Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரயாகரனின் தனிமனித தாக்குதல்-அரசியல் தற்கொலை:அசோக் யோகன்

RAYAGARANஉங்களுடைய பாரம்பரிய வழமையான பாணியில் வடிவமைக்கப்பட்ட தாராளமான வசைகளோடு கூடிய உங்கள் கீழ்நிலை அரசியலை பிரகடனப்படுத்தும் இனியொரு தொடர்பாகவும் என்னைப்பற்றியும் எழுதிய கட்டுரையை (!!!) படித்து இன்புற்றேன். நன்றி.

அரசியல் அனாதையாக்கப்பட்ட பொறாமையும் வஞ்சகமும் வாக்கப்பெற்ற யாழ்ப்பாண மேட்டுக்குடி வேளாள ஆதிக்க உணர்வுபெற்ற ஒருமனிதனின் வழமையான வசைமொழிகளோடு உங்களது எழுத்துக்கள் அமையப்பெற்றிருப்பது உங்களுடைய பிற்போக்கான அரசியலை காட்டி நிற்கிறது.

நாம் என்னதான் முற்போக்கு என்றும் மார்க்சியம் என்றும் உச்சாடனம் செய்தாலும் எம்முள் உறங்கிக் கிடக்கும் ஆண் ஆதிக்க மேலாண்மை மொழிப்பிர யோகம் எம் அரசியலை அம்பலப்படுத்திவிடும். வார்த்தைகளும் சொல்லாடல்களும் வெறும் பரிவர்த்தனைக்கான கருவியல்ல. ஒவ்வொரு சொற்களுக்கும் அந்த மனிதனின் அரசியல் சார்ந்த பின்புலங்களை காட்டிவிடும். உங்களுடைய ஒவ்வொரு எழுத்துக்களும். உங்களுடைய ஆணாதிக்க பிற்போக்குவாதத்தை தோலுரித்து காட்டிவிடுகிக்றது.

ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை எவ்வாறு கொண்டு நாடத்துவது என்பது பற்றியும் ஒரு விமர்சனத்தை அரசியல் சார்ந்து எவ்வாறு முன்வைப்பது என்பது பற்றியும் ஒரு இடதுசாரிக்குரிய குறைந்த பட்ச தெளிவுகூட இன்றி நீங்கள் காணப்படுகின்றீர்கள்.

முதலில் ஆதார பூர்வமாண குற்றச்சாட்டுக்களை ஆரோக்கியமான அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ளும் அரசியல் மனப் பக்குவத்தை நீங்கள் எப்போதுதான் வந்தடைவீர்களோ தெரியவில்லை.

நண்பர் இராயகரன் உங்களுடைய புகலிட வாழ்வு 25வருடங்களுக்கு மேலாகிவட்டது என நினைக்கிறேன். இத்தனை வருடங்களுக்குள் நீங்கள் அரசியல் கட்டுரை என நினைத்து எழுதிய சக மனிதர்கள் சக நண்பர்கள் மீதான கொடூர வார்த்தை பிரயோகங்கள் நிறைந்த அந்த வசைபாடல்களை எண்ணிப்பாருங்கள்.

சமீபத்தில் இராஜோஸ்வரி பாலசுப்பரமணியம் தொடர்பாக நீங்கள் பொழிந்த வசைமொழியான மகிந்தாவுக்கு “முந்தானை விரித்தவள்” என்ற சொற்றொடர் உங்களுடைய அரசியல் முகத்தை வெளிக்காட்டுவதற்கு சிறு உதாரணம். இராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் அரசியல் குறித்து இனியொருவிலும் கூட பல தடவை எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் வசைபாடும் உங்களுடைய “தெருச் சண்டிதன” அரசியல் கலாச்சார வரைமுறைகளுக்கு உட்படாமல் அவரின் அரசியல் பின்புலத்தை சித்தாந்தரீதியில் அம்பலப்படுத்தும் செயன்முறையையே நாம் மேற்கொண்டிருந்தோம்.

மார்க்சியம் எங்களுக்கு ஆரோக்கியமான விமர்சன ஆய வுமுறைமையை கற்றுத் தந்துள்ளதே தவிர உங்களைப்போல் மிகக் கேவலமான பெண்களை கொச்சைப்படுத்தும் ஆணாதிக்க வக்கிர மன நிலையை எங்களுக்கு கற்றுத்தரவில்லை. யோசித்துப்பாருங்கள் நீங்கள் எவ்வளவு கேவலமான நபராக இருக்கிறீர்கள். .

பொது வாழ்விலும் அரசியலிலும் செயல்படுகிற ஒரு பெண்னையே அவரது அரசியல் மாறுபாட்டுக்காக இவ்வாறான மொழி கொண்டு தூற்றும் நீங்கள் எங்களை எப்படி விட்டு வைப்பீர்கள். கடந்த காலங்களில் உங்களின் வசை மொழிக்கு யார்தான் தப்பினார்கள். தோழர் கைலாசபதி தொடக்கம் தோழர் சிவசேகரம் வரை எத்தனை தோழர்களை கொச்சைப்படுத்தி எழுதினீர்கள்.எண்ணிப்பாருங்கள்.

