Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏழ்மையச் சூறையாடும் பிரித்தானிய வரவு செலவுத் திட்டம்: சமூகநல அரசுகளின் முடிவு

George-Osborneசமூக நல அரசு –Welfare States- என்ற கோட்பாடு 1960 களில் ஐரோப்பா முழுவதும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஊதியம் குறைந்தவர்களுக்கும், வேலையற்றோருக்கும், வசதி குறைந்தவர்களுக்கும் சமூகத்தில் ஏனையவர்களுக்குக் கிடைக்கும் அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான கோட்பாடே சமூக நல அரசுகள் எனப்படுகின்றது.

நேற்று -08.07.201- பிரித்தானியாவில் சமர்ப்ப்பிகப்பட்ட வரவு செலவுத் திட்டம், சமூக நல அரசுகளை அழிப்பதற்கான செயற்பாட்டின் முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றது.

அரச செலவீனங்களிலிருந்து 12 பில்லியன் ஸ்ரேளிங் பவுண்ட்ஸ் பணத்தைக் குறைப்புச் செய்து பிரித்தானிய அரசு முன்வைத்த வரவு செலவுத்திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏழைகளை நடுத்தெருவில் விட்டுள்ளது.

பிரித்தானிய அரசின் நிதித்துறை அதிபர் ஜோர்ஜ் ஒஸ்போர்ன்ண் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துப் பேசிய போது சமூக உதவித்தொகை குறைந்த நாடாக பிரித்தானியாவை மாற்றுவோம் என்பதைத் தனது முழக்கமாகக் கூறியுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்கப்படக் கூடாது என வரவு செலவுத்திட்டம் கூறுகிறது. வேலைசெய்யும் வயதை அடைந்தவர்களுக்கான உதவித்தொகை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

18 முதல் 21 வரைக்குமான இளைஞர்களுக்கன வீட்டு மானியத் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

இவற்றின் மறுபக்கத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களும், பணம்படைத்த தனி நபர்களும் எந்தவகையான வரி அதிகரிப்புமின்றித் தப்பிக்கொண்டனர்.

அரச கடனை நிவர்த்திசெய்வதற்காக சமூகத்தின் அடி நிலையிலுள்ள மக்களைக் கொள்ளையிட முயலும் பிரித்தானிய அரசு பல்தேசிய வியாபார நிறுவனங்களின் சூறையாடலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

சமூகநல அரசுகளின் தோற்றமும் அழிவும்

‘திறமைக்கு ஏற்ற உழைப்பு, உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்’ என்ற அடிப்படையில் சோசலிச நாடுகளில் அனைவரும் உழைப்பில் ஈடுபட்டனர். சோவியத் ரஷ்யா இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. உற்பத்தி தனியார்களது இலபத்திற்கானது என்ற நிலமை படிப்படியாக நீங்கி மக்களுக்கானது என்ற நிலமை தோன்றியது. தனி நபர் சிலருக்காக உழைத்தல் என்ற சூழல் மாறி தமது சமூகத்திற்காக மக்கள் உழைப்பில் ஈடுபடும் சூழல் தோன்றியது. இதனால் வளர்ச்சி அசுர வேகத்தில் காணப்பட்டது.

குறைவான ஊதியம் பெற்றவர்களின் உழைப்புச் சக்தியை ஊக்கப்படுத்தும் வகையில் உதவிகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின் போது வளங்கள் அழிக்கப்பட்டு, உற்பத்தியும் அபிவிருத்தியும் சிதைக்கப்பட்டிருந்த சூழலில், மீள் கட்டமைப்பிற்காகவும் சமூகத்தில் மக்களை மீள இணைத்துக்கொள்வதற்காகவும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.

இச் சூழலில் சோசலிசக் கோட்பாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் உழைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்திருந்தன.

பாரிஸ் மாணவர் எழுச்சி 1960 களின் இறுதியில் பிரஞ்சு ஜனாதிபதியை நாட்டைவிட்டுத் துரத்தியது. எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தொழிற்சங்கப் போராடங்கள் தீவிரமடைய ஆரம்பித்தன. உழைக்கும் மக்கள் பிரிவுகள் உரிமைக்காகப் போராடின.

