Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லண்டனில் ஆர்ப்பாட்டம்; ஊடகங்கள் இருட்டடிப்பு; Twitter குறிச்சொல்லை நீக்கியது

protestsதேர்தலில் வெற்றிபெற்ற தீவிர வலதுசாரிக் கட்சியான பழமைவாதக் (conservative) கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் லண்னில் நடைபெற்றுவருகிறது. பொதுவாக அனைத்து ஊடகங்களும் இவ்வார்ப்பாட்டத்தை வன்முறை என்றும் கலவரம் என்றும் குறிப்பிடுகின்றன. சமூக வலைத்தளங்களில் ஒன்றான ரிவீட்ரில் #AntiToryprotest என்ற குறிச்சொல்லின் கீழ் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது. அதனை ரிவிட்டர் சமூக வலைத்தளம் நீக்கியுள்ளது. பீபீசீ உட்பட ஊடகங்கள் அனைதும் இருட்டடிப்புச் செய்துவரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஊடக சுதந்திரம் தமது நாட்டிலும் இல்லை என்பதை இப்போது பிரித்தானிய மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். பேஸ் புக் மற்றும் ரிவிட்டர் போன்ற சீ.ஐ.ஏ இன் பின்புலத்தில் இயங்கும் சமூக வலைத் தளங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானவை அல்ல என மக்கள் வெளிப்படையாக உணர்ந்துள்ளனர்.

சிறுபான்மை வாக்குகளால் ஆட்சியமைக்கவுள்ள பழமைவாதக் கட்சியின் தெரிவினால் விரக்தியடைந்துள்ள மக்கள் தெருக்களில் இறங்கி போராடுவதை செய்தியாகக் கூடப் பதிவு செய்ய விரும்பாத ஊடகங்கள், ஆர்ப்பாட்டக்காரர்களால் போர்நினைவுச்சின்னம் தாக்கப்பட்டதை மட்டும் செய்தியாக வெளியிட்டன

இதுவரை 17 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 4 போலிஸ் படுகாயமடைந்துள்ளதாகவும் போலிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும் அதன் அடிவருடி ஊடகங்களும் இது தொடர்பான செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. தமிழ் மகக்ளை ஒடுக்கப்பட்டவர்கள் பட்டியலிலிருந்து நீக்கிய பின்னர் அதிகாரவர்க்கத்துடன் இணைந்து சூறையாடும் தலைவர்களை மட்டுமே இன்று ஈழத் தமிழர்கள் கொண்டுள்ளனர்.

பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் : நடந்தது என்ன?

Exit mobile version