ரயாகரன் , நீங்கள் அசுர வேகத்தில் அத்தனை மனிதர்களையும் அருவருக்கும் வார்த்தைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தும் வேகத்தில் கார்ல் மார்க்ஸ் பற்றியும் மார்க்சியம் பற்றியும் மறந்து போய்விட்டீர்கள் போலிருக்கிறது. முன்னொரு வேளையில் கார்ல் மார்க்ஸ் அவருடன் கருத்து முரண் கொண்ட ஒருவருக்குக் கடிதம் எழுதும்போது கடிதத்தில் கையாளப்பட்டுள்ள வார்த்தைகள் அவரைப் புண்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே அக்கடிதத்தை மறுபடி மறுபடி பல தடவைகள் வாசித்ததாக ஏங்கள்சிற்குக் கூறுகிறார்.

இவ்வாறான ஒரு கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தான் மார்க்சிய விமர்சன முறை. நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பது போல உங்களைத் தவிர யாராவது அரசியல், ஈழ அரசியல் குறித்துப் பேசினால் அவர்களை “மொள்ளை மாறிகளாகவும் முடிச்சவிக்கிகளாகவும்” சித்தரிப்பது மார்க்சியமல்ல “ரவுடித்தனம்”.

உங்களுக்கு இப்போது வயது 50 தாண்டிவிட்டது என நினைக்கிறேன்.

இந்த வயதிற்குள் எவ்வளவோ அரசியல் மனமுதிர்ச்சியை ஐனநாயக பண்புகளை நீங்கள் பெற்றிருக்கவேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தையே நீங்கள் உருவாக்கி கொள்ளவில்லை. பிரான்சில் உங்களுடைய நண்பர் தோழர்கள் நட்புவட்டத்தை எண்ணிப்பாருங்கள் வெறும் பூச்சியமே. இதற்கான அடிப்படைக்காரணம் என்ன. எப்போதாவது யோசித்துப்பார்த்தீர்களா? ஏன் உங்களால் ஒரு அரசியல் சார்ந்த நட்புவட்டத்தை உருவாக்கிக்கொள்ள முடியாமல் போனது ?

மனித உறவுகளுக்கும் அரசியல் உறவுகளுக்கும் அடிப்படையான அறம்சார்ந்த நேர்மை என்பது கொஞ்சமேனும் உங்களிடம் இல்லாமல் போனமைதான் இதற்கான காரணம் என நான் நினைக்கிறேன்.

இதையெல்லாம் நான் உங்களைப் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை . மாறாக நீங்கள் “சுயவிமர்சன” அடிப்படையில் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டத்தில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான பங்களிப்பை உங்களிடமிருந்து எதிர்பார்த்தே எழுதுகிறேன்.

பிரான்சில் இந்த பத்துவருட காலத்தினுள் நாங்கள் அரசியல் சமூக அசைவுக்கான சுமார் 80 கருத்தரங்குகளை நடாத்தியிருப்போம். பல்வேறு குறும்பட நிகழ்வுகளையும் புகைப்படக கண்காட்சிகளையும் சமூக அக்கறைசார்ந்து செய்திருக்கிறோம். இலங்கையிலிருந்து தோழர்கள் செந்திவேல் தனிகாசலம் போன்ற தோழர்களை பிரான்சுக்கு அழைத்து பல கூட்டங்களை நடாத்தியுள்ளோம். பிரான்ஸ் இடதுசாரி தோழர்களோடு சேர்ந்து பல அரசியல் செயல்பாடுகளை முன்னேடுக்கின்றோம். சமீபத்தில்கூட இலங்கை அரசையும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையும் அரசோடு சேர்நது இயஙகும் ஆயுதக் குழுக்களையும் கண்டித்து மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கண்டன ஊர்வலத்தைச் செய்தோம். இவ்வாறான நிகழ்வுகள் எவற்றிற்கும் நீங்கள் வருவதில்லை.(இலங்கையில் இன்றும் இடதுசாரிச் சிந்தனை முறையை முன்னிறுத்தும் தோழர் செந்தில்வேல் உரையாற்றிய கூட்டம் உட்பட).

ஆனால் எங்களுடைய இந்த ஒவ்வொரு செயல்பாட்டையும் கொச்சைத்தனமாக விமர்சித்தே வந்துள்ளீர்கள். உங்களால் மற்றவர்கள் செய்யும் சமூக அக்கறை கொண்ட எந்த நிகழ்வையும் வரவேற்கும் ஆதரிக்கும் மன பக்குவம் கொஞ்சம்கூட உங்களிடம் இருப்பதில்லை. வஞ்சகமும் காழ்ப்புணர்ச்சியுமே உங்களிடம் எங்கள் தொடர்பாக குடிகொண்டுள்ளது. ஏன் இந்த மன நிலை உங்களுக்கு?.

இராயாகரன் நீங்கள் என்னை நோக்கி என் போராட்ட வரலாற்றை கேள்வி கேட்பது மிக மிக வேடிக்கையாக உள்ளது. சில காலங்களுக்கு முன் பாரீசில் ஈழத்தில் எந்தவித போராட்ட செயற்பாடும் அக்கறையும் அற்றிருந்துவிட்டு பாரீஸ் வந்து இறங்கியவுடன் தீவிர புலியாகிவிட்ட ஒருவர் என்னை நோக்கி “நீயெல்லாம் நாட்டில் என்ன புடுங்கினீர்கள்” என்று கேட்ட அதே பாணியே உங்களிடமும் தொற்றியுள்ளது. இராயாகரன் உங்களை நோக்கி இதே கேள்வியை நான் வைக்கிறேன்.

