Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைமையின் எதிர்காலம்…

sampanthanகஜேந்திர்குமார் பொன்னம்பலம் புலிக்கொடி ஏந்தியதற்குப் பலனை அனுபவிக்கவில்லை ஆனால் சம்பந்தன் சிங்கக்கொடி ஏந்தியதற்குப் பலன் கிடைத்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தில் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார். சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கியமைக்காக பேரினவாதிகள் கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.

1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழீழத்திற்கு அங்கீகாரம் வேண்டி போட்டியிட்ட தமிழர் விடுத்லைக் கூட்டணியின் வெற்றியின் பின்னர் அப்பாப்பிள்ளை அமிர்த்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார்.

ஆறு ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலவராகப் பதவி வகித்த அமிர்தலிங்கம் 1983 ஆம் ஆண்டு பதவி விலகும் போது வட கிழக்குத் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான அரசியல் ஆயுதப் போராட்ட இயக்கங்களால் கையகப்படுத்தப்படிருந்தது.

1989 ஆம் ஆண்டு 61 வயதில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அடுத்த தேர்தலை இலக்குவைத்திருந்த அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தை தனது வாக்குச் சேர்க்கும் சாதனமாகப் பயன்படுத்திக்கொண்டார். தமிழ் இனவாதத்தை மட்டுமே உச்ச தொனியில் பேசிய அவரின் கருத்துக்கள் சிங்கள மக்களின் வெறுப்பை மட்டுமே சம்பாதித்திருந்தன. தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயம் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படவில்லை. அரசால் ஒடுக்கப்படும் சிங்கள மக்கள் தமிழ்ப் பேசும் மக்களைத் தமது நண்பர்களாகக் கருதவில்லை.

வெலிவேரியாவில் இலங்கை இராணுவத்தால் அப்பாவிச் சிங்களமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக ராஜபக்சவுடன் கைகுலுக்கிக் கொண்ட விக்னேஸ்வரனின் நடவடிக்கையே கூட்டமைப்பின் முகம். அதுவே அமிர்தலிங்கம் காலத்திலிருந்து இன்றுவரையான தமிழரசுக் கட்சியின் குறுக்குவெட்டு முகமும் கூட.

யாழ்ப்பாண அதிகாரவர்க்கத்தையும் அதன் பின்னணியில் செயற்பட்ட இலங்கை ஆயுதப் படைகளையும் எதிர்த்து சாதியொழிப்பை மையமாக வைத்து முதலில் எழுச்சி பெற்ற ஆயுதப் போராட்டம் சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டமாகும்.

அப்போது பாராளுமன்றத்திற்குச் சென்று கூச்சலிட்ட தமிழரசுக் கட்சி ‘யாழ்ப்பாணம் வியற்னாமாகிறது காப்பாற்றுங்கள்’ என்று பேரினவாதிகளைத் துணைக்கழைத்தனர்.

அதிகாரவர்க்கத்தோடு ஒட்டிக்கொள்வதே தமிழர்களின் இயல்பு என்று உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் எண்ணுவதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் மட்டும் காரணமல்ல. தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட அதற்குப் பிரதான காரணம்.

பிரபாகரன் அதிகாரத்திலிருந்தால் புலிக் கொடியும், பேரினவாதிகள் அதிகாரத்திலிருந்தால் சிங்கக்கொடியும் பிடிக்கத் தெரிந்த சம்பந்தனுக்கு மக்கள் அதிகாரம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாராளுமன்றம் என்ற பன்றித் தொழுவத்தில் சம்பந்தன் குழுவினரால் அதிகாரவர்க்கத்திற்கு மட்டுமே சேவை செய்யமுடியும்.

இவை அனைத்தையும் மீறி பாராளுமன்றத்தில் தன்னாலான குறைந்தபட்ச எல்லைக்குள் பயன்படுத்திக்கொண்ட ஒரு மனிதனை இச் சந்தர்ப்பத்தில் நினைவுகூருவது பொருத்தமானது,

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் என்பவரே அவர்.

சிங்கள தமிழ் மக்களிடையேயான பொதுவான பிரச்சனைகள் குறித்தும் சிங்கள மக்களை நோக்கியும் பேச முற்பட்டபோது அவர் கொலை செய்யப்பட்டார்.

சிங்களப் பேரினவாதிகளால் மூடி மறைக்கப்பட்டு நச்சூட்டப்பட்ட சமூகத்திற்கு மத்தியில் போராட்டத்தின் நியாயத்தை ரவிராஜ் கொண்டுசென்றார். ஒடுக்கப்படும் சிங்கள மக்களுக்காகப் பாராளுமன்ற்றத்தில் பேசினார். சிங்கள அதிகாரவர்க்கத்தை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

ரவிராஜின் படுகொலையின் பின்ன்ணியில் ஸ்கொட்லாண் யார்டும் செயற்பட்டதற்கான ஆதரங்கள் கூட வெளிவந்தன.

ரனிலின் தமிழ்ப் பிரதியான ஏகாதிபத்திய அடியாள் சம்பந்தனின் இன்றைய அரசியல் முழு இலங்கையையும் ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்வதற்குப் பயன்படும் என்பதில் சந்தேகங்கள் எழ முடியாது.

Exit mobile version