பிரித்தானியத் தமிழர் பேரவை என்ற லண்டனை மையமாகக் கொண்டு செயற்படும் அமைப்பின் தலைவரைத் தெரிவு செய்யும் கூட்டம் 12.072015 அன்று நடைபெறவுள்ளது. அதனை ஒட்டி அந்த அமைப்பின் ஆதவாளர்கள் செயற்பாட்டாளர்கள் சார்பில் மதி எழுதிய குறிப்பு கீழே தரப்படுகிறது.
இதனால் செயற்திறனுள்ள பலர் BTF இல் இணைந்து செயற்பட்டனர். அடிப்படைக் கோட்பாடுகள் எதுவுமின்றி பிரித்தானியத் தமிழர் பேரவையின் வேலைத்திட்டங்கள் அழிவுகளை மட்டுமே ஏற்படுத்திய நிலையில் அமைப்பு பல கூறுகளாகப் பிளவடைந்தது. .
ஈழத் தமிழர்களின் அரசியலில் புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்படும் குழுக்களில் பிரித்தானியத் தமிழர் பேரவை பிரதானமானது. தனக்கான அரசியல் திட்டம் எதுவுமின்றி இந்த அமைப்பு செயற்படுகிறது. பிரித்தானிய அரசியல் வாதிகளையும், ஐ.நா போன்ற அமைப்புக்களையும் திருப்திப்படுத்துவதன் ஊடாக தொலை தூரத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுத்துவிடலாம் என பிரித்தானியத் தமிழர் பேரவை நம்புகிறது.
இதனால் மக்களையும் தம்மீது நம்பிக்கை வைக்குமாறு கோருகின்றது. வன்னிப் படுகொலைகள் நடைபெற்று ஆறு வருடங்கள் முடிந்த பின்னரும் தோல்வியடைந்த அதே சுலோகங்களை முன்வைத்து மக்களை விரக்தி நிலைக்குத் தள்ளியுள்ளது.
அமைப்பின் தலைவர் ரவி, கோட்ப்பாட்டு அடிப்படையில் ஏனையோரை இணைப்பதற்குப் பதிலாக தனது தலைமைத்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து முரண்பட்ட குழுக்களையும் திருப்திப்படுத்தினார்.
இதன் காரணமக பலர் BTF இலிருந்து விலகி ஓட்டம் பிடித்தனர். பலர் விரக்தியடைந்தனர். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகள் பீ.ரி.எப் இடம் எஞ்சியிருந்த ஜனநாயகத்தை அழித்து தலைமையைக் கைப்பற்ற முயற்சித்தனர்.
அவ்வாறு பீ.ரி.எப் ஐ கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களில் ராஜ்குமார் என்பவரது தலைமையிலான குழு முக்கியமானது.
பீரிஎப் இன் இன்றைய தலைவர் ரவியின் தலைமையைக் கையககப்படுத்த முனையும் ராஜ்குமார் இதுவரை பீ.ரி.எப் ஐ நம்பியிருந்த மக்களை மந்தைகளாக்க முனைந்தவர்களின் முக்கியமானவர்.
ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டுவருவதன் பின்னால் தானே செயற்பட்டதாக மக்களை ஏமாற்றுவதற்கு சமூக வலைத் தளங்களைப் பயன்படுதுபவர்.
நாட்டில் மக்களின் அவலத்தைப் பயன்படுத்தி எப்படி வியாபாரம் செய்வது என்பதே ராஜ்குமார் குழுவின் முக்கிய நோக்கம்.
சரி, பீ.ரி.எப் தவறாகச் செல்கிறது என்றும் அவர்களிடம் மக்களுக்கான வேலைத்திட்டம் கிடையாது என்றும் ராஜ்குமார் குழு கூறுகிறது என்றால் அவரின் இன்றைய வேலைத்திட்டம் என்ன? அதனை ராஜ்குமார் உட்பட எவருமே முன்வைக்கவில்லை.
ஏன்? அவர்களின் நோக்கம் மக்களுக்கானதல்ல; அவர்கள் சார்ந்த வியாபாரத்திற்கானது. எமது நோக்கம் ரவியின் தலைமையைப் பாதுகாப்பதல்ல, ராஜ்குமார் குழுவின் முழு வியாபார நோக்கத்திற்கு எதிராக புதிய தலைமை ஒன்றை நோக்கியதே.
பல்வேறு சக்திகளை இணைத்துச் செல்லும் முன்னணியாக பீரிஎப் போன்ற அமைப்புக்கள் செயற்பட வேண்டும். தமது வேலைத்திட்டத்தை வெளிப்படையாக மக்கள் முன் வைக்க வேண்டும். தவறினால் ராஜ்குமார் போன்ற வியாபாரிகளின் கைகளில் பீரிஎப் விழுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.