Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

19 வது திருத்தச்சட்டம் வழங்கும் ஜனநாயக இடைவெளியும் எதிர்காலமும்

19 வது திருத்தச் சட்டத்தின் இறுதித் தீருத்தங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. அளவுக்கு அதிகமான அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டுள்ளது. 19வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நீக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை இலங்கை அரசியலில் தற்காலிக ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆதிக்கவெறியும் அதிகாரமும் கொண்ட அரசியல்வாதிகள் அதிகாரங்களைக் குவித்துகொள்ள மைத்திரிபால சிரிசேன அதிகாரங்களை இழப்பதற்குத் நாட்டைத் தயாராக்கிக் கொண்டமை மக்கள் மத்தியில் அவரைக் கதாநாயகனாக்கியுள்ளது.

இலங்கையில் நடைமுறையிலுள்ள ஒற்றையாட்சி முதலாளித்துவ பாசிச அரசியல் கட்டமைப்பை நிர்வகிப்பதற்கான முறைமையாகவே ஜனாதிபதித் ஆட்சி அமைந்திருந்தது. இப்போது ஒற்றையாட்சியும் பாசிசக் அரசியலமைப்பும் நீக்கப்படாமல் அதன் நிர்வாக முறை மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்னும் பிரதான முரண்பாடக உள்ள தேசிய இன முரண்பாட்டிற்கும், சிங்கள உழைக்கும் மக்களின் பிரச்சனைக்கும் இது தீர்வாக அமையாது. குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தை மீட்பதற்கு இலங்கையின் அரசியலமைப்பு மாற்றப்படுவதும், தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை அங்கீகரிக்கப்படுவதும் முக்கியமானது.

1970 ஆம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சியின் போது ஜனாதிபதி ஆட்சி முறையோ பலமான இராணுவமோ இருந்திருக்கவில்லை என்ற போதும் சிரிமாவோ பண்டாரநாயக்கவின் அரசு ஒருலட்சம் சிங்கள மக்களை ஜே.வி.பி என்ற சந்தேகத்தில் கொன்று குவித்தது.

இலங்கை அரச படைகள் மன்னம்பரி என்ற பெண்ணைப் பொதுமக்கள் மத்தியில் நிர்வாணமாக்கி இழுதுச் சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திக் கொன்று போட்டதை ஜனாதிபதியற்ற ஜனநாயகத்தால் தடுத்து நிறுத்த முடியவிலை. களணி கங்கையில் மிதந்த ஆயிரக்கணக்கான உடல்களை அதே ஜனநாயகம் தான் நிறைவேற்றியது. ஆக, மைத்திரிபால பிரேரித்த இடைக்கால ஜனநாயகத்தைப் பயன்படுத்திக்கொண்டு மக்களை அணிதிரட்டுவதும், மக்கள் சார்ந்த புதிய ஜனநாயகத்திற்காகப் போராடுவதும் அவசியமானது.

Exit mobile version