கடந்த காலங்களில் குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளில் அதிகார ஆளும் அரசாங்கங்கள் சுரண்டப்படும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்களுடைய அதிருப்தியை மதம்சார்ந்த வகுப்புவாத போட்டிகளாகவும், மோதல்களாகவும் மாற்றுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு மதவாத அமைப்புக்களுக்கு நிதி அளித்து ஆதரித்து வந்துள்ளன.
தாழ்த்தப்பட்டோரைத் தலித் அடையாளமிட்டு அவர்களை ஒருங்கிணைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப்போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தும் நோக்கோடு தலித் அமைப்புக்களுக்கு அரசு சாரா நிறுவனங்கள் என்ற வகையில் பணம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அதிக பணத்தைப் பெறும் அரசு சாரா நிறுவனமாகக் கருத்தப்படுவது விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து மத வெறி அமைப்பு.
2000 ஆம் ஆண்டின் பின்னான புதிய மூன்று தசாப்தங்களும், அதாவது 2030 வரையான காலப்பகுதி வரைக்கும் மக்கள் போராட்டங்களுக்கான காலப்பகுதி என அமரிக்க உளவுத்துறை ஆராய்ச்சி மையம் கூட ஒத்துக்கொள்கிறது. இந்தக் காலப்பகுதியில் இப் போராட்டங்களை எதிர்கொள்வதற்கான முதன்மையான தந்திரோபாயங்களில் ஒன்றாக அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன.
30 ஆயிரம் அப்பாவிகள் வரை போபால் நச்சுவாயுக் கசிவில் கொல்லப்பட்ட பின்னர் இந்திய அமரிக்க அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்ட சக்திகளின் பின்னார் அணிதிரள ஆரம்பித்தனர். இவர்களின் போராட்டங்களைப் பொறுப்பெடுத்துக்கொண்ட தன்னார்வ நிறுவனங்கள் சிறிய அளவிலான போராட்டங்களை ஆங்காங்கே நடத்தி மக்களின் உணர்வுகளைத் தணித்தன. இறுத்தியில் போபால் வாயுக் கசிவிற்குப் பொறுப்பானவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு மக்களும் உரிய நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆரம்பத்தில் அங்கிருந்த தன்னார்வ நிறுவனங்கள் அனைத்தும் அரசியலில் தலையிடுவது தமது கடமையல்ல எனக் கூறிப் பின்வாங்கிவிட்டனர்.
ஏன் இன்று இலங்கையில் உள்ள அந்நியநிதி உதவியால் செயற்படும் அரசுசாராத அமைப்புகள் எனப்படுவன மறைமுகமாக துயரம் விளைவிக்கும் அமைப்பு வடிவங்கள்தான். அவை பெரும் முற்போக்கான அமைப்புகள் போலநடிக்கும், ஆனால் இருக்கும் சமூக நிலைக்கு எதிரான சக்திகளை கலைக்க செயற்படும் இந்த வகை அமைப்புக்கள் உலகம் முழுக்க குறிப்பாக பின்தங்கிய நாடுகளில் பெருமளவு அதிகரித்துள்ளன. இன்று நாம் அனைத்து போராட்ட சக்திகளிலும், அனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகள் மத்தியிலும் அவற்றை நாம் எதிர்கொள்வதால் அவற்றின் பாத்திரத்தை புரிந்துகொள்வது மிக மிக அவசியமாகின்றது.
என்ற அமைப்பு மட்டும் தான் இலங்கை அரசிற்கு எதிராக பேசிவருகின்ற அமைப்பு. ஜேர்மனிய அரசின் பணக் பணத்தில் இயங்கும் இவ்வமைப்பு இலங்கை அரசின் ஊழல் குறித்துப் பேசுகின்ற அளவிற்கு அதன் போர்க்குற்றங்கள், பேரினவாத அரசியல் ஆகியன குறித்துப் பேசுவதில்லை.
சமூக உணர்வுள்ள பல படித்த இளையோர் இவ்வமைப்புக்களை நோக்கி உள்வாங்கப்படுகின்றனர். அவர்கள் போராடுவதற்குப் பதில் சமூக சேவை என்ற பெயரில் இவ்வமைப்புக்க்ளோடு இணைந்து கொள்கின்றனர். மக்கள் சார்ந்த எதிர்ப்பியக்கங்கள் குறித்துச் சிந்திக்க கல்வியறிவுடைய யாரும் முன்வருவதில்லை. அவர்களெல்லாம் இவ்வமைப்புக்களில் இணைந்து தமது தனிப்பட்ட வாழ்க்கையை ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் ஆடம்பர உலக நகரங்களிடும் செலவிடும் நிலைக்கு வந்துவிடுகின்ரனர்.
