Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்னும் எத்தனை பிணங்கள் உங்களுக்கு வேண்டும் ஜெயலலிதா ?:சவுக்கு

jeyalalitha1“இன்னல்களை பொருட்படுத்தாமல் கடமையைச் செய்பவர்களை அங்கீகரிப்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் முன்னிலை வகிக்கிறது” இது செல்வி ஜெயலலிதா, மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நடத்திய பாராட்டு விழாவில் பேசியது. இதுதான் ஜெயலலிதாவின் உண்மையான குணம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்.

ஏனென்றால்,வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் 4 ஹெக்டேர்களில் கார்னெட் எடுக்க உரிமம் பெற்று விட்டு, 30 ஹெக்டேர்களில் சட்டவிரோதமாக கனிமவளங்களை கொள்ளையடித்தபோது, அதை அதிரடி சோதனை நடத்தி வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததுடன் அரசுக்கு அறிக்கையும் அனுப்பியவர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார். அதற்காக அறிக்கை அனுப்பிய அதே நாளில் அவரை இடமாற்றம் செய்ததோடு, அவர்

ஆஷிஷ் குமார் ஐஏஎஸ்

மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கும் உத்தரவிட்டவர் ஜெயலலிதா. இதுதான் ஜெயலலிதாவின் உண்மையான ரூபம்.

கடந்த மாதம் இறுதியில், அதாவது ஜுன் 28-ம் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது தென்னிந்தியாவையே உலுக்கியது. பூகம்பம்,புயல்,மழை,வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் மனிதக் கட்டுப்பாட்டில் இல்லை.

ஆனால், மவுலிவாக்கம் கட்டிட இடிபாட்டை அப்படி எடுத்துக் கொள்ள முடியுமா? இயற்கை பேரழிவா அது? முழுக்க முழுக்க ஊழல்களால் நிரம்பிய நிர்வாகத்தால் நடந்த பேரழிவுதானே அது.     இறந்து போன 61 உயிர்கள் மீண்டு வருமா?   இறந்து போன 61 பேரில் 3 பேர் கர்ப்பிணிகள்.   4 கைக்குழந்தைகள் மற்றும் 8 குழந்தைகள்.     ஒரே வாரத்தில் மீட்புப் பணிகளை முடித்துக் கொண்டது அரசாங்கம். அதோடு அல்லாமல், அந்த இடத்தையே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது.

கடந்த மாதம் இறுதியில், அதாவது ஜுன் 28-ம் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது தென்னிந்தியாவையே உலுக்கியது. பூகம்பம்,புயல்,மழை,வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் மனிதக் கட்டுப்பாட்டில் இல்லை.

ஆனால், மவுலிவாக்கம் கட்டிட இடிபாட்டை அப்படி எடுத்துக் கொள்ள முடியுமா? இயற்கை பேரழிவா அது? முழுக்க முழுக்க ஊழல்களால் நிரம்பிய நிர்வாகத்தால் நடந்த பேரழிவுதானே அது.     இறந்து போன 61 உயிர்கள் மீண்டு வருமா?   இறந்து போன 61 பேரில் 3 பேர் கர்ப்பிணிகள்.   4 கைக்குழந்தைகள் மற்றும் 8 குழந்தைகள்.     ஒரே வாரத்தில் மீட்புப் பணிகளை முடித்துக் கொண்டது அரசாங்கம். அதோடு அல்லாமல், அந்த இடத்தையே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது.

கடைசி மூன்று நாட்கள் மீடியாக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது.   இப்படி மீடியாக்களை தடுத்தற்கான காரணம், சம்பவ இடத்தை ஜெயலலிதா பார்வையிட வந்த சமயத்தில் மீடியாக்கள் எழுப்பிய கேள்விதான்.   சம்பவம் நடந்த முடிந்த பிறகு, ஒவ்வொரு நிமிடமும் முக்கியமாகக் கருதப்பட்டு பல்வேறு மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில், ஜெயலலிதா வருகை காரணமாக நான்கு மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. புதிதாக ஒரு நபராவது உயிரோடு மீட்கப்படமாட்டாரா? என்று ஆவலாக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவுக்கு கண்காட்சி காட்டுவதற்காக நான்கு மணி நேரம் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டது. இது அனைவரின் மத்தியிலும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து கேள்வி கேட்டதும், கடும் கோபமடைந்த ஜெயலலிதா, இது எதிர்க்கட்சிகளின் சதி என்றார்.

