Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அடிப்படை வசதிகளுக்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் அட்டன் தொப்பித் தோட்ட மக்கள் : சை.கிங்ஸ்லி கோமஸ்

இலங்கையின் பிரபல மலைநாட்டு  நகரங்களில் ஒன்றான அட்டன் நகரம் தமிழர்கள் செறிந்து வாழும் நகரங்களில் அடையாளம் காணப்பட்ட ஒரு நகரமாகும். தமிழ் பண்பாட்டு கலாச்சார அம்சங்களும் தமிழ் கல்வியில் முக்கிய இடத்தினை வகிக்கக் கூடியதுவும் தமிழ் சிங்கள இஸ்லாமிய மக்கள் ஒன்றாய் வாழும் இந்த நகரத்தில் இந்திய வம்சாவழி மக்களுக்கு சமாந்தரமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்;.தமிழ் நாட்டில் இருந்து இலங்கை வரும் அரசியல் வாதிகளாகட்டும் கலைஞர்களாகட்டும் இலக்கியவாதிகளாகட்டும் அட்டன் நகரத்திற்கு ஒரு நடை வந்து போவது குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் இருந்தும் கண்டியிலிருந்தும் அட்டன் வரும் எவரையும் கம்பீரமாய் வரவேற்கும் சிங்கமலையை காணாமல் இருக்க மாட்டார்கள். பதுளை நோக்கி செல்லும் புகையிரதம் இலங்கையில் மிக நீண்ட சுரங்கமான சிங்க மலை சுரங்கத்தினுள் செல்வதுவும் குறிப்பிடத்தக்கது.இந்த சிங்கமலை அடிவாரத்தில் ஏக்கத்துடன் வாழும் மக்கள் கூட்டத்தினரைக் கொண்ட அட்டன் தொப்பித் தோட்டம் அமைந்துள்ளது.கோப்பி தேயிலை பயிர் செய்கை மாத்திரம் அல்ல இலங்கையின் பெரும் வீதிகள் புகையிரத வீதிகள் சுரங்கங்கள் என்பவற்றை நிர்மாணித்த அவற்றிற்காய் உயிர் தியாகம் செய்த பரம்பரையினர் வாழ்ந்த அட்டன் தொப்பித் தோட்டம் அட்டன் என்ற பெயரை நகரத்திற்கு பெற்றுத் தந்த தோட்டமாகும்.ஆனாலும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற மக்கள் தங்களின் எதிர் காலம் பற்றிய எந்த வித எதிர் பார்ப்புக்களும் இன்றி வாழ்ந்து வருவது குறிப்பிடத் தக்கது. தேர்தல் கால வாக்குறுதிகளும்,அரசசார்பற்ற நிறுவனங்களின் ஆய்வு அரிக்கைகளும் படையெடுக்கும் புதிய புதிய மதப் போதகர்களும் அட்டன் தோட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதாய் இல்லை.ஒழுகும் கூரைகளும், சுவரே இல்லாத வீடுகளும், தலையில் உடைந்து விழும்வீட்டு கூரைகளும், பொலித்தீன் போர்த்திய வீட்டு கூரைகளும், அவற்றில் தேங்கி நிக்கும் மழை நீரும் அவற்றில் இருந்து பரவும் நுளம்புகளும்,கதவில்லாத மலசல கூடங்களும்,குவிந்து கிடக்கும் குப்பையும்,1800களில் கட்டப்பட்ட தோட்ட குடியிருப்புக்கள் தொப்பித் தோட்ட மக்களின் காவிய கதைக்கு சான்ராதாரமாகின்றது.

அட்டன் தொப்பித் தோட்ட மக்கள் பற்றிய ஆவனப் படமான இன்னும் ஏன் இப்படி என்னும் படத்தைப் பாரத்தவர்கள் 1800 களில் படம் பிடித்தவற்றை காட்டி ஏமாற்றுவதாக கூறுகின்றனர்.இந்த நிலைமை மார வேண்டும் மாற்றப் பட வேண்டும்.
அட்டன் நகரத்திற்கு மிக அன்மையில் அமைந்துள்ள தொப்பித் தோட்டம் எப்போது அபிவிருத்தி அடையும் எப்போது இந்த மக்களுக்கு மனிதர்களாய் வழ்வதற்கான அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

ஆசியாவின் அதிசயத்தினை நோக்கிப் பயணிப்பதாகக் கூறிக் கொள்ளும் இந்த நாட்டில் நாட்டிற்கு மத்தியில் புதைந்திருக்கும் துயரத்தினைப் பார்ப்பவர்களுக்குஅச்சத்தினையும் அதிர்ச்சியினையும் தரும் தொப்பித் தோட்டம் விமோசனம் வேண்டி நிற்கின்றது.

Exit mobile version