Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சம்பூரில் நடக்கும் இனச்சுத்திகரிப்பு சுன்னாகம் நீரால் மறைக்கப்படுகிறதா?

modi_maithripalaமகிந்த ராஜபக்ச நீக்கப்பட்டு மைத்திரிபால சிரிசேன ஆட்சியைக் கைப்பற்றிய நிகழ்வின் சந்தடிகள் ஓய்ந்துபோகும் முன்னரே இந்திய அரசின் அழைப்பை இலங்கை ஏற்றுக்கொண்டது. மைத்திரிபால சிரிசேன இந்தியா சென்று இந்திய அரசுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றைக் கைசாத்திட்டார். இன்றுவரை அந்த ஒப்பந்ததின் அடிப்படைகள் என்ன என்பது யாருக்கும் தெரிவிகப்படவில்லை. நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட வேளையில் மகிந்த ராஜபக்சவுடன் சம்பூர் அனல் மின்னிலையம் குறித்துப் பேசினார். சம்பூர் அனல் மின்னிலையம் தனது கட்டுமானத்தை முடித்துக்கொண்டு இன்னும் இரண்டு வருடங்களுக்கு உள்ளாக மின் உற்பத்தியை வழங்க ஆரம்பித்துவிடும்.

சம்பிக்க ரணவக்கவும் இலங்கை மின்வலுக் கொள்ளையும்

சம்பிக்க ரணவக்க மகிந்த ராஜபக்சவுடன்

இலங்கையில் சிங்கள பௌத்த திட்டமிட்ட குடியேற்றங்களால் சிதைக்கபட்ட திருகோணமலையில் சம்பூர் அமைந்திருப்பதால் அதனைத் திருகோணமலை மின் நிலையம் என அழைப்பதுண்டு. இன்றைய இலங்கையின் மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதவியேற்ற மறுகணமே திட்டமிடப்பட்ட சம்பூர் அனல் மின் நிலையம் இன்றும் அவரது ஆணையுடனேயே தொடர்கிறது.

சம்பிக்க ரணவக்க இன் காலத்திலேயே சுன்னாகம் அனல் மின் நிலையம் நோதர்ண்பவர் நிறுவனத்திடம் ஒப்படைகப்பட்டு பின்னதாக நொதர்ன்ப்வர் எம்.ரி.டி வோக்கஸ் ஆல் விலைக்கு வாங்கப்பட்டது. இன்று இலங்கை அரசாங்கம் சுன்னாகம் நீரைப் பருக வேண்டாம் என்றும் அதில் நஞ்சு கலந்துள்ளது என்றும் மக்களுக்கு அறிவிக்கிறது. இதே மின் நிலையைம் இன்றைய இலங்கையின் மின்சார அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் காலத்தில் அவரது அனுமதியுடனேயே நீரையும் விவசய நிலங்களையும் அழித்தது. இன்று மக்கள் மீது அக்கறையுள்ளது போன்று நாடகமாடும் இலங்கை அரசு தொடர்பான பல கேள்விகள் எழுகின்றன. சுன்னாகத்தில் மக்களைக் காப்பாற்றுவதாகக் காட்டிக்கொண்டு சம்பூரில் பேரழிவு திட்டமிடப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்தியப் பிராந்திய ஏகாதிபத்தியம்…

இலங்கை மக்களின் வரிப்பணத்தில் இந்திய தேசிய அனல் மின் நிலைய கோப்பரேஷன் லிமிடட் உம் இலங்கை மின்சார சபையும் இணைந்து சம்பூர் அனல் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றன. இதன் ஒரு பகுதி மின்சாரம் இலங்கைக்கும் மறுபகுதி இந்தியாவிற்கு கடல் வழி ஊடாகவும் வழங்கப்படும்.

இணைக்கப்பட்ட இருவேறு பகுதிகளில் 250 மெகாவாட் மின்சாரம் முழுமையாக 500 மெகா வாட் மின்சாரமாக உற்பத்தி செய்யப்படும். இலங்கையைத் தவிர பங்களாதேஷ் இலும் 1.2 மில்லியன் டொலர் செலவில் இந்திய அரசு அனல் மின் நிலையம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இலங்கையிலும் இந்தியாவிலும் மின் உற்பத்தி இந்தியாவின் மேற்பார்வையிலேயே நடைபெறும். இதனால் அருகிலுள்ள நாடுகளை கட்டுப்படுத்தும் இந்தியாவின் பிராந்திய ஏகாதிபத்திய செயற்பாடும் இதில் அடங்கியுள்ளது.

இந்தியாவின் கட்டாந்தரைகளில் எங்காவது அனல் மின்னிலையத்தை நிர்மாணித்து மின்சாரத்தை உபயோகத்திற்கு உட்படுத்துவதற்குப் பதிலாக திருகோணமலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதன் பின்னணி ஆபத்தானது.

சம்பூர் ஒப்பந்தம்…

திருகோணமலை மின் நிலையம்

நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சம்பூர் மின்சார நிலையத்தை சம்பூர் நிலக்கரி மின்சார நிலையம் என்றும் குறிப்பிடுவதுண்டு. 2006 ஆம் ஆண்டிலேயே சம்பூர் நிலக்கரி மின்சார நிலையத்திற்கான ஒப்பந்தம் இந்திய இலங்கை அரசுகளிடையே கைச்சாத்திடப்பட்டிருந்தாலும் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புதிய ஒப்பந்தம் ஒன்று எழுதப்பட்டது.