பல அமைப்புக்கள் பல குறிப்பான பிரச்சினைகளில் மக்களை நேர்மையாக திரட்டுகின்றன. ஆனால் இந்த அரசுசார்பில்லாத என்று சொல்கின்ற அரசுசார்ந்த அமைப்புகள் எம் மக்களின் உரிமைக்கான போராட்ட சக்திகளை போராட்டதிலிருந்து சுய உதவிப் பொருளாதார நடவடிக்கைக்கு திசை திருப்ப உணர்வுபூர்வமாச் செயல்படுகின்றன. பின் அதிகார அரசாங்கத்தின் தரகர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மூலம் பரவலாக இவர்களுக்காக பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இன்று வடக்கு கிழக்கில் உள்ள பாதிக்கும் உட்பட்ட மக்களுக்கும் ஏன் மனிதகுலத்துக்குமே பெரிய சேவை செய்வதாக தனிநபர்கள் புகழாரம் சூட்டப்படுகின்றனர். இவை அடிமட்டத்தில் சமூகக்கூறில் இது என்ன உண்மையான விளைவை ஏற்படுத்துகின்றது என்பதை பொருத்தம் இல்லாத வகையில் ஊதிப் பெருப்பித்துக்காட்டுகின்றனர்.
மேற்கு நாடுகள் அறிமுகப்படுத்திய இந்த அடக்குமுறை கருத்தியலை, இன்று ஒடுக்கும் அரசுகள் நேரடியாகவே உள்வாங்கிக் கொண்டு செயற்படுத்துகின்றன. குறிப்பாக இலங்கையில் இது மிகத் தீவிரமாகவே நடைபெறுகிறது.
தன்னார்வ நிறுவனங்கள் குறித்து புகழ் பெற்ற நூலை எழுதிய சசங்க குணத்திலக என்பவர் இன்று மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர். இவரின் ஆலோசனையின் பேரில் புலம் பெயர் நாடுகளில் வாழும் அரசியல் வியாபாரிகளும், முன்னை நாள் புலிகளின் ஆதரவாளர்களும் இலங்கை அரசின் தன்னார்வ நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படுகின்றனர். இவர்களுக்கு இலங்கை அரசின் பெருந்தொகைப் பணமும் சலுகைகளும் கிடைக்கும் அதே வேளை புலம் பெயர் நாடுகளிலும் பணம் திரட்டிக்கொள்கின்றனர்.
தேசம் நெட் ஆசிரியர்களில் ஒருவரும் மகிந்த அரசின் ஆசிபெற்ரவருமான கொன்ச்டன்டைன்(Littte Aid,) மற்றும் முன்னைனாள் சர்வதேசியக் குற்ரவாளி கே.பி(Nerdo) ஆகியோர் நிறுவியிருக்கும் தன்னார்வ நிறுவனங்கள் இவற்றிற்கு நல்ல உதாரணங்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள்குடும்பம், பொதுமக்கள், மேலும் அனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளிலுமுள்ள உண்மையான அக்கறை கொண்ட மக்கள் போன்றோர்களிலிருந்து அறிவு ஜீவிகள் கொண்ட ஒரு பெரியகூட்டம் இவ்வாறு உருவாக்கப்படுகின்றது. இவர்கள் மூலம் இந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திட்டவட்டமான நன்மைகளை அளிக்கும் சில உண்மையான வளர்ச்சிப்பணிகளில் சில ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை நம்புமாறு செய்யப்படுகின்றது.
இயல்பாகவே பாதிக்கப்பட்ட மக்களின் பால் அக்கறைகொண்ட இந்த அறிவுஜீவிகளின் பிரிவுகள் எம் மக்களின் உரிமையின்பால் அக்கறை கண்டு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய ஆற்றல்மிக்க சக்திகள், முன்னால் போராளிகள், பொறுப்பாளர்கள் போன்றவர்கள் எல்லோரையும் இந்தப்பிரிவினர்கள் திட்டமிட்ட முறையில் இந்த நிறுவனங்களில் உள்வாங்குகின்றனர்.
இந்த தன்னார்வு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பலர் நேர்மையானவர்களாகவும், உண்மையான சமூக சேவகர்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்த நிறுவனங்கள் வேறு நோக்கத்திற்க்காகவும் வேலை செய்கின்றன என்பதை இவர்கள் உணர்வார்களா என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த தன்னார்வு நிறுவனங்கள் ஆர்வம் மிக்க போராளிகள், புரட்சியாளர்கள், சமூக ஆவலர்கள் போன்றவர்களை அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுடைய இயல்பான சமூக உணர்வுகளையும், அடிமட்டமக்கள் மேல் கொண்ட இயல்பான உணர்வையும் இவர்கள் சூழல் வெப்பம்மடைதல், பூமியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுதல், அடிமட்டமக்கள் பற்றிய ஆய்வுகள், கட்டுரைகள், ஆன்மிகம், மனஅமைதி என்ற குறுகிய வட்டத்திற்கான திட்டங்களை தீட்டி அவர்களை செயலிழக்க வைக்கின்றார்கள். இதற்காகவே இந்த அரசு சார்பு இல்லாத என்று சொல்கின்ற அரசு சார்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வேலை செய்கின்றன.
