Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வட மாகாண சபையின் ஏமாற்று நடவடிக்கைக்கு நீதி மன்றத்தின் தீர்ப்பு : மக்களின் அவலம் தொடர்கிறது

northern-provincial-councilயாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி நிலத்தையும் நீரையும் அழித்து மக்கள் வாழ்வதற்கு இயலாத சூழலாக அப்பகுதியை மாற்றிய எம்.டிரி வோக்கஸ் என்ற நிறுவனம் இன்று இலங்கையில் சுதந்திரமாகத் தனது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மக்களுக்கு எந்தவகையான இழப்பீடும் வழங்காமல், தன் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு விக்னேஸ்வரன் – ஐங்கரனேசன் ஊழல் கும்பல் துணை சென்றது. போலித் தேசியம் பேசி மக்களை ஒரு புறத்தில் ஏமாற்றும் இக் கும்பல்கள் மறுபுறத்தில் இந்த நிறுவனத்தின் பணத்திற்காக இரண்டு லட்சம் மக்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் எம்.டி.ரி வோக்கஸ் இன் நடவடிக்கையினால் சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதிபார கழிவு எண்ணையே நீரை நச்சாக்கக் காரணமாக அமைந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆய்வுகளைத் தவிர்க்க முடியாமல் ஒப்புக்கொண்ட இலங்கை அரசு மக்கள் சுத்தமான குடி நீர் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தப்போவதாக அறிவித்தது.

அந்த நிலையில் நிறுவனத்தைக் காப்பாற்றும் முயற்சியல் இறங்கிய ஐங்கரநேசன் – விக்னேஸ்வரன் கும்பல் முதலில் தமது அவுஸ்திரேலிய ஏவலாளிகளின் துணையுடன் போலி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. பின்னதாக போலி நிபுணர் குழு ஒன்றை ஏற்பாடு செய்து நீரில் கழிவு எண்ணை நச்சுக் கழிவுகள் இல்லை என அறிவித்தது.

சுன்னாகம் பகுதியில் ஆரம்பித்த கழிவு டீசல்  சுண்ணாம்புப் பாறைகளின் வழியாக இன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீரை நஞ்சாக்கிக்கொண்டிருக்கிறது. கொக்குவில் இன் எல்லைப் பகுதிவரை வழிந்தோடியுள்ள நஞ்சு சுத்திகரிக்கப்படாவிட்டால் அழிவுகள் அதிகமாகும்.

இந்த நிலையில், இந்நிலையில் தெல்லிப்பழை பொதுச்சுகாதார பரிசோதகர் இராஜமேனகனால் பொதுமக்கள் நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் 2016 மே 3 ஆம் திகதி பிறப்பித்த கட்டளை கீழே தரப்படுகிறது.
நீதிவான் நீதிமன்றம், மல்லாகம்

மாண்புமிகு நீதிவான் அ. யூட்சன் அவர்கள் முன்னிலையில்

வழக்கு இலக்கம் AR/1471/14
03.05.2016
கட்டளை
மல்லாகம் மற்றும் தெல்லிப்பளை பொதுச் சுகாதார பரிசோதகரால் நீதிமன்ற வளாகத்தில் காணப்படுகின்ற கிணறுகளில் நீருடன் ஓயில் கலந்துள்ளதை அவதானித்த நீதிமன்ற பதிவாளரினால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டு அவர்களால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கிணறுகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு இது தொடர்பிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றது.

இந்த வழக்கில் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள் அமைந்த பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் கழிவு ஓயில், கிறீஸ் என்பன கலந்துள்ள விடயம் தொடர்பில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று சில அறிக்கைகளும் நீதிமன்ற அனுமதி பெறப்படாமல் பல்வேறுபட்ட தரப்பாலும் அறிக்கைகள் பெறப்பட்டு சில நீதிமன்ற வழக்கேட்டிலும், ஏனையவை பல்வேறு ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரணானவையாகக் காணப்படுகின்றன. அதில் சில அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த அறிக்கைகள் எதுவும் குறிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் காணப்படுகின்ற நீரை மக்கள் அருந்தலாமா? அருந்தக்கூடாதா? என்ற விடயம் தொடர்பில் தெளிவான ஒரு முடிவை எந்த அறிக்கைகளும் வழங்கவில்லை. அத்தோடு எந்த ஒரு அறிக்கையும் முழுமையான அறிக்கையாகவும் காணப்படவில்லை. பல்வேறுபட்ட அறிக்கைகள் பெறப்பட்டிருந்தாலும் இதுவரை இந்த கழிவு ஓயில் மற்றும் கிறீஸ் என்பன எங்கு இருந்து வந்து நீரில் கலந்துள்ளது என்பதோ? இவை எந்த நிறுவனங்களில் கழிவு அகற்றல் செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாக இது நிலத்தடி நீரில் சேர்ந்துள்ளது என்பதை எந்தவிதமான அறிக்கைகளிலும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் பெரும்பாலான அறிக்கைகளில் நொதேண் பவர் மின்உற்பத்தி நிலையத்தினை அண்டிய பகுதிகளில் இருந்து ஓயில் மற்றும் கிறீஸ் என்ப நிலத்தடி நீரில் சேர்ந்திருக்க வாய்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. இந்த ஓயில் கலப்பானது எங்கு இருந்து அல்லது எந்த மூலத்தில் இருந்து நிலத்தடி நீரில் கலந்துள்ளது என்பதைக் கண்டறிய வேண்டியது மிகமுக்கியமான விடயமாகும்.

வடமாகாண சபையின் அமைச்சர் ஒருவருக்கு மன்றினால் அழைப்புக்கட்டளை விடுக்கப்பட்டு அவரிடம் சில விளக்கங்கள் கோரப்பட்ட பொழுது தான் தனிப்பட்ட முறையில் எந்த அறிக்கைகளையும் தயாரிக்கவில்லை என்றும், வடமாகாணசபையின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தன்னால் அறிக்கைகள் பெறப்பட்டது என்றும், வடமாகாணசபையானது நிலத்தடி நீரில் கிறீஸ் மற்றும் ஓயில் கலந்த விடயத்தில் இந்த ஓயில் எவ்வாறு நிலத்தடி நீரில் கலந்துள்ளது என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே யாழ்ப்பாண மேல்நீதிமன்றப் பதிவாளருக்கு வடமாகாணசபையின் அவைத்தலைவரால் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் நிலத்தடி நீரில் எங்கு இருந்து ஓயில் மற்றும் கிறீஸ் கலந்துள்ளது என்பது அறியப்பட வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். எனவே இன்று வடமாகாணசபையின் பிரதம செயலாளருக்கு மன்று பின்வருமாறு கட்டளை ஆக்குகின்றது.


Exit mobile version