Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

lycaபிரித்தானியாவில் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் பல மில்லியன் பெறுமானமுள்ள வியாபாரம் லைக்கா மோபைல் குழுமம். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடின் முக்கிய பங்குதாரர்கள் லைக்கா மோபைல் என்ற தகவலை கோப்ரட் வாச் என்ற இணையம் வெளியிட்டுள்ளது.
டொரிக் கட்சி என்று அழைக்கப்படும் டேவிட் கமரனின் பழைமைவாதக் கட்சிக்குப் பெருந்தொகை நன்கொடை வழங்குபவர்களான லைக்கா மோபைல், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய வர்த்தக மன்றத்தின் முதல்தர பங்குதாரர்கள் என்ற தகவலை கோப்ரட் வாச் வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் மருமகன் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனமொன்றின் 95 வீதமான பங்குகளை லைக்கா குழுமத்தைச் சேர்ந்த Hastings Trading e Serviços Lda என்ற போத்துக்கல் நாட்டு நிறுவனமான வாங்கியது.

அதனைத் தொடர்ந்து இலங்கையில் 2007 ஆம் ஆண்டில் 2G வயர்லஸ் சேவைக்கான உரிமத்தை லைக்கா பெற்றுக்கொண்டதாக அந்த இணையம் குறிப்பிடுகிறது. அதனைத் தொடர்ந்து லைக்கா குழுமத்தால் நடத்தப்படும் லைக்கா பிளை என்ற விமான முகவர் நிலையத்தை சிறீலங்கன் ஏர்லைன்ஸ் தமது பிரதான பங்குதார்களாக அறிவித்தது. ராஜபக்சவின் மைத்துனரே சிறீலங்கன் ஏர்லைன்சின் தலைவர் என்பதையும் இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
போருக்குப் பின்னான காலத்தில் பிரபல வியாபாரமாக மாறிய உல்லாசப் பயணத்துறை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட லைக்கா குழுமம் இலங்கையில் உல்லாசப் விடுமுறையக் களிப்பதற்கான முகவர் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளது.
லைக்கா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களை கோப்ரட் வாச் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது அவர்கள் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கோப்ரட்வாச் இணையம் வெளியிட்டுள்ள செய்தி ‘தேசியம்’ எவ்வாறு சுரண்டுவதற்கான கருவியாகப் பயன்படுகிறது என்பதை தெளிவாக உணர்த்தும் வகையிலுள்ளது.

அதிகாரத்திலிருப்பவர்கள் ஒருதடவை மூச்சுவிட்டாலே நுறுதடவை பெருமூச்சுவிடும் தமிழ் ‘தேசிய’ ஊடகங்கள் லைக்கா மொபைல் குறித்த செய்தியை இருட்டடிப்புச் செய்துள்ளன. பல இணையங்களில் லைக்காவின் விளம்பரங்கள் தொங்குவதைக் காணலாம்.
பிரபல பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மாணவர் ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு முன்னர் புலி ஆதரவு அமைப்புக்களாகச் செயற்பட்ட இந்த அமைபுக்களுக்கு லைக்கா குழுமம் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் பவுண்ஸ் வரையிலான பணத்தை வழங்குகின்றன. சில பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்களின் இணையங்களில் லைக்கவிற்கான இலவச விளம்பாங்களைக் காணலாம். http://www.su.nottingham.ac.uk/societies/society/tamil/

இது தவிர, பிரிடிஷ் ஏஷியன் ரஸ்ட் என்ற தன்னார்வ நிறுவனத்தின் முக்கிய நிதி வழங்குனர்கள் லைக்கா குழுமம். அதன் தலைவராக்விருப்பவர் இளவரசர் சார்ள்ஸ். பிரித்தானியாவில் வசிக்கும் ஆசியப் பணக்காரர்களால் தோற்றுவிக்கபட்ட பிரிட்டிஷ் ஏஷியன் ரஸ்ட் இந்த வருடம் பெப்ருவரி மாதம் 13 ஆம் திகதியன்று ஆசியப் பணக்காரர்களின் ஒன்று கூடல் ஒன்றை லண்டனில் பெருத்த செலவுடன் நடத்தியது. இந்த விருந்தியில் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அலிராஜா கலந்துகொண்டார். சுபாஸ்கரன் இளவரசர் சார்ள்சுடன் உரையாடும் புகைப்படத்தோடு தமிழ் தன்னார்வ நிறுவனமான ‘தமிழர் தகவல் மையம்’ பதிவு ஒன்றை வெளியிட்டது.

ராஜபக்ச குடும்பத்துடனான லைக்காவின் உறவு, பிரித்தானிய அரசின் உயர்மட்ட ஆதரவு, தமிழ் அமைப்புக்களுடனான தொடர்பு ஆகியன பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

கடந்த காலத்தில் அரசியல் வழிமுறைகள் குறித்த விவாதங்களுக்கு அப்பால் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான உறுதியான ஆதரவும் அதிகாரத்திற்கு எதிரான உணர்வும் காணப்பட்டது. இவற்றைப் பிழைப்புவாதிகள் தமது வியாபார நலன்களுக்காகப் பயன்படுத்திவந்தனர். தமிழ்ச் சமூகத்தைப் போதிய அளவு சுரண்டிக்கொண்ட பிழைப்புவாதத் தலைமையின் ஒருபகுதி தப்பியோடிவிட மறுபகுதி மக்களிலிருந்து அன்னியப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்படும் தலைமைக்கான வெற்றிடத்தின் ஒருபகுதியைத் தன்னார்வ நிறுவனங்களும் மறுபகுதியை இலங்கைஅரசு சார்பால லைக்கா குழுமமும் நிரப்புகிறதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

புலம் பெயர் தமிழ்ப் பிழைப்புவாதிகள் லைக்கா குறித்து மௌனம் சாதிப்பது அதனுடனான அவர்களின் உறவை வெளிப்படுத்துவது போன்றது. உண்மைகளை மறைத்து தமது ஆதரவாளர்களுடன் தெருவிலிறங்கிக் கூச்சலிடுவதை மக்கள் போராட்டம் என்று கூறுவது கேலிக்குரியது.

நன்றி : http://www.corporatewatch.org/?lid=5128

மேலதிக வாசிப்பிற்கு :

http://www.ticonline.org/newsdetails.php?id=9

http://www.britishasiantrust.org/

http://www.thesundayleader.lk/2009/11/29/slt%E2%80%99s-wimax-cross-connection/

http://www.lycaflyholidays.com/destinations/indian_sub_continent/srilanka.html

http://sri-lanka.theglobalmail.org/brothers-grip

http://searchthemoney.com/profile/657/2970

Exit mobile version