அடிமைகளோடு இடிபாடுகளை பார்வையிடும் ஜெயலலிதா

முதலமைச்சர் வந்து பார்வையிடுகையில், கையைக் கட்டிக் கொண்டு பள்ளி மாணவர்களைப் போல ஜெயலலிதாவிடம் விளக்கம் அளித்தார்கள் அதிகாரிகள். இது வரை இல்லாத வகையில், தலைமைச் செயலாளருக்கும் மேலாக, அரசு ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கி அதில் அமர்ந்து இருக்கும், ஜெயலலிதாவின் அடிமை ஷீலா பாலகிருஷ்ணன், மற்ற அதிகாரிகளை பேச விடாமல் அவரே பேசினார்.   பதவியிலிருந்து இரண்டு வருடம் முன்பே ஓய்வு பெற்றுவிட்ட ராமானுஜமும் சம்பவ இடத்தில் இருந்து விளக்கங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார். இந்த களேபரத்தில், நான்கு மணி நேரம் மீட்புப் பணிகள் தாமதப்பட்டன.

அதைத்தான் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டார்கள். அவ்வளவுதான் மறுநாள் முதல் எந்தப் பத்திரிகையையும் சம்பவ இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததா….. கட்டிடம் உள்ளே இறங்கியதாக சொல்கிறார்களே… அது முழுவதும் தோண்டிப் பார்க்கப்பட்டதா? மீட்கவே முடியாத உடல்கள் உடமைகள் ஏதாவது இருக்கிறதா? என்று எந்தத் தகவலும் வெளியுலகுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளப் பட்டது.

அந்தப் பகுதியில் உள்ளவர்கள், கூறியதாக இன்றைய ஜுனியர் விகடன் இவ்வாறு எழுதியிருக்கிறது. “இந்த பில்டிங் விழுந்தபோது முதல் இரண்டு தளங்கள் அப்படியே பூமிக்குள் அமுங்கிவிட்டன. அவை முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தரைமட்டம் வரை மீட்பு பணிகள் நடக்கும்போது, பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடைசி மூன்று நாட்கள் மீடியாவை அனுமதிக்கவில்லை. திடீரென ஜூலை 8-ம் தேதியோடு மீட்புப்பணி முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது தரைக்குள் போன இரண்டு தளங்களைத் தோண்டினார்களா, இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆனால், அரசாங்கம் சொன்ன கணக்குப்படி, 88 பேரை சடலங்களாகவும் காயத்துடனும் மீட்டதோடு பணியையும் முடித்துக்கொண்டார்கள்… இது சந்தேகமாக உள்ளது. முதல் மாடியில்தான் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் முழுமையாக மீட்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை. இதுபற்றி கேட்டால் போலீஸ் சரியான பதிலைச் சொல்ல மறுக்கிறது. எங்களை பில்டிங் பக்கமே விடமறுக்கிறார்கள்” என்று சொல்லிக்கொண்டு இருந்தார் ஒருவர். ‘இது தடை செய்யப்பட்ட பகுதி’ என்று அறிவித்துவிட்டார்கள்.

இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. ‘அப்பல்ராமு, லட்சுமி, மீனாம்பாள், பங்காரு நாயுடு, கௌரீஸ்வரி, துர்கா, தவுடு… இவர்கள் எல்லாம் இந்த இடத்தில் வேலை பார்த்தவர்கள். இவர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை” என்று சொல்கிறார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வினோத்குமாருக்கு அவருடைய தந்தையின் சடலம் இதுவரை கிடைக்கவில்லையாம். ஒடிசாவைச் சேர்ந்த பிரகாஷ்குமார் உயிரோடு மீட்கப்பட்டு உள்ளார். ஆனால், பிரகாஷ்குமாரின் சடலம் என்று ஒடிசாவுக்கு ஒரு உடல் கொண்டு செல்லப்பட்டது. உண்மை தெரிந்து அந்த உடலைக் கொண்டுவந்துவிட்டார்கள். கொண்டுவரப்பட்ட சடலம் யாருடையது என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ‘சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒரு ஜோடி கால்கள், ஒரு கை மட்டும் உள்ளது. இந்த உடல் உறுப்புகள் யாருடையது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இறந்தவர்கள், உயிரோடு மீட்கப்பட்டவர்கள் உடலோடு இவை ஒத்துப்போகவில்லை. அப்படியானால் யாருடையது என்பதும் தெரியவில்லை. காதோடு பிய்ந்த நிலையில் ஒரு ஜோடி கம்மல்கள் உள்ளது. அதுவும் யாருடையது எனத் தெரியவில்லை” என்று சொல்லி பீதியைக் கிளப்புகிறார்கள். ”இந்த அடிப்படையில் பார்த்தால் சுமார் 18 பேர் நிலைமை தெரியவில்லை.

