உலகசமானத்துக்கு முன்நின்று உழைக்கும், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அனுசரணையாளராகப் பணிபுரிந்தநாடு நோர்வே என்பதை அனைவரும் அறிவர். சொண்டில் செண்டு கொண்டுதிரியும் சமானானப்புறா இவர்களின் தோழில்தான் அமர்ந்திருக்கிறதுதோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளை உலகிலேயே இராணுவத்தளபாட தொழில்நுட்பத்தில் மிக மிகத் தலைசிறந்த முதலாவதுநாடு நோர்வே என்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டதை யார் அறிவார். தாங்கிகளுக்கான லாசர் ஏவுகளைத் தொழில்நுட்பத்தில் ஒரு சாதனையே படைத்தவர்கள் இவர்கள். ஏவுகணையின் நுணிப்பக்கத்தில் அமைந்திருக்கம் கணிப்பியை துல்லிதமாக வடிவமைத்து குறிகளைத் தவறாது கண்டறிந்து அழிக்கும் தொழில்நுட்பச்சாதனையாளர்களும் இவர்களே.
40வருடகாலமாகப் பாவித்துவந்து பீரங்கிகளான எம் 109 அட்லறிகளுக்கு மாற்றீடாக அச்சர்வகைப் பீரங்கிகளை இன்று நோர்வே வடக்குக்கு எடுத்துச் சென்று பரீட்சிக்கிறது.
பழை இப்பீரங்கிகள் பட்டியில் ஓடுவதால் அதை எடுத்துச் செல்வதற்கு பாரஊர்திகள் தேவைப்படும். அவை அசைவுதிறன் குறைந்தவையே. இது அப்படி அல்ல. இலகுவாக இடம்மாற்றக்கூடியவாறு பாரவூர்திப் பண்புடைய வாகனத்திலே பொருத்தப்பட்டுள்ளது. 50மைல்களுக்கு எந்தவித பிரச்சனையும் இன்றி இடம்மாற்றவல்லது. இதனுடைய நீளம் 8மீற்றர்கள் மாத்திரமே. ஆனால் 60கி.மீற்றர்களுக்கு அப்பால் 155 மிமி நீளமுடைய கினைட்டுக்களை ஜீபிஎஸ் இன் உதவியுடன் எறியவல்லது. அச்சர்வகை கட்டமைப்புக் கொண்ட பீரங்கிவகைகள் தீச்சுவாலை அட்லறிகள் என்றே அழைக்கப்படும். இந்த அச்சர்வகை பீரங்கிகளை அயல்நாடான சுவீடனும் தற்போதுதான் பயிற்சிக்கு உள்ளமர்த்தியுள்ளது.
இதுதான் உலகிலேயே முதன் முதலான சுயமாகத்தானியங்கி குறிகளைத் துல்லிதமாகக் கண்டறிந்து தாக்கும் பீரங்கிகள் ஆகும். எந்தவிதான களநிலைக்கும் தாக்குபிடிக்கும் தன்மைகளையும், அலகுகளையும் கொண்டது. இந்தப்பீரங்கிகளுடன் ஒப்பிடும் போது பட்டியில் இயங்கும் பீரங்கிகள் அசையும் வேகம் மிக மிகக்குறைவானதே. எம் 109இரப்பீரங்கிகள் குளிர்கூடிய பனிக்காலங்களில் பிரச்சனை தரக்கூடியது, ஆனால் இவை காலநிலையிலும் சரியானமுறையிலும் இலகுவாக இடம்மாற்றக்கூடிய வகையிலுமே அமைக்கப்பட்டுள்ளன. பீரங்கிமுனையும் அதைத்தாங்கும் உடலும் பின்புறமாக அமைந்தாலும் வாகனத்தை விட உயரமாகவும், பின்புற உதைப்பைத் தாங்கவல்லதாகவும் அமைக்கப்பட்டதால் ஊர்திக்கு எந்தவித பாதிப்பையோ தாக்கத்தையோ கொடுக்காதவாறு அதன் உடலமைப்புக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வாகனம் நிறுத்தப்பட்டு 30செக்கன்களில் கிரனைட்டுக்களையோ ரொக்கட்டுக்களையோ எறியவல்லது.
இதில் மேலும் சுடுதிசைமாற்றி, வெடிமருந்துகளின் வெப்பநிலை அளவீடு, கிரனைட்டுக்களோ, ரொக்கட்டுக்களோ புறப்பட்டுச் செல்லும் ஆரம்பவேகம் என்பன சரியாக அளந்து காட்டும் இலத்தின் அமைப்பு சிறப்பாக இதற்கு அமைக்கப்பட்டுள்ளது. சுடுதிசைமாற்றி கிரனைட்டுக்களை எறியும் திசைமாற்றும் கட்டுமைப்பை பி எம் எஸ் ஆட்டிலறி ஊடின் என்பர். இது நோவேயிலுள்ள கொங்சிவிங்கர் ஆயுதத்தொழிற்சாலையிலேயே தாயாரிக்கப்பட்டது. இந்த பிஎம்எஸ் தொகுதியினுள் கட்டளைக்கருவிகள், அவதானிக்கும் கருவிகள், கொமாண்டே அமைவிடம், ஆயுதங்கள் அனைத்தும் உள்னுளைவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பீரங்கியின் கூரைப்பகுதியில் ஆர் டபிள்யூ எஸ் எனும் தொலையியக்கு கருவி (பீரங்கிக்குள் ஆள் இன்றி) பொருத்தப்பட்டமையால் இந்தப்பீரங்கியை தொலையியக்கு ஆளிகளால் (ரிமோட் கொன்றோல்) இயக்கலாம். இது அர்ச்சர் பீரங்கிகளின் கௌரவத்தை நிலைநிறுத்தும் வகையில் போர்பொஸ்சால் கட்டமைக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலையானது அமெரிக்காவின் ரைத்தனோன் தொழிற்சாலையுடன் சேர்ந்து கடசி 10வருடங்களாக எக்ஸ்கலிபர் அமினிசன்களைத் தாயாரித்துவருகிறது. மரபுவளி பீரங்கிகள் அதிகூடிய தூரத்தாக்கு இலக்கு 18கி.மீ மட்டுமே என்பது கருத்தில் கொள்ளவேண்டியது. அச்சர் அட்லறிகளோ 60கிமீ தூரத்தாக்கு திறன் கொண்டவை.
ஆப்கானிஸ்தானில் பாவிக்கப்பட்ட எக்ஸ்கலிபர் அமினிசனை கீழே காண்க:
சமாதானப்புறாவை ஒருதோழில் காவும் நோர்வே மறுதோழில் கொலைக்கருவிகளையும், அதைத்தயாரிப்பதில் வல்லமையையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. அகிம்சையை “உலகிற்கே தந்த”, “அகிம்சா மூர்த்தியின்” தேசம் படுமோசான கொலைக்கருவிகளை மலிவாகத் தயாரிக்கும் நாடாக மாறியுள்ளது. அமைதி என்பது ஆயுதங்களின், ஆயுதத்தொழில்நுட்பங்களின் வல்லமையில்தான் தங்கியுள்ளதா?
கீழுள்ள காணொளியைக் காண்க.