2009 ஆண்டு இறுதிப்பகுதியில் புலம்பெயர் புலிசார் அமைப்புக்களிலிருந்த சிந்திக்கத் தொடங்கியிருந்த செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல் கீழே தரப்படுகிறது. இவர்களில் பலர் செயற்பாடற்று விரக்தியடைந்திருந்தாலும் கருத்துக்கள் சமகாலத்தின் நிகழ்வுகளோடு பொருந்திப் போகின்றன.
“தகவல் தொடர்பு சரியா இருக்கு.
தலைவர் மீண்டும் வருவார்,
ஒரு நொடியில் ஈழம் பெறுவார் எண்டு”
பாத்துக் கொண்டு இருக்கிறம்…
எங்கள மாதிரி இல்லை, இஸ்ரேல்காரன் விசயகாரன். வொஷிங்கடனில 35000 பேர வைச்சு லொபி செய்யுறாங்களாம்… அவங்களிட்ட இண்டைக்கு வளர்ந்த அமைப்பாய் “ஏபக்” ( AIPAC ) நிறுவனம் எண்ட ஒண்டு இருக்கு. அது கிட்டத்தட்ட யாரையும் எதிர்க்கக்கூடிய அளவுக்கு இன்று வளர்ந்து இருக்குது.
பலஸ்தீனிய மக்களை கொத்திக் குதறுவதற்கு அமெரிக்கனும் யாவாரத்தை ஓட்டுவதற்கு இஸ்ரேல் காரனும் மாறி மாறி லோபி செய்யுறாங்கள். அப்படி ஒரு கொலைகாரக் கூட்டமா தமிழ் மக்களை உலக மக்களுக்குக் காட்ட இந்த அப்புக்காத்து அறிஞர் கூட்டம் முயற்சி செய்யுதோ?
எங்களிட்டயும் இருக்கு “ஈழத் தமிழனிட்ட ஆயிரம் புலம்பெயர் (diaspora)” அமைப்புக்ள். முன்பு பண மோசடி, தாக்குதல், புலத்துக்கொலை, பேரணி, ஊர்வலம் எண்டு மட்டும் தான் நடத்துது. இப்ப சில வேலைத் திட்டத்தை கூட்டியிருக்கினம். ஏனெண்டா “நிலைமை மாறிப் போட்டு”. இந்த பெருந்தகைகள் பல அமைப்பை நடத்திறதால, சந்திப்பில மட்டும்தான் சந்திக்கக்கூடியதாக இருக்குதாம். ஆனா சினிமாப்படக் கணக்கில ஸ்ரரேஜி சாம், மீடியா தாஸ், வோர்கிறைம் வோட்டமிலன், கியுமன்றயிற்ட்ஸ் வீரமணி, ஜெனொசயிட் செல்வராணி எண்டு பேர் மட்டும் வச்சிருக்கிறாங்கள். ஆனா ஒரு மண்ணும் புடுங்கிறதாத் தெரியேலயாம் எண்டு நானில்ல, ஒரு அண்ணை கவலைப்படுறார்.
அதவிட இப்ப இவயளிட்ட பச்சை(skype)* எண்ட ஒரு தொடர்பாடல் ஊடகம் வேற!!! கனபேர இப்ப அதில மட்டும்தான் பிடிக்கக்கூடியமாதிரி இருக்கு. ஏதோ எல்லாம் கதைச்சு திட்டம் போடினமாம். ஆனா ஒண்டும் நடக்கிற மாதிரித் தெரியேல எண்டு சிலருக்கு ஏக்கம்.
இங்க நிலமை இப்பிடி இருக்குது ஆனால் அடுத்த பக்கம் எங்கட சனம் , ஜீரீவிக்கு முன்னால இருந்து போனில முள்ளிவாய்க்காலுக்கு கவிதை வாசிக்குது. அண்ணை வரட்டும் எண்டு வீரம் பேசுது. இதுகளை வைச்சுக் கொண்டு தமிழீழம் என்ன த(ர)ம்ளரே வாங்கேலாது. சனம் மாட்டு மந்தை மாதிரி அதில இரு இதில இரு எண்டா இருக்கும். அப்பிடித்தான் வெஸ்மினிஸ்ரர் பாலத்திலயும் போய் இருந்தது. ஏன் இருக்கோணும்?
வெளிநாட்டில இருக்கிற எங்கட ஆட்கள் (ஈழத் தமிழர்கள்) எல்லாரையும் யூதர்கள் மாதிரி இருக்க வேணும் என்டு சொல்லி, சண்டையை சாட்டிகாசைச் கறந்து பெரும் கோடீஸ்வரராய் போட்டாங்கள் நம்மவர் பலர். ஆனால், இன்னும் செத்துப் போனதுகள் போக மிச்சம் எல்லாம் ஊரிலும் உலகத்திலும் அநாதையும், அகதியுமாய் திரியிதுகள்.
*பச்சை என்பது ஸ்கைப் தொடர்புக் கருவியைப் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட குறிச்சொல். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைக் காலகட்டத்தில் வன்னியுடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து தொடர்புகொள்ள ஸ்கைப் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டது.