கிழக்கின் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், ஏனைய போர் அகதிகளுக்கும் உதவி வழங்குமாறும் இல்லையெனில் அவ்வாறான உதவி வழங்குதலை தடுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை அங்கீகரித்து அழுத்தம் வழங்குமாறும் கோரும் கடிதம் ஒன்றை புதிய திசைகள் பல அமைப்புக்களின் மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தக் கடித்ததின் பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. சமூகப்பற்றுள்ள ஒவ்வொருவரும் இக்கடிதத்தை இங்கு இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல்களுக்கு தத்தமது மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து அனுப்பிவைக்குமாறு புதிய திசைகள் வேண்டுகோள்விடுக்கிறது.
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது முள்ளிவாய்க்கலோடு நிறைவடைந்த சடங்குக்கான சம்பவமல்ல. உலகத்தின் எந்த மூலையிலும் ஒடுக்கப்படுமின்ற மக்கள் வாழ்ந்தாலும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களும் வாழும். நாம் இந்த நூற்றாண்டின் ஒடுக்கப்படுகின்ற மக்கள் கூட்டத்தின் இன்னொரு அங்கம் என்பதை உணர்தலும் அதற்கெதிரான போராட்டங்களை எஞ்சியுள்ள அனைத்து வலிமைகளையும் பிரயோகித்து முன்னெடுத்தலும் அவசியமாகிறது.
உலகின் அனைத்து ஒடுக்கு முறை அங்கங்களும் இணைந்து அவற்றின் முழுமையான ஆதரவோடு ராஜபக்ச அரசின் தலைமையில் இந்திய இலங்கை அரசுகளால் நிகழ்த்தப்பட்ட வன்னிப்படுகொலைகளை இவர்கள் கண்டுகொண்டதில்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்கிறது என்ற வெற்றுச் சந்தேகத்தின் பேரிலேயே நாடுகளை ஆக்கிரமிக்கும் மேற்கு அதிகாரங்கள் இலங்கையில் சாரிசாரியாக மக்கள் கொல்லப்பட்ட போது கண்துடைப்புக்காக் கண்டனம் மட்டும் தெரிவித்துவிட்டு வாழவிருக்கின்றன. ஐக்கிய நாடுகள், தன்னார்வ நிறுவனங்கள், உதவி வழங்கும் நாடுகள் என்ற நீண்ட பட்டியலில் அடங்கும் அதிகாரங்களின் அனைத்து அங்கங்களையும் நோக்கிக் கேள்வி கேட்கும் உரிமை எமக்குண்டு.
அதி வல்லமைபெற்ற இராணுவத்தையும், மின்னியல் கண்காணிப்புக் கருவிகளையும், உளவு நிறுவனங்களையும் கொண்டிருக்கின்ற இவர்கள் ரஜபக்ச அரசு அனுமதிக்கவில்லை என்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை என்கிறார்கள்.
பரந்துபட்ட மக்களின் ஒருங்கிணைந்த கருத்தும் அதன் வழியேயான நடைமுறையும் வெற்றிகளை எவ்வாறு பெற்றுத் தந்திருக்கின்றது என்பதை விக்கிலீக்ஸின் வெற்றியும், துனிசியப் போராட்டங்களும் கற்றுத் தந்திருக்கின்றன.
இந்த வகையில் தன்னார்வ நிறுவனங்களுக்கும், ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புக்களுக்கும் அழுத்தம் வழ்ங்கும் மின்னஞ்சல் போராட்டம் ஒன்றை நடத்துவதாக புதிய திசைகள் அமைப்புத் தீர்மானித்துள்ளது.
கிழக்கின் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், ஏனைய போர் அகதிகளுக்கும் உதவி வழங்குமாறும் இல்லையெனில் அவ்வாறான உதவி வழங்குதலை தடுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை அங்கீகரித்து அழுத்தம் வழங்குமாறும் கோரும் கடிதம் ஒன்றை புதிய திசைகள் பல அமைப்புக்களின் மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தக் கடித்ததின் பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. சமூகப்பற்றுள்ள ஒவ்வொருவரும் இக்கடிதத்தை இங்கு இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல்களுக்கு தத்தமது மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து அனுப்பிவைக்குமாறு புதிய திசைகள் வேண்டுகோள்விடுக்கிறது.
-புதிய திசைகள், 19.01.2011
1.Copy and paste the attached request letter”Act now or face the consequences”.
2.Send that letter to :Copy and paste e mail ids from attached emails document.
3.To send the letter to all of the e mail ids , you may repeat the steps 1 and 2 for few times.
அனுப்பவேன்டிய மின்னஞ்சல்கள்: E-mails
அனுப்பவேண்டிய கடிதம் : Act_now_or_face_the_consequence