பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டன. மோடி, திரும்பிப் போ என்ற முழக்கம் இன்று லண்டனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துகொண்டது.
முசோலீனி, ஹிட்லர் போன்றவர்களின் வழியில் இந்து இந்தியாவைக் கட்டியெழுப்புவோம் என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆர்.ஏஸ்.எஸ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரான மோடி குஜராத்தில் இனப்படுகொலையைத் திட்டமிட்டு தலைமை தாங்கி நடத்தினார். ஆர்.எஸ்.எஸ் இன் தோழமை அமைப்பான பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளாரக் மோடி தெரிவு செய்யப்பட்ட போது, உலகம் முழுவதிலும் பல்தேசிய நிறுவனங்கள் மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி வழங்கின.
ஈழப் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறும் புலம் பெயர் தேசியக் கோமாளிகள் மோடியை ஆதரித்தனர்.
மேடியின் அரசியல் எதிரணியாகக் கருதப்பட்ட காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே குஜராத் இனப்படுகொலைக் குற்றங்களிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.
இந்து பாசிச அதிகாரவர்க்க அரசியல் மோடியைக் குற்றமற்றவராக்கிற்று. குஜராத் இனப்படுகொலைக் குற்றங்களிலிருந்து மோடியை விடுவித்த அதிகாரவர்க்கம் அவரைப் பிரதமராக்கியதன் ஊடாக தன்னை நிர்வாணமாக வெளிப்படுத்திற்று.
2012 ஆம் ஆண்டு தேர்தலில் கொடிய இனகொலையாளியின் கரங்களில் ‘இந்திய ஜனநாயகத்தின்’ கடிவாளம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அதே இந்திய அதிராகவர்க்கத்தை நிர்வகிக்க ஏற்கனவே கொலைகளின் அனுபவங்களால் புடம்போடப்பட்ட மோடி பிரதமாரன பின்னர், இந்தியா அன்னிய நாடுகளின் கொள்ளைக்கு முன்னெபோதும் இல்லாத அளவிற்குத் திறந்துவிடப்பட்டது.
ஆங்காங்கே சிறிய ஒளிக்கீற்றுகளாகத் தெரிந்த ஜனநாயக இடைவெளி முழுவதுமாக மூடப்படுவதற்கான நடவடிக்கைகளை இனக்கொலையாளி மோடியின் அரசு ஆரம்பித்து.
எது எவ்வாறாயினும் இந்திய ஜனநாயகத்தின் முகத்திரையைக் கிழித்து அதன் கோரத்தை உலகமக்களுக்கு அறிமுகப்படுத்தி, இந்தியாவை அவமானப்படுத்திய ‘பெருமை’ மோடியையே சாரும். இன்று உலகின் அனைத்துப் பல்தேசியக் கொள்ளைக்காரர்களதும், விருப்பத்திற்குரிய மனிதர்களில் மோடி முக்கியமானவர்.
மோடி போன்ற தீவிர வலதுசாரிகளோடு மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட ஈழப் போராட்டம் அதன் திசை வழியை மாற்றிக்கொள்வதற்கான ஆரம்பமாக இன்றைய ஆர்பாட்டம் அமைய வேண்டும்.