புதிய உடன்படிக்கையின் அடிப்படையில், மின்சாரத்தை கொள்வனவு, கட்டுமானப் பணிகள், நிலச் சுவீகரிப்பு, முதலீட்டாளர்கள் போன்ற அடிப்படைகளில் ஒப்பந்தங்கள் எழுதப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்திய தேசிய அனல் மின் கோர்பரேஷன் லிமிடர். திருகோணமலை பவர் கொமபனி லிமிடர், இலங்கை மின்சர சபை ஆகியன கையொப்பமிட்டன. திருகோணமலை பவர் கொம்பனி லிமிடட் இலங்கை மற்றும் இந்திய அரசுகளால் உருவாக்கப்படதாகும்.மின்சார நிலையத்தை முழுமையாக நிர்மாணித்து முடிப்பதற்கு 512 மில்லியன் டொலர்கள் பெறுமனமுள்ள பணம் முதலீடு தேவை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்திய உளவுத்துறையின் தமிழ் உணர்வுக் கைக்கூலிகள் கண்டுகொள்ளாதவை…

தமிழ் நாட்டில் இந்திய அரசின் கைக்கூலிகள் போன்று செயற்படும் ஈழ ஆதரவுக் கோமாளிக் கும்பல்கள், ஈழம் பிடிப்பதாக இந்திய அரசைக் கோரும் போதும், ராஜபக்சவைத் தண்டிப்பதே தமது ஒரே நோக்கமாக கூத்தாடும் போதும் அதனைக் காரணம் காட்டி ராஜபக்சவை மிரட்டியே 2006 ஆம் ஆண்டு சம்பூர் ஒப்பந்தைத்தை இந்தியா நிறைவேற்றியது.

வெளியேற்றப்படும் தமிழ் மக்களின் அவலம்…

சம்பூரில் போராடும் அனாதரவான மக்கள்

நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி நடத்தவிருக்கும் சம்பூர் மின் நிலையத்தின் கார்பன் கழிவுகள் திருகோணமலையின் பெரும்பாலான பகுதிகளை மக்கள் வாழ்வதற்கு ஒவ்வாத பிரதேசமாக்கிவிடும். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த 2795 ஏக்கர் நிலப்பகுதி சம்பூர் நிலக்கரி மின்சாரத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது.

People’s Alliance for Right to Land (PARL) என்ற அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில், சம்பூர் நிலக்கரி மின் நிலையத்திற்காக 5000 ஹெட்டேர் பரப்புக் நிலம் இலங்கைக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 7200 கிராமவாசிகள் அங்கு வசிக்கின்றனர். அவர்கள் வெளியேறும் போது 2 லடசத்து 50 ஆயிரம் இலங்கை ரூபாக்களை வழங்குவதாக அப்பகுதி அரச அதிபர் பிரிவு அறிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை போன்ற சிறிய நாட்டில் திருகோணமலை போன்ற சிறிய நிலப்பரப்பில் இந்த அளவு மிகப்பெரியது.

தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட 2200 மக்கள் இன்னும் முகம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். கோம்பைவெளியில் மாதிரிக் கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு அங்கு சிலர் குடியேற்றப்பட்டுள்ளனர். சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.

தேசியப் பிழைப்புவாதிகள் புறக்கணிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற வாக்குப் பொறுக்கிகள் இவையெல்லாம் தொடர்பாக துயர் கொண்டதில்லை. புலம்பெயர் நாடுகளில் சம்பூர் அவலம் பேசப்படுவதில்லை. ஊடகங்களும் புலம்பெயர் அமைப்புக்களும் பிழைப்பு நடத்துவதற்கு சம்பூர் பகுதி யாழ்ப்பாணம் போன்று பெரும் தொகை மக்களைக் கொண்டிராததும் ஒரு காரணமாகவிருக்கலாம்.

சம்பூர் உற்பத்தியின் வெப்பம் அப்பகுதி முழுவதையும் மக்கள் வாழ முடியாத இடமாக மாற்றிவிடும் என அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

512 மில்லியன் டொலர் கட்டுமானச் செலவில் இலங்கை அரசு 30 வீதத்தைச் செலவிடுகிறது. மேலும் 70 வீதம் வெளி நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. மின் உற்பத்தி முழுவதும் இந்தியாவின் முகாமைத்துவத்திலேயே இயங்கும் என அறிவிக்கப்பட்ட போதும் இந்திய அரசின் முதலீட்டுத் தொகை அறிவிக்கபடவில்லை.

இலங்கையில் இனவழிப்புக் குறித்துப் பேசியே பிழைப்பு நடத்தும் தமிழ் உணர்வாளர்கள், சம்பூர் அழிவைக் கண்டுகொள்வதில்லை. இலங்கை அரசு, சுன்னாகத்தில் ‘கதானாயகன் வேடம்’ போட்டுக்கொண்டு சம்பூரில் அழிப்பை நடத்த ஆரம்பித்துவிட்டது. இந்திய அரசு திருகோணமலையை மையமாகக் கொண்டு வடக்குக் கிழக்கை மட்டுமல்ல முழு இலங்கையையும் தனது பேரழிவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது.

சுன்னாகத்தில் மக்கள் பெற்ற வெற்றியை நம்பிக்கையாகவும் ஆதரமாகவும் கொண்டு சம்பூர் மின்னிலையத்தில் மேற்கொள்ளப்படும் அழிவுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் போராடுவதும் இன்றைய அவசரத் தேவையாகும்.

http://www.sundaytimes.lk/140810/business-times/indo-lanka-joint-venture-company-to-expedite-the-sampur-coal-power-project-109906.html

http://powermin.gov.lk/english/?portfolio=sampoor-coal-power-plant-2x250mw

http://articles.economictimes.indiatimes.com/2015-01-13/news/58024786_1_ntpc-supplies-arup-roy-choudhury-bangladesh-power-development-board

http://www.thesundayleader.lk/2014/03/02/geneva-trap-and-sampur-carrot/

http://www.sourcewatch.org/index.php/Sampur_power_station

Exit mobile version