இலங்கை இனப்பிரச்சனை கூர்மையடைந்து ஆயுதப்போராட்ட வடிவம் கொண்ட 1983களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள். நாங்கள் மக்களோடும் போராட்ட உணர்வுகளோடும் ஒன்றுகலந்து இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அந்தகாலகட்டத்தில் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை பார்த்து உங்கள் சொந்த வாழ்க்கையை கண்ணும்கருத்துமாக பார்த்துக்கொண்டீர்கள். அப்போதைய எங்கள் அனைவரதும் அரசியல் வழிமுறைகள் வேற்றுமைகளை தவறுகளையும் உள்ளடக்கியது என்பதற்கு அப்பால் சமூக உணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தையே தமது வாழ்வு முறையாக வரித்துக்கொண்டார்கள்.

இக்காலங்களில் நாங்கள் காடுகள் என்றும் மேடுகள் என்றும் அலைந்தோம். மக்களோடு இரண்டறக்கலந்தோம். மக்களை அரசியல் மயப்படுத்தினோம். எங்கள் கால்படாக் கிராமங்கள் வடக்கு கிழக்கில் இல்லையென்றே கூறமுடியும். அக்காலங்களில் உங்களுடைய போராட்ட உணர்வு எங்கு போயிருந்தது. வடக்கில் எத்தனையோ இடதுசாரி உணர்வு பெற்ற தோழர்களையும் சாதிய எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட தோழர்களையும் நாம் சந்தித்தோம். அவர்களோடு உறவுகளை வளர்த்தோம்.இன்றும் புலம்பெயர்ந்த சூழலில் அவ் அரசியல் இயக்க உறவுகளை தொடர்கின்றோம்.

இந்த தோழர்கள் ஒருவரையாவது உங்களது யாழ்ப்பாண வாழ்க்கையில் சந்தித்ததுண்டா?. அப்போதெல்லாம் உங்களின் வர்க்க குணாம்சம் என்னவாக இருந்தது.? எண்ணிப்பாருங்கள். அன்றைய உங்களுடைய அரசியல் உறவுகள்தான் என்ன?. அவ்வுறவுகளின் இன்றைய அரசியல் தொடர்ச்சி எங்கே?

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்காலையில் வேலை செய்த அறிமுகத்திற்கூடாக தோழர் விசுவானந்த தேவனை உங்களுக்கு தெரிந்திருந்தது.இதனால் என்.எல்.எப்.ரியில்உறுப்பினராகி இருந்தீர்கள். யாழ்ப்பாண கற்றன் நசனல் வங்கி என்.எல்.எப்.ரியினால் கொள்ளை இடப்பட்டபோது அதிலிருந்து பெறப்பட்ட நகைகள்இ பணம் என்பவற்றின் ஒரு பகுதியை மறைத்துவைப்பதற்கு தோழர் விசுவானந்த தேவன் உங்களை பயன்படுத்திக் கொண்டார். இது ஒன்றே ஈழப்போராட்ட வரலாற்றின் உங்களுடைய மாபெரும் பங்களிப்பு.

இராயாகரன் பகீரங்கமாக சவால் விடுகின்றேன் அக்காலங்களில் எத்தனையோ விடுதலை அமைப்புக்களும் தோழர்களும் யாழ்குடாநாடடில் இருந்தார்கள். அக் காலங்களில் உங்களைத் தெரிந்த ஒரு தோழரின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்.அந்தளவுக்குபோராட்டத்தோடு அந்நியப்பட்டு போயிருந்தீர்கள். (இதனால் எல்லாம் உங்கள் போராடும் உரிமை குறித்து நான் கேள்வியெழுப்பவில்லை ஆனால் அது குறித்த உங்கள் தொடச்சியான செயற்பாடுகள் குறித்து மறு மதிப்பீடு செய்துகொண்டு ஆக்கபூர்வமான உங்கள் பங்களிப்பையே கோருகிறேன்.)

இந்தநேரத்தில் உங்களிடம் ஒரு கேள்வியை என்னால் எழுப்பமுடியும். தோழர் விசுவானந்த தேவன் ஒப்படைத்த அந்தப் பணத்திற்கும் நகைக்கும் என்ன நடந்தது?. தோழர் விசுவானந்தனின் இறப்போடு இதனையும் சேர்த்து புதைத்துவிட்டீர்கள். இதுதான் உங்களின் அரசியல் நேர்மை.

