Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சமூகவிரோதி ரஜனிக்கும், தூத்துக்குடிப் படுகொலைகளை நடத்திய வேதாந்தாவிற்கும் என்ன தொடர்பு?

காலா திரைப்படம் ரஜனியின் திரைப்படம் என்று சிலரும், இயக்குனர் ரஞ்ஜித்தின் திரைப்படம் என்று சிலரும் நம்புகின்றனர்.அவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள்.

காலா வெளியிடப்படுவதற்கு முன்பதாக அதன் கதாநாயகன் ரஜனி தூத்துக்குடி-வேதாந்தா படுகொலைகளின் பின்னணியில் சமூகவிரோதிகளின் செயற்பாடே காரணம் என்று ஊடகவியலாளர்களை மிரட்டிய சம்பவம் பார்ப்பனீய அதிகாரத்தோடு நெருங்கிய தொடர்புடையது என்பதற்கும், ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் இந்திய அடியாள் அமைப்புகளோடு தொடர்புடையது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.

காலா திரைப்படத்தைத் தயாரிப்பவர்கள் லைக்கா நிறுவனம், அதன் பின்னர் இந்தியாவில் அதிக செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமான ரஜனியின் 2.0 உம் லைக்காவே தயாரிக்கிறது.

பிரித்தானியவிலிருந்து(UK) பார்ப்பனீயத்தால் இயக்கப்படும் ரஜனி…

பிரித்தானியாவில் ஆளும் அதிகாரவர்க்கத்திற்கு நெருக்கமான மதவாத அமைப்பு ஒன்று உள்ளது. கிருஷ்னரின் உணர்வுகளுக்கான சர்வதேச சமூகம் (International Society for Krishna Consciousness – ISKCON)என்ற பெயரில் இயங்கும் அந்த அமைப்பு ஹரேராம ஹரேகிருஷ்ண என்ற நிறுவனத்தையும் தன்னகத்தை கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் ஆ.எஸ்.எஸ் உடனும் பாரதீய ஜனதாக் கட்சியுடனும் நெருங்கிய உறவைப் பேணும் அந்த அமைப்பானது, பிரித்தானியாவை மையமாகக்கொண்டு இந்தியாவைச் சுரண்டும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது.

ISKCON என்ற பார்ப்பனீய மதவெறி அமைப்பே India Infrastructure Finance Company Ltd, Overseas Indian Facilitation Centre (OIFC)  போன்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் வேலையையும் செய்கிறது.

இந்தியாவில் வர்க்க முரண்பாடுகளை மதவாதமாகவும், இனவெறியாகவும் மடைமாற்றி மக்களைச் சுரண்டுவதற்காக இந்துத்துவா என்ற தத்துவம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் நாட்டில் நடிகர்கள் வடிவில் மதவெறியையும், உணர்ச்சியைத் தூண்டி மக்களிளை ஏமாற்ற இனவாதமும் பயன்படுகிறது.

இந்தியாவினது மட்டுமல்ல தெற்காசியாவின் இன்றைய பிரதான எதிரி இந்துத்துவா மதவாதமே என்றால் அது மிகையற்றது. ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா தலைமையிலான இந்த மதவாதத்தின் மறுமுனை பிரித்தானியாவில் கட்டியெழுப்பப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியெறிய போது, இந்தியாவைப் பயன்படுத்தி பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிடலாம் என்ற கருத்தை பல அரசியல்வாதிகளும் பொருளாதார வல்லுனர்களும் முன்வைத்தனர். அதன் பின்னரே பிரித்தானியாவில் குடிகொண்டிருக்கும் இந்திய பல்தேசிய வியாபாரிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத முன்னுரிமை வழங்கப்பட்டது.

அவர்களை ஒன்றிணைக்கும் கருவியாக இந்துத்துவ மத அடிப்படைவாதம் பயன்படுத்தப்பட்டது. மதவாதக் கருத்துக்களை நிர்வகிகிப்பதற்கும், பிரித்தானிய இந்திய கோப்ரட்களை ஒருங்கிணைப்பதற்கும் ISKCON (International Society for Krishna Consciousness  பயன்படுத்தப்பட்டது.

இந்தியப் பிரதமர் சர்வாதிகாரி மோடி 2015 ஆண்டில் பிரித்தானியாவிற்கு வந்த வேளையில் ISKCON  அமைப்பின் தலைவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன்  தலைமையில் மோடியைச் சந்திப்பதற்கு தயார்செய்யப்பட்டனர்.

அவர்களுள் இரண்டு முக்கிய புள்ளிகளை நாம் அடையாளம் கண்டுகொள்ளல்லாம். முதலாவதாக தூத்துக்குடிப் படுகொலைகளை நிகழ்த்திய வேதாந்தாவின் தலைவர் அனில் அக்ரவால். இரண்டாவதாக ரஜனியின் காலா மற்றும் 2.0 திரைப்படத் தயாரிப்பாளர் அலிராஜா சுபாஸ்கரன். மேலுள்ள படத்தில் லைக்கா மற்றும் வேதாந்தா ஆகியவற்றின் உரிமையாளர்கள், இந்துத்துவ காவிகளோடு இணைந்திருப்பதைக் காணலாம். அவர்களை ISKCON அமைப்பின் தலைவர்கள் எனக் குறிப்பிடுவதைக் கீழுள்ள இணைப்பில் காணலாம். இப்போது ரஜனிகாந் ஏன் போராடிய மக்களைச் சமூகவிரோதிகள் என்று திட்டியதற்கான காரணம் வெளிப்படையானது.

இன்று ரஜனியே எமது இந்தச் சமன்பாட்டின் உள்ளூர் எதிரி என்றாலும், லைக்கா நிறுவனம் கத்தி திரைப்படத்தைத் தயாரித்த போது சீமான் குழு பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சுபாஸ்கரனை நியாயப்படுத்தியதையும் மறந்துவிடலாகாது.

ஆக, ரஜனிகாந் ரஞ்சித் என்ற தலித் ஒருவரை வைத்து அவரது திரைப்படத்தை இயக்கினாலும், ரஜனியை இயக்குவது இந்துத்துவாவும் அதனோடு தம்மை இணைத்துக்கொண்ட வேதாந்தாவும் லைக்காவும் மட்டுமே.

https://iskconnews.org/new-photos-released-iskcon-leaders-meet-indian-pm-modi-and-uk-pm-david-cameron,5248

Exit mobile version