Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகம் தடுப்பதில் அரசின் கவனயீனமும், இயலாமையுமே காரணம் : மலையக சிவில் சமூகம் கண்டனம்

இலங்கையில் சிறுவருக்கு எதிரான வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதுடன் அது சமுகத்தில் பாரிய தாக்கத்தினையும், அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், பாடசாலைகள், விடுதிகள், கிராமங்கள், புகை வண்டிகள், என எல்லா இடங்களிலும் வயோதிபர், அதிபர், ஆசிரியர், பொலிஸ் அலுவலர்கள், சகோதரர், தந்தை என எல்லோரும் தமது பேத்தி, மகள், மாணவி, சகோதரி என சிறுமியர் எல்லோருக்கும் எதிராகவும் பாலியல் வல்லுறவுகளும், துஸ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளன.
கடந்த காலங்களில் பச்சிலம் பாலகியான 03 வயது சிறுமியர் தொடக்கம் 14 வயது சிறுமி தங்கல்லையில் சுமார் 25 நபர்களுக்கு மேல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை. நாவலப்பிட்டிய துஸ்பிரயோகம் (பின்பு) பொலிஸ் அதிகாரிகளினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை என சிறுவர் துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்திகள் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இன்னும் பல சம்பவங்கள் வெளிவராமலும், மறைக்கப்பட்டும் உள்ளது.
சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்கும் இடம் என நாம் நம்பும் வீடு, பாடசாலை, பொலிஸ் நிலையம் என எல்லா இடங்களிலும் துஸ்பிரயோகங்கள் மலிந்து கிடக்கின்றன. இதற்கு எதிராக அரசாங்கம் எந்தவிதமான ஆக்க பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனை தடுக்கவும் மட்டுப்படுத்தவும் போதுமான பொறிமுறை இலங்கை அரசிடம் இல்லை எனலாம். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் நன்நடத்தை பிரிவு பொலிஸ், சிறுவர் பற்றிய பொலிஸ் பிரிவு என்பன இவ்விடயத்தில் அறிக்கை விடுவதைத் தவிர வேறு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
இலங்கையில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஸ்பிரயோக குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் காணப்பட்டாலும் நடைமுறையில் முறைப்பாடு, விசாரனை, முறைகளின் வினைத்திறன் இன்மை, ஊழல், அதிகாரம் என்பன சட்டத்தின் நோக்கத்தை அடைய தடையாய் அமைந்துள்ளன. கிருலப்பனை, தங்கல்லை, நாவலப்பிட்டி, அக்குரஸ்ஸ வடக்கு, கிழக்கு, என நாட்டின் எல்லா இடங்களிலும் தலைவிரித்தாடும் அதிகார துஸ்பிரயோகம், ஊழல் என்பன உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க தடையாக உள்ளது.
இலங்கையில் முக்கியமான ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு சட்டமாதிபரால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது. நீதவான் நீதிமன்றில் சுறுக்க முறையற்ற விசாரனையில் பின்பே மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு முழு தகவலுடன், சான்றுகளுடன் ஆற்றுப்படுத்தப்படும், எனின் சான்றுகள் மறைக்கப்பட்டனவா? சாட்சிகள் இல்லையா? அல்லது சட்டமாதிபர் திணைக்களம் வேறு அழுத்தத்தினால் இவ்வழக்கை மீளப்பெற்றுக் கொண்டதா? எனும் கேள்வி எழும். எது எவ்வாறானாலும் இவை மக்களுக்கொதிராக இழைக்கப்படும் அநீதியாகும்
அக்குரசை பிரதேச சபைத்தலைவர், மேலும் சில பிரதேசசபை சார்ந்தவர்கள் தாம் 500ற்கும் மேற்பட்ட பெண்களுடன் பாலியல் உறவு மேற்கொண்டதாக பகிரங்கமாக கொண்டாட்டங்களை, களியாட்டங்களை நடாத்தினார். இது மக்கள் எவ்வளவு மௌனமாக இருக்கின்றனர் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. அநீதிக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு காட்ட முன்வருவதில்லை.
இவர்கள் மட்டுமல்ல மாகாணசபை, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என எல்லோரும் சிறுவர், பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர.; சிலர் விபச்சார விடுதிகளை நாடுகின்றனர், நடாத்துகின்றனர் என தகவல் வெளியாகின்றது இது நாட்டினை மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும், பெண்கள் சிறுவர்கள் சுதந்திரமான நடமாற்றம், இயக்கம் என்பனவற்றை பாதிக்கும்.
