Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லைக்கா-ராஜபக்ச ஊழலை வெளிக்க்கொண்டுவந்த மந்தனா இஸ்மாயில் சண்டேலீடரின் புதிய ஆசிரியர்

மகிந்த ராஜபக்ச அரசினால் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவால் ஆரம்பிக்கப்பட்ட சண்டே லீடர் செய்தி இதழின் புதிய ஆசிரியராக மந்தனா இஸ்மாயில் பொறுப்பேற்றுள்ளார். லசந்த விக்கிரமதுங்கவின் ஆசிரியர் குழுவில் மந்தனாவும் ஒருவர். மைத்திரிபால சிரிசேனவின் நல்லாட்சி அரசு லசந்த விக்கிரமதுங்கவின் அறியப்பட்ட கொலையாளிகளக் கூட சட்டத்தின் முன் நிறுத்தத் தவறியுள்ள நிலையில் சண்டே லீடர் புதிய நம்பிக்கைகளுடன் புதிய வடிவில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகொலையின் சூத்திரதாரி எனக் கருதப்படும் கோத்தாபய ராஜபக்சவும் அவரது குடும்பமும் இன்னும் அதிகார சுதந்திரத்தை அனுபவிக்கும் அதே வேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமது அதிகாரத்தை மீளமைக்க முயற்சிக்கும் எனக் கருதப்படுகின்றது.

லைக்கா மோபைல் நிறுவனத்திற்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் இடையேயான வியாபாரத் தொடர்பை வெளிக்கொண்டு வந்தவர்களில் பிரதானமானவர் மந்தனா இஸ்மாயில் என்பதால் அவரும் ராஜபக்ச குடும்பத்தால் கொலை மிரட்டலுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கைநெட்வேர்க்ஸ் என்ற போலி நிறுவனத்தை உருவாக்கி அதனூடான லைக்கா- ராஜபக்ச ஊழல் எவ்வாறு நடைபெற்றது என்ற விபரத்தை மந்தனா ஆதாரபூர்வமாக எழுதியிருந்தார். சண்டேலீடரில் வெளியான இக்கட்டுரையின் பின்னர் ராஜபக்ச ஆட்சி மந்தனாவைக் குறிவைத்திருந்தது. அவரது வீடு தாக்கப்பட்டது. கத்தி முனையில் மிரட்டப்பட்டார். கொலை மிரட்டல்களின் பின்னர் தனது 12 வயது மகன் மற்றும் கணவருடன் நாட்டை விட்டு வெளியேறிய மந்தனா இப்போது மீண்டும் இலங்கை சென்றுள்ளர்.

மந்தனாவின் மீதான மிரட்டல் தற்காலிகமாக நீங்கியிருந்தாலும், அடிப்படை ஜனநாயகத்தின் மீதான மிரட்டல் தொடர்கிறது.

மந்தானாவின் லைக்கா ராஜபக்ச-கட்டுரை:

http://www.thesundayleader.lk/2009/11/29/slt%E2%80%99s-wimax-cross-connection/

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
Exit mobile version