Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்துமதத்தின் ஒரு அங்கமாகவே மாட்டிறைச்சி உணவு இருந்துவந்துள்ளது: வி.இ.குகநாதன்

ந்தியாவில் மாட்டிறைச்சிக்கான மறைமுகத்தடை மத்தியஅரசால் இந்துத்துவா கொள்கையினை அடிப்படையாகக்கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுவர்களே இந்து வெறியார்களால் நாடுபூராக அடித்துக்கொல்லப்படுகிறார்கள். இந்தப்பின்புத்திலேயே இந்துமதத்தின் மாட்டிறைச்சி தொடர்பான பார்வையினை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

தேவாரம் சொல்லும் தகவல்-

மாட்டிறைச்சி(பசு) உணவு பற்றிய அப்பர் சுவாமிகளின் கருத்தினைப் பார்ப்போம். திருநாவுக்கரச நாயனார் மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் பக்திநிலையினை போற்றியுள்ளார். “சங்கநிதி பதுமநிதி” என ஆரம்பிக்கும் தேவாரத்தில் 6வது வரியில்” ஆவுரித்து தின்றுழலும் புலையரையும் “ இந்துமதத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார். (ஆதாரம்- சங்கநிதி பதுமநிதி தேவாரம், அப்பர் )

வேதங்கள் சொல்லும் தகவல்-

1. இருக்கு வேதம் (Rig vedda)- இந்திரனுக்கு பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்”. – ரிக் வேதம் (6/17/1)
(ஆதாரம்– ரிக் வேதம் (6/17/1)

2. யசூர் வேதம்- இதில் பலவகையான யாகங்கள் குறிப்பிடப்பட்டு அவற்றில் எவ்வாறு பசுக்கள் பலியிடப்படவேண்டும் எனக்குறிப்பிடப்படுகிறது.

அவையாவன:

👉:கோசவம்- பசுமாடுகளை கொல்லும் யாகத்தின் பெயர்

👉:வாயவீயஸ் வேதபசு – வாயு தேவதைகளுக்காக வெள்ளை பசுவை கொல்லுவது

👉:காம்யபசு – தனது எண்ணங்களை ஈடேற்றி கொள்வதற்கு உரிய பசு யாகம்

👉:வத்சொபகரணம் – கன்று குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்

👉:அஷ்டதச பசுவிதானம்- 18 பசுக்களை கொலை செய்து நடத்தும் யாகம்

👉:ஏகாதசீன பசுவிதானம் – 11 பசுக்களை கொல்லும் யாகம்

👉:கிறாமாரண்யா பசு பிர்சம்ஷா – நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுக்களை கொன்று யாகம் செய்வது

👉:ஆதித்ய வேதபசு – சூரிய தேவனுக்கு பசு யாகம்

👉:ரிஷபாலம்பன விதானம் – எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி

3. அதர்வவேதம்- அதர்வண வேதம் கூறுகிறது. வேத காலப் பசு புனிதமானது என்பது எப்போது என்றால் அப்பசு பார்ப்பனருக்குப் பலிக்குரிய தொகையாகக் (‘தட்சணையாக’க்) கொடுக்கப்படும் போது மட்டும் தான்!

(ஆதாரம்-“புனிதப் பசுவின் புராணம்)

மனுதர்மம்-

“அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்கு, பலியிடும் விலங்காக உருவெடுப்பான்”.

(ஆதாரம் – மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 35)
“இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான்”
. (ஆதாரம் – மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 30)

இதிகாசங்கள் சொல்லும் தகவல்-

1. மகாபாரதம்- நந்திதேவனுடைய மாளிகையில் விருந்தினர்களுக்காக இந்த பசு மாமிசங்களை சமைப்பதற்கு இரண்டாயிரம் சமையற்காரர்கள் இருந்தார்கள் .ஆயினும் பிராமாண விருந்தினர்களின் கூட்டம் அளவுக்கு மீறி இருந்த காரணத்தால் , மாமிசம் குறையாக இருக்கிறபடியால் தயவு செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விருந்தினர்களைச் சமையல்காரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது .”

(ஆதாரம்- – ,துரோண பருவம் 67: 1-2 மற்றும் 17-18 &சாந்தி பருவம் 27-28 ஸ்லோகங்கள்)

2. வால்மிகி இராமயணம்- “கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனும்க்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார்-“

“ இறைச்சி உணவு மீது சீதை பெரும் ஆர்வம் காட்டி வந்தாள் என்ற விஷயத்தை யும் இந்த நூலிலுள்ள பல பாடல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. கங்கையைத் தாண்டியபோது அரிசிச் சோறும், இறைச்சியும் கங்கையாற்றுக்கு சமைத்துத் தருவதாக சீதை உறுதி தந்தாள். தன் கணவனுடன் பத்திரமாகத் திரும்பி வந்தால், ஏராளமான மதுவைத் தருவதாக வாக்குறுதி தந்தாள். தன் கணவன் அவன் சபதத்தை நிறைவேற்றி முடித்தால் ஆயிரம் பசுக்களையும், நூறு ஜாடி மதுவையும் யமுனை ஆற்றுக்குப் படையல் தருவதாக அந்த ஆற்றைக் கடக்கும்போது சீதை வேண்டிக் கொள்கிறாள்”
(ஆதாரம்- வால்முகி ராமாயணம்)

வைணவ பக்தி இயக்கத்தின் உறுதியான ஆதரவாளரான இராமானந்தரால் (பதினான்காம் நூற்றாண்டு) எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அத்யாத்ம இராமாயணத்திலும்கூட, இறைச்சி உணவின் மீது சீதை கொண்டிருந்த விருப்பம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமான தாகவே இருக்கும்
(ஆதாரம்-அத்யாத்ம இராமாயணம்)

சங்கராச்சாரியார் (சரஸ்வதி) கருத்து-

இந்துக்களின் ஜகத்குருவான சங்கரச்சாரியார் கூறுகிறார் “யாகத்தின்போது பசுக்கள் பலியிடப்பட்டதும், பின்பு பிராமணர்கள் அதனை உண்பதும் உண்மைதான் , ஆனால் உப்பு, புளி சேர்க்காமல் தேசநலனிற்காக சிறிதளவே உண்டனர்.”
(ஆதாரம்- தெய்வத்தின் குரல் புத்தகம்)

விவேகானந்தர் கருத்து-

விவேகானந்தரின் கருத்து- “ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக் கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக் கறி உணவை சமைத்தார்கள்.”
(ஆதாரம்- விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9)

“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu who does not eat beef) – (ஆதாரம்-தொகுதி-3-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்’பில் பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை)

மகாத்மா காந்தியின் கருத்து- .

மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆசாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சித் தேநீர் குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார்.
(ஆதாரம்-“புனிதப் பசுவின் புராணம்)
பிற இந்துமதப் பெரியோர்கள்-
. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.

மாற்றம்-

இவ்வாறு இந்துமதத்தின் மிக முக்கிய அங்கமாகவிருந்த மாட்டிறைச்சி உணவு பவுத்த,சமண மதங்களின் செல்வாக்கினாலேயே குறைந்துபோனது. சமணர்களை கழுவேற்றி, பவுத்தத்தையும் இந்தியாவினை விட்டுத்துரத்தியபோதே இந்துமதத்தில் மாட்டிறைச்சி தவிர்க்கப்பட்டது. இன்று இதனை அரசியலாக்கி தனிமனிதனின் உணவுப்பழக்கம்வரை தமது மதவாதத்தினை நீட்டுவது ஒரு வெறுப்பு அரசியலேயன்றி வேறில்லை.

Exit mobile version