருக்க முடியாது. இவர்களது திருகுதாளங்களினால் எமது தேசத்திற்கு ஏற்பட்ட பேரிடர்கள் யாவும் இத்தோடு முடியட்டும்.
தேசத்தின் எதிர்காலம் குறித்தும், தமது தேசபக்த பணியை தொடர்வது குறித்தும் உண்மையான அக்கறையுள்ள எவரும் இதற்கு மேலும் இந்த வியாபாரிகளை சகித்துக் கொண்டிருப்பதை நியாயப்படுத்திக் கொள்ள முடியாது. அத்தோடு புதியனவற்றை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதில் இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையீனமானது இவர்களை அறவே நம்பத்தகாத சக்திகளுக்கு பின்னால் இன்னொரு தடவை செல்வதற்கு தூண்டுகிறது. தமிழர் தேசிய கூட்டமைப்பும், கஜேந்திரன் கோஷ்டியும் அறவே நம்பிக்கைக்கு தகுதியற்ற சந்தர்ப்பவாதிகள் என்பது இவர்களுக்கும் தெரிந்ததுதான். ஆனால் வேறு வழியில்லை என்பதன் பேரில் இவர்களுள் ஒரு தரப்பினரை இவர்கள் ஆதரிக்கத் தலைப்படுகின்றனர். இது கண்களைத் திறந்து கொண்டே புதைகுழிக்குள் கால்களை வைப்பதற்கு சமமானதாகும்.
எதிர்கால முயற்சிகள் எதிலும் இந்த தேசபக்த சக்திகள் ஒரு காத்திரமான கூறாக திகழ்வது தவிர்க்க முடியாததாகிறது. ஏனெனில் கடந்த இருபது வருடங்களாக புலிகள் அமைப்பினர் மாத்திரமே தொடர்ச்சியான ஒரு சக்தியாக இயங்கியிருக்கிறார்கள். அதனால் நாம் இன்று சந்திக்கும் முன்னாள் போராளிகள் என்பவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் இந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. எதிர்காலத்தில் அமையப்போகும் எந்தவொரு மாற்றம் பற்றிய பிரச்சனையிலும் இவர்கள் ஒரு தவிர்க்க முடியாத, ஊக்கமான கூறாக அமையவிருப்பதால் எமது உரையாடல்கள் அவர்களுடனும் நடைபெற்றாக வேண்டியுள்ளது.
இன்னுமொரு தரப்பினர் இப்படிப்பட்ட ஒரு பாரிய தோல்வியின் பின் மக்களுக்கு இணக்க அரசியல் பற்றி முன்மொழிகிறார்கள். இணக்க அரசியல் என்பது வெறும் வார்த்தை அளவில் பார்த்தால் மிகவும் நியாயமான கோரிக்கை போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் ஒரு நீண்ட காலமாக நடைபெற்ற அரசியல், இராணுவ போராட்டத்தின் பின்பு இப்படிப்பட்ட முன்மொழிவுகளை முன்வைப்பவர்கள் இந்த இணக்கமற்ற நிலைமையின் காரணங்கள் பற்றியும் சற்று சிந்தித்து பார்ப்பது அவசியமானது அல்லவா? இணக்க அரசியல் என்பது இரண்டு சமத்துவமான சமூகங்களுக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டுமே அன்றி, ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையில் நடப்பது இணக்கம் அல்ல. அதாவது ஒரு தேசம் தன்மீது நடக்கும் அத்தனை அத்து மீறல்களையும் சகித்துக் கொண்டு இருந்து, சிறீலங்கா அரசு தருவதை வாங்கிக் கொண்டு இருப்பதுதான் இணக்க அரசியல் என்றால் அது அடிவருடித்தனமே அன்றி வேறல்ல. இப்படியாக அரசிடம் தஞ்சம் புகுந்து அரசின் அடிவருடிகளாக இருக்கும் இந்த சக்திகளை, தமது சொந்த சின்னங்களில் தேர்தலில் கலந்து கொள்வதையே அனுமதிக்கத் தயாராக இல்லாத அரசை நோக்கி எப்படி இவர்கள் இணக்கம் பற்றி பேச முடியும்.
இவர்கள் கட்டமைக்க முனையும் விம்பமானது ஏதோ சிறீலங்கா அரசானது இணக்கத்திற்காகத்தான் பாடுபடுவதாகவும், தமிழ் தேசிய சக்திகள்தாம் பிரச்சனைகளை உருவாக்குவது போலவும் இருக்கிறது. இவர்கள் சிங்கள தேசியவாதம் கட்டமைத்த புனைவுகளை தமிழ் மக்களுக்கு கூவி விற்க முனைகிறார்கள். ஆனால் வரலாறானது வேறு விதமான பாடங்களை மக்களுக்கு படிப்பித்துள்ளது.