1990களின் பிற்பாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஐதரன் போராட்டம் தோழர் நாவலன் தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் வழிநடத்தலில் நடைபெறாமல் இருந்திருந்தால் உங்கள் பெயரே இன்று எவராலும் இனம்காண முடியாமல் போயிருக்கும். தோழர் நாவலன் , தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் விஐதரன் போராட்டக்குழு அமைக்கப்பட்டபோது பல மாணவ தோழர்களின் எதிர்ப்பக்கு மத்தியில் நாவலனின் முயற்ச்சியால் அக் குழுவில் சேர்க்கப்பட்டீர்கள்.அந்த வரலாற்றை இன்று என்ன மாதிரி திரிவுபடுத்தி போராட்டத்தை தாங்கள்தான் முன்னெடுத்தது போன்ற விளம்பர அரசியலை செய்கிறீர்கள்.இதல்லாம் உங்களுக்கு உங்கள் மொழியில் “விபச்சார அரசியலாக” தெரியவில்லையா. இந்தப் போராட்டத்தை முன்னின்று தலைமையேற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணர்வர்களில் பலர் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி , சோதிலிங்கம் , அவ்வை,தவராஜா என்ற ஒரு நீண்ட பட்டியலையே என்னால் முன்வைக்க முடியும்.

புலிகளிடமிருந்து நீங்கள் தப்பித்த வேளையில் நீங்கள் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக சமரிலிருந்து வெளியேற்றிய தோழர் நாவலன் வெகுஜன வேலை செய்த கிராமம் ஒன்றில் தான் தஞ்சமடைந்து அவரின் பாதுகாப்பிலேயே ஒரு மாதங்கள் தலைமறைவாக இருந்ததெல்லாம் நீங்கள் சொல்ல விரும்பாத உண்மைகள்.

இராயாகரன் இனி உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட உறவு பற்றி பார்ப்போம்.

ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட தோல்விகளோடும் , வடுக்களோடும் , சொந்த இழப்புக்களோடும் பிரான்ஸ் வந்து இறங்கிய போது பரீஸ் வாழ்க்கை எனக்கு வெறுமையாகிப்போயிருந்தது. அந்த நேரத்தில் இலக்கிய , அரசியல் உறவுகளின் தொடர்பு எதுவுமற்றவனாக நான் இருந்தேன். பின் “ஓசை” மனோவின் தொடர்பினால் இலக்கிய உறவும் எழுதும் ஆர்வமும் ஏற்பட்டது. “ஓசை” சஞ்சிகையில் எழுதத் தொடங்கினேன். அதன் பின் உங்கள் தொடர்பு கிடைத்தது. உங்களைப்பற்றி எனக்கு விமர்சனம் இருந்தபோதிலும் சமர் என்ற பத்திரிகை ஒன்றை வெளியிடுகின்றவர் என்ற அடிப்படையில் உங்களோடு உறவுகளை பேணினேன்.

பிரான்சில் சோபாசக்தி ,சுகன் , ஞானம் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை தோலில் சுமந்து திரிந்தகாலம் அது. அ.மாக்ஸ் இன்றுபோல் அன்றும் இவர்களை ஞானத் தந்தையாக வழிநடத்திக் கொண்டிருந்தார். இவர்களின் அரசியலுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட எண்ணி கலந்தாலோசித்து உங்கள் பெயரோடும் என் பெயரோடும் உங்களால் எழுதப் பட்டு வெளியிடப்பட்டது. வெளிவந்த பிற்பாடு அந்த துண்டுப்பிரசுரம் நாம் கலந்தாலோசித்த விடயங்களுக்கு மாறாக சோபாசக்தி சுகன் அ.மாக்ஸ் மீதான அரசியல் அற்ற வெறும் காழ்ப்புணாச்சி கொண்ட வசைவுகளாகவே இருந்தது. இதுவே எமது முரண்பாட்டின் தொடக்கப்புள்ளியாயிற்று. எனினும் உங்களின் உறவை பேணினேன்.

அதன் பின் ஒரு கட்டுரை(! ) ஒன்றில் பிரான்சில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் அவர்களை உங்கள் வழமையான வசை மொழியால் திட்டி அக் கொலையை நியாயப்படுத்தியிருந்தீர்கள். இது உங்களுக்கும் எனக்குமான பலத்த முரண்பாட்டை ஏற்படுத்த நான் உங்கள் அரசியல் உறவுகளை துண்டித்துக்கொண்டேன்.

உங்களுக்கிருந்த ஒரே ஒரு அரசியல் உறவான என் உறவும் துண்டிக்கப்பட்டு அரசியல் அநாதையாக்கப்பட்டீர்கள்.

அதன் பின் நாங்கள் பல்வேறு தோழர்கள் நண்பர்கள் ஒன்று சேர்ந்து அரசியல் சமூக ரீதியில் செயல்பட தொடங்கினோம். அன்று தொடங்கியதுதான் எங்கள் மீதான இந்த காழ்ப்பபுணர்ச்சி அரசியல். அது இன்றும் தொடர்கிறது. யார்யாரையெல்லாம் நாங்கள் அரசியல் ரீதியில் முரண்படுகின்றோமோ அவர்கள் சார்பாக நின்று எங்களை வசைபாடுவதே உங்கள் பிழைப்பாகிவிட்டது.

இராயகரன் உங்கள் புகலிட வாழ்க்கையிலாவது நீங்கள் நேர்மையான அரசியல் செய்வீர்கள் என்று பார்த்தால் அதுவும் வீணாகிப்போகின்றது. நீங்கள் இதுவரை செய்த புகலிட “பம்மாத்து” அரசியலுக்கு பெரிய பட்டியலே இடமுடியும். ஒரு சில உதாரணங்கள்.

