உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றியும், அதனால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அமைதியின்மை பற்றியும் முதலாளிகளுக்கும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள புரட்சியைப் பற்றிய உணர்வில் ஒரு சிறு பகுதி கூட, தொழிலாளர்களிடமும் தொழிலாளர் இயக்கங்களிலும் எற்படாமல் இருப்பது மிகவும் வேதனைக்கு¡ரியது.
உலக நிதி நிறுவனத்தின் (International Monetary Fund – IMF)
மக்களிடையே இப்பொழுது ஏற்பட்டு இருக்கும் ஏற்றத் தாழ்வு பொருளாதார வளர்ச்சிக்கு அனுகூலமாக இல்லை என்றும் உலக நிதி நிறுவனம் இதைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது என்றும் பொருளாதார நெருக்கடியல் இருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைப் போலவே வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வேலையில்லாத் திண்டாட்டம் நிலையாக இருந்தால் தான், முதலாளிகள் உழைக்கும் வர்க்கத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அப்படி இருக்கும் போது வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க வேண்டும் என்று உலக நிதி நிறுவன மேலாண்மை இயக்குநர் கூற வேண்டியுள்ளது என்றால் முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும் இன்றைய பொருளாதார சூழ்நிலையைப் பற்றியும் அது எங்கே புரட்சிக்கு இட்டுச் சென்று விடுமோ என்றும் எவ்வளவு தூரம் அரண்டு போயிருக்கிறார்கள் என்று தொரிகிறது.
ஆனால் உலகில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள், சோஷலிச உற்பத்தி முறையினால் மட்டுமே பொருளாதார நெருக்கடி இல்லாத உற்பத்தி முறையை அளிக்க முடியும் என்ற உண்மையை எடுத்துக் கூறி மக்களிடையே சாரியான தத்துவார்த நிலையை வளர்த்தெடுக்கவில்லை.
இவ்லையை யார் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்களோ தொரியவில்லை. தொழிலாளர் இயக்கங்கள் சிதறுண்டு கிடப்பது ஒரு துர்ப்பாக்கியமான சூழ்நிலை. அதிலும் ஒவ்வொரு இயக்கத்தில் உள்ளவர்களும் (புரட்சிக்கான அஸ்திவாரமே இல்லாத நிலையில்) புரட்சிக்குப் பின் தலைமை ஏற்கும் கனவில் காலத்தைக் கழித்துக் கொண்டு இருப்பது கொடுமையான வேதனையை அளிக்கிறது. இச்சூழ்நிலையே தொடர்ந்தால் உழைக்கும் வர்க்கம் விடுதலையைப் பற்றிய எண்ணத்தை மனதில் கொள்ள முடியாது.
ஆளும் வர்க்கம் வீசியெறியும் சலுகைகளில் தான் மனதைச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பார்கள்.
உழைக்கும் வர்க்க இயக்கங்கள், பொருளாதார நெருக்கடியுள்ள இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, மக்களைப் புரட்சியின் பக்கம் கொண்டு செல்லப் போகின்றனவா? அல்லது புரட்சி வேலைகளை முதலாளிகளிடம் விட்டு விட்டு, புரட்சிக்குப் பிந்தைய தலைமைக் கனவில் அண்ணாந்து பார்த்துக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கப் போகின்றனவா?