இன்று மாற்று பற்றி பேச முனையும் சக்திகளைப் பார்த்து சில குழுக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஒன்றில் இவர்கள் புலிகளது உளவாளிகளாக இருக்க வேண்டும்: அல்லது இவர்கள் புலிகளது எதிரிகளாக இருக்க வேண்டும். இது ஜோர்ஜ் புஸ் முன்வைத்த நுiவாநச லழர யசந றiவா ரள ழச யபiளெவ ரள என்ற அதே பல்லவிதான். இதைத்தான் ஏகபிரதிநிதித்துவம் பேசிய புலிகளும் முன்வைத்தார்கள். இப்போது ஒரு கூட்டம் புலிகளை வாய்நிறைய திட்டிக் கொண்டே அதே கூற்றை முன்மொழிகிறார்கள். அதிலும் வேடிக்கையானது என்ன வென்றால் குறிப்பிட்ட ஒரே குழுவைப் பார்த்து இந்த இரண்டு விதமான விமர்சனங்களையும் வௌ;வேறு குழுக்கள் ஒரே சமயத்தில் முன்வைப்பதுதான்! விடுதலைப் புலிகள் என்பது வரலாற்றில் முடிந்த போன ஒரு அத்தியாயம். யார் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அதுதான் உண்மையானது. இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால் இன்றுள்ள இடர்களில் இருந்து ஒரு தேசம் எவ்வாறு தன்னை மீட்டுக் கொள்ளப் போகிறது என்பதுதான். அந்த நிலையில் தேவைப்படுவது திறந்த, வெளிப்படையான, விஞ்ஞானபூர்வமான விவாதங்கள், மீள்மதிப்பீடுகள், கருத்தாடல்கள் மட்டுமே. இதனை முகம் கொடுக்க முடியாத அல்லது விரும்பாத சக்திகள் தாம் இப்படிப்பட்ட அற்பத்தனமான விடயங்களாக இதனை சுருக்கிவிட முனைகிறார்கள். இவர்கள் புலிகளை திட்டினால் மாத்திரம் போதாது. அவர்களது ஏகபோக அரசியலில் இருந்து முறித்துக் கொள்ளவும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் தேசத்திற்கு இப்போது அவசரமாக தேவைப்படுவது. அப்படிச் செய்யாத விமர்சனங்கள் எல்லாம் விரும்பியோ விரும்பாமலோ, அல்லது தெரிந்தோ தெரியாமலோ புலிகளை மீளக்கட்டமைக்கும் பணியைத்தான் செய்வதாக அர்த்தப்படும்.
இன்று இந்த நிலைமைகளை எவ்வாறு கடந்து செல்லப் போகிறோம் என்பதில் அக்கறையுள்ள அத்தனை சக்திகளும் கடந்த காலத்தில் தாம் சென்று பழகிய அதே தடத்தில் தமது பயணத்தை தொடர்வதற்குப் பதிலாக ஒரு தடவை நிறுத்தி நிதானமாக யோசனை செய்வது அவசியமானது. கடந்த காலத்தில் நாம் சென்ற பாதை எப்படியானது? அது ஏற்படுத்திய விளைவுகள் எப்படிப்பட்டவை? அதனை ஏன் நாம் இப்போதும் தொடர வேண்டும்? நாம் இன்று செய்யும் நடவடிக்கைகளுக்கும் எமது இலக்குகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி ஆழமாக, நிதானமாக சிந்தித்து பிரக்ஞையுடன் செயற்பட வேண்டிய தருணம் இது. பிரக்ஞையற்ற செயற்பாடுகள் அத்தனையும் விரயமாகிப்போனதுதான் கடந்த கால படிப்பினையாகும். அதனை இத்தோடாவது நாம் முடிவுக்கு கொண்டுவர திடசங்கற்பம் கொள்வோம்.
இன்று எமது தேசம் இருக்கும் நிலைமைகள் மிகவும் பலவீனமானதுதான். அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும், நம்பிக்கையீனமும், சோர்வும் எங்கும் ஓங்கி நிற்கிறது. இது யாரையுமே ஊக்கம் கெட வைத்துவிடக் கூடியது. ஆனால் வரலாறு என்பது நிலையாக இருப்பதில்லை. மாற்றம் ஒன்றே நிலையானது என்பதை உறுதியாக நம்புவோம்.
தோல்வி என்பது முடிவல்ல! அது வெற்றியின் அத்திவாரமாகவும் மாறலாம்: முறையான படிப்பினைகளை பெற்றுக் கொள்ள முடியுமானால். ஒடுக்குமுறையினால் மாத்திரம் ஒரு தேசத்தின் தேசிய அபிலாசைகளை நசுக்கிவிட முடியாது என்பதைத்தான் தொடர்ந்து கொண்டு போகும் தேசிய இயக்கங்களது போராட்டங்களும், அந்த தேசங்கள் தொடர்ந்து பெற்றுவரும் விடுதலைகளும் நிரூபிக்கின்றன. ஆதலால் மே 18 ஐ ஒரு முற்றுப் புள்ளியாக கருதாமல், தரிப்புக் குறியாக மாற்றுவோம். அதற்கான பணிகளை இப்போதே, சிறிய அளவில் என்றாலும் தொடங்குவோம். இவை எல்லாவற்றிலும் எமது பிரக்ஞைபூர்வமான செயற்பாடுகளுக்கு உள்ள தீர்க்கமான பாத்திரத்தை புரிந்து கொள்வோம்.