Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிப்பது யார்? : மறைக்கப்படும் உண்மை!

ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராக வெற்றிகளைக் குவிக்கும் பெண் போராளிகள்
ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராக வெற்றிகளைக் குவிக்கும் பெண் போராளிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் இன் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது இஸ்லாமிய மதத்திற்கு எதிரான போராடமல்ல, மாறாக அது ஏகாதிபத்தியப் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டம். ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் நேரடித் தொடர்பை இன்று மக்கள் தெரிந்துகொண்டுள்ளனர். முன்னரைப் போல இத் தொடர்பு வெறும் அனுமானங்கள் அல்ல, ஆதாரபூர்வமாக நிறுவபட்டுள்ளது.

ரஷ்யா ஒரு புறமும், மேற்கு நாடுகள் ஒரு புறமுமாக சிரிய மக்களைப் பாதுகாப்பதாக குண்டும்ழை பொழிகின்றன.

விண்ணைக் கிழிக்கும் விமானங்களின்றி, அணுவாயுதங்களின்றி, பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஊடகங்களின் பிரச்சார பலமில்லாமல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒட ஒட துரத்திவருகிறது ஒரு உள்ளூர் அமைப்பு. சுய நிர்ணைய உரிமைக்காக சிரியாவில் போராடிவரும் கம்யூனிச அமைப்பான சிரிய குர்தீஸ் விடுதலை அமைப்பே அது.

இஸ்லாமியக் கூலிப்படைகளை ஆயுதமயப்படுத்தி சிரியாவில் அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய அணிகளும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கு எதிரான வெற்றிகரமான யுத்தத்தை நடத்தி, சிரியாவின் குர்தீஸ் பகுதியான ரோஜாவாவின் பெரும் பகுதியை குர்தீஸ் இடதுசாரி இயக்கம் விடுதலை செய்துள்ளது.

ரோஜாவாவில் அரசமைப்பை நிறுவியுள்ள குர்தீஸ் தொழிலாளர் கட்சி, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஐக்கிய முன்னணி ஒன்றை நிறுவியுள்ளது பல்வேறு நாடுகளிலிருந்து கம்யூனிச இயகங்களைச் சேர்ந்த போராளிகள் அந்த ஐக்கிய முன்னணியில் இணைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு பிரிவு (People’s Protection Units (Kurdish: Yekîneyên Parastina)(YP) என்ற அந்த முன்னணியில் இணைந்து போராடும் முக்கிய அமைப்பு துருக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும் (MLKP).

ரோஜாவா பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை வெளியேற்றுவதில் வெற்றிகண்டுள்ள இந்த அமைப்பு, சிரிய அரசபடைகளுன் இணைந்து போராட மறுப்புத் தெரிவிக்கின்றன. சிரிய அரச படைகள் தமது சுயநிர்ணைய உரிமைக்கும் சிரிய உழைக்கும் மக்களுக்கு எதிரிகள் எனக் கூறும் அந்த அமைப்பில் ஐரோப்பி நாட்டிலிருந்த சிலரும் ஆயுதமேந்திப் போராடிவருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம், 2015 4ம் திகதி கனேடியர் ஒருவர் போரின் போது மரணித்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து பலர் YP உடன் இணைந்து கொண்டுள்ள தகவல்கள் கசியத் தொடங்கின. கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரியா, ஜேர்மனி, அமெரிக்கா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் வரை இணைந்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.

குர்தீஸ் தொழிலாளர் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் சாலி முஸ்லீம் இன் மகன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் 2013 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்

ரோஜாவவின் டில் கோசார் என்ற நகரம் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் முக்கிய தளமாக இருந்துவந்தது. YP போராளிகள், குறிப்பாக அதன் பெண் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ முழுமையாக அங்கிருந்து துடைத்தனர். 2013 இறுதிப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அற்ற சுதந்திர நகரமாக அது மாறியது. அதன் பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் பல நிலைகள் தாக்கியழிக்கப்பட்டன.

இராணுவ அதிகாரிகள் கூட மக்களால் தெரிந்தெடுக்கப்படும் தேர்தல் முறை ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் ஒன்று ஏகாதிபத்தியப் பயங்கரவாதிகளின் நடுவே திட்டமிட்டு வெற்றியுடன் நடத்தப்பட்டு வருகின்றது. பல்தேசிய ஊடகங்கள் இச் செய்தியை மக்களிடமிருந்து மறைத்துவருகின்றன.

Exit mobile version