முதலிரண்டும் நேரடியாகப் பல்தேசிய வர்த்ததோடு தொடர்புடையது, சிறீ லங்கா ரெலிகொம் உலகை இணைக்கும் கடலடித் தொடர்பின் தெற்காசிய மையமாக மாறி வருகிறது. அதற்கான திட்டத்தின் ஐந்தாவது பகுதி இப்போது நடைபெறுகின்றது. அணு சக்தி ஒப்பந்ததின் பின்னணியை இதுவரையில் எந்த அரச அதிகாரியும் தெரிவிக்கவில்லை. மின்வலு அமைச்சராகப் பதவிவகித்த சம்பிக்க ரணவக்க கூறிய போது இலங்கை மின் கழிவுகளை வெளியேற்றும் பிரதேசமாக மாற அனுமதிக்க முடியாது என்று மட்டும் தெரிவித்தார்.
இப்போது சம்பூரில் திரும்பியிருக்கும் மைத்திரியின் கவனமும் மக்களுக்கானதல்ல. சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைக்கும் பணி திட்டமிட்ட வகையில் நடைபெறுகின்றது. மின் நிலையப் பணிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிகும் நிலை ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்க நடவடிக்கையே சம்பூரிற்கான மைத்திரியின் அவசரப் பயணமா என்ற சந்தேகங்கள் பல தரப்புக்களாலும் எழுப்பபடுகின்றன. போலி தமிழ்த் தேசியவாதிகள் இவை குறித்துத் துயரடைவது கிடையாது.
உலக நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தியாக மாறும் இலங்கை:அருவருக்கும் உண்மை
இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி சிரிசேன கைப்பற்றிய மல்ரி பில்லியன் வியாபாரம்
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
அனல்மின் நிலையம் அமைக்க இந்திய குழு இலங்கை வருகை:சம்பூர் மக்கள் எதிர்ப்பு.
இந்திய மறுகாலனியாக்கம் : அர்ச்சுதன்