சுத்தமாக்குதல் என்பது மக்கள் மத்தியிலான கூட்டு உணர்வைச் சார்ந்தது. மூடப்பட்ட அறைகளுக்குள் தனிமனித உணர்வை மட்டுமே முக்கியத்துவப்படுத்தும் பல்தேசிய வியாபாரத் தந்திரம் இன்று உலகமயமாகியுள்ளது. மனித நேயம், மற்றவர்கள் தொடர்பான அக்கறை போன்ற அனைத்தும் வேரறுக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் கொடுர முகம் மோடியின் ஊடாக வெளிப்படுகிறது.
இயற்கையை மாசுபடுத்தும் சகல பல்தேசிய நிறுவனங்களையும் இந்தியாவிற்குள் வரவிட்டு, உள்ளூர் சிறு வியாபாரிகள்ட வயித்தில அடிச்சு, அணு உலைக்கழிவு, இரசாயனகழிவு என சகல கழிவுகளையும் நாட்டுக்குள்ள கொட்டவிட்டுட்டு கொலைகார கொள்ளை கூட்ட அரசியல்வாதிகளோட சேர்ந்து சும்மா படம் காட்டி ஒரு நாள் சுத்தப்படுத்தினா மட்டும் இந்தியா சுத்தமாகிடும? ஒருபோதும் சுத்தமாகாது!!
இந்தியாவைச் சுத்தமாக்க மோடி நிர்ணையித்த அதே நாளில் மோடியை ஆட்சிக்குக் கொண்டுவந்த காப்ரட்கள் எத்தனை கொள்கலன் நீரை மாசுபடுத்தியிருக்கும். ஓசோன் படலத்தில் எத்தனை ஓட்டைகளை ஏற்படுத்தியிருக்கும். நீரையும், சுற்றுச் சுழலையும், காற்றையும், ஏன் அப்பாவி மக்களின் வீட்டு முற்றங்களையும் அழுக்காக்கியிருக்கும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமது வீடுகளை ஐந்து நட்சத்திர விடுதிகள் போல சுத்தமாக வைத்திருப்பதற்காக இந்திய பண்பாட்டையும் கலையையும் அழுக்காக்கும் சல்மான் கான் போன்ற காப்ரட் கூத்தாடிகளை களமிறக்கி சுத்தம் பற்றிப் பேசும் மோடியின் அழுக்கு குமட்டலை ஏற்படுத்துகிறது.
மோடி முதல்ல தான் செய்த கொலைகுற்றங்களை, கொள்ளைகளை ஏற்று பதவி விலகுவதுடன், தனது சக கொலைகார, கொள்ளைக்கார அமைச்சர்களை பதவி விலக்கி சட்டத்தின் படி தண்டனைகளை ஏற்று முதலில் ஜனநாயகத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன் இந்த சுத்தமான இந்தியா பணியை தொடங்க வேண்டும்.
கழிவுகளை மீள் சுழற்சி முறையில் எவ்வாறு மீள பயன்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்வதுடன், கழிவுகளை சூழலுக்கு அதிகமாக வெளியிடும் தொழில் துறைகளை தடை செஞ்சு, குப்பை அகற்றும் துறையை எந்த ஊழலும் இல்லாம நடத்தி, ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கும் குப்பையை குப்பை தொட்டிக்குள்ள போட சொல்லிகுடுப்பதில் இருந்து இதனை செயற்படுத்த தொடங்கினால் மாற்றங்கள் கிடைக்கும்.
இவை எல்லாவற்றிற்கும் முதல் கூட்டுணர்வும் உற்பத்தி சாதனங்களை மக்கள் உடமையாக்கும் அரசும் உருவாக வேண்டும்.
உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அன்னியர்களின் உடமையாக்க அனுமதித்துவிட்டு அதற்குரிய கமிஷனை மட்டுமே வாங்கி வாழப் பழகிக்கொள்ளும் இந்திய அதிகாரவர்க்கமே இந்தியாவின் அழுக்கு. இவை சமூகத்தின் கூட்டுணர்வை அழித்து ஒவ்வொரு தனி மனிதனையும் தனிமைப்படுத்தி, இந்தியாவின் கலாச்சார விழுமியங்களையே மாற்றியுள்ளனர். எஞ்சியிருந்த மனிதாபிமானம் மதவெறியால் பிரதியிடப்படுகின்றது. இவற்றை எதிகொள்ள மக்களை அணி திரட்டுவதும் சமூகத்தை மாற்றுவதுமே இந்தியாவைச் சுத்தப்படுத்துவதற்கான ஆரம்பப் புள்ளி.