Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாபர் மசூதிக்குள் அழைபின்றி நுளைந்த இந்திய அவமானம்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகவும், அது ராமர் பிறந்த இடம் என்றும் கூறப்பட்டது. வலதுசாரி RSS, BJP இந்துத்துவா கும்பலால், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. முஸ்லிம் ஆட்சியாளர்களால் இங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக அவர்கள் கூறினர்.
வரலாற்றில் சாதி வெறியனாகவும் ஆணாதிக்கவாதியாகவும் உருவகப்படுத்தப்பட்ட சனாதன ஒடுக்குமுறையின் கற்பனைக் கதாபாத்திரமான இராமன் பிறந்த இடம் அயோத்தி என அக்கும்பல் கூச்சலிட்டது. 1500 பேர்வரையிலான கூட்டம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி கும்பலால் வழி நடத்தப்பட்டது. பின் தங்கியிருந்த கற்கால காட்டுமிராண்டி மனிதனிடமிருந்து கூட்டு வாழ்க்கை முறையை நீக்கிவிட்டால் தோன்றக் கூடிய ஒரு கூட்டம் போல அது காணப்பட்டது.
அக்காட்டுமிராண்டிகளின் இன்றைய தலைவர் நரேந்திர மோதிக்கும் அத்வானியைப் போன்றே அந்த அழிப்பில் பங்குண்டு என்கிறார்கள்.
பல நடு நிலையான தொல்லியல் ஆய்வாளர்கள் பாபர் மசூதியின் கீழே ராமர் கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்கிறார்கள்.
முதலாளித்துவமும் சந்தைப் பொருளாதாரமும் தோன்றியதே நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் இடிபாடுகளில் இருந்துதான். நிலப்பிரபுத்துவ காலத்தில் பண்பாடு (Tradition) என்பது மக்கள் கூட்டங்களை இணைக்கும் ஒரு கூறாக இருந்தது, அது மையப் பேரரசுகளை நோக்கி இசைவாக்கம் அடைந்திருந்தது, முதலாளித்துவ பொருளுற்பத்தி தோன்றிய பின்னர் பல பண்பாட்டுக் கூறுகள் ஒருங்கிணைந்து கலாச்சாரமாக(Culture) மாறியது.
இந்தியாவில் இன்னும் பின் தங்கிய நிலப்பிரபுத்துவக் கூறுகள் காணப்பட்டாலும் அது முதலாளித்துவத்தை நோக்கி இயல்பாக வளர்ந்து செல்வதை இப் பண்பாட்டை மீளமைக்கக் கோரும் பாசிஸ்டுகளால் தடுக்கப்படுகின்றது.
பிரான்சு நட்டில் முதலாளித்துவம் தோற்றம் பெற்ற காலத்தில் சில கிறிஸ்தவ தேவாலயங்கள் அழிக்கப்பட்டன, அவ்ற்றை மீளமைக்குமாறு இன்று இங்கிலாந்து கோரினால் அதனை இலங்கிலாந்து மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் கலாச்சாரம் என்பது பல்வேறு பண்பாடுகளின் தொகுப்பே என அறிந்து வைத்திருக்கிறார்கள்.
பாபர் மசூதி இசுலாமியர்களுக்கானது என்பதே இன்றைய கலாச்சாரம் கூறுகிறது அதன் ஆழத்தில் சென்று தமது பண்பாட்டைத் தேடும் இந்துத்துவாவை உலக மக்கள் ஏளனம் செய்கிறார்கள். முதலாளித்துவத்தின் அடிப்படை ஜனநாயகத்தையே கேள்விக்கு உள்ளாக்கி மன்னர் காலத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் இந்தியாவிற்கு மட்டுமல்ல தெற்காசியாவிற்கே ஆபத்தானது. உலகின் தெற்கு பக்கத்தில் உருவாகியிருக்கும் அணுகுண்டு.
இந்தப் பின்னணியில் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்ற தெற்காசியாவின் அரசியல் கோமாளி, நேற்று 07.08.2020 பாபர் மசூதிக்குள் நுளைந்து இந்திய அவமானத்தை ராமர் கோவிலுக்கான அடிக்கல்லாக நாட்டி வைத்திருக்கிறார்.
இலங்கையில் ராஜபக்ச பாசிச அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொண்ட அதே தினத்தில் இந்திய பாசிஸ்ட் மோடியின் வாழ்த்தே முதலில் வழங்கப்பட்டது. அதே நாளில் தான் மசூதிக்குள் நுளைந்த மோடி மனித குலத்தின் அவமானத்தை விதைத்திருக்கிறார்.

Exit mobile version