2015 ஆம் ஆண்டு கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மோடியின் பாரதீய ஜனதாக் கட்சிக்கு நிதி வழங்கும் நிறுவனங்களில் வேதாந்தா முதலிடத்தை வகிக்கிறது.
தவிர கர்நாடகத்தில் இரும்பு தாது அகழும் தொழிலை நடத்தும் வேதாந்தா, 3 மில்லியன் தொன் இரும்பு உற்பத்தி செய்கிறது.
கர்நாடக மக்களின் பிரதான முரண்பாட்டை தமிழகத்துடனான முரண்பாடாக மடை மாற்றுவதன் ஊடாக அங்கு இயற்கையை எதிர்ப்பின்றி சுரண்டுகிறது வேதாந்தா நிறுவனம. அதே வேளை காவேரி நீரை தனது மின் ஆலைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது.
பெரியார் மற்றும் அவர் சார்ந்த மக்கள் இயங்கள் ஊடாகவும், இடதுசாரி இயக்கங்கள் ஊடாகவும் தமிழகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளித் தேரிந்தது. இந்தியா முழுவதையும், குறிப்பாக பஞ்சாப், கர்னாடகா, தமிழகம் போன்ற மானிலங்களை சூறையாடிவரும் வேதாந்தா போன்ற பல் தேசிய நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை தமிழகமே தலைமையேற்று நடத்த ஆரம்பித்துள்ளது.
இதனை பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துதுவ பயங்கரவாத அமைப்புக்கள் தீவிரமாக ஒடுக்க புதிய வழிகளைக் கையாள்கிறது.
பாரதீய ஜனதா அதன் அடியாள் அரசான எடப்பாடி அரசின் ஊடாக நடத்தும் பினாமி ஆட்சியே அதன் இன்றைய பிரதான நடவடிக்கை. தவிர, திராவிட சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிரான புதிய மாற்று அணிகளை உருவாக்கி வருகிறது. திரைப்பட நடிகர்களான கமல் ஹாசன், ரஜனிகாந் போன்றவர்களை புதிய அணிகளாக உருவாக்கியுள்ளது. சீமான் போன்ற நான்காம்தர இனத் தூய்மைவாதிகளின் பின்னணியிலும் செயற்படுகின்றது. இவர்கள் பொதுவாகவே பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு எதிரானவர்கள் போலக் காட்டிக்கொண்டாலும் இவர்களின் பொதுவான நோக்கம் திராவிட சித்தாந்தை அழிப்பது மட்டுமே.
வேதாந்தாவின் வர்த்தக நலன் காவிரி நதிப் பிரச்சனையின் பின்புலத்தில் செயற்படும் காரணிகளில் ஒன்று, இதனால் பாதிப்படைவது தமிழக மக்கள் மட்டுமல்ல கர்னாடக மக்களுன் என்பதை திட்டமிட்டு மறைத்து இப்பிரச்சனையை தமிழர்கள் மற்றும் கன்னடர்கள் இடையிலான முரண்பாடாக மாற்ற முனைவது பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மட்டுமல்ல, சீமான் போன்ற இனவாதக் கோமாளிகளும் தான். இவ்வறு மக்கள் மத்தியில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதன் ஊடாக வேதாந்தாவின் பங்கை மறைப்பதே இவர்களின் நோக்கம்.
ராஜபக்சவின் நட்பு நிறுவனமான லைக்காவின் தமிழக ஏஜன்டாகவும், பச்சைமுத்துவின் உள்ளூர் அடிமையாகவும் செயற்பட்ட சீமான் வேதாந்தாவிற்கு தொலைவில் இல்லை.
கடந்த ஏப்பிரல் மாதம் 16ம் திகதி உலகின் தர நிர்ணைய வங்கிகளால் வேதாந்தாவின் வர்த்தகப் பெறுமானம் தரக்குறைப்புச் செய்யப்பட்டது. தூத்துக்குடி மக்கள் போராடங்களைக் காரணம்காட்டியே தரக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் பின்னரே தனது அடிமை அரசுகளை முடுக்கிவிட்டு அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை வேதாந்தா மேற்கொண்டது.
அதே காலப்பகுதியில் அதுவரை வேதாந்தாவிற்கு எதிராக நீண்டகாலமாகப் போராடிவரும் வை.கோ மீது சீமான் அவதூறு பரப்ப ஆரம்பித்தார், அதிலும் ஸ்ரெலைட் போராட்டங்களை முன்வைத்தே வை.கோ மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. வேதாந்தாவிற்கு எதிரான போராட்டங்களிலிருந்து வை.கோவை அன்னியப்படுத்த சீமான் ஊடாக வேதாந்தா மேற்கொண்ட நடவடிக்கையா இது என்ற கேள்விகள் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் எழுவது இயல்பானதே.எது எவ்வாறாயினும் வேதாந்தாவிற்கு எதிரான போராட்டம் என்பது இனவாதம், மதவாதம் போன்ற சமூகத்தின் விச வித்துக்களை கடந்து மக்கள் சார்ந்து எழுச்சிபெற்றாலே வெற்றியை முத்தமிடலாம்.