Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாவும் கொரோனாவும் சிதைக்கும் இலங்கை: 1000 சடலப் பொதிகளைக் கோரும் இலங்கை அரசு

இலங்கையை அழிக்கும் இராணுவ சர்வாதிகாரம்

இலங்கையில் கோத்தாபய ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சி கொரோனா வைரஸ் பரவலக் கட்டுப்படுத்த எந்தக் குறிப்பான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் பட்டின்னிச சாவை எதிர்கொள்ளும்  தவிர்க்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உலக அதிகார வர்க்கம் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் இப்போது தன்னைத் மீள் தகவமைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் பாசிச சர்வாதிகார ஆட்சிகள் நோயை எதிர்கொள்ளவும் அதன் பொருளாதார சமூகத் தாக்கத்தை முகம்கொடுக்கவும் எவ்விதமான திட்டமிடலையும் மேற்கொள்ளவில்லை. உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா சரித்து விழுத்திய பொருளாதாரத்தை மீள் கட்டமைக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் மக்கள் முன்னால் ஏதாவது திட்டம் முன்வைக்கப்பட்டுன்றது.

இலங்கையிலும் இந்தியாவிலும் முழு நாட்டையும் வீட்டுச் சிறைக்குள் வைத்திருப்பதை தவிர எந்தத் திட்டமும் இல்லை.

கொரோனாவின் சமூகப் பரவல் இலங்கையில் ஆரம்பித்துவிட்டது. 30 கடற்படயினருக்கு ஒரே முகாமில் கொரோனா தொற்றியிருக்கிறது. 150 இராணுவத்தினருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் படை முகாம் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 ஐத் தாண்டிவ்விட்டது. 7 நோயாளிகள் நிமோனியா நிலைக்குச் சென்று உயிரிழந்துள்ளனர். கொரோனா மரணங்களை எதிர்கொள்வதற்காக 1000 சடலப் பொதிகளை இலங்கை அரசு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியுள்ளது.#

எதிர்காலத்தில் முழுமையான இராணுவ சர்வாதிகாரத்திற்குத் மட்டுமே திட்டமிடும் கோத்தாவின் ஆட்சி பெரும்பாலான முடிவுகளை இராணுவட்த்தின் கைகளிலேயே விட்டிருக்கிறது. மருத்துவ ஆலோசனைகள் கூட இராணுவத்தின் ஊடாகவே அரசைச் சென்றடைகிறது.

இராணுவ முகாம்களில் அடைக்கப்படிருந்த் சிப்பாய்களுக்கு நோய் பரவியிருக்கலாம் என்ற அச்சத்தில் விடுமுறையில் சென்ற அனைத்து இராணுவத்தினரும் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகம் முழுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுளன. முன்னறிவித்தலின்றி திடீரென அறிவிக்கப்படும் ஊரடங்கு உத்தரவால் வர்த்தகர்கள் தமது வியாபரத்தைத் திட்டமிட முடியாத நிலைக்கு உள்ளாகியிருக்கின்றனர். திட்டமிடப்படாத ஊரடங்கால் அத்த்தியவசிய சேவைகள்க்கான போக்குவரத்தும், வினியோக சங்கிலியும் (supply chain) சிதைக்கப்பட்டுள்ளது .

இலங்கையின் பிரதான உற்பத்தியான தேயிலை ஏற்றுமதி முற்றாகப் பாதிப்பிற்கு உள்ளகியிள்ளது. மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் நாள் கூலியின்றி பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.

திடீரெனத் தோன்றிய பண நெருக்கடியை எதிர்கொள்ள இயலாத மக்களின் வாங்கும் திறன் குறைவடைந்துள்ளதால் தொடர் உற்பத்தி பாதிப்ப்பிற்கு உள்ளாகும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இலங்கை வரலாறு காணாத பண நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது.
மார்ச் மாதம் 20ம் திகதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் பின்னர் வீடுகளுக்குள் முடங்கியிருந்த கோத்தாவும் குடும்பத்தினரும் இதுவரைக்கும் எந்தட் புதிய திட்டத்தையும் முன்வைக்கவில்லை.

இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்பத்தி விட்டோம் என எதிர்வரும் ஜூன் மாத பாராளுமர்ற தேர்தலுக்குப் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு சாரி சாரியாக மக்கள் மரணித்துப்போவதை பார்த்துக்கொண்டிருப்பது புதிதல்ல. வன்னி இனப்படுகொலையின் போது கொத்துக்கொத்தாக மக்களின் மரணத்திற்குக் காரணமாக இதே ஆட்சி மீண்டும் மரண ஓலத்தை ஏற்படுத்தத் தாயாராகிவிட்டது.

இலங்கையின் அடிப்படைப் பொருளாதாரத்தை அழிப்பதற்கான அனைத்து வழிகளையும் அந்த நாட்டின் அரசு திறந்துவிட்டிருக்கிறது. அதனை மீளமைப்பதற்கு மிக நீண்ட ஆண்டுகளாகலாம். அந்த இடைவெளிக்குள் அமெரிக்கா திட்டமிடும் டிஜிட்டல் பணத்திட்டம், சீனாவோடு போட்டிபோட்டுகொண்டு தெற்காசியாவைச் ஒட்டச் சுரண்ட்டி ஒட்டாண்டிகளாக்கிவிடும்.

Exit mobile version