109 தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இலங்கையிலிருந்து ஒரு கடிதம். இதற்கு என்ன செய்யலாம் என்று கேள்வியெழுப்பப்படுகிறது. இனியொரு கருத்தாளர்களிடன் இதே கேள்வியக் கேட்கிறோம். உங்கள் ஆலோசனைகளை முன்வையுங்கள்.
அவர்களை இராணுவத்தில் பலாத்காரமாக சேர்த்து கடந்த ஞாயிறு அன்று ஆட்சேர்ப்பு வைபவத்தையும் கிளிநொச்சியில் நடத்தியுள்ளனர். சேர்க்கப்பட்ட பெண்கள் எல்லோரும் கண்ணீர் வடித்ததை காணக்கூடியதாக இருந்தது(ஆனந்த கண்ணீர் அல்ல, மீட்சியடைய முடியாத முறை சார் விபச்சாரத்துக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளோம் என்ற கவலையும் வெறுப்பும்)
அறுக்கப்பட வேண்டிய ஆடுகளுக்கு மாலையிட்டு குங்குமம் இட்டு கொண்டு செல்வது வழமை. இங்கு ஆடுகளான பெண்களின் பெற்றார்களுக்கு குங்குமம் இட்டு மாலையிட்டு அவரிகளது பிள்ளைகளை அவர்களிடமிருந்து அபகரிக்கும் விழா நடந்தேறியிருக்கிறது.
இங்கு கிருஷ்ண பரமாத்மாவொ அல்லது அவரின் வாரிசுகளோ வரவில்லை. குரலெழுப்ப வேண்டிய தமிழ் பற்றாளர்கள் குமிறியதாக கூட தெரியவில்லை.
மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி இராணுவ சிப்பாய்கள் தமிழ் யுவதிகளை திருமணப்பதிவு செய்து கொள்கின்றனர். இதில் எந்த சட்ட நிபந்தனைகளும் நிறைவேற்றப்டுவதில்லை என்று விவாகப் பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர். திருமணப்பதிவுக்கு உட்படுத்தப்பட்ட த்மிழ் பெண்களை கேட்டால் ஒரு நாளைக்கு 10-15 பேருடன் போராடுவதை விட ஒருவனுடன் இருந்துவிட்டு போய்விடட்டுமே என்ற நப்பாசைதான் இதற்கு காரண்ம் என தெரிவிக்கின்றனர்.
விகடன் கதை உண்மையோ இல்லையோ தெரியாது, இங்கு சொன்னவைகள் உண்மை.
என்ன செய்யலாம்?
எப்படி தலையிடலாம்?