வட மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உட்பட புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ ஆகிய கட்சிகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்த போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணியினரின் கடும் எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.
இதனையடுத்து திருமதி ஞானசக்தி (ஞானா) சிறீதரன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) வட மாகாணசபைத் தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
தேசியம் பேசும் கட்சியானால் என்ன அதற்கு எதிரான அணியான இனப்படுகொலைக் கட்சியாக இருந்தால் என்ன தேர்தலில் தொற்றிக்கொண்டு வாக்குப் பொறுக்குவதே நோக்கம் என்ப்தற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா) சிறந்த குறியீடு.