சமூகத்தில் பல நோய்களையும், இழிவான பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தும் அபாயம் நிலவுகின்றது. வீட்டுப் பணிப் பெண்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் கிராமப்புறங்கிலிருந்து வேலைத்தேடி நகர்புறம் செல்வோர், குறிப்பாக மலையக தமிழ் யுவதிகள் தமது கல்வியை தொடராமல் வறுமைக்காரணமாகவும் நகர் புற வாழ்க்கை மீதான ஈர்ப்பு சினிமாத்துறையின் சீரழிவான கலாசாரம் என்பனவற்றினால் பெண்கள் சிறுவர்கள் கலாசார ரீதியாக மிகவும் மோசமடைந்துள்ளனர். உலகமயமாதல், இணையம் என்பவற்றில் மஞ்சள் பத்திரிகைகள், பாலியல் திரைப்படங்கள், கையடக்க தொலைபேசியில் வரும் மோசமான படங்கள் எனும் கலாசாரத்தை மிக மோசமாக பாதிக்கின்றது.
இளைய சமூகத்தை சிந்திக்க விடாமல், அவரின் இயக்கம் சிந்தனைத்திறன்கள் என்பவற்றை மழுங்கடித்து நாட்டை பாதாளத்தில் தள்ளும் வெளிநாடுகள் பலவற்றின் நிகழ்ச்சி திட்டங்களில் இந்தியா, இலங்கை உட்பட நாடுகளும் சிக்கியுள்ளன.
இலங்கையும் உடல் அங்கங்கள், இரத்தம் விற்றல், பெண்கள், சிறுவர்களை விபசாரத்துக்காக விற்றல் என பல விதமாக மனிதனைக் மையமாகக்கொண்டு செய்து வருகின்றது.
பெண்கள் சம்மதத்துடன் சிறுவர்களின் சம்மதத்துடன் பாலியல் உறவு நடந்தால் அது குற்றம் இல்லை இதை எவ்வாறு அறிவது? ஆரம்ப விசாரணைகளில் இது வெளிப்படையாக தெரியவருவதில்லை. மூவர், ஐவர், இருபது பேர் என எல்லோருடனும் உடலுறவு கொள்ளக்கூடியளவு பெண்கள் சம்மதத்துடன் உள்ளாரகள் எனக் கூற எமது பெண்கள் கலாசார ரீதியாக இவ்வளவு சீரழிந்து உள்ளார்களா? அறியாமையா? அதற்கு யார் பொறுப்பு?
கௌரவ சட்டமாதிபர் கூறுவது போல ‘சம்மதத்துடன் பாலியல் உறவு நடைபெறுகிறது’ என்றால் சம்மதம் பூரணமாக முழுமையாக விடயங்களை , பாதிப்பை அறிந்தபிறகு சம்மதம் வழங்கப்படுகின்றதா? அச்சுறுத்தல் பணம் ஏமாற்றம் இல்லாமல் பெறப்படுகின்தா? சம்மதம் எவ்வாறானது? என்ற கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம் சட்டத்தில் எழும் சிக்கல் அரசுக்கு வரும் அழுத்தங்களை சமாளிக்க, பொலிஸ், சட்டமாதிபர் திணைக்களம் தமது சுமையை குறைக்க கடைந உடழளந பண்ண செல்வந்தர்களை, அதிகாரம் படைத்தவர்களை காப்பாற்ற, ஏழைகளை அறிவீனமானவர்களை ஏமாற்ற சம்மதத்துடனே பாலியல் உறவு நடந்தது என அறிக்கை விடுவது மக்களுக்கு பொய்யான தகவலகளை, பொய்யான மாயைகளை ஏற்படுத்தும் முயற்சியாகும்
சுற்றுலாதுறை வளர்ச்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு இவற்றால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் சிறுவர் யுவதிகளை விற்பணை செய்ய தரகர்கள் நாடெங்கும் இயங்கி வருகின்றனர் இவர்கள் யாரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது இல்லை பொலிசாரும் இவர்களிடம் சலுகை பெற்றுக் கொண்டு உதவி செய்கின்றனர். சட்டத்தின் பிடிகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர் மக்கள் இது பற்றி அக்கறை கொள்ளாதவரை உயிர் கொள்ளி நோய் போல பரவும் இச்சமூகப்பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது சாத்தியமில்லை ஏனென்றால் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க அரசாங்கம் தவறியுள்ளது சிலரை காப்பாற்றவும் செய்கின்றது எனவே மக்கள் தமது பிள்ளைகள், சிறுவர்களுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும், விழிப்புணர்வுடன் செயற்படுவதும் மிகவும் அவசியமானதாகும் என மலையக சிவில் சமூகம் மக்களை கேட்டுக் கொள்கின்றது. மேலும் சமுக சீர்கேடுகள் ஏற்பாட வண்ணம் அரசாங்கம் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றது.
சட்டத்தரணி எஸ்.மோகனராஜன்
செயலாளர்
மலையக சிவில் சமூகம்
072 400 7080
mohanarajan23@gmail.com

Exit mobile version