இந்த நேரத்தில் பாராட்டு விழா ஒன்றை நடத்தும் ஜெயலலிதா எப்படிப்பட்ட முதல்வராக இருப்பார் என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஜெயலலிதாவுக்கு எப்போதும் சொம்படிக்கும் தினமலர் நாளேடே, இந்த சம்பவத்தைப் பார்த்து பதைபதைத்து கேள்வி எழுப்பிய நிலையில், மறுநாளே தினமலர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் ஜெயலலிதா

(http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/defamation-case-against-dinamalar/article6168228.ece)

எம்ஜிஆர் நகர் விபத்தில் தந்தையை இழந்து கதறும் குழந்தைகள்.

சம்பவ இடத்தை பார்வையிட வந்த ஒரு முதல்வர், மீட்புப் பணியே முழுமையாக முடிவுறாத நிலையில், விசாரணை முழுமையாக தொடங்காத நிலையில், “விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டப்பட்டதால் தான் அது இடிந்துபோனது. அதில் சி.எம்.டி.ஏ-வின் தவறு எதுவும் இல்லை” என்று ஒரு முதல்வர் சொன்னால் விசாரணை எப்படி நியாயமாக நடக்கும் ? விதிமுறைகளை மீறி 11 மாடிகள் எழுப்புவது வரை வேடிக்கை பார்த்த அரசு அதிகாரிகள் இதற்கு பொறுப்பானவர்களா இல்லையா ? அந்த அதிகாரிகளை மேய்க்கும் பொறுப்பில் இருக்கும் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் பொறுப்பானவரா இல்லையா ? அந்த அமைச்சர் சம்பவ இடத்தைக் கூட பார்வையிடாமல் இருக்கிறார் என்பதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் ஒரு முதலமைச்சர் !!!!!!

உண்மையிலேயே இறந்த 61 நபர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்திருக்குமேயானால், இது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பாரா இல்லையா ?   ஆனால் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டதன் மூலம், இந்த விவகாரத்தில் உண்மையை மூடி மறைக்க மட்டுமே ஜெயலலிதா விரும்புகிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

2005-ம் ஆண்டு வெள்ள நிவாரணம் வழங்கும் அறிவிப்பு குறித்து வெளியான வதந்தி காரணமாக ஆண்களும் பெண்களுமாக 42 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர். தனது நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை மூடி மறைக்க ஜெயலலிதா, ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் என்ற அடிமையின் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தார்.   அந்த அடிமை, இந்த சம்பவத்திற்கு யாருமே பொறுப்பு இல்லை என்று அறிக்கை அளித்ததோடு, சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.   நள்ளிரவில், 2 ஆயிரம் பணம் ஓசியில் தருகிறார்கள் என்று அடித்துப் பிடித்துக் கொண்டு நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு அரசு வேலையாம்.   இது போல அந்த நீதி ஆணையத்தின் மூலம் விஷயத்தை திசை திருப்பியதோடு, அந்தப் பகுதியின் திமுக கவுன்சிலர் தனசேகரன்தான் வதந்தியை பரப்பினார் என்று தனசேகரனைக் கைது செய்து விஷயத்தை திசை திருப்ப முயன்றார் ஜெயலலிதா.

