Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள்

உடகத் துறையில் நீண்ட வரலாற்றைக்கொண்ட ஊடகவியலாளர் தினேஷ் குமார் ஐ.பி.சி (IBC)தமிழ் தொலைக்காட்சியில்ருந்து நீக்கப்பட்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்துமாறு கட்டளையிட்ட ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகம் ஓர் இரவிற்குள் இந்த முடிவை எடுத்திருந்தது. இன்று சனிக்கிளமை நடைபெறவிருந்தத நேருக்கு நேர் நிகழ்ச்சியை நிறுத்துமாறு பணித்த ஐ.பி.சி தமிழ், இறுதியாக நடைபெற்ற அவரது நேரலை நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் நீக்கப்பட்டார்.

ஜி.ரி.வி மற்றும் தீபம் தொலைக்காட்சி சேவைகளிலும் ஊடகவியலாளராகப் பணியாற்றிய தினேஷ், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

தினேஷ் இற்கு முன்னதாக ஐ.பி.சி இல் பணியாற்றிய பல முழு நேர ஊடகவியலாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இன்று, புலம்பெயர் நாடுகளில் தொழில் முறை ஊடகவியலாளர்கள், ஐ.பி.சி இல் மட்டுமே தங்கியிருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளதால், இவர்களின் அடிப்படை வாழ்க்கை இன்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியினை உள்வாங்க முற்பட்ட இன்றைய ஐ.பி.சி தொலைக்காட்சியின் உரிமையாளர், அம்முயற்சியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஐ.பி.சி என்ற வானொலியைக் கொள்வனவு செய்து அதனை ஐ.பி.சி தொலைக்காட்சியாக மாற்றினார்.

தமிழ் வின் உட்பட அதனோடு இணைந்த பல்வேறு இணையங்களையும் அண்மையில் உரிமையாக்கிக்கொண்ட ஐ.பி.சி நிர்வாகம் இன்று புலம்பெயர் தமிழ் ஊடகக் ‘கோப்ரட்’ ஆக மாற்றம் பெற்றது.

ஆரம்பத்தில் பல்வேறு ஊடகங்களிலிருந்த ஊடகவியலாளர்களையும் உள்வாங்கிக்கொண்ட ஐ.பி.சி, படிப்படியாக அவர்களின் வேலை நேரங்களைக் குறைக்க ஆரம்பித்தது. வேலைக் குறைப்பின் பின்னரும், வேறு தொழில் சார் ஊடகங்கள் அற்ற நிலையில், ஐ.பி.சி இல் தொங்கிக்கொண்டு வாழ்கை நடத்த வேண்டிய நிலைக்கு ஊடகவியலாளர்கள் உந்தப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் மத்தியிலிருந்தோ மக்கள் மத்தியிலிருந்தோ எதிர்ப்புக்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தமது ஊழியர்கள் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்ய ஐ.பி.சி ஆரம்பித்தது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊடகவியளார்களின் வெற்றிடத்தை நிரப்ப, மலிந்த கூலியில் புதிய ஊடகவியலாளர்களை உள்வாங்கிக்கொண்ட ஐ.பி.சி, தனது யாழ்ப்பாண கிளையைப் பயன்படுத்தியும், நிகழ்ச்சிகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

தவிர, அரசியல் நிகழ்ச்சிகளை பொழுது போக்கு நிகழ்ச்சிகளாக மாற்றி, புதிய மாற்றங்களையும் ஐ.பி.சி தொலைக்காட்சி உருவாக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு இரவிற்குள் ஐ.பி.சி இலிருந்து தினேஷ் நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதனையும் முன்வைக்காத ஐ.பி.சி உரிமையாளர்கள், ஐ.பி.சி இன் கொள்கை வரபு ஒன்றைத் தயாரித்த பின்னர் தினேஷ் ஐ தொடர்பு கொள்வதாகக் கூறியுள்ளனர்.

ஐ.பி.சி இலிருந்து ஊடகவியலாளர்கள் தொடர்ந்து நீக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்கள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை எனினும் புலம்பெயர் அமைப்புக்களின் ஊடகக் குரலாக தினேஷ் போன்றவர்கள் இதுவரை செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version