இந்த நிலையில் உற்பத்தியைக் கையகப்படுத்தியிருந்த தனி நபர்கள் அச்சமடைந்தனர். பெரு முதலாளிகளின் பிரதிநிதிகளான ஆளும் வர்க்கம் சமூக நல அரசுகளை உருவாக்க ஆரம்பித்தன. அங்கு உழைக்கும் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடாமல் தடுப்பதற்காக அவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. வேலையற்றோருக்கான மானியம், வீட்டு வாடகைக்கான மானியம். ஊதியம் குறைந்தவர்களுக்கான மானியம், உடல் ஊனமுற்றவர்களுக்கான மானியம் என்று உழைக்கும் மக்கள் தமது உரிமை குறித்துச் சிந்திக்க முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டனர். இதனால் சமூக உதவித்தொகையின்றி உழைகும் மக்கள் வாழ முடியாத நிலை ஒன்று தோற்றுவிக்கப்படது.

சோவியத் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் உற்பத்தி சாதனங்களைத் தனியார் மயப்படுத்தி முதலாளித்துவத்திற்குத் திரும்பியதும் சோசலிசம் என்பது மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலை மாறியது. இந்த இடைப்பட்ட காலத்தில், சோசலிசம் கம்யூனிசம் போன்றன ஜனநாயகமற்ற சர்வாதிகாரம் என்று பல பில்லியன்கள் செலவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.கம்யூனிசம் அச்சுறுத்தலாக இருந்த நிலை மாற்றமடைந்ததும், சமூக நல அரசுகளின் தேவையும் அற்றுப்போனது.

90 களின் ஆரம்பத்திலிருந்து சிக்கன நடவடிக்கை என்ற தலையங்கத்தில் சமூக உதவித் தொகைகளை மேற்கு ஏகாதிபத்தியங்கள் குறைக்க ஆரம்பித்தன. படிப்படையாக சமூக நல அரசுகள் என்ற கோட்பாடு அழிக்கப்பட்டது.

இதனால் உழைக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தியும் எழுச்சிகளும் தோன்ற ஆரம்பித்தன. சமூக நல அரசுகளுக்குப் பதிலாக போலிஸ் அரசுகளை உருவக்கி மக்களின் எழுச்சிகளை அழிப்பதற்கு அதிராகவர்க்கம் தயார் செய்துகொள்ளும் நிலை இன்று உருவாகியுள்ளது. கண்காணிப்புக் கமராக்களும், மையப்படுத்தப்பட்ட போலிஸ் கட்டுப்பாடுகளும் திறந்தவெளிச் சிறை ஒன்றை நினைவுபடுத்துகின்றன. மக்களை உளவுபார்க்கும் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ஸ்னோடென் போன்றவர்கள் அரசுகள் மக்களை எவ்வளவு நேர்த்தியாக உளவு பார்க்கின்றன என்பதை ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளதன் பின்னணி சமூக நல அரசுகள் போலிஸ் அரசுகளாக மாறுகின்றன என்பதன் நேரடிச் சாட்சிகள்.

இவை அனத்திலிருந்தும் அனுபவரீதியாக மக்கள் கற்றுக்கொண்டு தனியார் பிடியிலிருந்து உற்பத்தியை விடுவித்து அதனை மக்கள் மயப்படுத்துவார்கள் என்பதை மேற்கு நாடுகள் முழுவதும் நடைபெறும் மக்கள் எழுச்சிகள் கூறுகின்றன.

முதலாளித்துவ அரசுகளின் நிதிப் பயங்கரவாதம் இன்று உச்சமடைந்துள்ளது. பணம் படைத்த சில தனி நபர்களுக்கான நிர்வாக அலகுகளே அரசுகள் என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இனிவரும் காலம் முழுவதும் போலிஸ் அரசுகளுக்கும் உழைக்கும் மக்கள் அணிகளுக்கும் இடையேயான போராட்டமாகவே மேற்கு ஏகாதிபத்தியச் சூழல் நகர்ந்துசெல்லும்.
-NN

Exit mobile version