சில காலங்களுக்முன் பிரான்சில் கறுப்பின இளைஞர்கள் மீது பொலீஸார் மேற்கொண்ட தாக்குதலினால் பெரும்போராட்டமே நடைபெற்றது.பல இடங்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டன நீங்கள் வசிக்கும் வீட்டருகில் இருந்த வாகனங்களும் எரியூட்டப்பட்டன. இதனால் ஏற்பட்ட நெருப்பு நீங்கள் குடியிருக்கும் கட்டிடத்தின் கீழ்பகுதி ஐன்னல்களை சேதப்படுத்திவிட்டது. உடனே நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் பிரான்சில் உங்களை புலிகள் வீடடை எரித்து கொலை செய்த முயற்ச்சித்ததாக ஒரு “பரபரப்பு” அறிக்கை ஒன்றை வெளியிடடு எம்மையெல்லாம் அதிர்ச்சி அடைய வைத்தீர்கள். இதுதான் இரயாகரன் உங்களின் பாசையில் “பம்மாத்து விபச்சார அரசியல்” என்பது.

சுமார் ஏழுவருடங்களுக்கு முன் என் நண்பர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றார். உங்களுக்கு வந்ததே கோபம். ஈழப் போராட்டம் பற்றி கதைக்கும் ஒருவர் எப்படி ஏகாதிபத்திய பிரான்ஸ் நாட்டு உரிமை பெறமுடியும்? இவனெல்லாம் ஏகாதிபத்திய கைக்கூலி.
இவனுக்கெல்லாம் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தைப்பற்றி பேச என்ன அருகதை உண்டு என்று நீங்கள் உங்களது வழமையான வசைமொழி வாந்தியை நண்பர் மீது எடுத்து நண்பரை நாறடித்துவிட்டீர்கள். நண்பர் வெலவெலத்துப்போய் கொஞ்ச நாள் வீட்டக்குள்ளேயே முடங்கிப்போய்விட்டார்.! இது நடந்து சுமார் இரண்டு வருடங்களின் பின் நீங்கள் காதோடு காது வைத்தமாதிரி “பிரான்ஸ் ஏகாதிபத்திய” நாட்டின் சட்டதிட்டங்களை ஏற்று இந்த நாடடிற்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமானத்தோடு பிரான்ஸ் நாட்டின் “குடிமகனாகிக் “கொண்டீர்கள். இதுதான் இராயாகரன் நீங்கள்!

சென்ற மாதம் பரீசில் திருமறைக்காலமன்றம் என்ற அமைப்பு ஒரு நாடக விழாவை நடாத்தியது. நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம். நீங்களும் அங்கு வந்திருந்தீர்கள் அங்கு வைத்து எனக்கும் என் நண்பாகளுக்கும் ஒரு துண்டுப் பிரசுரத்தை தந்தீர்கள் . சில நாட்களின் பின் உங்கள் இணையத்தளத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. பரீசில் நடந்த விழாவில் நீங்களும் உங்கள் தோழர்களும் நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக.இச் செய்தியை படிக்கும் விபரம் புரியாத ஒருவர் இராயாகரனும் தோழர்களும் பிரான்சில் புரட்சி பண்ணுவதாக எண்ணிக் கொள்வார்கள். அவ்வாறான தோற்றப்பாட்டை உருவாக்கும் விதமாகவே அச் செய்தியை நீங்கள் வெளியிட்டிருந்தீர்கள். அதில் தந்திரமாக திருமறைக்காலமன்றம் நடாத்திய விழாவில் என்பதை தணிக்கை செய்து “விழா” என்றே குறிப்பிட்டீருந்தீர்கள். காரணம் திருமறைக்கலா மன்ற விழா என்றால் பலருக்கு உங்களின் இந்த விளம்பர பம்மாத்து அரசியல் அம்பலமாகிவிடும் என்று . தனியொருவராக வந்து எங்களுக்கு துண்டுப்பிரசுரம் தந்துவிட்டு நீங்கள் செய்யும் இந்த பம்மாத்து அரசியலை என்னவென்பது !

பகுதி இரண்டு:

வழமையாக கிளப்பும் வதந்திகளும் சேறடிப்புக்களும் கொண்ட தனிநபர் தாக்குதலாக இராயாகரனின் கட்டுரை (!) காணப்படுவதால் இதற்கு போய் பதிலளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதே என் தோழர்களின் அபிப்பிராயமாக இருந்தது. இராயாகரன் அரசியல் என நினைத்துக்கொண்டிருப்பது மற்றவர்கள் மீதான சேறடிப்பு , அவமானப்படுத்தல், வதந்திகளைப் பரப்புதல் என்பவைகளையே. இராயாகரன் ஆரோக்கியமான அரசியல் உணர்வுகளை இபார்வைகளை ,பண்புகளை , இனி எக்காலத்திலும் அவரால் கற்றுக்கொள்ள முடியாதென்பது தோழர்களின் இறுதி முடிவாக இருந்தது. இருந்தாலும் என் பதில்களை அளிக்கவேண்டிய தார்மீகக் கடமை எனக்கு இருப்பதாகவே நான் கருதகிறேன்.அந்த அடிப்படையிலேயே இந்த இரண்டாம் பகுதி அமைகிறது.

