இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கோ அல்லது அதற்காக முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை என பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சத்தியப்பிரமாண கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வாசிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.
இலங்கையில் பிரிவினையத் தடுக்க வேண்டுமானால் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதைக் கூறுவதற்கு அரசியல் தலைமைகள் இல்லை.
இலங்கையிலுள்ள மலையக, வடகிழக்கு மற்றும் முஸ்லீம் தமிழர்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டால் தேசங்கள் இணைந்த பரஸ்பர சந்தேகங்களற்ற கூட்டாட்சி ஏற்படும்.
தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான பிரிந்து செல்லும் உரிமையை நிராகரித்துப் பிரிவினையைத் தூண்டுவது ரனில் போன்ற பேரினவாதிகளே.
காலனியாதிக்கத்திற்குப் பிந்தய காலம் முழுவதும் இலங்கையைப் பிளவுபடுத்தி ஆட்சி செய்யும் நோக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சிகளே சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமையை மறுத்துவந்தன. அவ்வாறு மறுப்பதன் ஊடாக பிரிவினைத் தீயை எரியவிடன. அதுவே உரிமைக்கான போராட்டமாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் எழுந்தது,