Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொடி வியாபாரிகள் புறக்கணித்த போராட்டம்!

protest22.05.2016நினைவு நிகழ்வுகளுக்கு அப்பால் புலம்பெயர் நாடுகளில் அவ்வப்போது போராட்டங்களும் நடத்தப்படுவதுண்டு. அவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் நேற்று ஞாயிற்றன்று (22.05.2016) நாடு கடந்த தமிழீழத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக தொடர்ச்சியான திட்டங்கள் எதுவுமின்றி இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், புலம்பெயர் மக்கள் அழிக்கப்படும் தேசிய இனத்தின் ஒரு பகுதி என்பதை நினைவுபடுத்தும் குறியீடுகளாக இவற்றைக் கருதலாம்.

பணம் புரளும் நினைவஞ்சலிகளுக்கு சமூகமளிக்கும் தலைவர்கள், பிரபலங்கள், ‘தேசிய வியாபாரிகள்’ இவ்வாறான போராட்டங்களின் பக்கம் தலைகாட்டுவதில்லை. போராட்டங்களை ஒழுங்கமைக்கும் தலைவர்களில் பலரை அங்கு காணக்கிடைப்பதில்லை.

இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், இலங்கையில் நடைபெறும் கைதுகள் கடத்தல்களுக்கு எதிராகவும், நிலப்பறிப்பிற்கும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் இப் போராட்டம் நடைபெற்றது.

அகதிகளைத் திருப்பியனுப்பும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் பிரித்தானிய அரசின் பிரதமர் இல்லத்திற்கு முன்னால் நடைபெற்ற இப்போராட்டம் பொருத்தமான உள்ளடக்கத்தை கொண்டிருந்தது.

மே மாதம் 18 ம் திகதி நடைபெற்ற மாவீரர் தினத்தில் புலி இலச்சனை பொறித்த கொடியை ஏந்தவில்லை என வன்முறையில் ஈடுபட்ட ஒருவர் கூட இப் போராட்டத்தில் கலந்துகொள்ள்வில்லை. இவ்வாறான போராட்டங்களில் ஒரு சிறிய வருமானம் கூடக் கிடைக்காது என்பதே இதற்கான காரணமாகவிருக்கலாம்.

தொடர்புடைய பதிவுகள்:

புலம்பெயர் அமைப்புக்களிடையே வலுவடையும் அருவருக்கும் மோதல்: உளவு நிறுவனங்கள் பின்னணியில்

பிரித்தானிய உளவுப்படையின் அடியாட்களாக மாறிப்போன TCC- இன்னொரு முள்ளிவாய்க்கால் தயாராகிறது:ரஞ்சித்
புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் (பாகம் 2)
புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் : இனியொரு…
Exit mobile version