புளொட் அமைப்பின் அரசியல் ஆளுமை கொண்டிருந்த பெண்களை கொச்சைப்படுத்தும் இராயாகரனின் கீழ்தரமான மனோ நிலையை அவதானிக்கும்போது அருவருப்பாக இருக்கிறது. எந்தவித ஆதாரமும் அற்று புளொட் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் பாலியல் ரீதியில் அணுகப்பட்டார்கள் என்ற இராயாகரனின் அயோக்கித்தனமான தன் ஆதிக்க பாலியல் வக்கிரக மன நிலை கொண்ட கேவல அரசியலை இராயாகரன் தொடர்ச்சியாக செய்துவருகிறார். எந்தவித ஆதரமும் அற்ற முறையில் புளொட் அமைப்பில் அங்கம்வகித்த பெண்கள் அனைவர் மீதும் சேறு பூசும் இராயாகரனின் இந்த வக்கிர புத்தி அப் பெண்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

இங்கே இரயாகரனின் விமர்சன மனஅமைவு பற்றிச் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். இரயாகரன் தன்னைப் ‘பென்னாம்பெரிய’ மார்க்சியவாதி என பீற்றிக் கொள்வதால் இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இராயகரனின் அரசியல் விமர்சனச் சொற்களைப் பாருங்கள். முந்தானை, விபச்சாரம், படுப்பது, விபச்சாரி, சேலை விரிப்பது – என்ன கேவலமான வார்த்தைகள் ! தனது அரசியல் எதிரிகளை, ஆண்கள் பெண்கள் என அனைவரையும் இரயாகரன் அணுகும் முறை இது. இராயகரன், எந்த மார்க்சிய விவாதங்களில் இந்தவிதமான பாலியல் நிந்தனைச் சொற்கள் சரமாரியாக வீசப்படுகிறது என்பதை, மார்க்சிய அல்லது எந்தத் தொகைநூலையாவது மேற்கோள் ஆதாரம் காட்டி எங்களுக்குச் சொல்வாரா ?

பிரான்ஸ் நாடு மனோவியல் பகுப்பாய்வுக்குப் பெயர்போன நாடு. சீமான் தீ போவாவின் ‘இரண்டாம் பாலினம்’ நூல் வெளியான நாடு. தயவுசெய்து இந்தச் சொற்பாவனைகளின் பின்னிருக்கும் இரயாகரனின் மனஅமைவை அவர் மனவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக்கொள்வது அவருக்கு நல்லது என்பது எனது பணிவான வேண்டுகோள்.

இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களைப் பாலியல் பாவனைக்கு உட்படுத்தினார்கள் என எழுதுகிறார். இலங்கை அரசுக்கு அணுசரனையான அரசியல் கொண்ட பெண்களை மகிந்தாவுக்கு முந்தனை விரித்தார்கள் என எழுதுகிறார். இவர் அறமும் ஒழுக்கமும் நேர்மையும் பேசுகிறார். கொடுமையிலும் கொடுமை .

இராயாகரனின் குற்றச் சாட்டில் ஒன்று, சிவராமுக்கும் எனக்குமான உறவு பற்றியது. சிவராமுக்கும் எனக்குமான உறவு என்பது 1985ல் இலங்கையில் கூட்டப்பட்ட புளொட் தள மாகாநாட்டோடு துண்டிக்கப்ட்டிருந்தது. 1985ம் ஆண்டுக்கு பிற்பாடு 14வருடங்களின் பின் 1999ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் சிவராமை மீண்டும் சந்தித்தேன். நானும் எனது தோழர்களும் சிவராம் தொடர்பாக எம்முள் தேக்கி வைத்திருந்த விமர்சனங்களை குற்றச்சாட்டுக்களை சிவராம் முன் வைத்தோம்.இது ஒரு நீண்ட முரண்பாடு கொண்ட விவாதமாகவே இருந்தது. (இந்த சந்திப்பு பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை விரைவில் எழுத எண்ணியுள்ளேன்) சிவராம் இந்த வருகையின்போது உமாகாந்தனின் இல்லத்தில் தங்கினார்.

இதன் பின் 2005ம் ஆண்டு கொழும்பில் வைத்து சிவராம் படுகொலை செய்யப்படுவதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன் பரீசில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு சிவராம் வந்திருந்தார். இவரின் இந்த வருகை காலத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் புலிகளின் உடைவும் , கருணாவின் வெளியேற்றமும் நிகழ்ந்திருந்தன. இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. சிவராம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ,அப்போது இலங்கையிலிருந்து வந்தவர் என்பதாலும் இலங்கை அரசியல் நிலமைகளை , கிழக்கு பிரச்சனைகளை அறிந்து கொள்ள நானும் என் நண்பர்களும் சிவராம் ஒரு பத்திரிகையாளன் என்ற அடிப்படையில் சந்தத்தோம.

