மேலும் தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் புலிகள் அமைப்பை இலங்கையில் நிலவும் கொந்தளிப்பான நிலையை பயன்படுத்தி அந்த அமைப்புக்காக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், நிதிகள் திரட்டி தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
போரின் முடிவின் போது பெரும்பலான புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இந்திய, இலங்கை அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் பழிவாங்கும் அணி சேர்ப்பு ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
மேலும் எஞ்சியுள்ள போராளிகளில் பலர் சட்டவிரோதமாக கள்ளத் தோணியில் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் தமிழகத்தை தங்கு தளமாக பயன்படுத்தி மீண்டும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கோடு இருப்பார்கள் என்பதை புறந்தள்ளி விட முடியாது.
அகதிகளுக்கு வைத்த ஆப்பு
மேலும் அகதிகள் என்னும் போர்வையில் வருவோரும் இந்தியா மீது பழிவாங்கும் உணர்வுடனே இருப்பார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். உலகம்
முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.
இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.
1) தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்.டி.டி.இ. போராளிகள், அந்த அமைப்பைவிட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், எல்.டி.டி.இ. இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது;
2) புலிகள் மீது தடை அமலில் இருந்தும், இந்தியாவில் எல்.டி.டி.இ. ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் எல்.டி.டி.இ. இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.
3) இந்த அமைப்பு குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து எல்.டி.டி.இ. தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.எல்.டி.டி.இ. அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.மேலும்
அ) எல்.டி.டி.இ. அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும்,
ஆ) இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.எனவே, தற்போது 1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3-ம் பிரிவின்
(1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை (எல்.டி.டி.இ) சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது.இவ்வாறு இந்த அவரச கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
காரணகர்த்தா யார்? என்ன நடக்கும்?
போருக்குப் பின்னர் உயிர் தப்பி வந்த ஏராளமான போராளிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் தமிழகத்தில் தங்கியிருக்கிறார்கள். விரைவில் இவர்களை கைது செய்யவோ அல்லது முழுமையான கண்காணிப்பின் கீழோ கொண்டு வருவதும், விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஆளும் கருணாநிதி, சோனியா, மன்மோகன் கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் மீண்டும் ஈழப் பிரச்சனையை பிரச்சாரக் கருவியாக பயன்படுத்தினார். தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் என்று அவர்களை முடக்கவும்.
இனக்கொலைக்கு எதிராகப் பேசும் ஜனநாயக சக்திகளை நிரந்தரமாக சிறையிலடைக்கவும். எழுத்துரிமை, பேச்சுரிமையை பறிக்க்கும் வகையிலுமே இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புலிகளுக்கு ஆதரவாக பேசுவது மட்டுமல்ல இனகொலைக்கு எதிராகவோ, இலங்கை அரசுக்கு எதிராகவோக் கூடப் பேசினால் கூட தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ணும் கருப்புச் சட்டம் பாயும் வாகையில் இந்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காரணம் ஈழப் போரின் போது செய்த துரோகங்களும் அதையொட்டி உலகம் முழுக்க எதிர்ந்த கருணாநிதி எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் திணறும் நிலையில் மீண்டும் தேர்தல் வருகிறது. கருப்புச் சட்டத்தின் துணையோடும் போலீசின் துணையோடும் இதை அடக்கவே மத்திய உள்துறை அமைச்சகத்தை கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார் என்பதோடு பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கருணாநிதி கேட்டுக் கொண்டதன் பேரில்தான்.
புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலிகளை விமர்சிக்கிறவர்கள் கூட விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட இந்தியாவின் போர் வெறிக்கு எதிராக பேசினால் கூட தண்டிக்கப்படுவார்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.