Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆயுதப் போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் – சில அடிப்படைகள்

Velupillai_Prabhakaran-picஉலகில் வெற்றியடைந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டங்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கிய போராட்டம் பல படிப்பினைகளை விட்டுச் சென்றுள்ளது. மக்கள் இராணுவமான செஞ்சேனையின் உறுப்பினர்களுக்கு அடிப்படை விதிமுறைகள் காணப்பட்டன. செஞ்சேனை மக்கள் இராணுவமாகச் செயலாற்ற இவை இன்றியமையாதவையாகின, முதல் பத்து ஒழுங்கு விதிகள்:

1. கட்டளைக்கு உடனடியாகக் கீழ்ப்படிதல், ஏழை விவசாயிகளிடமிருந்து எவ்வித பொருளையும் பறிமுதல் செய்யக்கூடாது,

2. நிலப்பிரபுக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, அவற்றை விநியோகம் செய்வதற்காக அரசாங்கத்திடம் உடனடியாக, நேரடியாக ஒப்படைத்தல்

3. ஒரு வீட்டைவிட்டு வெளியேறும்போது அதன் கதவுகளை மீளவும் அங்கேயே வைத்துவிடுங்கள் (இந்த விதி வெளிப்படையாகத் தோற்றமளிக்குமளவுக்கு ஒரு சாதாரணமான விடயமல்ல@ ஒரு சீன வீட்டின் மரக்கதவுகளை இலகுவாக கழற்றி எடுக்கப்படக்கூடியவை. அவை பெரும்பாலும் இரவு வேளைகளில் கழற்றப்பட்டு மர அடிப்பாளங்களு மேல் வைக்கப்பட்டு தற்காலிகப்படுக்கைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன)

4. படுத்ததிருந்த வைக்கோல் பாயை சுற்றி மடித்து திருப்பவும் உரியாளர்களிடம் கையளியுங்கள்.

5. மக்களிடம் கௌரவமாகவும் அடக்கமாகவும் நடந்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

6. கடடனாக வாங்கிய அனைத்துப் பொருட்களையும் மீளளியுங்கள்.

7. சேதமடைந்த பொருட்களுக்குப் பதிலாக மாற்றீடு செய்யுங்கள்.

8. விவசாயிகளுடனான அனைத்துக் கொடுக்கல் வாங்களிலும் நேர்மையைக் கடைப்பிடிங்கள்

9. கொள்முதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் விலையைப் பணமாகச் செலுத்துங்கள்.

10. சுகாதாரப் பேணுங்கள், பொதுமக்களின் வீடுகளிலிருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தில் மலகூடங்களைக் கட்டுங்கள்.
செஞ்சேனையில் தந்திரோபாயங்கள், அந்த இயக்கத்தின் அரசியல் அடிப்படைகளை விட, அதன் வெற்றிகரமான இராணுவ அபிவிருத்தியையும் விளக்குவதாக இருந்தன. சிங்காஞ்சானில் 4 சுலோகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. செஞ்சேனையின் வளர்ச்சிப் பயணத்துக்கு ஊன்றுகோலாக அமைந்த போராளிகள் யுத்த முறைகளை விளக்குபவை இந்த சுலோகங்கள் அமைந்திருந்தன.

1. எதிரி முன்னேறும்போது நாங்கள் பின் வாங்குவோம்!

2. எதிரி தனது முன்னேற்றத்தை நிறுத்தி அவ்விடத்தே முகாமிடுகின்றபோது அவனுக்குத்
தொல்லை கொடுக்கின்றோம்.

3. எதிரி ஒரு சமரைத் தடுத்துக் கொள்ள முயன்றால் நாம் அவன் மீது தாக்குதலை
மேற்கொள்கிறோம்.

4. எதிரி பின்வாங்கத் தொடங்கினால் நாம் அவனைப் பின் தொடர்பின்றோம்.

இந்த சுலோகங்கள் ஆரம்பத்தில் பல அனுபவம் வாய்ந்த இராணுவத்தினால் எதிர்ப்புக்குள்ளானது. இவற்றில் முன்மொழியப்பட்டுள்ளன தத்திரோபாய முறைகளை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பல அனுபவங்களை இந்தத் தந்திரோபாயங்களிலிருந்து பொதுவாக செஞ்சேனை மாறுபடும் போதெல்லாம் அது தோல்வியே தழுவியது

ஈழத்தில் 30 வருடங்கள் இயக்கங்களின் இராணுவம் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இராணுவத்தால் நடத்தப்பட்ட யுத்தத்தை ஏகாதிபத்திய நாடுகளும் இலங்கை அரசும் இணைந்து அழித்தன. போராட்டம் அழிக்கப்பட்டு அது நீண்டகாலத்திற்குப் பிந்தள்ளப்பட்டதற்கு எதிரியின் பலம் மட்டுமல்ல எமது பலவீனங்களும் காரணம். சீன மக்கள் யுத்தத்தின் மேற்குறித்த சில குறைந்தபட்ச முழக்கங்களை எமது போராட்டத்துடன் ஒப்பு நோக்குதல் இன்றைய காலத்தின் கட்டாய  தேவை.

Exit mobile version