இவ் வருகையின்போது சிவராம் மாகாநாட்டு பிரதிநிதகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொட்டலில் அவர் தங்கியிருந்தார். ( சிவராம் என் வீட்டில் தங்குவதற்கு நான் என்ன இராயாகரன்போல் சொந்த வீடு வாங்கி “பிரான்ஸ் குடிமகனாகி” அரசின் அனைத்து சலுகைகளையும் உதவிகளையும் பெற்று புரட்சிபேசிக்கொண்டு சொகுசாகவா வாழ்கிறேன். இன்னும் இலங்கை “அரசியல் அகதியாக” வாடகை வீட்டில் சின்ன றூமில் பலநெருக்கடியில் மத்தியில் வாழ்கிறோம்.)

அடுத்த குற்றசாட்டு டக்கிளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு ஒரு இளைஞனை ஏமாற்றி சிறீலங்கா எம்பசிக்கு அழைத்துச் சென்றேனாம்! … இராயாகரனுக்கு வதந்தியை கிளப்புவதற்குக்கூட அறிவு போதவில்லை. பிரான்ஸ் தேசத்தில் ஓர் இளைஞனை ஏமாற்றி இலங்கை எம்பசிக்கு கூட்டிச் சென்றேனாம்!. என்னையா இராயாகரன் உங்கள் குற்றச்சாட்டு?

2006ம் ஆண்டு டக்கிளஸ் தேவானந்தா பிரான்ஸ் வந்திருந்தார். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாகவும்இ ஈபிடிபி மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றியும் இவரோடு உரையாட விரும்பினோம். பிரான்சில் இருக்கும் ஈபிடிபி அமைப்பினரை தொடர்பு கொண்டு இதற்கு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டோம். அதன் அடிப்படையில் நாங்கள் சந்திப்பதற்கு ஒரு மண்டபத்தை ஒழுங்கு படுத்தியிருந்தோம். இந்த காலகட்டத்தில் பிரான்சில் புலிகளின் ஆதிக்கமும் அட்டகாசமும் மிகவும் அதிகரித்திருந்தது. இதனால் டக்கிளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு கருதி நாங்கள் ஒழுங்கு செய்த மண்டபத்தில் சந்திப்பை மேற்கொள்வதற்கு மறுத்துவிட்டனர்.

பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு கருதி பிரான்சில் அமைந்திருக்கும் இலங்கை தூதுவராலயத்திற்கு அருகில் இருக்கும் மண்டபத்தை ஈபிடிபி யினர் ஒழுங்கு செய்திருந்தனர். அந்த மண்டபத்தில் சந்திப்பு நடைபெற்றது. காரசாரமான விவாதங்களோடும் கருத்துக்களோடும் உரையாடல் நடைபெற்றது. சுமார் 150 பேர் அளவில் நாங்கள் கலந்துகொண்டோம். பலத்த முரண்பாட்டோடு அச் சந்திப்பு முடிவடைந்தது.

இதைத்தான் இராயாகரன் அழகாய் வதந்தியாய் புனைந்துள்ளார். பாவம் இராயாகரன். நாங்கள் டக்கிளசை மாத்திரமல்ல ஆனந்தசங்கரி , சிறீதரன் , துரைரட்ணம் , பவான் , சந்திரசேகரன் , லயனல் போபெக்கே மற்றும் இலங்கை சிங்கள இடதுசாரிகளையும் ஜே.வீ.பீ யினரையும் பரீசில் சந்தித்து உரையாடி உள்ளோம். எங்கள் அரசியல் கருத்துக்களை விமர்சனங்களை எவ்வித சமரசமும் இன்றி மிக ஆணித்தரமாக இவர்கள் முன் வைத்துள்ளோம்.

இராயாகரனைப் பொறுத்தவரை பிரான்சில் எவர் நடத்தும் எச் சந்திப்புக்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் கூட்டங்களுக்கும் இராயாகரனை யாரும் அழைப்பதில்லை.இராயாகரனின் மொட்டைத்தனமான வதந்தி பரப்பும் சேறடிக்கும் தனிநபர் தாக்குதல்களே இதற்குக் காரணம். இதனால் இராயாகரன் அரசியல் உறவுகளில் தனிமைப்பட்டவராகவே தொடர்ந்து இருக்கிறார். ஆக்க பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடும் தோழர்கள் மீதான இராயாகரனின் சேறடிப்புக்கான உளவியல் காரணம் இதுதான். இதற்கு அசோக் ஆகிய நான் என்னதான் செய்யமுடியும்!

அடுத்த இராயாகரனின் கண்டுபிடிப்பு ஈஎன்டிஎல்எப் ராஜனுக்கும் எனக்கும் உறவு என்பது!

இந்த குற்றச்சாட்டுப் பற்றி கொஞ்சம் விரிவாக பேசலாம் என நினைக்கிறேன். புளொட்டில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக 1985ல் பெரும்பாண்மை மத்திய குழு உறுப்பினர்களும் தோழர்களும் புளொட்டைவிட்டு வெளியேறியிருந்தோம். இப் பிளவு மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது. ஒரு பகுதித் தோழர்கள் ராஜனோடும், இன்னொரு பகுதி தோழர்கள் எங்களோடும், மிகக் குறைந்த தோழர்கள் தோழர் காந்தனோடும் வெளியேறினர். காந்தனோடு வெளியேறிய தோழர்கள் தலைமறைவாகி தீப்பொறி என்ற பெயரில் பின்னர் இயங்கத் தொடங்கினர். எங்களோடு நூற்றுக்கணக்கான தோழாகள் வெளியேறியபடியால் தலைமறைவாகி அரசியல் இயக்கத்தை முன்னெடுப்பதென்பது சாத்தியம் இல்லாமல் போயிற்று. அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன என்பது பற்றிய குழப்பங்களும் நெருக்கடிகளும் எங்களுக்கு தோன்றின.

