Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் ஜல்லிக்கட்டு வன்முறை பொலீஸ் அதிகாரி

கடந்த வருடம் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியில் ஆரம்பித்து பதினைந்து நாட்களுக்கும் மேலாக தமிழகத்தை மட்டுமன்றி இந்தியா முழுமையையுமே குலுக்கிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் பாரதீய ஜனதாக் கட்சியின் இயக்கத்தில் செயற்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆணையின் கீழ் தமிழ் நாடு காவல் துறையால் மூர்க்கமாக ஒடுக்கப்பட்டது.

பொதுச் சொத்துக்களையும் பொதுமக்கள் குடியிருப்புக்களையும் போலிஸ் படையே அழித்துத் துவம்சம் செய்த காணொளிகள் வெளியாகின. அப்போது களத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சாதாரண காவல் துறை ஊழியர்கள் மட்டுமல்ல; உயர்மட்டத் தலைவர்களும் தான். அப்போது காவல்துறை ஆணையாளராகவிருந்த வீ.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் போலிஸ் வன்முறைக் கும்பலோடு களத்தில் நின்று வன்முறைகளிஉல் ஈடுபட்ட காணொளிகள் இன்றும் வலைத் தளங்களில் காணக்கிடைக்கிறது.

எந்த வலுவான காரணமும் இன்றி, நீதி மன்ற உத்தரவைவும் மீறி, தமிழக அரசால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருக்கும் திருமுருகன் காந்தி ஐரோப்பாவில் தங்கியிருந்து தூத்துக்குடிப் படுகொலைகளை ஐ.நா மனித உரிமை ஆணையக்த்திற்கு எடுத்துச் சென்றார். அவ்வேளையில் அங்கு சென்ற வீ.பாலகிருஷ்ணன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசைத் தண்டிப்பதற்கு தன்னிடம் திட்டம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் நாட்டிற்குச் சென்ற திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பாலகிருஷ்ணன் செயற்பட்டாரா என்பது குறித்த தகவல்கள் எம்மிடமில்லை.

இதே பேர்வளி கடந்த வராம் செப் 22ம் திகதி, இந்தியர்கள் அதிகமாக வாழும் சவுத்தோல் பகுதியில் இலங்கைத் தமிழர் உணவு விடுதியொன்றில் ஒன்று கூடல் ஒன்றை நடத்தியிருக்கிறார். மேற்படிப்பிற்காக லண்டனில் தங்கியிருக்கும் பாலகிருஷ்ணன், “இனப்படுகொலையும் புலம்பெயர் தீர்வும்” என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றை தனது மேற்படிப்பு பல்கலைகழகத்தில் சமர்பித்துள்ளார். இனப்படுகொலைக்கான தீர்வு அதில் அடங்கியிருப்பதாகவும் அதற்கான நடைமுறைத் திட்டங்களை முன்வைப்பதாகவுமே தனது ஒன்று கூடலை நடத்திய பாலகிருஷ்ணன் பின்னாலும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் அணிவகுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே இந்திய அரசினதும் அதன் உளவுத்துறையினதும் தலையீடு முள்ளிவாய்கால் வரை தொடர்ந்தது, அமைதிப்படை என்ற பெயரில் நடத்திய இராணுவ ஆக்கிரமிப்பு யுத்தம் மட்டுமன்றி ஈழப் போராட்டத்தை இந்திய பிற்போக்கு மதவாதிகளின் கரங்களில் கொண்டு சேர்ப்பது வரைக்குமான இந்திய அதிகாரவர்க்கத்தின் அரசியலின் ஒரு முகவரே பாலகிருஷ்ணன். தவிர கலைஞர் கருணாநிதியின் மரணத்தின் பின்பான அரசியலில், சீர்திருத்தவாத் இயக்கங்களான திராவிடர் இயக்கங்களுக்கு எதிரான அரசியலை முன்வைப்பதற்கு மதவாதிகளோடு “தமிழ்த்” தேசியவாதிகள் ஒன்றிணைவதையும் இந்தப் பின்புலத்திலேயே ஆராயவேண்டும்,

Exit mobile version