தற்போது நடந்துள்ள இந்த 11 மாடி கட்டிடம் இடிந்த விபத்தானது முழுக்க முழுக்க ஊழல் காரணமாக மட்டுமே நிகழ்ந்தது என்பதை ஜெயலலிதா அறியாதது அல்ல. கடந்த 2001ம் ஆண்டு முதல், கட்டுமானத் தொழிலில் நடக்கும் ஊழல்கள் குறித்து தொடர்ந்து வழக்காடியும், எழுதியும், பேசியும் வரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் இவ்வாறு கூறுகிறார் “கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு சி.எம்.டி.ஏ.வின் முறையான ஆய்வு இல்லை என்பதும், ஊழலின் மொத்த உருவமாக சி.எம்.டி.ஏ. மாறியிருப்பதும் தான் அடிப்படைக் காரணம். ஆனால் அந்தத் துறை அதிகாரிகளை பாதுகாப்பதற்கு முதலமைச்சர் முயற்சிக்கிறார் என்பது தான் அவர் சொல்லியிருக்கும் பதிலிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. பிளானிங் அப்ரூவலுக்கு மாறாக ஒருவர் பல அடுக்கு மாடிகள் கட்டி வருகிறார் என்றால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது? சி.எம்.டி.ஏ.வுக்குத்தானே?

தேவசகாயம் ஐஏஎஸ்

அப்ரூவலுக்கு எதிராக கட்டிடம் கட்டப்படுகிறது என்றால் தடுக்க வேண்டியது தானே? அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை? அவர்கள் தடுத்திருந்தால் ஜீரணிக்க முடியாத இந்தத் துயரத்தையும் தடுத்திருக்க முடியும்தானே? தங்களுடைய கடமையைச் செய்தார்களா? செய்யவில்லையே?. இத்தகைய சட்டவிரோத கட்டுமானங்கள் இடித்துத் தள்ளப்பட வேண்டும், அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு சட்டவிரோதக் கட்டுமானங்களை ஆய்வு செய்யும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது” என்கிறார் தேவசகாயம். மாறாக, இத்தகைய சட்டவிரோத கட்டிடங்களை வரண்முறைப் படுத்தும் பணியிலேயே அரசுகள் ஈடுபடுகின்றன என்று குற்றம் சாட்டுகிறார்.

இன்று மவுலிவாக்கம் விபத்து குறித்து, சிபிஐ விசாரணை வேண்டும் என்று, தன் புலிப்படைகளை போர்க்களம் காண அழைத்திருக்கும் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் மட்டும் கட்டுமானப் பணிகள் நேர்மையாக நடைபெறவில்லை. திமுக ஆட்சிக் காலத்திலும் இதே நிலைதான் நீடித்தது.   திமுக தரப்பிலிருந்து வந்த தகவல் என்னவென்றால், கடந்த திமுக ஆட்சி முடியும் தருவாயில், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, அப்போது சி.எம்.டி.ஏ. துறைக்கு பொறுப்பாக இருந்த பரிதி இளம்வழுதி பழைய தேதியிட்டு 300-க்கும் மேற்பட்ட பல மாடிக் கட்டிடங்களுக்கு அனுமதி அளித்ததாகவும், சென்னைக்கான புதிய மாஸ்டர் பிளான் 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலும் பல கோடிகள் கைமாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பல அடுக்கு மாடிகளுக்கு அனுமதி அளிக்க, ஒரு சதுர அடிக்கு 100 ரூபாயை வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் வசூலிப்பதாகவும், அதுவும் அனுமதி அளிக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாமதிப்பதாகவும் கூறுகின்றனர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருப்போர். இந்த தாமதம் காரணமாக ஒரு கோடிக்கும் மேல் வட்டி கட்டுவதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, தரமற்ற கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடுவதாகவும்தெரிவிக்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழில் அதிபர்.

மவுலிவாக்கம் கட்டிடம் கட்டப்பட்டு முடித்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமாம்…. க்கும்.

 

 

 

 

 

 

 

ஜெயலலிதாவுக்கு இது போன்ற மரணங்களை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. மாறாக, தற்போது ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து, தற்போதைக்கு விஷயத்தை மூடி, அதற்கு பதிலாக நடராஜனை கைது செய்தால், ஊடகங்கள் இதை மறந்து விடும் என்ற நினைப்பிலேயே இருக்கிறார்.