இக் காலகட்டத்தில் ஏனைய அமைப்புக்களினுள்ளும் முரண்பாடு தோன்றி தோழர்கள் வெளியேறிருந்தனர். இந்த இயக்கங்களின் ஜனநாயக இன்மையாலும் இஅராஐகத்தாலும் வெளியேறிய அனைத்து இயக்கத் தோழர்களையும் உள்ளடக்கி ஒரு கூட்டமைப்பை உருவாக்க எண்ணினோம். அதனடிப்படையில் ஈபிஆர்எல்எப் , ஈரோஸ் , என்எல்எப்ரி அமைப்புக்களிலிருந்து வெளியேறிய தோழர்களோடு ஈஎன்டிஎல்எப் என்ற” ஈழதேசிய ஜனநாயக முன்னணி “என்ற கூட்மைப்பை தொடங்கினோம்.

இதில் உருவாக்கப்ட்ட மத்திய குழுவில் ராஜனும் அங்கம் வகித்தார். பல்வேறு அமைப்புக்கள் சேர்ந்த தோழர்களைக் கொண்ட ஒரு முன்னணியை எவ்வாறு ஜனநாயக மத்தியத்தோடு கொண்டு நடாத்துவதென்பது பெரும் சிக்கலாகவே இருந்தது. பல்வேறு முரண்பாடுகள் உருவாகத் தொடங்கின. இறுதியில் இவை கூர்மையடைந்து நானும் எனது தோழர்களும் இவ் அமைப்பிலிருந்து 1987ல் வெளியேறினோம்.
அதன் பின் ஈஎன்டிஎல்எப் ராஜனின் கட்டுப்பாடடில் இயங்கத் தொடங்கியது. ராஜனோடு கொண்ட அரசியல் உறவுகளை நான் துண்டித்துக்கொண்டேன்.

நாங்கள் ஈஎன்டிஎல்எப் ன் மீது எங்கள் அரசியல் விமர்சனங்களை முன் வைப்பதோடு இனியொரு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இலங்கை மீதான இந்திய விஸ்தரிப்பு மேலாதிக்கத்திற்கு எதிராக மிக காத்திரமான அரசியல் விமர்சனங்களையும் நாங்கள் தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறோம்.
கேணல் அபுதாகீரின் பங்களாதேசத்தின் மீது இந்தியா மேலாதிக்க அரசியலை அம்பலப்படுத்திய “வங்கம் தந்தபாடம்” என்ற புத்தகத்தை 1983ல் இலங்கையில் வெளியிட்டு இலங்கை மீதான இந்திய மேலாதிக்க அபாயத்தை எச்சரித்தவர்கள் நாங்கள்.

(இதெல்லாம் இராயாகரனுக்கு எங்கே தெரிந்திருக்கப்போகிறது. இராயாகரன் அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் அவர் முதலில் மாக்ச்சியத்தின் அடிப்படையை கற்கவேண்டும்.அதன் பின் ஈழப்போராட்டதின் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும். )

அதன் பின் 1992ல் நான் பிரான்ஸ் வந்தடைந்தேன். இங்குவந்து பார்த்தபோது இங்கே எல்லா இயக்கங்களின் பிரதிநிதிகளும் இயங்கிக்கொண்டிருந்தனர். ஈஎன்டிஎல்எப்வும் இங்கே இயங்கிக்கொண்டிருந்தது. எல்லா இயங்கப் பிரதிநிதிகளும் முன்னர் எனக்கு தெரிந்தவர்கள் என்பதால் அவர்களோடு சாதாரண நட்புக்களை பேணிவந்தேன். அதே நேரம் அரசியல் ரீதியில் மிகவும் கறாரான பார்வைகளையும் , விமர்சனங்களையும் கொண்டிருந்தேன்.
சமீபத்தில் பிரான்சில் இருக்கும் எமது இடதுசாரி தோழர்களோடு மக்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் கண்டித்து கண்டன ஊர்வலத்தை நடாத்தினோம் இதில் இந்த இயக்கங்கள் தொடர்பான கடுமையான கண்டனத்தையும் விமர்சனத்தையும் வைத்திருந்தோம். . சமூக உறவற்று , அரசியல் உறவற்று , கொம்பூட்டர் முன்னால் குந்திக்கொண்டு “சேறடிப்பு புரட்சி” பண்ணும் இராயாகரனுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது?

இறுதியாக இராயாகரனுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்பகின்றேன். தொடர்ச்சியான இந்த சேறடிப்பு தனிமனித தாக்குதல் அரசியல் தற்கொலைக்கு உங்களை உள்ளாக்கிவிடும். தயவு செய்து கவனம் கொள்ளவும்.

சேறடிப்புக்கள் , அவதூறுகள் என்று இன்னோரன்ன அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் மீதான பற்றுடன் உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன்.

Exit mobile version