அவர்களின் பணப்பட்டுவாடாவிற்கு வால்களாகத் தொழிற்படும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் முஸ்லீம்கள் தாக்கப்படுவதற்கு எதிராக குரல்கொடுத்து தமது வாக்கு வங்கியைக் குறிவைக்க புலம்பெயர் நாடுகளின் தமிழ் அமைப்பு உறுப்பினர்களின் சமூக வலைத் தளங்கள் அருவருப்பான இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்தன.
வட கிழக்குத் தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரித்தாளும் இலங்கைப் பேரினவாத அரசின் சூழ்ச்சிக்கு முஸ்லீம்களை இதுவரை பலியாக்கிய முஸ்லீம் தலைமைகளைப் போன்றே அப்பாவித் தமிழர்களைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி இனவாத அரசியல் நடத்தும் புலம்பெயர் அமைப்புக்கள் தமிழர்களைப் பலியாக்க ஆரம்பித்துவிட்டன.
இப் பிரித்தாளும் சூழ்ச்சி இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்குப் பலியாகும் இரண்டு தேசிய இனங்களின் சந்தர்ப்பவாதத் தலைமைகளையும் வளர்த்துவிட்டிருந்தது.
முஸ்லிம்கள் மீதான இன்று நடத்தப்படும் தாக்குதல்கள் வெறுமனே வன்முறைகளல்ல, சமூக அரசியல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அனைத்து தளத்திலும் அத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இன்றைய சூழல் முஸ்லீம்களும் தமிழர்களும் ஒரு பொதுத் தளத்தில் இணைந்து கொள்வதற்கான புதிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரினவாதத்திற்கு எதிரான புதிய அரசியல் முன்னணியை நோக்கி இரண்டு தேசிய இனங்களையும் அழைத்துவந்திருக்கும் இத் தாக்குதல்களின் பின்புலத்தில் இன்றைய மைத்திரி அரசும் இணைந்தே செயற்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை.
முஸ்லிம்கள் மீதான இன்று நடத்தப்படும் தாக்குதல்கள் வெறுமனே வன்முறைகளல்ல, சமூக அரசியல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அனைத்து தளத்திலும் அத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இன்றைய சூழல் முஸ்லீம்களும் தமிழர்களும் ஒரு பொதுத் தளத்தில் இணைந்து கொள்வதற்கான புதிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரினவாதத்திற்கு எதிரான புதிய அரசியல் முன்னணியை நோக்கி இரண்டு தேசிய இனங்களையும் அழைத்துவந்திருக்கும் இத் தாக்குதல்களின் பின்புலத்தில் இன்றைய மைத்திரி அரசும் இணைந்தே செயற்பட்டிருக்கிறது.
இதற்கெதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உட்பட புலம்பெயர் அமைப்புக்கள் மவுனம் காத்த வரலாற்றுத் துரோகம் பேரினவாதத்தைப் பலப்படுத்தும் அரசியல்.
இவை அனைத்திற்கும் அப்பால், பறை விடுதலைக்கான குரல் மற்றும் சமூக நீதிக்கன வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து இலங்கை அரசின் பிரித்தானிய தூதரகத்தின் முன்பாக கடந்த 16 ஆம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக புலம்பெயர் நாடுகளிலிருந்து முதலாவதாக எழுப்பப்பட்ட போர்க்குரல்.