8 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் 25 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் வட்டாச்சியர், மாவட்ட கல்வித்துறை அதிகாரி உள்பட 7 பேர் இந்த வழக்கில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க கல்வித்துறை அதிகாரி பாலகிருஷ்ணனின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கபாடியா கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாலகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், வழக்கை 6 மாதத்தில் முடிக்க தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
கல்வி மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் கூட நுகர்வுப் பண்டமாக மிருகத்தனமான முதளாளிகளின் பிடியில் சிக்கி அப்பாவிக் குழந்தைகள் பலியெடுக்கப்படுவது ஒரு பொதுவான அரசியல் பிரச்சனை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் உரிமைக்கான பெற்றோர் சங்கம் என்ற அமைப்பின் அங்குரார்ப்பணக் கூட்டத்திற்கு தமிழ் நாடு மனித் உரிமைப் பாதுகாப்பு மையம் அழைப்பு விடுத்துள்ளது.