Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டனில் ஆர்ப்பாட்டம்:வேதாந்தவின் சூறையாடலையும் படுகொலைகளையும் நிறுத்து!

இன்று 26.05.18 லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட வேதாந்தா/ஸ்டெரலைட் எதிர்ப்புப் போராட்டம நடைபெற்றது. உணர்ச்சிகரமான இப்போராட்டத்தில் 13 நிராயுதபாணியான ஸ்டெரலைட் போராட்ட முன்னோடிகளையும் அப்பாவிகளையும் திட்டமிட்டுக் கொலை செய்த மோடி மற்றும் தமிழ் நாட்டு அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

லண்டன் பங்கு சந்தையிலிருந்து வேதாந்தாவை நீக்கக் கோரியும், தூத்துக்குடியிலிருந்து வேதாந்தவை வெளியேற்றக் கோரியும் போராட்டத்தில் பதாகைகள் காணப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக வேதாந்தா வியாபாரக் குழுமத்திற்கு எதிராக லண்டனில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் போயில் வேதாந்தா என்ற அமைப்பு, தமிழ் சொலிடாரிட்டி, பிரித்தானிய தமிழ் மக்கள், பறை விடுதலைக்கான குரல் மற்றும் பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடத்திய இப் போராட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தனர்.

பறை விடுதலைக்கான குரல் அமைப்பின் பறை இசையின் அதிர்வு போராட்டம் நெடுகிலும் தூதரகத்தின் முன்னால் சென்ற மக்களைக் கவர்ந்திழுத்தது.

இந்தியாவில் கோலோச்சும் இந்து பாசிசத்தையும் தமிழ் நாட்டில் நடைபெறும் எடப்பாடி பினாமி ஆட்சியையும் அவர்கள் இணைந்து நடத்க்திய கோப்ரட் சூறையாடலையும் கொலைகளையும் மக்கள் அறிந்துகொள்ள இப் போராட்டம் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது.

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

e

போராட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் அமைப்பாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்தனர்.

Exit mobile version