இருந்தும் இப்போதைய அரசின் மீது அவர்களுடைய அதிருப்தியை காட்டுகின்றார்கள். ஆனால் அதை எதிர்த்து போராடுவதில்லை. அதிகபட்சம் அதிலிருந்து விலகி நிற்கின்றார்கள். அனைத்து வகையான வன்முறைகளும் மோசமானவை என்ற போலியான கருத்தை அடிப்படையாக வைத்து உடைமையாளர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலுள்ள உண்மையான போராட்டத்தில் இவர்கள் நடுநிலைமை வகிக்கின்றார்கள். ஏன் சிலவேளை அரசாங்கத்தை எதிர்க்கும் அவர்கள் அதற்கு எதிரான கருத்தையோ, அல்லது முற்போக்கான ஒன்றை நிறுவுவதன் அவசியத்தையோ பார்ப்பதில்லை. ஆகவேதான் எம் சமூகக்கூறுகள் அளிக்கப்படுகின்றன என்பதை பார்க்காமல் இருக்கின்றார்கள். மேலும் இந்த நிறுவனங்களுக்காக வக்காலத்து வாங்குகின்றார்கள்.
எல்லாவற்றிற்க்கும் மேலாக இந்த நிறுவனங்களிலிருந்து அவர்கள் ஏராளமான நிதிகளை பெறுவதால் அதன் நலன்களோடு மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய பணிகள் உடனடியுதவி போலிருந்தாலும் நீண்டகாலத்துக்கு பலவழிகளில் சீர்குலைவை ஏற்படுத்தும் என்பதை பார்க்கவேண்டும். அதாவது:
1 ) போராட்டத்தை தவிர்ப்பதை அவர்கள் மிகவும் முக்கியமாகப் பார்க்கின்றார்கள். மருத்துவமனைகள், பாடசாலைகள், தொழில்பயிற்சி கூடங்கள், நுன்கடன் திட்டங்கள், சிறு உற்பத்திமையங்கள் போன்றவற்றை நடத்தும் வளர்ச்சிப்பணிகளில் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். அதாவது அரசாங்கத்தால் வேண்டப்படும் அனைத்து வேலைகளையும் இந்த நிறுவனங்கள் செய்கின்றன.
அநீதிக்கு எதிராக மக்களை வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்த உள்ளூர் செயல்வீரர்களும், புலம்பெயர் நாட்டு ஆவலர்களும் இந்த திட்டங்களாலும், வளர்ச்சித் திட்டங்களாலும் ஈர்க்கப்படுகின்றனர். அதற்கு சம்பளமும் கொடுக்கப்படுகின்றது. இந்த வகையில் அவர்களது போராட்டகுணம் அழிக்கப்படுகின்றது.
அவர்களது அடிப்படையான உரிமைப்பிரச்சனையின் முயற்சி திசை திருப்பப்படுகின்றது. இந்த சிறந்த பண்புகொண்ட மனிதர்கள் இவ்வாறு மந்தப்படுவதால் மக்கள் மத்தியில் எம்மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினமான செயலாக மாறிவிடுகின்றது. இதை இப்போது புலம் பெயர் நாடுகளில் அதிகம் பார்க்கலாம்.
2 )இந்த நிறுவனங்களின் வளர்ச்சி நடவடிக்கைகள் உலகநாடுகளின் வியாபாரத்துக்கு உதவியாக உள்ளன. இவர்களது முதலீடுகளாலும், சிறு வியாபாரங்களாலும் அழிவினால் வறுமையான, நலிந்த மக்கள் மத்தியில் சிறு உற்பத்தி மற்றும் கடன் பொருளாதாரம் சிறுசிறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும் இவ் நிறுவனங்கள் உலகவங்கி அல்லது அரசுடன் சேர்ந்து அவர்களின் திட்டங்களை நேரடியாக நடைமுறைப்படுத்துகின்றன.
3) இலங்கை அரசு புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்களைத் தனது வட்டத்திற்குள் கொண்டு வரவும், அவர்களிடமிருந்து உருவாகும் எதிர்ப்புக்களை மழுங்கடிக்கவும் தன்னார்வ நிறுவனங்களைப் பயன்படுத்தி வருகின்றன. தவிறவும், புலம் பெயர் மக்கள் மத்தியில் அரசினூடாக மட்டுமே உதவிகள் வழங்க முடியும் என்ற கருத்தைப் பரவலாக்கி அரச செல்வாக்கில் இயங்கும் நிறுவனங்களை நோக்கி மக்களை உள்வாங்க முனைகின்றன.
ஆனால் இவர்களை மக்களின் உரிமையை நோக்கி போராட வைக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். ஆகவே இன்றைய கால கட்டடத்தில் அரசு உதவுயுடன் இயங்கும் அரசு சார்பில்லாத நிறுவனங்கள் பற்றி முழுமையான தேடலும் அவதானமும் எங்கள் மத்தியில் ஒரு தேவையான விடயமாகின்றது.