அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மலையக மக்கள் போராட்டம்
இனியொரு...
தம்மை விடுதலை செய்யக்கோரி தொடர்ச்சியாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,சகல அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக்கோரியும் 2015.11.15 (ஞாயிற்றுக்கிழமை) மாத்தளை,மணிக்கூட்டுக்கருகில் , சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியது. அவ்வார்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மற்றும் புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி ,முன்னிலை சோசலிசக்கட்சி,அரசியல் கைதிளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு போன்ற பல அமைப்புகள் கலந்து கொண்டன.