ஒருவனின் மனைவியை, 25 வருடங்களாக அவனிடமிருந்து பிரித்து தன்னோடு வைத்துக் கொண்டு, அவனை வசூல் வேட்டையில் ஈடுபட வைத்து வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் அவன் கை மீறிப் போகிறான் என்றதும், அவன் மீது ஏதாவது ஒரு வழக்கை போட்டு மீண்டும் மீண்டும் கைது செய்யும் கேடுகெட்ட செயல்கள் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். தமிழக ஊடகங்களும், இன்னொருவன் மனைவியை அவனிடமிருந்து பிரித்து தனக்கு பணிப்பெண்ணாக வைத்துக் கொள்ள முதலமைச்சருக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வி ஏதும் எழுப்பாமல், அந்தப் பிரச்சினையை திசை திருப்பும் விதமாகவே செய்திகளை வெளியிடும்.

ஜெயலலிதாவுக்கு இது போன்ற மரணங்களை தடுக்க வேண்டும் என்ற அக்கறை உண்மையில் இருந்தால், சட்டவிரோதமாக கட்டப்பட்ட ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை முதலில் அடைத்திருக்க வேண்டுமா?-வேண்டாமா ?

கோவையில் சட்ட விரோத கட்டிடத்தில் இயங்கும் போத்தீஸ்

தற்போது கூட, திமுகவுக்கு நெருக்கமான லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான கட்டிடம் சட்டவிரோதமாக, எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி, கோவையில் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.   தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாக்கக் கூட வழிவகை இல்லாமலும், வாகன நிறுத்த வசதிகள் இல்லாமலும் கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டிடத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. ஆனால் மாநகராட்சி சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் பாதுகாப்பற்ற கட்டிடம் என்ற அறிவிப்பு பலகையோடே, போத்தீஸ் என்ற மிகப்பெரிய ஜவுளிக்கடை நடைபெறுகிறது. அதுவும் எளிதில் தீப்பற்றக் கூடிய துணிகள் டன் கணக்கில் இருக்கின்றன. அந்த அறிவிப்பை வாசலில் ஒட்டி வைத்து விட்டு, அரசு அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் எருமை மாடுகள் போல வேடிக்கை பார்த்துக் கொண்டல்லவா இருக்கின்றன ?

அந்த இடத்தில் ஒரு தீவிபத்து ஏற்பட்டால் எத்தனை உயிரிழப்புகள் நேரிடும்? சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்தக் கட்டிடங்கள் அதே போல எவ்விதமான தடையுமின்றி இயங்கி வருகிறதே…… இது ஜெயலலிதாவுக்கு தெரியாதா ?

ஒரு மீட்டர் இரண்டு மீட்டர் அல்ல. 44 ஆயிரம் சதுர மீட்டர் கட்டிடங்களை வன நிலத்துக்கு அருகில், வன விலங்குகள் மட்டும், பழங்குடியின மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சத்குரு என்ற பெயரில் ஒரு திருட்டுச் சாமியார் கட்டிடம் கட்டி, ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடத்துகிறான். பள்ளி நடத்துகிறான். அரசுத் துறை கட்டிடத்தை சீல் வைக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசாங்கத்தின் உத்தரவை மதிக்கமால் அவன் மேலும் மேலும் கட்டிடம் கட்டுகிறான். தடுப்பதற்கு யோக்கியதை இல்லை.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதில் பதில் மனு தாக்கல் செய்த அரசு, அனைத்தும் சட்டவிரோதமான கட்டிடங்கள் என்று சொல்லி உள்ளது. இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாத விஷயங்களா ?

ஆனால், இந்த நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல், மீட்புப் படையினருக்கு பாராட்டு விழா நடத்துகிறார். அந்த விழாவில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி இவ்வாறு பேசுகிறார் “சுனாமி, தானே புயல் போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம் முதலமைச்சர் புரட்சித் தலைவர் அம்மா அவர்கள் மிகச்சிறப்பான முறையில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதை பிற மாநில முதலமைச்சர்களே பாராட்டுகிறார்கள்.

முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலின் பேரில் மீட்புப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டன இதற்காக எங்களை பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கியுள்ள முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

இறந்த அந்த 61 பேரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதைக் கேட்கும்போது என்ன நினைத்திருப்பார்கள்.

ககன்தீப் சிங் பேடி தமிழில் பேசிய பேச்சை, ஜெயலலிதா மிக மிக ஆனந்தமாக ரசித்து மகிழ்ந்தார். அந்தக் காட்சியைப் பார்த்த போது, இந்தக் காட்சி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

நன்றி,

-சவுக்கு-

Exit mobile version