உண்மையில் இந்தச் செய்தி போர்குற்றம் நிகழ்ந்து இருக்கின்றது என்பதையே சொல்லுகின்றது . போர்முடிந்த பின், மே 17,18,19 இல் பல விடுதலை புலிகள் கொல்லப் பட்டதாக இலங்கை அரசு கூறி இருந்தது . ஆகவே போர் முடிந்த பின் பலர் கொல்லப் பட்டனர் என்கின்ற செய்தியை சரத் பொன்சேகா சொல்கின்றார் . இந்த எளிய விடயத்தை கூட தமிழர் தரப்பால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது பெரும் அவலமே.
தனி மனித புரிதல் , ஒரு இனத்தின் கூட்டு புரிதல் என்பதில் எமது வெற்றி என்பது கேள்விக் குறியே. இப்படியாக இனத்தின் இயங்கியல் யதார்த்தங்களை புரிதல் என்பதிலும் தமிழ் மக்களும் அவர்களின் போராட்ட அரசியலும் இதுவரையில் மிகச் சரியான அறிவியல் சார் புரிதலை கொண்டிருக்கவில்லை என்பதே தமிழ்மக்களின் விடுதலை போராட்டத்தின் தோல்வியாகும் .
தமிழர்களின் கூட்டுப் புரிதல் என்பது மனச் சிதைவுகளுக்கு உட்பட்டது . அது அரசியல் வழி ஆயுத வழி புரட்சியாளர்களாலும் சரி செய்யப்படவில்லை . சிவில் சமூகம் மற்றும் அதன் மூத்த அறிவியல் சார்ந்த குழுமங்களும் இதனை சரி செய்யும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை என்பது தமிழ் இனத்தின் சாபக் கேடு .
தமிழ் இனத்தின் சாபக் கேடு – S.G. ராகவன் (கனடா)