Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அனில் அக்கரவாலின் பண வெறிக்காக தமிழ் நாடு காவல்துறை நடத்தும் படுகொலைகள்!

லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட வேதாந்தா நிறுவனம் தமிகத்தில் தூத்துக்குடியில் நடத்தும் ஸ்ரெலைட் நிறுவனம் அப்பகுதியின் நீரையும் நிலத்தையும் நச்சாக்கிக்கொண்டிருப்பதற்கு எதிராக மக்கள் நடத்திய அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்திய மத்திய மானில அரசுகள் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளன. போராட்டத்தில் முன்னணியில் செயற்பட்டவர்கள் மீது திட்டமிட்டு ஸ்னைப்பர் தாக்குத நடத்திய தமிழ் நாடு காவல் துறை இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 15 நிராயுதபாணியான பொதுமக்களைக் கொலை செய்துள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம், பாத்திமாநகர் பகுதிகளுக்குள் புகுந்த போலீசார் பொது மக்களை தாக்கி வருகிறார்கள். 15 வயது சிறுமியை சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.

வேதாந்த பவுண்டேஷன் ஊடாக இந்துதுவ அமைப்புக்களுக்கு பணம் வழங்கி வரும் அனில் அக்ரவாலின் பாதுகாவலர்களான மோடி இந்துத்துவ அடிப்படைவாத அரசும் அதன் ஏஜண்டான தமிழ் நாடு எடப்பாடி அரசும் திட்டமிட்டு நடத்திய இந்தப் படுகொலைகளின் பின்னர் தூத்துக்குடி முழுவதையும் போர்களம் போல தமிழக காவல்துறை மாற்றியுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர்களில் பலர் இப்போராட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மற்றும் இந்திய கொலைகார அரசுகளுக்கு எதிராக பிரித்தானியாவிலும் போராட்டங்கள் நடைபெற்றன. வேதாந்தா அமைப்பின் உரிமையாளரான அனில் அக்ரவாலின் லண்டன் வசிப்பிடத்தின் முன்னாலும் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் இந்தியத் தூதரகத்தின் முன்பாகவும் அனில் அக்ரவால் வசிப்ப்டத்தின் முன்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ் நாடு அரசால் ஊடகங்களுக்கு செய்திகள் இருட்டடிப்புச் செய்யபப்படுகின்றன. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை அரசு காவல்க்துறை வெளியிட மறுக்கின்றது. இன்று காலையிலிருந்து பெரும்பாலான பிரதான ஊடகங்கள் செய்திகளைத் திரித்து வெளியிட்டன.

35 ஆயிரம் கோடி செலவில் வளங்களைச் சுரண்டி லண்டனில் பில்லியன்களை சுருட்டிக்கொள்வதற்கா அனில் அக்ரவால் குடும்பத்தின் சுகபோக வாழ்விற்காக அவர்களின் அடியாள் அரசுகள் நடத்தும் படுகொலைகள் மேலும் தொடர வாய்ப்புண்டு. இக்கொலைகளுக்கு எதிராக மக்கள் பற்றுள்ள அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது இன்று அவசியமாகிறது.

Exit mobile version