Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துருக்கி-ரசிய பதற்றம் : தெருவிற்கு வந்த அமெரிக்க ஜனநாயகம்!: சிவானந்தன்

isilturkeyசிரியாவில் ரசியாவின் தலையீடு முழுமையான அப்பிரதேசத்தின் அரசியல் படத்தைத் தலைகீழாக மாற்றிப் போட்டது. குர்தீஷ்தான் போராளிகள் ஐ,எஸ் பயங்கரவாதிகளை துருக்கி எல்லைகளின் பல்வேறு பகுதிகளில் அழித்து முன்னேறுவதில் வெற்றி கண்டுள்ளனர். அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய பங்காளி நாடான துருக்கி, ஐ.எஸ் அமைப்பின் ஆயுத வினியோகத்திற்கும், ஆட் சேர்ப்பிற்கும் துருக்கி எல்லையின் மையமாகச் செயற்பட்டது. அந்த எல்லைகளில் பல இப்போது குர்திஷ்தான் போராளிகளின் பிடியில் வீழ்ந்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ்.எல் அமைப்பினால் திருடப்படும் எண்ணை துருக்கிக்குக் கடத்தப்பட்டு அங்கே சுத்திகரிக்கப்படுகின்றது.

ஐ.எஸ்.எல் அமைப்பிற்கான பெரும் நிதிவளம் எண்ணையிலிருந்தே பெறப்படுகின்றது. ஆக, துருக்கி – சிரிய எல்லைய மூடுவது ஐ.எ.எல் பயங்கடவாதிகளைப் பெரும் பின்னடைவிற்கு உள்ளாக்கும்

முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்குப் போர் என்பது இறுதி ஆயுதம். இன்று அமெரிக்க அரசின் குழந்தையான ஐ.எஸ். என்ற பயங்கரவாத இயக்கம் போர் அச்சத்தைப் பரப்புவதற்காக அமெரிக்க அணிக்கு பின்பலமாகச் செயற்படுகின்றது. போர் ஒவ்வொரு உலகப் பிரசையினதும் கொல்லைப் புறத்துக் கதவுகளைத் தட்ட ஆரம்பித்துவிட்டது.

இந்த நிலையில் ரசிய அரசின் தந்திரோபாய நகர்வு அமெரிக்காவின் ஐ.எஸ் அமைப்பின் தொடர்ச்சியான இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அழிவு அமெரிக்காவின் தந்திரோபாயத்தின் அழிவு என்பதை அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் தெரிந்து வைத்திருந்தன.

இவ்வாறான அரசியல் சூழல் ஒன்றில் ரசிய விமானத்தை சுட்டு விழுத்துவது அமெரிக்காவின் அணியிலுள்ள முக்கிய நாடுகளில் ஒன்றான துருக்கியின் தவிர்க்க முடியாத நகர்வாக அமைந்தது.

அமெரிக்க ஆதரவு துருக்கி ஐ.ஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் விமானத்தைச் சுட்டுவிழுத்தியதன் பின்புலம் இவ்வாறான அரசியலிலிருந்தே ஆரம்பமாகிறது.

துருக்கி எல்லைக்குள் ரசிய விமானம் நுளையவில்லை என்பதை ஆதாரங்களுடன் ரசியா நிறுவியுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா துருக்கி தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை உண்டென தாக்குதலின் பின்னர் தெரிவித்துள்ளார்.

தவிர, பிரான்ஸ் மக்கள் மீதான ஐ.எஸ்.எல் அமைப்பின் தாக்குதலுக்கும், முன்னைய சார்லி எப்டோ மீதான தாக்குதலுக்கும் அமெரிக்கத் தலையீடு காரணமாகவிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வெளியிடப்படன.

அதே வேளை துருக்கி சிரிய எல்லை மூடப்பட வேண்டும் என்றும், ஐ.எஸ்.எல் பயங்கரவாதிகளின் தாக்குதல் சுதந்திரமான நகர்வு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரஞ்சு பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆக, ரசிய-பிரஞ்சு அணி ஒன்றிற்கான சாத்தியப்பாடுகளை ஐரோப்பிய அரசியல் ஆய்வாளர்கள் சிலர் முன்வைக்கின்றனர்.

எது எவ்வாறாயினும் ஏகாதிபத்தியங்களின் உள் முரண்பாடுகளால் சிதைக்கப்படும் சிரியாவும் அதன் மக்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் பற்றுள்ளவர்களின் கருத்து.

Exit mobile version