Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க இராணுவம் இலங்கையில் மீட்ப்புப்பணி?

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான சர்வதேசிய நாடுகளின் அரசியலில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் அகோர யுத்தத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லன. இந்தியாவின் முரண்படும் அறிக்கைகள், பிரித்தானியாவினதும் அமரிக்க சார் நாடுகளதும் புதிய நகர்வுகள், இலங்கை அரசின் மாற்றமடையும் சார்பு நிலை என்பன ஏற்படுத்த்விருக்கும் இம் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகள் அவசியமானதாகும். இந்த சூழ் நிலையில் இலங்கை அரச சார்புப் பத்திரிகையான சண்டே ரைம்சில் வெள்யாகியிருக்கும் பின் வரும் செய்தி ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. 

வன்னியில் போருள் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்பதற்காக, உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளின் அமரிக்கா தலைமையிலான மனிதாபிமான நடவடிக்கை இப்போது ஒரு வடிவத்திற்கு வந்துள்ளது.
ஹவாயில் த்லைமையகத்தைக் கொண்டுள்ள United States Pacific Command (US PACOM) என்ற அமைப்பின் உயர்மட்டக்குழு இந்ந்டவடிக்கை தொடர்பாக கொழும்பில் நிலைகொண்டுள்ளது. அமரிக்க ராணுவத் தளபாடங்களையும் இந்த நடவடிக்கை உள்ளடிக்கியதாக அமையும் எனத் தெரியவருகிறது.
வட்-கிழக்கு கடலை அண்மித்த பிரதேசங்களிலிருந்து ஆழ்கடலில் நிறுத்தப்படும் கப்பல்களை நோக்கி மக்களின் நகர்வை நோக்கமாகக் கொண்டு இதனை இலகுபடுத்தும் நோக்கில் மட்டுமே இந்ந்தடவடிக்கை அமையும் எனத்தெரிய வருகிறது.
ஐ.டி.பி நிலையங்களையும் மருத்துவ மனைகளையும் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியில் இடமாற்றம் செய்வதே இதன் நோக்கமாகும்.”இணை மனிதாபிமான நடவடிக்கைப் படை”(“coalition humanitarian task force”) தொடர்பாக கருத்தளித்த வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம, இது எப்போது அமைக்கப்படும் என்பதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றார்.

உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளிடம் தனித்தனியான அடிப்படையில் பேசிக்கொண்டிருப்பதாகத் என மேலும் தெரிவித்த அவர், பொதுமக்களை மீட்பது தொடர்பாக ஏனைய நட்பு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகக் கூறினார். நட்பு நாடுகளின் கூற்றுப்படி, அவர்கள் எப்போதுமே இலங்கை அரசின் மேற்பார்வையுடன் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் நேரடியக தமது கொடிகளுடன், செயர்படுவதையே விரும்புவதாகத் தெரிவிக்கின்றனர். இவ்வாறான முன்மொழிவொன்றை இந்தியா முன்வைத்துள்ளது. இது தொடர்பாக லோக் சபாவில், கடந்த புதன்ன்று கருத்து வெளியிட்ட இந்திய பிரதிப் பிரதமரான பிரணாப் முகர்ஜி, தமது அரசானது, படையணி உதவி உட்பட சிவிலியன்களை வெளியேற்றுவதற்கான உதவிகள் அனைத்தையும் ஏற்கனவே முன்மொழிந்திருப்பதாகக் குறிப்பிட்டார். சிறி லங்கா அரசாங்கம் நட்பு நாடொன்றின் பக்கத்திலிருந்து வழங்கப்படும் உதவி என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசானது மனிதாபிமான நடவடிக்கைகளைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், பொதுமக்களை வெளியேற்றும் இந்த நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என உடனடியாகத் தெளிவின்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏஞ்சிய பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துவதற்கான இராணுவ நடவடிக்கைகளை இலங்கை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அனைத்தும் இதனைச் சார்ந்ததாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படை நடவடிக்கைகளை இறுதியாக்குவதும், ஒருங்கிணைப்பதும் இன்னொரு விடயமாகும்.

அமரிக்கா, நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் ஆரம்ப தடங்கல்களைச் சந்திதுள்ளதாக சன்டே டைம்ஸ் இற்குத் தெரிய வருகிறது. தாம் கட்டுப்பாட்டுள் வைத்துள்ள மிகச்சிறிய பகுதிக்குளிருந்து பொதுமக்களின் நகர்வை அனுமதிப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். எனினும் மேலதிக தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிவிலியன்களின் பாதுகாப்பு மீதான உதவி வழங்கும் நாடுகளினதும் ஏனைய நாடுகளினதும் அக்கறை, புலிகளின் நிராகரிப்பு என்பன புலிகளின் தடையை எதிர் கொள்ளாமல் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் நிலைக்குத் அரசாங்கம் தள்ளப்படும் என சண்டே ரைம்சிற்கு தெரிய வருகிறது.

எவ்வாறாயினும், உயர்மட்டப் பாதுகாப்பு வட்டாரங்களின் கருத்துப்படி இவ்வாறான நடவடிக்கை களநிலைமைகளை நெருக்கமாக அவதானித்த பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களில் படைகள் மேலதிகமான எல்லைகளைக் கைப்பற்றியுள்ளன. கெரிலாத் தாக்குதல்களின் மையமாகத் தொழிற்படும் புதுக்குடியிருப்பைச் சில தினங்களில் கைப்பற்றிவிடலாம் என பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் இலங்கைக்கு எதிரான நகர்வு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நேரத்தின் போது மெக்சிக்கோவின் முன்னய பிரேரணைக்கு பிரித்தானியா ஆதரவு வழங்கியது. ஐக்கிய நாடுகளுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் சோவர்ஸ், நியூ யோர்க் இன்னர் சிட்டி பிரஸ் இற்குக் கருத்துத் தெரிவித்த போது, பிரித்தானிய அரசு, இலங்கை தொடர்பான விவாதம் ஒன்றைக் கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version